தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

18 March 2013

செம்சுங் கெலக்ஸி எஸ்4!: ஸ்மார்ட் போன்சந்தையில் ஒரு புரட்சியாளன்!

செம்சுங் தனது கெலக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்களின் அடுத்த தயாரிப்பான எஸ்4 வினை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் செம்சுங் கெலக்ஸி எஸ்4வினை அறிமுகப்படுத்தியிருந்தத ுடன் . செம்சுங் கெலக்ஸி எஸ்4 செம்சுங்கின் கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றவை. கெலக்ஸி எஸ்1, எஸ்2, எஸ்3 என அனைத்தும் 100 மில்லியன்களுக்கு அதிகம் விற்பனையாகியுள்ளதாக செம்சுங் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் கெலக்ஸி எஸ் வரிசையில் அடுத்தாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் போனே கெலக்ஸி எஸ்4. இது 4.99 அங்குல அதி துள்ளியமான சுப்பர் எமொலெட் எச்.டி தொடுதிரையைக் கொண்டுள்ளது. இதன் ரிசொலுயுசன் 1920 x 1080 என்பதுடன் படவனு அடர்த்தி 441ppi ஆகும். இதன் தொழிநுட்ப அம்சங்கள் 


Samsung Galaxy S4 at a glance: General: Optional 2G/3G/LTE connectivity Form factor: Touchscreen bar phone Dimensions: 136.6 x 69.8 x 7.9mm, 130 g Display: 4.99" 16M-color Super AMOLED HD capacitive touchscreen with a resolution of 1920 x 1080 pixels (441ppi) Chipset: Exynos 5410 Octa / Snapdragon 600 CPU: 1.6 GHz Quad-core ARM Cortex-A15 and 1.2 GHz quad-core ARM Cortex-A7 / 1.9GHz Krait 300 GPU: PowerVR SGX 544MP3 / Adreno 320 RAM: 2GB OS: Android 4.2.2 (Jelly Bean) Memory: 16/32GB/64GB storage, microSD card slot Still camera: 13 megapixel auto-focus camera, face detection, touch focus and image stabilization, Dual Shot, Cinema Photo; 2MP front facing camera, video- calls Video camera: Full HD (1080p) video recording at 30fps Connectivity: Wi-Fi a/b/g/n/ac, Wi-Fi hotspot, Bluetooth 4.0, standard microUSB port with MHL features (TV Out, USB host), GPS receiver with A-GPS and GLONASS, 3.5mm audio jack, NFC, Infrared port Battery: 2600 mAh இவையனைத்துக்கும் மேலாக பல நவீன வசதிகளை செம்சுங் கெலக்ஸி எஸ்4 வில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன: Air Gestures: அதாவது திரையை எமது விரல்களால் தொடாமல் போனை கட்டுப்படுத்தலாகும். எனினும் குறிப்பிட்ட சில செம்சுங் அப்ளிகேஷன்களை மட்டுமே இதனால் கட்டுப்படுத்த முடியும். இதேபோன்ற செயற்பாட்டை வழங்கக்கூடிய தொழிநுட்பத்தை சொனி நிறுவனம் Floating Touch என்ற பெயரில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. Air View: தொடு திரையில் ஒரு அப்ளிகேசனுக்கு மேலாக எமது விரல்களை கொண்டு செல்லும் போது அதைத் திறக்காமலேயே அதில் அடங்கியுள்ள தகவல்களை பார்வையிட முடியும். உதாரணமாக மின்னஞ்சலை திறக்காமலே அதன் பெரும் பகுதியை வாசிக்கமுடியும். Drama Shot: எஸ்4வில் உள்ள கெமராவின் மூலம் ஒரே நேரத்தில் 12 படங்களை பிடித்து அவற்றை Time-lapse அடிப்படையில் காட்டும் வசதியே இது. Dual Camera: இதன் மூலம் கெமெராவின் முன் மற்றும் பின்புறம் அமைந்துள்ள இரு கெமராக்களின் மூலமும் ஒரே நேரத்தில் படமெடுக்க முடிவதுடன், பின்புறம் அமைந்துள்ள பிரதான கெமராவின் மூலம் எடுக்கும் படத்தில் முன் கெமராவினால் எடுக்கப்படும் படத்தையும் இணைக்கமுடியும். உதாரணமாக நீங்கள் ஒரு மைதானத்தில் நடைபெறும் உதைப்பந்தாட்ட போட்டியொன்றை படமெடுத்தால் இவ்வசதியின் மூலம் போட்டியின் படத்தினுள் உங்களையும் புகுத்தி விடமுடியும். Dual Video Call: இதன் மூலம் நீங்கள் யாருடனாவது வீடியோ செட்டிங் செய்யும் போது அந்நபருக்கு முன் கெமராவின் மூலம் உங்கள் முகத்தினையும், பின்பக்க பிரதான கெமராவின் மூலம் உங்களுக்கு முன் இருக்கும் நபரையோ, பொருட்களையோ அல்லது காட்சியையோ காட்டக்கூட ியதாக இருக்கும். Group Play: கெலக்ஸி 4 வை உபயோகிக்கும் பலர் அருகில் இருந்து தமது ஸ்மார்ட்போன்களுக்கிடையே வலைய மைப்பினை உருவாக்கி கேம்ஸ் விளையாடக்கூடிய வசதி. S Health: இது ஒரு அப்ளிகேசன். இது பாவனையாளரின் ஆரோக்கியம் மற்றும் உணவுமுறை தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அப்ளிகேசன். இதனோடு சேர்த்து உபயோகிப்பதற்காக பிட்னெஸ் பிரேஸ்லெட், டிஜிடெல் ஸ்கேல், பிட்னெஸ் பெல்ட் ஆகியவற்றையும் செம்சுங் விற்பனை செய்யவுள்ளது. இவற்றின் ஊடாக குருதி அமுக்கம், இரத்தத்தில் குளுக்கோசின் அளவு போன்றவற்றை கணிப்பிடமுடியும். உணவின் கலோரி தொடர்பாகவும் தகவல்களைப் பெறமுடியும். S Translator: சுமார் 10 வரையான மொழிகளை மாற்றித்தரக்கூடிய அப்ளிகேசனே இது, இதனூடாக குரலாகவோ, எழுத்திலோ மொழிமாற்றத்தினை பெறமுடியும். மின்னஞ்சல்கள், குறுந்தகவல்களையும் மொழிமாற்றம் செய்ய முடியும். S Voice Drive: இது வாகனம் செலுத்துவோருக்கான அப்ளிகேசன். வாகனம் செலுத்துவோர் தங்களது குரலின் மூலம் போனை இயக்கமுடியும். Samsung Adapt Display: திரையில் நாம் எதைப் பார்க்கின்றோமே அதற்கேற்றாற் போல அதன் வெளிச்சத்தை தானியங்கியாக கட்டுப்படுத்தும் வசதி. Samsung Adapt Sound : Samsung Adapt Display வசதியைப் போன்ற வசதியே இது. நாம் கேட்கும் பாடல்கள், பார்க்கும் வீடியோக்களுக்கு ஏற்ப சத்தத்தை தானாக கூட்டிக் குறைக்கும் செயற்பாட்டை இது மேற்கொள்ளும். Samsung Smart Pause: நீங்கள் எஸ்4 வில் வீடியோ ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது உங்களது கவனம் வேறெங்காவது செல்லுமானால் முன் பக்க கெமரா உங்களது கண் வேறு பக்கம் செல்வதை கணித்து வீடியோவை தானாக இடைநிறுத்தி வைக்கும். பின்னர் உங்கள் கவனம் வீடியோவை நோக்கித் திரும்பியதும் அது தானாக மீண்டும் ஓடத்தொடங்கும். Smart Scroll: நீங்கள் ஒரு மின்னஞ்சலோ அல்லது இணையத்தில் ஒரு ஆக்கத்தினையே வாசிக்கும் போது திரையை தொடத் தேவையில்லை மாறாக போனை மேலும் கீழும் அசைப்பதன் மூலம் தொடர்ந்தும் வாசிக்க முடியும். WatchON: உங்களது டிவி, கேபல் பொக்ஸ், மற்றும் டிவிடி பிளேயர்கள் போன்ற சாதனங்களுக்கு ரிமோட் கொந்த்ரோலராக செயற்படும் வசதியே இது. Share Music: பல கெலக்ஸி எஸ்4 களை ஒரே நேரத்தில் 'செரவுண்ட் சவுண்ட்' ஸ்பீக்கர்களாக உபயோகிக்க முடியும். இதன்போது அனைத்து கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன்களும் ஒரே பாடலை ஒரே நேரத்தில் இசைக்கும். இதேபோல் Sound & Shot எனப்படும் போட்டோவுடன் 9 செக்கன்கள் ஓடியோவை பதிவுசெய்யும் வசதி, Story Album எனப்படும் டிஜிட்டல் போடோ ஜேர்னலை உருவாக்கும் வசதி, S Travel (Trip Advisor), ChatON (Voice/Video Call, Share screen, 3-way calling), கெமராவின் மூலம் எடுக்கும் படங்களில் தேவையில்லாத பகுதிகளை அழிக்கும் வசதி என பலதரப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது கெலக்ஸி எஸ்4. திரையின் பாதுகாப்பிற்கென கொரில்லா 3 கிளாஸினை கொண்டுள்ள அதேவேளை, கையுறையை அணிந்திருந்தாலும் இயங்கக்கூடிய வகையில் வகையில் தொடுதிரை உருவாக்கப்பட்டுள்ளமை மேலதிக சிறப்பாகும். மேலும் சிறப்பான கேமிங் அனுபவத்தினை தரக்கூடியதாகவும் செம்சுங் கெலக்ஸி எஸ்4 உள்ளது. கேமிங் பேட் உடன் இணைக்கும் போது முழுதாக இதுவொரு கேமிங் கொன்சோலாகவே மாறிவிடுகின்றது. இவையனைத்துக்கும் மேலேகா 13 மெகாபிக்ஸல் கெமராவினை செம்சுங் கெலக்ஸி எஸ்4 கொண்டுள்ளது. சந்தையில் ஏற்கனவே பல நிறுவனங்கள் 13 மெகாபிக்ஸல் கெமராக்களை கொண்டுள்ள போதிலும் செம்சுங் முதற்தடவையாக 13 மெகா பிக்ஸல் கெமராவினை தனது ஸ்மார்ட் போனில் உபயோகித்துள்ளது. சந்தையில் எஸ்4 விற்கு போட்டியாக அமையக்கூடிய ஸ்மார்ட் போன்களுடன் ஓர் ஒப்பீடு பார்ப்பவர்களை தொடத்தூண்டும் துள்ளியமான திரை, வேகமான செயற்பாட்டுக்கு குவாட்கோர் புரசசர், அதிநவீன வசதிகளைக் கொண்ட கெமரா என complete smartphone அதாவது பூரணமான ஸ்மார்ட் போன் எனக் கூறக்கூடியவகையில் உள்ளது எஸ்4. ஸ்மார்ட்போன் வாங்குவதா? டெப்லட் வாங்குவதா? என யோசனையில் இருப்பவர்களுக்கு எஸ்4 சிறந்த தீர்வாக அமையும். எனினும் எஸ்4 வினால் பெரிதாக பாதிப்படைய போவது அண்மையில் வெளியாகிய பிளக்பெரியின் Z10 மற்றும் எச்.டி.சியின் வன், நொக்கியாவின் லுமியா 920 ஸ்மார்போன்களே என தொழிநுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எது எவ்வாறு இருப்பினும் கெலக்ஸி எஸ்4 செம்சுங்கின் கெலக்ஸி எஸ்4 வரிசையில் மற்றுமொரு ஜாம்பவான். மேலும் செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் வரிசையில் மற்றுமொரு கிரீடமாக அமையப் போகின்றது இது. அதி நவீன வசதிகளுடன் பார்ப்பவர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ள செம்சுங் கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செலும் முன்னோடியாக கருதவேண்டியுள்ளது. அப்பிளின் தயாரிப்புகள் வெளியாகும் போது அதனை கொள்வனவு செய்வதற்காக அப்பிள் கடைகளுக்கு முன்னாஸ் காத்துக்கிடக்கும் அப்பிள் பேன் போய்ஸ் போல செம்சுங்கிற்காகவும் கடைகளுக்கு வெளியே செம்சுங் பேன் போய்ஸ் காத்துக்கிடக்கும் நாட்கள் வெகுதூரம் இல்லை. மொத்தத்தில் செம்சுங்கின் கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் சந்தையில் நிச்சயம் ஓர் புரட்சியாளனே!

No comments:

Post a Comment