தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

06 March 2013

பொது பலசேனாவின் காலி மாவட்டத்தின் தலைமையகத்தை திறக்கிறார் கோத்தா

காலியில் நிறுவப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைத்துவ நிறுவகத்தை எதிர்வரும் சனிக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைப்பார். பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய இனங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் தேசியளவிலான செயற்பாட்டிற்கு மேற்படி தலைமையகம் பேருதவியாக இருக்கும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தஞான சார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுபல சேனா குறுகிய காலத்தில் தேசியளவில் சிறந்த வலையமைப்பை உருவாக்கி நாட்டில் ஊடுருவி ஏனைய மதங்களின் உரிமைகளை அழித்துக்கொண்டிருக்கும் அடிப்படைவாத சக்திகளை அழித்து பௌத்த மதத்தை பாதுகாப்பதுடன் ஏனைய மதங்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் காலியில் தலைமையலுவலகத்தை பொதுபலசேனா எதிர்வரும் சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளது. இதற்கு தலைமை தாங்க பாதுகாப்புச் செயலாளர் வருகின்றார். அதேபோன்று பல முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ள உள்ளனர் எனக் கூறினார். Source:www .virakesari.lk/article/local.php?vid=3336

No comments:

Post a Comment