ஊர் செய்திகள்
date
31 March 2013
இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம்
இஸ்லாம் முட்டாள்கள்
தினத்தை எவ்வாறு பார்க்கிறது?
1. ஒருவர் மற்றொருவரைக்
கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக்
கண்டிக்கிறது. “முஃமின்களே! ஒரு சமூகத்தார்
பிறிதொரு சமூகத்தாரைப்
பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில்
(பரிகசிக்கப்படுவோர்) அவர் களை விட
மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே)
எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய
வேண்டாம்) – ஏனெனில் இவர்கள்
அவர்களை விட மேலானவர்களாக
இருக்கலாம்”. அல்குர்ஆன் 49:11 2. ஒருவர்
மற்றொருவரை ஏமாற்றுவதை இஸ்லாம்
கடுமையாக எச்சரிக்கை செய்கிறது. அளவு நிறுவையில் ஏமாற்றி மோசடி செய்த
மத்யன் என்ற ஊர்வாசிகள்
அழிக்கப்பட்டதை குர்ஆன்
இவ்வாறு கூறுகிறது. அளவு (எடையில்) மோசம்
செய்பவர்களுக்குக் கேடு தான். 83:1 ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக்
கொண்டது, அதனால் அவர்கள் (காலையில்)
தம் வீடுகளில்
இறந்தழிந்து கிடந்தனர்.
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம்
வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல்
ஆகிவிட்டனர். 7:91.92 11:94 29:36 நபி(ஸல்)அவர்கள் கடைத்தெருவில் உள்ள
ஓர் உணவுக் குவியலைக்
கடந்து சென்றார்கள். அப்போது அதனுள்
தமது கையை நுழைத்தார்கள்.
அவர்களது கையில் ஈரம் பட்டது.
உணவுக்காரரே (கடைக்காரரே) என்ன இது? எனக்கேட்க, “அல்லாஹ்வின்
தூதரே மழை பொழிந்து (நனைத்து) விட்டது”
என்று கூறினார். அதற்கு நபி(ஸல்)
அவர்கள் மக்கள் பார்க்கும்
அளவிற்கு அதை நீ மேலே வைத்திருக்க
வேண்டாமா? என்று கூறிவிட்டு “எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச்
சார்ந்தவரல்லர்”என்று கூறினார்கள்.
(முஸ்லிம் 295) நபி(ஸல்)அவர்கள் எங்கள்
வீட்டிலிருக்க என்னுடைய தாய் ஒரு நாள்
என்னை அழைத்து, “இங்கே வா!நான்
உனக்குத் தருகிறேன்”என்றார்கள்.
உடனே நபியவர்கள் என்ன கொடுக்க
அழைத்தீர்? என்று என் தாயைப்பார்த்துக் கேட்க, அதற்கு என்
தாய், “பேரீத்தம் பழம்
கொடுக்க”என்றார்கள். “நீர்
அவருக்கு எதையும்
கொடுக்கவில்லையெனில் நீ பொய்
கூறி விட்டாய் என்பதாக உன் மீது எழுதப்படும்” என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ்
இப்னு ஆமிர் (ரலி)அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத் 4993) ஒட்டகம், ஆடு போன்ற
கால்நடைகளை விற்பனை செய்வதற்காக
அதன் பாலை (கறக்காது)
தடுத்து நிறுத்தி (அவற்றின்
மடியை கனக்கச்செய்து அதிகமாகப் பால்
தருவது போன்று) காண்பித்து விடாதீர்கள் என்று
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 2148,முஸ்லிம் 3890) “மோசடி செய்பவர் நரகத்தில்
இருப்பார்! நம்முடைய கட்டளை யில்லாத
ஒரு காரியத்தை யாரேனும் செய்தால்
அது ஏற்றுக் கொள்ளப்படாது!” என்று
நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என
இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி 2142) 3. ஏமாற்றுதலின் மற்றொரு வகை பொய்
பேசுவது. பொய்யைக்குறித்தும்
எச்சரிக்கை விடுக்கிறது இஸ்லாம்
எண்ணற்ற குர்ஆன் வசனங்களும்
நபிமொழிகளும் பொய்யின்
விபரீதத்தை விளக்குகிறது. “கேள்விப்பட்டதையெல்லாம் சொல்பவன்
அவன் பொய்யன் என்பதற்குப்
போதுமானதாகும்”. (முஸ்லிம்) நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச்
செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச்
செயல் சுவர்க்கம் செல்ல
வழி காட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன்
உண்மையையே பேசிக் கொண்டி ருக்கிறான்.
இறுதியில் அவன் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான். மேலும் நிச்சயமாகப் பொய்
என்பது தீமை செய்ய வழி காட்டுகிறது.
தீமை நரகிற்கு வழி காட்டுகிறது.
நிச்சயமாக ஒரு மனிதன் பொய் பேசிக்
கொண்டிருக்கிறான். இறுதியில்
அல்லாஹ்விடத்தில் அவன் மகாப் பொய்யன்
என்று எழுதப்பட்டு விடுகிறான்.
(புகாரி 6094, முஸ்லிம்) 4.
ஏமாற்றுவதே கூடாது என்கிறது இஸ்லாம்
அதை கண்டிப்புடன் எதிர்க்கிறது.
ஏமாற்றுபவன் நிச்சயமாக ஷைத்தானாகத்
தான் இருப்பான்!என்று குர்ஆன்
கூறுகிறது குறிப்பிட்ட மரத்திற்கருகில்
நெருங்காதீர் என்ற
இறைக்கட்டளையை ஆதமிற்கும்
ஹவ்வாவிற்கும் மறக்கடிக்கச்
செய்து, “அந்த மரத்தின் பக்கம்
சென்றால் நீங்கள் வானவர்களாக ஆகி விடுவீர்கள். அப்படி நீங்கள்
ஆகக் கூடாது என்பதற்காகத்தான்
அல்லாஹ்
இவ்வாறு தடை செய்திருக்கிறான்
என்று ஆசை வார்த்தை கூறி
இருவரையும் ஏமாற்றிவிட்டான். (அல்குர்ஆன7:20,20:120) நம் பெற்றோரை வஞ்சகமாகப்
பேசி ஏமாற்றியது மட்டுமல்லாது
நம்மையும் நம்முடைய சந்ததிகளையும்
அந்த ஷைத்தான்
ஏமாற்றி நரகிற்கு கொண்டு செல்ல
நினைக்கிறான் “ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள்
பெற்றோர் இருவரையும் அவர்களுடைய
மானத்தை அவர்கள்
பார்க்குமாறு அவர்களுடைய
ஆடையை அவர்களை விட்டும்
களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன்
உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க
வேண்டாம், நிச்சயமாக அவனும் அவன்
கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக்
கொண்டிருக்கிறார்கள் – நீங்கள்
அவர்களைப் பார்க்க முடியாதவாறு, மெய்யாகவே நாம்
ஷைத்தான்களை நம்பிக்கை இல்லாதவரின்
நண்பர்களாக்கி இருக்கிறோம்.”
அல்குர்ஆன் 7:27 ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)
செயல்களை அவர்களுக்கு அழகாகக்
காண்பித்து “இன்று மனிதர்களில்
உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை,
மெய்யாக நான் உங்களுக்கு துணையாக
இருக்கின்றேன்!” என்று கூறினான், இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்த
போது அவன் புறங்காட்டிப்
பின்சென்று “மெய்யாக நான்
உங்களை விட்டு விலகிக் கொண்டேன்,
நீங்கள் பார்க்க முடியாததை நான்
பார்க்கிறேன், நிச்சயமாக நான் அல்ல்லாஹ்வு; க்குப்
பயப்படுகிறேன்,அல்ல்லாஹ்
தண்டனை கொடுப்பதில் டினமானவன்”
என்றுகூறினான். அல குர்ஆன் 8:48 5. மக்களின் நலம் நாடவேண்டும்
கேலி பேசி மனம்
புண்படும்படி நடப்பவன்
உண்மை இறைவிசுவாசியாக
இருக்கமுடியாது: பின்வரும் நபிமொழிகள்
அதை உறுதிப்படுத்துகிறது “அல்லாஹ்வுக்கும், அவனுடைய
தூதருக்கும், முஸ்லிம்களின்
தலைவர்களுக்கும் மக்களுக்கும்
நன்மையை நாடுவதே மார்க்கம்” என்ற
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி முஸ்லிம்) அநீதியிழைக்கப்பட்வனின்
பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்
அவன் பாவியாக இருந்தாலும் என
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். (முஸன்னஃப்
அபீ ஷைபா) “பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு,
கையின் தொல்லைகளிலிருந்து
பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே
முஸ்லிமாவார். (புகாரி 10) மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும்
நபி மொழிகளும் ஒருவர்
மற்றவர்களை ஏமாற்றுவதையும், பொய்
பேசுவதையும், மோசடி செய்வதையும்,
பரிகாசம், கேலி, கிண்டல் செய்வதையும்
கடுமையாகக் கண்டிக்கின்றவையாக இருக்கின்றன. மேலும் ஏப்ரல்
ஒன்றை மையமாக வைத்து நடக்கின்ற
ஏமாற்றுச் செயல்கள் அனைத்தும் ஏப்ரல்
ஒன்றில் மட்டுமல்ல வாழ் நாள்
முழுவதும்
தவிர்ந்து கொள்ளப்படவேண்டியவை என்பதையும் அவை அனைத்தும்
நமது பகிரங்க விரோதி ஷைத்தானுடைய
செயல்கள் எனபதையும் நாம் விளங்கிக்
கொள்ளவேண்டும். ஒரு முஸ்லிம் என்றைக்கும் எப்போதும்
மற்றவர்களின் மனது புண்படும்
படியாகவோ,அவர்களை ஏமாற்றுபவனாகவோ,
பரிகாசம் செய்பவனாகவோ,பொய்
பேசுபவனாகவோ இருக்க மாட்டான். ஏப்ரல் ஒன்று அன்று நடைபெறுகின்ற
ஏமாற்றுக்காரியங்களை முஸ்லிம்கள்
தங்களைச் சார்ந்து வாழ்கின்ற மற்ற
மாற்றுக் கொள்கை களைச்
சார்ந்தவர்களிடத்தில் நல்ல
அணுகு முறையோடு எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு முஸ்லிம் தன்
வாழ்நாளில் இறைவனிடத்திலும், சக
மனிதர்களிடத்திலும்,
வியாபாரத்திலும், கொடுக்கல்
வாங்கலிலும் மோசடி செய்யாதவனாக,
ஏமாற்றாதவனாக, வாய்மையாளனாக, நாணயமானவனாக இருக்க அல்லாஹ் அருள்
புரிவானாக! ஆமீன். ஆக்கம்:
காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி
ஆசிரியர் JFA கல்லூரி (Al- Jamiathul
Firdhousiya Arabic College)
Thanks: islamkalvi.com
30 March 2013
உயிருக்கு உலை வைத்தாலும் சமூகத்துக்காக குரல் கொடுப்பேன்: அஸாத் சாலி
தேசிய ஐக்கிய முன்னணியின் (நுஆ) பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான ஆஸாத் சாலி வழங்கிய செவ்வி (நேர்காணல்: சிராஜ் எம். சாஜஹான்) நாட்டில் அண்மைக்காலமாக இனவாதிகளால்
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம் விரோத செயற்பாடுகளின்
போது சவால்கள் பலவற்றுக்கு மத்தியிலும் பல்வேறு நடவடிக்கைகளை ஆஸாத்சாலி முன்னெடு
து வருகின்றார். அஷ்ரப் உருவாக்கி கட்டி வளர்த்த நுஆ கட்சியையும் மிக அண்மையில் தம் வசப்படுத்தி விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இச்செயற்பாடுகள் தொடர்பாக தனது பேட்டியில் அவர் விபரிக்கிறார். கேள்வி: தேசிய ஐக்கிய முன்னணி கட்சியை (நுஆ) பொறுப்பேற்றுள்ளீர்களா? பதில்: ஆம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் நுஆ கட்சியை ஆரம்பித்த போது முதலில் ஆதரித்தவன் நான். இன ரீதியான கட்சிகள் ஆரம்பிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நுஆ
கட்சி நாட்டின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சேவையாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதால் அக்கட்சி செயற்பாடுகள் தொடர்பில் நான் அக்கறை காட்டினேன். தலைவர் அஷ்ரபிடமும் இது பற்றி நான் பிரஸ்தாபித்தேன். மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர். சமூகத்தின் உரிமைகளை அவர் போராடிப் பெற்றார். முஸ்லிம்களுக்கான உரிமைகள் குறித்து அவர் காட்டிய ஆர்வம் இன்று எந்தத் தலைவரிடத்திலும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தை அவர் அடகு வைக்கவில்லை. உரிமைகள் போராடி கிடைக்காத சந்தர்ப்பங்களில் அவர் மக்கா சென்று தங்கியிருந்த காலங்களும் உண்டு. பின் அரசாங்கமே அவரது கோரிக்கைகளை ஏற்று முஸ்லி
ம் சமூகத்துக்கான உரிமைகளை வழங்கிய வரலாறும் உண்டு. அவர் எந்தளவு தூரம் முன்னேறிச் சென்றாரென்றால் தனது சாணக்கியத்தின் மூலம் இந்த நாட்டின் பிரதி ஜனாதிபதி என்ற பதவியொன்றினைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தையும் பெற்றிருந்தார். அவ்வாறானதொரு பதவியை சிறுபான்மையினருக்க
ு வழங்குவதற்கான நோக்கமும் அப்போதைய அரசுக்கு இருந்தது. அப்பதவி அஷ்ரபுக்கு வழங்கப்படும் என்ற செய்தியும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. கேள்வி: அஷ்ரபுடைய முன்மாதிரிகளைப் பின்பற்றுவீர்களா? பதில்: ஆம். அவர் எப்போதும் மக்களுக்காகவே குரல் கொடுத்தார். சமூக விடுதலையே அவரது தாரக மந்திரமாக இருந்தது. அவரது உயிரும் அதற்கான செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டபோதே பறிக்கப்பட்டது. அஷ்ரபுடைய முன்மாதிரிகளை பின்பற்றுவதில் எனக்கும் ஆர்வமுண்டு. தலைவர் அஷ்ரப் மரணித்ததன் பின் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்
அவரது முன்மாதிரிகளை கைவிட்டனர். அவருடைய கைகள், கால்களை ஒவ்வொருவர் பிடுங்கிச் சென்று தனிக் கட்சிகளை ஆரம்பித்தனர். அவரது நோக்குகள், செயற்பாடுகளுக்கு முரணாகச் செயற்பட்டு முஸ்லிம் சமூகம் பற்றிச் சிந்திக்காது அரசுக்கு வக்காளத்து வாங்குவத
லேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். அஷ்ரப் போன்றதொரு தலைவரின் அருகில் கூட இவர்களை வைக்க முடியாது. கேள்வி: தமிழ், முஸ்லிம் முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தீர்களே? பதில்: ஆம். தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து உரிமைகளுக்காக போராட வேண்டுமென்ற நோக்கில் அவ்வாறானதொரு கட்சியை ஆரம்பித்தது உண்மைதா
ன். எனினும் அதிகமானோர் தேசிய மட்டத்தில் சகலரையும் இணைத்துக் கொண்டு செல்லக்கூடிய கட்சியொன்றினை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதுதான் எனது விருப்பமாகவும் இருந்தது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை ஒன்று சேர்த்து சகலரினது உரிமைகளைய
ும் வென்றெடுக்கும் ஒரு கட்சியாக நுஆவினை நான் தேர்ந்தெடுத்தேன். கேள்வி: இக்கட்சியை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகின்றீர்கள்? பதில்: நான் மேற்கொணடு வரும் இனவாதிகளுக்கான செயற்பாடுகள் குறித்தும் நுஆ கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் ஆயிரக்கணக்கானோர் என்னிடம் தொலைபேசி, ஈமெயில், நேரடியாகவும்
தொடர்புகொண்டு கேட்டு வருகின்றனர். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22ம் திகதி முதல் கட்சிக்கு ஆட்சேர்ப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.
கிழக்கு மாகாணத்திலிருந்து பெருந்தொகையான
மக்கள்
என்னோடு அடிக்கடி தொடர்பு கொண்டு கட்சியில்
சேர்வது குறித்து பேசுகின்றனர். 22ம் திகதி முதல் நுஆ கட்சியில் அவர்களை இணைத்துக்கொள்ள முடியும். கேள்வி: நுஆ கட்சியை நீங்கள் பதிவு செய்து விட்டீர்களா? பதில்: தேர்தல் மறு சீரமைப்பு செய்வதால் புதிய கட்சிகளை பதிவு செய்ய முடியாது. புதிய கட்சிகளை ஆரம்பிக்கவும் நுஆ கட்சி செயலற்றிருந்ததால் புத் முன்னணியொன்றினை ஆரம்பிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அதனடிப்படையில் நானும் விக்ரமபாகுவும் மனோ கணேசனும் ஒன்றிணைந்து நுஆ கட்சியைப் பொறுப்பேற்றோம். அதுபற்றி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தோம். அவரும் அதனை ஏற்றுக் கொண்டதாக கடிதம் அனுப்பியிருக்கிறார்.
தேர்தலொன்று நெருங்குகையில் நுஆ கட்சியின் பதிவினை அவர் ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றேன். கேள்வி: நீங்கள் அண்மையில் கூட்டிய மகாநாடு தோல்வியில் முடிந்ததாமே? பதில்: இல்லை. வெற்றியில் தான் நிறைவு பெற்றது. நான் ஆயிரம் பேரை அழைத்தேன். ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் சமுகமளித்திருந்தனர். எதிர்க்கட்சியில் பலர் சமுகமளித்திருந்தனர்.
சந்திரிகா குமாரதுங்க வருகை தராவிட்டாலும் எனது செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து
சிறப்புக்
கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார். ஜனாதிபதி பயமுறுத்தியதால் அமைச்சர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. என்றாலும் கூட்டம் மிக வெற்றிகரமாக இடம்பெற்றது. தமர அமில தேரர் ஆற்றிய உரை இனவாதிகளுக்கு பயங்கர அடியாக அமைந்திருந்தது முக்கிய விடயமாகும். கேள்வி: நுஆ கட்சி அடுத்து வரும் தேர்தல்களில் களமிறங்குமா? பதில்: ஆம். முதலில் வடக்கில் தேர்தல் வருமென்று சொல்கின்றார்கள். அதிலும் போட்டியிட்டு அதற்கு முன்போ அல்லது பின்போ எ
ந்தவொரு தேர்தல் வந்தாலும் நிச்சயமாக மகத்தான ஆதரவுடன் தேர்தல்களில் நாம் வெற்றியும் பெறுவோம். கேள்வி: அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி…? பதில்: சொல்வதற்கு என்ன இருக்கிறது. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசு குடும்பத்தையும் அடிவருடிகளையும் முன்னேற்றி நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதே இந்த அரசின் நோக்கமாகும். வாக்குறுதிகளை காற்றில் பறக்க
விடும் அரசு இது. ஏனைய சமயங்களையும் இனங்களையும் புறம் தள்ளி விட்டு பௌத்தத்துக்கு மாத்திரம் அனைத்தையும் வழங்குவதற்கு இந்த அரசு முற்பட்டு வருகின்றது. இந்த அரசு தான் இனவாதத்தை பாலுõட்டி வளர்க்கிறது. ஜனாதிபதி முதல் பாதுகாப்பு செயலாளர் உட்பட அரச முக்கியஸ்தர்கள் பலர் இனவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். பொதுபலசேனா அமைப்பின் முன்னேற்றத்துக்கு பாதுகாப்புச் செயலாளர் உதவி வருகிறார். பொதுபலசேனாவே இவ்வாறு கூறுகின்றது. கேள்வி: உதாரணத்துக்கு ஒன்று கூறுங்களேன்? பதில்: மிக அண்மையில் திறந்து வைக்கப்பட்ட மத்தள விமான நிலைய திறப்பு விழா நிகழ்வில் அரசு பச்சை, பச்சையாகவே இனவாதமாக செயற்பட்டது. அங்கு பிரித் பாராயணம் மட்டுமே இடம்பெற்றது. பிற சமயங்களின் அனுஷ்டானங்களுக்கு இடமளிக்கப்படவில்லை. அத்தோடு பௌத்த தேரர்களுக்கு இடமளிக்கும் வகையில் விழா மேடையிலிருந்து ஏனைய சமயத் தலைவர்கள்
பிறிதொரு இடத்துக்கு மாற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. இது கவலை தரக்கூடியதொரு நிகழ்வாகும். ஜனாதிபதியினதும் அரசினதும் இனவாத செயற்பாடுகள் எந்தளவு துõரம் சென்றுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா? கேள்வி: நுஆ கட்சி முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமையுமா? பதில்: ஆம். கிழக்கு மாகாணத்திலிருந்து இதற்கான பதில் எமக்கு கிடைத்து வருகிறது. முஸ்லிம் பிரச்சினைகளின் போது குரல் கொடுக்காத மு.கா.வும் இனவாதிகளை ஊக்குவிக்கும் இந்த அரசும் வேண்டாம் என கிழக்கு மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நுஆ கட்சி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் உள்ளது. எனவே, இக்கட்சிக்கு முஸ்லிம்களின் ஆதரவு பெருகும். தேர்தல்களின் போது மு.கா.வினை மக்கள் புறக்கணிப்பார்கள். நுஆவினை ஆதரிப்பார்கள். இதன் மூலம் தேர்தல்களில் மு.கா.வுக்கு போட்டியான கட்சியாக உருவெடுப்போம். கேள்வி: முஸ்லிம் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பீர்களா? பதில்: குரல் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றோம். தம்புள்ள பள்ளி உடைப்பு முதல் ஹலால், அபாயா உட்பட முக்கிய பிரச்சினைகள் தோன்றிய போதெல்லாம் முதலில் குரலெழுப்பியவன் நான். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ. மூனுக்கு கடிதம் எழுதியவனும் நான்தான். உலக நாடுகளில் வாழும் புலம்பெயர் முஸ்லிம்கள் எனது செயற்பாடுகளை பாராட்டுகின்றனர். எனது செயற்பாடுகளை ஊக்குவிதது நாளாந்தம் செய்திகளை அனுப்பி வைத்தவண்ணமுள்ளனர். எதிர்காலத்தில் எமது வேலைத் திட்டங்களை பாரிய அளவில் முன்னெடுப்பதே எனது பிரதான நோக்கமாகும். கேள்வி: உங்கள் பாதுகாப்பு நிலை குறித்து அச்சமுள்ளதா? பதில்: ஆம். இதற்கு நான் பயப்படவில்லை. அல்லாஹ் எனது உயிரை எந்த நேரம் எடுக்க நாடுகிறானோ அந்த நேரத்தில் நான் போய்விட வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கின்றேன். இந்த நாட்டு மக்களுக்காகவே நான் குரல் கொடுக்கின்றேன்.
அவர்களுக்காகவே போராடுகின்றேன். அந்த நிலைமையில் நான் மௌத்தாவதை பெருமையாகக் கருதுகின்றேன். 1992ல் என்மீது சரமாரியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. நான் உயிரிழந்து விட்டதாகவே நினைத்தேன். எனினும் அல்லாஹ் என்மீது கருணை காட்டியுள்ளான். தற்போதைய இனவாத செயற்பாடுகளை போராடுவதற்காக எனக்கு வாழ்வு தந்திருக்கின்றான். கேள்வி: ஹலால் விவகாரம் தொடர்பாக…? பதில்: இந்த நாட்டு ஜனாதிபதி ஹலாலுக்கு எதிரானவர். அவரது சகோதரர் கோதாபய இப்போது ஹலாலை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். பொதுபலசேனா செய்ய வந்ததை பாதுகாப்புச் செயலாளர் செய்கிறார். பொதுபலசேனா செயலாளர் ஞானசாரவும் எமக்கு ஹலால் வேலை முடிந்து விட்டது. அந்த பணியை இப்போது பாதுகாப்புச் செயலாளர் செய்து வருகிறார் எனச் சொல்கிறார். பாதுகாப்புச் செயலாளர் தற்போது விசேட பொலிஸ் பிரிவொன்றினை உருவாக்கி சுப்பர் மார்க்கட்டுகளில் ஹலால் உற்பத்திப் பொருட்கள் இருப்பதா எனத் தேடிப் பார்க்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். கேள்வி: பான் கீ மூனுக்கு அனுப்பிய கடிதம் பற்றி…? பதில்: இலங்கைச் சரித்திரத்தில் முஸ்லிம் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்துவதற்காக நான் முயற்சித்தேன். ஐ.நா. செயலாளருக்கு இது பற்றி கடிதம் அனுப்பினேன். இக் கடிதத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவை கவனம் செலுத்தவுள்ளது. அமெரிக்க அரசாங்கமும் இது பற்றி கவனம் செலுத்தவுள்ளதாக அந்நாட்டு அரசியல் துறை பிரதிச் செயலாளர் எனக்கு அறிவித்திருக்கிறார். நான் அனுப்பிய அறிக்கையிலுள்ள விடயங்கள் குறித்து அமெரிக்க துõதரகம் விரிவான கண்ணோட்டத்தைச் செலுத்தியுள்ளது. எனது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் துõதரகம் என்னோடு தொடர்பு கொண்டுள்ளது. கேள்வி: பௌத்த மக்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? பதில்: பௌத்தர்கள் மிகவும் நல்லவர்கள். அன்பு, காருண்யம் மிக்கவர்கள். கலபொடஞானசார போன்ற இனவாதம் கக்கும் வெகு சிலரைத் தவிர இந்த நாட்டிலுள்ள 99 வீத பௌத்த மக்கள் சிறந்த முறையில் எம்மோடு பழகுகின்றனர். ஞானசார தேரர்
நிகழ்ச்சி நிரலொன்றின்படி செயற்படுகின்றார்.
ஒருசிலர் அவரது பேச்சில் மயங்குகின்றனர். அரசாங்கமும்
இவருக்கு ஆதரவு வழங்குகின்றது. கேள்வி: நிகாப் விவகாரத்தையும் கிளப்புகின்றார்களே? பதில்: எமது முஸ்லிம் பெண்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது உடைகளிலும் கை வைக்கின்றனர். எமது பெண்கள் அபாயா அணிந்து செல்வது அவருக்குப் பிடிக்கவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகின்றேன்.
முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள், புத்திஜீவிகள், முக்கிய துறைகளிலுள்ள பெண்களை அடுத்த வாரமளவில் ஒரு இடத்தில் ஒன்றுகூட்டி இது தொடர்பாக அவர்களது கருத்துக்களைப் பெறவுள்ளேன். இதற்கான
நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பித்துள்ளேன். முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயா அணிவது ஒரு சிலரின் கண்களைக் குத்துகிறது. எமது பெண்கள் கலர் அபாயாக்களை அணிய வேண்டும். இது குறித்தும் பெண்களிடத்தில் தெளிவுபடுத்தவுள்ளேன். கேள்வி: இனவாத செயற்பாடுகள் பற்றி…? பதில்: இனவாத செயற்பாடுகளுக்கு பின்னணியில் இந்த நாட்டு ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் உள்ளனர். அவ்வாறின்றேல் அவர்கள் அதனை மறுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகையில்
அரசு அதனை தடுத்து நிறுத்த வேண்டும். எனினும் அரசு அவ்வாறு செய்யவில்லை. அதற்கு மாறாக அச்செயற்பாடுகளை ஊக்குவித்து வருகிறது. ஹலால் விடயத்தில் ஜம்மியத்துல் உலமாவையும் பாதுகாப்புச் செயலாளர்தான் பயமுறுத்துகிறார். ஹலால் விடயத்தை உலமா சபை முற்றாக நிறுத்த வேண்டும். ஐ.தே.க.வும் ஒரு சில கட்சிகளும் இதனை வலியுறுத்தி வருகின்றன. கேள்வி: பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் பற்றி…? பதில்: அவர் பற்றி சொல்வதற்கு அதிகம் இருக்கிறது. இவர் ஒரு பலே கில்லாடி. ஞானசார தேரருக்கும் நோர்வே தொழில்கட்சித் தலைவர் ஆர்னி பிய்ரோபிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. எல்.ரீ.ரீ.ஈ.க்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் கலபொட ஞானசார தேரர் உரத்துக் குரல் கொடுத்தார். நோர்வே தூதுவர் இவரை நோர்வேக்கு அழைத்துச் சென்று இவரது நிலைமைகளை மாற்றியமைத்து தம
ழ் மக்களுக்கெதிராக செயற்பட வேண்டாமென வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் ராஜிதவிடம்
நோர்வே தூதுவர் ஞானசார தேரரை ஒப்படைத்தார். இவரை முழுமையாகப் பயன்படுத்தும்படியும் ராஜிதவிடம் கூறப்பட்டது. இதன் பிறகு தமிழ் மக்களுக்கெதிராக நான் பேச மாட்டேன் என்றதுடன் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் ஞானசார தேரர் குரல் கொடுக்க ஆரம்பித்தார். யுத்தத்தில் நோர்வே தோற்றுவிட்டது. நோர்வே அரசுக்கு இலங்கை அரசு மேல் ஒரு கண். இலங்கை அரசுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்பதில்
நோர்வே உறுதியாகவிருந்தது. அதற்குக் கிடைத்த சிறந்த ஆயுதம் தான் ஞானசார தேரர். ஞானசாரவுக்கு நிதி நோர்வேயால் வழங்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும்படி அவர் பணிக்கப்பட்டார். கடந்த
ஜெனீவா பிரேரணையின்போது இலங்கை முஸ்லிம்கள்
ஆயிரக் கணக்கில் எமது நாட்டுக்கு ஆதரவாக ஒன்று திரண்டார்கள். கோஷமெழுப்பினார்கள். முஸ்லிம் நாடுகள் (12) எமது அரசுக்கு ஆதரவு வழங்கின. இந்த ஆதரவுப் போக்கினை முஸ்லிம்கள் கைவிட வேண்டுமென்பதற்காகவே நோர்வே செயற்படுகின்ற
ு. ஞானசார தேரரை அதற்குப் பயன்படுத்துகிறது. முடிந்தால் அவர் இதனை மறுக்கட்டும். கேள்வி: சர்வதேச ஆதரவு பற்றி…? பதில்: ஒவ்வொரு தினமும் நூற்றுக்கணக்கானோர் என்னோடு தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். மேற்கத்திய நாடுகளில் வாழும் புலம்பெயர் முஸ்லிம் அமைப்புக்கள் நிலைமை பற்றி அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர்
. என்ன செய்ய வேண்டுமென்றே கேட்கின்றனர். மத்திய கிழக்கில் வாழும் எனது உடன் பிறப்புக்கள் ஒவ்வொரு நாளும் என்னோடு பேசுகின்றனர். நாங்கள் எதற்கும் ரெடி என அவர்கள் கூறுகின்றனர். இலங்கை முஸ்லிம் விவகாரம் சர்வதேசமயப் படுத்தப்பட்டுவிட்டது.
அது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். முஸ்லிம்களுக்கு இந்தளவு அநியாயம் நடக்கும்போது பாகிஸ்தானும் இந்தோனேசியாவும் இங்கு ஒன்றும் நடக்கவில்லை என்கின்றனர். பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானுடன் தொடர்பு கொண்டு நிலைமை பற்றி கலந்துரையாடி
னேன். பாகிஸ்தான் மக்களுக்கு இலங்கை முஸ்லிம் பிரச்சினைகள் தமது கட்சி மூலம் விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் என்னிடம் உறுதியளித்தார்.
(நன்றி: நவமணி)
29 March 2013
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயண நேரம் கணிசமாக குறைந்தது
சோயுஸ் ரொக்கெட் கிளம்பிய தருணம் பூமிக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டிருக்கும்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோயுஸ்
விண்வெளி ஓடம் இந்த முறை மேற்கொண்ட பயணம்
வழமைக்கும் மிகக் குறைவான நேரத்தில்
நடந்துள்ளது. வியாழன் இரவு ஜிஎம்டி நேரப்படி சுமார்
எட்டே முக்கால் மணிக்கு கஸக்ஸ்தானில் உள்ள
பைக்கானூர் விண்ணேற்ற
தளத்திலிருந்து கிளம்பிய ஸோயுஸ் ராக்கெட்
பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக
அமைந்துள்ளது. ஏனென்றால் சாதாரணமாக ரஷ்யாவின் சோயுஸ்
ராக்கெட்டுகள் மூலமாக
பூமிக்கு மேலே சுமார் நானூறு கிலோமீட்டர்
உயரத்தில் மணிக்கு 27ஆயிரம் கிலோமீட்டர்
வேகத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும்
சர்வதேச விண்வெளி நிலையம் எனப்படுகின்ற இந்த செயற்கைக்கோளுக்கு செல்ல வேண்டுமானால்
மொத்தம் ஐம்பது மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்த முறை பயணம் சென்றவர்கள்
ஆறு மணி நேரத்தில் சர்வதேச
விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். இதற்கு முன் சென்ற பயணங்களில் எல்லாம்
இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து சுமார்
முப்பது முறை பூமியை சுற்று வட்டப்பாதையில்
வட்டமடித்த பின்னர்தான்
விண்வெளி நிலையத்தை நெருங்க முடிந்தது. இம்முறை பயணம் சென்றவர்கள் ஆனால் இந்த முறை ராந்தேவு டெக்னிக் என்ற
புதிய பறக்கும்
வித்தையை செய்து பூமியை நான்கு முறை
மட்டுமே சுற்றிய நிலையில்
விண்வெளி ஓடத்துடன் ஆட்கள் சென்ற சோயுஸ்
விண்ணோடக் குப்பி இணைய முடிந்துள்ளது. ராந்தேவு டெக்னிக் பறக்கும்
முறை இதற்கு முன் ஆள் இல்லாமல் பறக்கக்கூடிய
ரஷ்யாவின் பிராக்ரஸ்
சரக்கு விண்வெளி ஓடத்தில்
மூன்று முறை பயன்படுத்தப்பட்டிருந்தது
என்றாலும், மனிதர்களை சுமந்து சென்ற ஒரு விண்வெளி பயணத்தில் இந்த
உத்தி பயன்படுத்தப்படுவது இதுவே முதல்
முறை. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவைச்
சேர்ந்த கிறிஸ் கேஸிடியும், ரஷ்ய
விண்வெளி ஆய்வு மையமான ரொஸ்கொஸ்மோஸைச்
சேர்ந்த பவெல் வினோக்ரடொவ் மற்றும்
அலெக்ஸாண்டர் மிஸுர்கின் ஆகிய மூன்று பேரும்
இப்பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ளனர். இவர்கள் ஆறு மாத
காலத்துக்கு அங்கு தங்கியிருந்து பணிகளைச்
செய்வார்கள். விண்வெளி நிலையத்தில்
ஏற்கனவே இருந்து வருகின்ற மூன்று பேர்
வரும் மே மாதம் அங்கிருந்து பூமிக்குத்
திரும்புவர். அடுத்த ஆறு மாத காலத்தில்
அமெரிக்கா சார்பில் சர்வதேச
விண்வெளி ஓடத்தில் மொத்தம் 137 ஆய்வுகள்
நடக்கவுள்ளன, ரஷ்யா சார்பில் 44 ஆய்வுகள்
நடத்தப்படவுள்ளன
என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோயுஸ்
விண்வெளி ஓடம் இந்த முறை மேற்கொண்ட பயணம்
வழமைக்கும் மிகக் குறைவான நேரத்தில்
நடந்துள்ளது. வியாழன் இரவு ஜிஎம்டி நேரப்படி சுமார்
எட்டே முக்கால் மணிக்கு கஸக்ஸ்தானில் உள்ள
பைக்கானூர் விண்ணேற்ற
தளத்திலிருந்து கிளம்பிய ஸோயுஸ் ராக்கெட்
பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக
அமைந்துள்ளது. ஏனென்றால் சாதாரணமாக ரஷ்யாவின் சோயுஸ்
ராக்கெட்டுகள் மூலமாக
பூமிக்கு மேலே சுமார் நானூறு கிலோமீட்டர்
உயரத்தில் மணிக்கு 27ஆயிரம் கிலோமீட்டர்
வேகத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும்
சர்வதேச விண்வெளி நிலையம் எனப்படுகின்ற இந்த செயற்கைக்கோளுக்கு செல்ல வேண்டுமானால்
மொத்தம் ஐம்பது மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்த முறை பயணம் சென்றவர்கள்
ஆறு மணி நேரத்தில் சர்வதேச
விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். இதற்கு முன் சென்ற பயணங்களில் எல்லாம்
இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து சுமார்
முப்பது முறை பூமியை சுற்று வட்டப்பாதையில்
வட்டமடித்த பின்னர்தான்
விண்வெளி நிலையத்தை நெருங்க முடிந்தது. இம்முறை பயணம் சென்றவர்கள் ஆனால் இந்த முறை ராந்தேவு டெக்னிக் என்ற
புதிய பறக்கும்
வித்தையை செய்து பூமியை நான்கு முறை
மட்டுமே சுற்றிய நிலையில்
விண்வெளி ஓடத்துடன் ஆட்கள் சென்ற சோயுஸ்
விண்ணோடக் குப்பி இணைய முடிந்துள்ளது. ராந்தேவு டெக்னிக் பறக்கும்
முறை இதற்கு முன் ஆள் இல்லாமல் பறக்கக்கூடிய
ரஷ்யாவின் பிராக்ரஸ்
சரக்கு விண்வெளி ஓடத்தில்
மூன்று முறை பயன்படுத்தப்பட்டிருந்தது
என்றாலும், மனிதர்களை சுமந்து சென்ற ஒரு விண்வெளி பயணத்தில் இந்த
உத்தி பயன்படுத்தப்படுவது இதுவே முதல்
முறை. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவைச்
சேர்ந்த கிறிஸ் கேஸிடியும், ரஷ்ய
விண்வெளி ஆய்வு மையமான ரொஸ்கொஸ்மோஸைச்
சேர்ந்த பவெல் வினோக்ரடொவ் மற்றும்
அலெக்ஸாண்டர் மிஸுர்கின் ஆகிய மூன்று பேரும்
இப்பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ளனர். இவர்கள் ஆறு மாத
காலத்துக்கு அங்கு தங்கியிருந்து பணிகளைச்
செய்வார்கள். விண்வெளி நிலையத்தில்
ஏற்கனவே இருந்து வருகின்ற மூன்று பேர்
வரும் மே மாதம் அங்கிருந்து பூமிக்குத்
திரும்புவர். அடுத்த ஆறு மாத காலத்தில்
அமெரிக்கா சார்பில் சர்வதேச
விண்வெளி ஓடத்தில் மொத்தம் 137 ஆய்வுகள்
நடக்கவுள்ளன, ரஷ்யா சார்பில் 44 ஆய்வுகள்
நடத்தப்படவுள்ளன
என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது.
28 March 2013
பெபிலியான பெஷன் பக் மீது தாக்குதல
பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இத் தாக்குதல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 100 பேர் கொண்ட குண்டர்களே இவ்வாறு தாக்குதல்
நடத்தியதாகவும் இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிசார்
தற்போது நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும்
அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதன் போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
source:www.vidivelli. lk/morecontent.php?id=1951
நடத்தியதாகவும் இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிசார்
தற்போது நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும்
அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதன் போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
source:www.vidivelli. lk/morecontent.php?id=1951
போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம்
முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார
தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடு
த்தி நோக்கும்
பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக
குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம்
பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்த
ைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள்
அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள்
தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புத
ியதல்லவென்றும் தெரிவித்தார். நிந்தவ+ரில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின்
போதே கேட்கப்பட்ட
கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்ச
ர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களுக்கு எதிரான பேரினத்
தீவிரவாதிகளின்
வெறுப்பு நடவடிக்கைகளுக்கு சமூக,
அரசியல், வர்த்தகப் பரிமாணம் என
மூன்று பரிமாணங்கள் உள்ளன. காலம் காலமாக
இவற்றின் மீது பேரினத் தீவிரவாதிகளின் கவனம் திரும்பியிருந்தது. அவர்கள் அவ்வப்போது முஸ்லிம்களை சீண்டிப்
பார்த்து நாங்கள் எந்த
அளவுக்கு சகித்துக்கொள்கிறோம்
அல்லது எங்களது பதில்
நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பதை ப
ரீட்சித்து வந்துள்ளனர். போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம்
இப்பொழுது வெளிக்கிளம்பியுள்ளது.
வெளியில் வந்த பூதத்தை மீண்டும்
போத்தலுக்குள் அனுப்புவது இலேசான
காரியமல்ல. ஆப்பிழுத்த குரங்கின்
நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் வேறுபட்ட சிந்தனைக்
கோட்பாடுகள் காணப்படுகின்றன
என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பலவீனமான மக்களை பாதுகாக்க வேண்டிய
பொறுப்பு பலமான அரசாங்கத்திற்கு உண்டென
நான் முன்னரும் வலியுறுத்தியிருக்கிறேன். முஸ்லிம்களின்
சனத்தொகை அதிகரித்திருப்பதாக
அச்சமடைகின்றனர். அண்மையில் நான் பிறப்பு,
இறப்பு பற்றிய தலைசிறந்த புள்ளிவிபர
ஆய்வாளர் பேராசிரியர் ஜயந்த
திஸாநாயக்கவை சந்திக்க நேர்ந்த பொழுது அவர், முஸ்லிம்களின் சனத்தொகையில்
அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதைப்
பற்றிப் பிரஸ்தாபித்தார். பொதுவாக
சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்ற இறக்கம்
காணப்படுவது இயல்பானது என்றும்,
அது மாறும் தன்மை வாய்ந்தது என்றும் அதற்காக சிங்கள மக்கள் வீணாக அஞ்சவோ,
அலட்டிக்கொள்ளவோ தேவையில்லை என்று என்னிடம்
கூறினார். இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள்
பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த
தீர்மானத்தை எதிர்த்து ஏழு முஸ்லிம் நாடுகள்
வாக்களித்திருக்கின்றன. அத்துடன், 52 நாடுகள்
அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளின்
அமைப்பு ஜனாதிபதிக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு முக்கியமான கடிதத்தையும்
அனுப்பி வைத்துள்ளன என அமைச்சர் ஹக்கீம்
மேலும் தெரிவித்தார்.
Source: www.virakesari. lk/article/local.php?vid=3717
26 March 2013
25 March 2013
பர்மாவில் மத வன்முறை நீடிக்கிறது.
பர்மாவில் நடந்துவருகின்ற மதக்
கலவரங்களின் தொடர்ச்சியாக நாட்டின் மத்திய
பகுதியில் பள்ளிவாசல்களும் வீடுகளும்
அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மெய்க்டிலா நகரத்தில் மட்டுமல்லாது வேறு பல
இடங்களிலும்
தற்போது வன்முறை பரவியுள்ளது. தலைநகர்
ரங்கூனிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள ஓ த கோன் நகரில் சுமார் 300
பேர் அடங்கிய கும்பல் ஒன்று பள்ளிவாசல்
ஒன்றைத் தாக்கியதோடு முஸ்லிம்கள் நடத்தும்
கடைகளையும் முஸ்லிம்களின் வீடுகளையும் அடித்து நொறுக்கியுள்ளதாக செய்திகள்
வந்துள்ளன. மெய்க்டிலா நகருக்குள் கூடுதலான
பாதுகாப்புப் படையினர் வந்து சேர்ந்துள்ள
நேரத்தில் இந்த வன்சம்பவங்கள் நடக்கின்றன
என்பது குறிப்பிடத்தக்கது. மெய்க்டிலாவில் கடந்த புதன்கிழமை முதல்
நடந்துவருகின்ற மதக் கலவரங்களில்
இதுவரை குறைந்தது முப்பது பேர்
கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஊரில் நகைக்கடை ஒன்றில் பௌத்த
மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்
ஆரம்பித்த ஒரு வாக்குவாதமும் தகராறும்
இத்தனை வன்முறைக்குமான தீப்பொறியாக
அமைந்துள்ளது. ஓ த கோன் நகரம் மட்டுமல்லாது,
மெய்க்டிலாவுக்கு 80 கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ள டட்கோன் என்ற ஊரிலும் சென்ற வாரக்
கடைசியில் பள்ளிவாசல்
ஒன்று தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. அருகிலுள்ள யமெந்தின் என்ற ஊரிலும்
பள்ளிவாசல் ஒன்றும் சுமார் ஐம்பது வீடுகளும்
தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தன. இந்த வன்முறைகளின் பின்னணியில் யார்
இருக்கிறார்கள் என்பது தெளிவாகத்
தெரியவில்லை. ஓ த கோன், டட்கோன், யமெந்தின்
ஆகிய ஊர்களில் ஆட்கள் யாரும்
பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் இந்த வன்முறைகளுக்குக்
காரணமானவர்களாக குற்றம்சாட்டப்படும் ஆட்கள்
பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும்
கைதானவர்களில்
பௌத்தர்களே பெரும்பான்மையானவர்கள் என்றும்
பர்மீய அரசியல்வாதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார். இந்த வன்முறைகளின் விளைவாக
குறைந்தது ஒன்பதாயிரம் பேர்
தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற
நேர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மதக் கலவரங்கள் தொடர்பில் நாட்டின்
அதிபர் தென் சென்னும் எதிர்க்கட்சித்
தலைவி ஆங் சான் சூ சீயும் கூட்டாக
வெளியிட்டுள்ள அறிக்கையில், மெய்க்டிலாவில்
சட்ட ஒழுங்கு திரும்ப வேண்டும் என்றும்,
இடம்பெயர்ந்த மக்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பும்
சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இப்படியான மதக் கலவரங்கள்
வராமல் தடுக்கும் வழிவகைகள்
பற்றி கருத்தரங்குகளும்
பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்பட வேண்டும்
என்றும் இத்தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட
மக்களை ஐநா தலைமைச் செயலரின்
பர்மா தொடர்பான சிறப்பு ஆலோகசகரான விஜய்
நம்பியார்
நேற்று ஞாயிறன்று சென்று சந்தித்திருந்தார். வன்முறை நிறுத்தப்பட வேண்டும் சட்டம்
மதிக்கப்பட வேண்டும் என்றும் சமூக
நல்லிணக்கம் பேணப்பட வேண்டும் என்றும்
பர்மாவின் பௌத்த மற்றும் முஸ்லிம் மத
தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பர்மாவின் ரக்கீன் மாகாணத்தில் சென்ற வருடம்
ரோஹிஞ்சா இன முஸ்லிம்களுக்கு எதிராக
நடந்த வகுப்புவாத வன்முறையில் சுமார்
இருநூறு பேர் கொல்லப்பட்ட்டும்,
பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்
இருந்தனர். அந்த சம்பவங்களுக்குப் பின்னர் பர்மாவில்
பௌத்தர்கள் முஸ்லிம்கள் இடையில் உறவுகள்
மோசமடைந்து வந்திருந்தன.
Source:www.bbc.co.uk/tamil/global/2013/03/130325_burmaviolencespreads.shtml
24 March 2013
22 March 2013
அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு அழைப்பு
முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணி தலைவர் அசாத்
சாலியை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு
குற்றப்புலனாய்வு பிரிவினர்
அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று முற்பகல் 11
மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அசாத் சாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அத
தெரணவிற்கு கருத்து தெரிவித்த அசாத் சாலி,
விசாரணைக்கான காரணம் எதுவும்
தமக்கு கூறப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
நேற்று (21) தனது வீட்டுக்குச் சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் தான்
அங்கு இல்லாததால்
தன்னை அலுவலகத்திற்கு தேடி வந்ததாகவும்
அங்கும் தன்னை கண்டுகொள்ள அவர்களால்
முடியவில்லை எனவும் அசாத்
சாலி குறிப்பிட்டார். எனினும் ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்பட்ட
தோல்வியை மறைப்பதற்காகவே அரசாங்கம் இந்த
வேலையை மேற்கொள்வதாக அவர் குற்றம்
சுமத்தியுள்ளார்.
விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள
காரணத்தை அறிய சட்டத்தரணிகள் இருவரை குற்றப்புலனாய்வுப்
பிரிவுக்கு அனுப்பியுள்ளதாக அவர்
கூறினார்.
இலங்கையில் பௌத்த பிக்குகள் முஸ்லிம்கள்
மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள்
குறித்து அண்மையில் தாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருந்தமை தொடர்பில்
விசாரணைகள் இடம்பெறலாம்
என்று சந்தேகிக்கப்பதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
Thanks:அத தெரண -
சாலியை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு
குற்றப்புலனாய்வு பிரிவினர்
அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று முற்பகல் 11
மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அசாத் சாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அத
தெரணவிற்கு கருத்து தெரிவித்த அசாத் சாலி,
விசாரணைக்கான காரணம் எதுவும்
தமக்கு கூறப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
நேற்று (21) தனது வீட்டுக்குச் சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் தான்
அங்கு இல்லாததால்
தன்னை அலுவலகத்திற்கு தேடி வந்ததாகவும்
அங்கும் தன்னை கண்டுகொள்ள அவர்களால்
முடியவில்லை எனவும் அசாத்
சாலி குறிப்பிட்டார். எனினும் ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்பட்ட
தோல்வியை மறைப்பதற்காகவே அரசாங்கம் இந்த
வேலையை மேற்கொள்வதாக அவர் குற்றம்
சுமத்தியுள்ளார்.
விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள
காரணத்தை அறிய சட்டத்தரணிகள் இருவரை குற்றப்புலனாய்வுப்
பிரிவுக்கு அனுப்பியுள்ளதாக அவர்
கூறினார்.
இலங்கையில் பௌத்த பிக்குகள் முஸ்லிம்கள்
மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள்
குறித்து அண்மையில் தாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருந்தமை தொடர்பில்
விசாரணைகள் இடம்பெறலாம்
என்று சந்தேகிக்கப்பதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
Thanks:அத தெரண -
21 March 2013
Indiriligoda Dharul hiqma
இன்ஷா அல்லாஹ் சென்ற வாரம்போல் நாளையும் (22.03.2013)எமது இவ்வலைப்பூவில் Indiriligoda Dharul hiqma மஸ்ஜித்திலிருந்து ஜும்மா பிரசங்கம் நேரடி ஒலிபரப்புச்செய்யப்படும்
நேரம்:12:20 pm
நேரம்:12:20 pm
20 March 2013
இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கவலை
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரை தளமாகக்
கொண்டு இயங்கும் இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பு, இலங்கையில்
முஸ்லிம்களுக்கு எதிராக
முன்னெடுக்கப்படும்
நடவடிக்கைகளுக்கு கவலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு 57 நாடுகளில்
தமது உறுப்பினர்களை கொண்டு இயங்குகிறது.
இலங்கையில் இனங்கள் இடையே முறுகல்
ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்
இஸ்லாமியர்களுக்கும்
அவர்களது வர்த்தகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசுக்கு
எழுதியுள்ள கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மத்திய மலைநாட்டில் முஸ்லிம்கள்
அதிகம் வசிக்கும் புவெலிக்கட பகுதியில் இனமுறுகல் பதற்றம் நிலவுவதாக
அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ள முஸ்லிம் நகரமான
புவெலிக்கடவுக்கு பஸ்ஸில் சென்ற இளைஞர்
குழு அங்குள்ள முஸ்லிம்களை அச்சுறுத்தி அவர்களது வர்த்தக
நிலையத்திற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் விசேட
அதிரடிப்படையினர்
அனுப்பப்பட்டு நிலைமை அமைதிக்கு
கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:www.adaderana. lk/tamil/news.php?nid=36584
கொண்டு இயங்கும் இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பு, இலங்கையில்
முஸ்லிம்களுக்கு எதிராக
முன்னெடுக்கப்படும்
நடவடிக்கைகளுக்கு கவலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு 57 நாடுகளில்
தமது உறுப்பினர்களை கொண்டு இயங்குகிறது.
இலங்கையில் இனங்கள் இடையே முறுகல்
ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்
இஸ்லாமியர்களுக்கும்
அவர்களது வர்த்தகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசுக்கு
எழுதியுள்ள கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மத்திய மலைநாட்டில் முஸ்லிம்கள்
அதிகம் வசிக்கும் புவெலிக்கட பகுதியில் இனமுறுகல் பதற்றம் நிலவுவதாக
அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ள முஸ்லிம் நகரமான
புவெலிக்கடவுக்கு பஸ்ஸில் சென்ற இளைஞர்
குழு அங்குள்ள முஸ்லிம்களை அச்சுறுத்தி அவர்களது வர்த்தக
நிலையத்திற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் விசேட
அதிரடிப்படையினர்
அனுப்பப்பட்டு நிலைமை அமைதிக்கு
கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:www.adaderana. lk/tamil/news.php?nid=36584
18 March 2013
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறந்து வைப்பு
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான
நிலையமான மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான
நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்
சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க
சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம்
மூலம் முதற் பயணியாக சென்று மத்தள விமான
நிலைய பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
நிலையமான மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான
நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்
சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க
சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம்
மூலம் முதற் பயணியாக சென்று மத்தள விமான
நிலைய பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
செம்சுங் கெலக்ஸி எஸ்4!: ஸ்மார்ட் போன்சந்தையில் ஒரு புரட்சியாளன்!
செம்சுங் தனது கெலக்ஸி வரிசை ஸ்மார்ட்
போன்களின் அடுத்த தயாரிப்பான எஸ்4
வினை கடந்த சில தினங்களுக்கு முன்னர்
வெளியிட்டது. அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் இதற்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில்
செம்சுங்
கெலக்ஸி எஸ்4வினை அறிமுகப்படுத்தியிருந்தத
ுடன் . செம்சுங் கெலக்ஸி எஸ்4 செம்சுங்கின் கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட்
போன்கள் சந்தையில் மிகப் பெரிய வரவேற்பைப்
பெற்றவை. கெலக்ஸி எஸ்1, எஸ்2, எஸ்3 என அனைத்தும் 100
மில்லியன்களுக்கு அதிகம்
விற்பனையாகியுள்ளதாக செம்சுங் அண்மையில்
அறிவித்தது. இந்நிலையில் கெலக்ஸி எஸ் வரிசையில்
அடுத்தாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்
போனே கெலக்ஸி எஸ்4. இது 4.99 அங்குல அதி துள்ளியமான சுப்பர்
எமொலெட் எச்.டி தொடுதிரையைக் கொண்டுள்ளது.
இதன் ரிசொலுயுசன் 1920 x 1080 என்பதுடன்
படவனு அடர்த்தி 441ppi ஆகும். இதன் தொழிநுட்ப அம்சங்கள்
12 March 2013
ஒன்பது மாத காலங்களுக்கு மாத்திரம் மின் கட்டணங்களில் தற்காலிக உயர்வு
* 2014இல் கட்டணம் குறைப்பு: மின் சீராக்கல் கட்டணம் நீக்கம்
* நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே தற்காலிக கட்டண உயர்வு
* 3 ரூபா கட்டணம் 5 ரூபாவாகவும் ரூ. 4.70 கட்டணம் 6 ரூபாவாகவும் உயர்வு
எரிபொருள் விலை உயர்வினால் மின்சார சபை எதிர்கொண்டுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் தற் காலிகமாக மின்சார கட்ட ணத்தை அதிகரிப்பத ற்கு மின்சக்தி, எரிசக்தி அமைச்சு உத்தேசித் துள்ளது. குறைந்தளவு மின்சாரத்தை பயன் படுத்தும் மக்களுக்கு அதிக சுமை ஏற்றாத வகை யில் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சிபார்சு செய்துள்ளது. இன்று (12) முதல் பொதுமக்களின் கருத்தை அறிந்த பின் ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. 2013 டிசம்பர் வரையே இவ்வாறு மின் கட்டணம் உயர உள்ளதோடு 2014 முதல் மின் கட்டணத்துடன் அறவிடப்படும் எரி பொருள் சீராக்கல் கட்டணம் பிதிவி முழுமையாக அகற்றப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க உள் ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.மொத்த மின் உற்பத்தியில் 80 வீதம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யும் நிலையில் மின்சார சபைக்கு எரிபொருளுக்காக கூடுதல் நிதி செலவிட நேரிட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து கொள்வனவு செய்த எரிபொருளுக்காக மின்சார சபை 2012 இல் 28 பில்லியன் ரூபா வழங்க வேண்டியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதால் இந்த வருடத்தில் மின்சார சபைக்கு மேலும் 27 பில்லியன் ரூபா செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு கூறியது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய பணத்தை மின்சார சபை செலுத்தாததால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் கொள்வனவு செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. 2013 டிசம்பராகும் போது முழு நாட்டிற்கும் நூறு வீதம் மின்சாரம் வழங்கும் இலக்கை நோக்கி செயற்படுவதால் நிதி நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக இவ்வாறு கட்டணத்தை உயர்த்த சிபார்சு செய்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. மின் கட்டணத்தை அதிகரிக்காதிருப்பதற்கு தங்களுக்கு இரு மாற்று வழிகளே இருப்பதாக மின்சார சபை கூறுகிறது. தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்துதல் அல்லது தற்காலிகமாக வங்கிக் கடன் பெறுவது என்பனவே அவையாகும். ஆனால் 5 நிமிடம் கூட மின்சாரத்தைத் துண்டிக்க அரசாங்கம் தயாராக இல்லாததால் முதலாவது வழி சாத்தியமில்லையென மின்சார சபை கூறுகிறது. இந்த வருடம் டிசம்பராகும் போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினூடாக 600 மெகா வோர்ட் மின்சாரம்தேசிய மின் கட்டமைப்புடன் இணைய உள்ளது. அது வரையே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள் வதாகவும் 2014 இன் பின் எரிபொருள் மூலமான மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து மின் உற்பத்திச் செலவு குறைய உள்ளதாகவும் மின்சார சபை கூறுகிறது. 2014 டிசம்பராகும் போது மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதே தமது நோக்கம் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. மின்சார சபை உத்தேசித்துள்ள புதிய கட்டண அதிகரிப்பின் படி மாதாந்த நிலையான கட்டணம் மாற்றப்படமாட் டாது. முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் 3 ரூபாவில் இருந்து 5 ரூபாவாகவும் 60 அலகுவரையான கட்டணம் 4 ரூபா 70 சதத்திலிருந்து 6 ரூபாவாகவும் உயர்த்தப்படுகிறது. 90 அலகுகளுக்கான கட்டணம் ஒவ்வொரு அலகிற்கும் தலா ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கிறது. 120 அலகுகள் வரையான கட்டணம் தலா 6 ரூபா வினாலும் 180 அலகுகள் வரையான கட்டணம் 4 ரூபாவினாலும் 210 அலகுகள் வரையான கட்டணம் எட்டு ரூபாவினாலும் குறைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறைந்த அலகுகள் பயன்படுத்து வோருக்கு வழங்கும் குறைந்த அலகுக் கட்டணங்கள், கூடுதலாக பயன்படுத்து பவர்களுக்கும் வழங்கப்படுவதை திருத்தும் வகையிலேயே கட்டணம் திருத்தப்படுவதாகவும் மின்சார சபை கூறியது. கட்டணம் உயர்த்தப்படுகிற போதும் பாவனையாளர்களுக்கு வழங்கும் நிவாரணம் நிறுத்தப்படாது எனவும் மின்சார சபை கூறியுள்ளது. கைத்தொழிற்துறைக்கு வழங்கும் நிவாரணம் 26 பில்லியனாகவும் மதஸ்தலங்களுக்கு வழங்கும் நிவாரணம் 1.2 பில்லியனாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண மின் பாவனையாளருக்கு வழங்கும் நிவாரணம் 12 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண திருத்தத்தில் மதஸ்தலங்கள், பாடசாலைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் அறிய வருகிறது. ஹோட்டல்கள், கைத்தொழில் நிலைய ங்களுக்கான கட்டணங்களில் சிறிய அதிகரிப்புக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இந்த வருட முடிவு வரை எக்காரணம் கொண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது. ஒரு மின் அலகிற்கு மின்சார சபை தலா 22.85 ரூபா செவிடுகிற போதும் பாவனையாளர்களுக்கு 16.20 ரூபா நஷ்டத்திற்கே வழங்கப்படுவதாகவும் மின்சார சபை கூறுகிறது.
thanks.thinakaran .lk
06 March 2013
பொது பலசேனாவின் காலி மாவட்டத்தின் தலைமையகத்தை திறக்கிறார் கோத்தா
காலியில் நிறுவப்பட்டுள்ள
பொதுபலசேனா அமைப்பின் தலைமைத்துவ
நிறுவகத்தை எதிர்வரும்
சனிக்கிழமை பாதுகாப்புச் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைப்பார். பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய இனங்களின்
உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில்
தேசியளவிலான
செயற்பாட்டிற்கு மேற்படி தலைமையகம்
பேருதவியாக இருக்கும்
என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தஞான சார தேரர்
தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுபல சேனா குறுகிய காலத்தில்
தேசியளவில் சிறந்த
வலையமைப்பை உருவாக்கி நாட்டில்
ஊடுருவி ஏனைய மதங்களின்
உரிமைகளை அழித்துக்கொண்டிருக்கும்
அடிப்படைவாத சக்திகளை அழித்து பௌத்த மதத்தை பாதுகாப்பதுடன் ஏனைய மதங்களின்
உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில்
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் காலியில்
தலைமையலுவலகத்தை பொதுபலசேனா எதிர்வரும்
சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளது.
இதற்கு தலைமை தாங்க பாதுகாப்புச் செயலாளர்
வருகின்றார். அதேபோன்று பல
முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ள உள்ளனர் எனக் கூறினார்.
Source:www .virakesari.lk/article/local.php?vid=3336
05 March 2013
எச்.ஐ.வி வைரஸுடன் பிறந்த குழந்தைக்கு தொற்று அகற்றப்பட்டது
எச்.ஐ.வி தொற்றுடன் பிறந்த
பெண்குழந்தை ஒன்றின் உடலில்
இருந்து அமெரிக்க விஞ்ஞானிகள் அந்த
வைரஸை அகற்றியுள்ளார்கள். இது குறித்த விவரங்களை வெளியிட்ட
அமெரிக்க விஞ்ஞானிகள், இது போல, பிறந்த
குழந்தை ஒன்றின் உடலில்
இருந்து எச்.ஐ.வி வைரஸை அகற்றுவது முதல்
முறை என்றும், மனித உடலில்
இருந்து எச்.ஐ.வி வைரஸை அகற்றுவது என்பது இத்துடன் இரண்டாவது முறை என்றும்
அறிவித்துள்ளனர். இந்தப் பெண் குழந்தை, அமெரிக்காவின்
மிஸிஸிப்பி மாநிலத்தில் , எச்.ஐ.வி தொற்றுள்ள
ஒரு தாய்க்குப் பிறந்தது. பிறந்தவுடன் அந்தக்குழந்தைக்கு ஆண்டி-
ரெட்ரோவைரல் மருந்துகள் மூன்றின்
ஒரு கலப்பை, பிறந்த ஒரு சில
மணி நேரங்களுக்குள் மருத்துவர்கள்
கொடுத்தனர். அந்தக்குழந்தைக்கு, பின்னர் பல
மாதங்களாக மேலும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும்,
அந்தக்குழந்தைக்கு முதலில் அளிக்கப்பட்ட
மருந்தே வைரஸை ஒழித்ததாக தாங்கள்
கருதுவதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து,
எதிர்காலத்தில் பிறக்கப்போகும், இது போன்ற
தொற்று நோய் பீடித்த குழந்தைகளின்
உடலிலிருந்து எச்.ஐ.வி தொற்றை அகற்ற
முடியும் என்ற நம்பிக்கை தோன்றியிருப்பதாக
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது போல எச்.ஐ.வி தொற்றுடன் குழந்தைகள்
பிறப்பது என்பது சஹாரா
பாலைவனப்பிரதேசத்துக்கு தெற்கிலுள்ள
ஆப்ரிக்க நாடுகளில் குறிப்பாக பெரிய
பிரச்சினையாக இருக்கிறது.
thanks:bbc
பெண்குழந்தை ஒன்றின் உடலில்
இருந்து அமெரிக்க விஞ்ஞானிகள் அந்த
வைரஸை அகற்றியுள்ளார்கள். இது குறித்த விவரங்களை வெளியிட்ட
அமெரிக்க விஞ்ஞானிகள், இது போல, பிறந்த
குழந்தை ஒன்றின் உடலில்
இருந்து எச்.ஐ.வி வைரஸை அகற்றுவது முதல்
முறை என்றும், மனித உடலில்
இருந்து எச்.ஐ.வி வைரஸை அகற்றுவது என்பது இத்துடன் இரண்டாவது முறை என்றும்
அறிவித்துள்ளனர். இந்தப் பெண் குழந்தை, அமெரிக்காவின்
மிஸிஸிப்பி மாநிலத்தில் , எச்.ஐ.வி தொற்றுள்ள
ஒரு தாய்க்குப் பிறந்தது. பிறந்தவுடன் அந்தக்குழந்தைக்கு ஆண்டி-
ரெட்ரோவைரல் மருந்துகள் மூன்றின்
ஒரு கலப்பை, பிறந்த ஒரு சில
மணி நேரங்களுக்குள் மருத்துவர்கள்
கொடுத்தனர். அந்தக்குழந்தைக்கு, பின்னர் பல
மாதங்களாக மேலும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும்,
அந்தக்குழந்தைக்கு முதலில் அளிக்கப்பட்ட
மருந்தே வைரஸை ஒழித்ததாக தாங்கள்
கருதுவதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து,
எதிர்காலத்தில் பிறக்கப்போகும், இது போன்ற
தொற்று நோய் பீடித்த குழந்தைகளின்
உடலிலிருந்து எச்.ஐ.வி தொற்றை அகற்ற
முடியும் என்ற நம்பிக்கை தோன்றியிருப்பதாக
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது போல எச்.ஐ.வி தொற்றுடன் குழந்தைகள்
பிறப்பது என்பது சஹாரா
பாலைவனப்பிரதேசத்துக்கு தெற்கிலுள்ள
ஆப்ரிக்க நாடுகளில் குறிப்பாக பெரிய
பிரச்சினையாக இருக்கிறது.
thanks:bbc
முஸ்லிம் மாணவ மாணவியர் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்: சிங்களப் பாடசாலையில் பணிப்பு
பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள
வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில்
கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர்
இன்று முதல் ஆசிரியர்களின் காலில்
விழுந்து வணங்கவேண்டும் என அந்த
பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர்
அணியும் கலாசார உடையினையும்
தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப்
போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும்
தெரிவித்துள்ளார்.
Source:www. virakesari.lk/article/local.php?vid=3324
01 March 2013
சபித்தல்
நபி அவர்கள் கூறினார்கள், "அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது".
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம் "அதிகம்
சபிப்பது உண்மையானவனுக்கு அழகல்ல!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும்.
பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால், யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத் 'அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக்
கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத் அதிகம் சபிப்பவர்கள் 'மறுமை நாளில்" பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ 'ஒரு முஃமினை திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ:
கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ
Thanks:http://www.readislam.net/portal/archives/1938
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம் "அதிகம்
சபிப்பது உண்மையானவனுக்கு அழகல்ல!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும்.
பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால், யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத் 'அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக்
கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத் அதிகம் சபிப்பவர்கள் 'மறுமை நாளில்" பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ 'ஒரு முஃமினை திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ:
கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ
Thanks:http://www.readislam.net/portal/archives/1938
Subscribe to:
Posts (Atom)