தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

12 March 2013

ஒன்பது மாத காலங்களுக்கு மாத்திரம் மின் கட்டணங்களில் தற்காலிக உயர்வு

* 2014இல் கட்டணம் குறைப்பு: மின் சீராக்கல் கட்டணம் நீக்கம் * நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே தற்காலிக கட்டண உயர்வு * 3 ரூபா கட்டணம் 5 ரூபாவாகவும் ரூ. 4.70 கட்டணம் 6 ரூபாவாகவும் உயர்வு எரிபொருள் விலை உயர்வினால் மின்சார சபை எதிர்கொண்டுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் தற் காலிகமாக மின்சார கட்ட ணத்தை அதிகரிப்பத ற்கு மின்சக்தி, எரிசக்தி அமைச்சு உத்தேசித் துள்ளது. குறைந்தளவு மின்சாரத்தை பயன் படுத்தும் மக்களுக்கு அதிக சுமை ஏற்றாத வகை யில் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சிபார்சு செய்துள்ளது. இன்று (12) முதல் பொதுமக்களின் கருத்தை அறிந்த பின் ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. 2013 டிசம்பர் வரையே இவ்வாறு மின் கட்டணம் உயர உள்ளதோடு 2014 முதல் மின் கட்டணத்துடன் அறவிடப்படும் எரி பொருள் சீராக்கல் கட்டணம் பிதிவி முழுமையாக அகற்றப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க உள் ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.மொத்த மின் உற்பத்தியில் 80 வீதம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யும் நிலையில் மின்சார சபைக்கு எரிபொருளுக்காக கூடுதல் நிதி செலவிட நேரிட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து கொள்வனவு செய்த எரிபொருளுக்காக மின்சார சபை 2012 இல் 28 பில்லியன் ரூபா வழங்க வேண்டியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதால் இந்த வருடத்தில் மின்சார சபைக்கு மேலும் 27 பில்லியன் ரூபா செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு கூறியது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய பணத்தை மின்சார சபை செலுத்தாததால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் கொள்வனவு செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. 2013 டிசம்பராகும் போது முழு நாட்டிற்கும் நூறு வீதம் மின்சாரம் வழங்கும் இலக்கை நோக்கி செயற்படுவதால் நிதி நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக இவ்வாறு கட்டணத்தை உயர்த்த சிபார்சு செய்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. மின் கட்டணத்தை அதிகரிக்காதிருப்பதற்கு தங்களுக்கு இரு மாற்று வழிகளே இருப்பதாக மின்சார சபை கூறுகிறது. தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்துதல் அல்லது தற்காலிகமாக வங்கிக் கடன் பெறுவது என்பனவே அவையாகும். ஆனால் 5 நிமிடம் கூட மின்சாரத்தைத் துண்டிக்க அரசாங்கம் தயாராக இல்லாததால் முதலாவது வழி சாத்தியமில்லையென மின்சார சபை கூறுகிறது. இந்த வருடம் டிசம்பராகும் போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினூடாக 600 மெகா வோர்ட் மின்சாரம்தேசிய மின் கட்டமைப்புடன் இணைய உள்ளது. அது வரையே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள் வதாகவும் 2014 இன் பின் எரிபொருள் மூலமான மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து மின் உற்பத்திச் செலவு குறைய உள்ளதாகவும் மின்சார சபை கூறுகிறது. 2014 டிசம்பராகும் போது மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதே தமது நோக்கம் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. மின்சார சபை உத்தேசித்துள்ள புதிய கட்டண அதிகரிப்பின் படி மாதாந்த நிலையான கட்டணம் மாற்றப்படமாட் டாது. முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் 3 ரூபாவில் இருந்து 5 ரூபாவாகவும் 60 அலகுவரையான கட்டணம் 4 ரூபா 70 சதத்திலிருந்து 6 ரூபாவாகவும் உயர்த்தப்படுகிறது. 90 அலகுகளுக்கான கட்டணம் ஒவ்வொரு அலகிற்கும் தலா ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கிறது. 120 அலகுகள் வரையான கட்டணம் தலா 6 ரூபா வினாலும் 180 அலகுகள் வரையான கட்டணம் 4 ரூபாவினாலும் 210 அலகுகள் வரையான கட்டணம் எட்டு ரூபாவினாலும் குறைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறைந்த அலகுகள் பயன்படுத்து வோருக்கு வழங்கும் குறைந்த அலகுக் கட்டணங்கள், கூடுதலாக பயன்படுத்து பவர்களுக்கும் வழங்கப்படுவதை திருத்தும் வகையிலேயே கட்டணம் திருத்தப்படுவதாகவும் மின்சார சபை கூறியது. கட்டணம் உயர்த்தப்படுகிற போதும் பாவனையாளர்களுக்கு வழங்கும் நிவாரணம் நிறுத்தப்படாது எனவும் மின்சார சபை கூறியுள்ளது. கைத்தொழிற்துறைக்கு வழங்கும் நிவாரணம் 26 பில்லியனாகவும் மதஸ்தலங்களுக்கு வழங்கும் நிவாரணம் 1.2 பில்லியனாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண மின் பாவனையாளருக்கு வழங்கும் நிவாரணம் 12 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண திருத்தத்தில் மதஸ்தலங்கள், பாடசாலைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் அறிய வருகிறது. ஹோட்டல்கள், கைத்தொழில் நிலைய ங்களுக்கான கட்டணங்களில் சிறிய அதிகரிப்புக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இந்த வருட முடிவு வரை எக்காரணம் கொண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது. ஒரு மின் அலகிற்கு மின்சார சபை தலா 22.85 ரூபா செவிடுகிற போதும் பாவனையாளர்களுக்கு 16.20 ரூபா நஷ்டத்திற்கே வழங்கப்படுவதாகவும் மின்சார சபை கூறுகிறது. thanks.thinakaran .lk

No comments:

Post a Comment