தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

31 March 2014

களுத்துறை மாவட்ட விருப்பு வாக்கு விபரம்

மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற
வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரங்கள்
வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட செனல் வெல்கம 115385
வாக்குகளையும் ரோஹண அபேகுணவர்தன 51339 விருப்பு வாக்குகளையும் யசபால கொரலகே 42395
வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜகத்
விதான 29920 விருப்பு வாக்குகளையும் ஜெமில் 24576
வாக்குகளையும் பி.டி.ரவீந்ர யாசஸ் 12885 வாக்குகளையும் அனுர
திலீப் 12569 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜேவிபியின் கீழ் போட்டியிட்ட
நலிந்த ஜயதிஸ்ஸ 11949
வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
Source:http://adf.ly/i5fPS

மேல், தென் மாகாண தேல்தல் முடிவுகள் ஒரே பார்வையில

நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான
தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக
வெற்றியீட்டியுள்ளது.
மேல் மாகாண சபையில் 56 ஆசனங்களை வசப்படுத்திய அந்தக்
கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1,363,675 ஆகும்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி 679,682 வாக்குகளுடன் 28 ஆசனங்களைக்
கைப்பற்றியுள்ளது.
ஐனநாயகக் கட்சி 203,767 வாக்குகளுடன் 9 ஆசனங்களையும், மக்கள்
விடுதலை முன்னணி 156,208 வாக்குகளுடன் 6 ஆசனங்களையும்
வசப்படுத்தியுள்ளன.
இதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணி 51,000 வாக்குகளுடன் 2
ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 49,515
வாக்குகளுடன் 2 ஆசனங்களையும்
கைப்பற்றியுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491 வாக்குகளுடன்
ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மேல் மாகாண சபையைப் பொறுத்தவரை 66.32 % வாக்குப் பதிவுகள்
இடம்பெற்றுள்ளன. மேலும் தென் மாகாண சபையில் 33 ஆசனங்களைப் பெற்றுள்ள, ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது.
மொத்தமாக 699,408 வாக்குகளை அந்தக் கட்சி பெற்றுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி 310,431 வாக்குகளுடன் 14
ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி 109,032 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும் ஐனநாயகக்
கட்சி 75,532 வாக்குகளுடன் 3
ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.
தென் மாகாணத்தைப் பொறுத்த வரை 66.83% வாக்குப் பதிவுகள்
இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி மாவட்ட ரீதியான முடிவுகள்....
தென் மாகாண சபை: காலி மாவட்டம் இறுதி தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 293,619 வாக்குகளைப்
பெற்று 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 134,305 வாக்குகளைப் பெற்று 6
ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஜனநாயகக் கட்சி 45,484 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி 30,529 வாக்குகளைப் பெற்று 1
ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 809,882
அளிக்கப்பட்ட வாக்குகள் - 531,025 (65.57%)
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் - 509,890 (96.02 %) நிராகரிக்கப்பட்ட
வாக்குகள் - 21,135 (3.98 %)
மாத்தறை மாவட்டம் இறுதி தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 231,102 வாக்குகளைப்
பெற்று 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 96,297 வாக்குகளைப் பெற்று 4
ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 39,158 வாக்குகளைப் பெற்று 2
ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.
ஜனநாயகக் கட்சி 20,501 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப்
பெற்றுக் கொண்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 608,524
அளிக்கப்பட்ட வாக்குகள் - 406,140 (66.74 %) ஏற்றுக்கொள்ளப்பட்ட
வாக்குகள் - 390,428 (96.13 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 15,712 (3.87 %)
ஹம்பாந்தோட்டை மாவட்டம் இறுதி தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 174,687 வாக்குகளைப்
பெற்று 08 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 79,829 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி 39,345 வாக்குகளைப் பெற்று 2
ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 467,847
அளிக்கப்பட்ட வாக்குகள் - 315,131 (67.36 %)
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் - 304,252 (96.55 %) நிராகரிக்கப்பட்ட
வாக்குகள் - 10,879 (3.45 %)
மேல் மாகாண சபை:
கம்பஹா மாவட்டம் இறுதித் தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 582,668 வாக்குகளைப்
பெற்று 23 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 249,220 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஜனநாயகக் கட்சி 88,557 வாக்குகளைப் பெற்று 4
ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி 56,405 வாக்குகளைப் பெற்று 2
ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17,296 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை
வசப்படுத்தியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 1,590,076
அளிக்கப்பட்ட வாக்குகள் - 1,045,665 (65.76%)
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் - 1,004,952 (96.11 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 40,713 (3.89%)
களுத்துறை மாவட்டம் இறுதி தேர்தல் முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு 337,924 வாக்குகளைப்
பெற்று 13 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 144,924 வாக்குகளை பெற்று 6
ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஜனநாயகக் கட்சி 43,685 வாக்குகளுடன் 2 ஆசனங்களை பெற்றுக்
கொண்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 25,366 வாக்குகளைப்
பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 881,814
அளிக்கப்பட்ட வாக்குகள் - 602,463 (68.32%)
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் - 573,653 (95.22 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 28,810 (4.78%) கொழும்பு மாவட்டம் இறுதி
தேர்தல் முடிவு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 443,083 வாக்குகளைப்
பெற்று 18 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 285,538 வாக்குகளை பெற்று 12
ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஜனநாயகக் கட்சி 71,525 வாக்குகளுடன் 3 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி 74,437 வாக்குகளைப் பெற்று 3
ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஜனாநாயக மக்கள் முன்னணி 44,156 வாக்குகளுடன் 2
ஆசனத்தை வசப்படுத்தியுள்ளது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20,163 ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491 வாக்குகளுடன்
ஒரு ஆசனத்தை வசப்படுத்தியுள்ளது,.
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 1,552,734
அளிக்கப்பட்ட வாக்குகள் - 1,021,188 (65.77%)
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் -977,426 (95.71%) நிராகரிக்கப்பட்ட
வாக்குகள் - 43,762 (4.29%)

Source:http://adf.ly/i5hLt

28 March 2014

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நாளை

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நாளை (29) நடைபெறவுள்ளது.
இதனையிட்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள்
ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இரண்டு மாகாண சபைகளின்
சார்பில் 155 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 23 அரசியல் கட்சிகள்
மற்றும் 42 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3794 பேர் இம்முறை தேர்தல்
களத்தில் போட்டியி டுகின்றனர். மாகாண சபை உறுப்பினர்க ளை தெரிவு
செய்வதற்காக இரண்டு மாகாணங் களையும் சேரந்த 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427
வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேற்படி இரண்டு
மாகாணங்களினதும் ஆறு மாவட்டங்களிலுள்ள 57 தேர்தல் தொகுதிகளில் 4253
வாக்களிப்பு நிலையங்களில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும். தேர்தல்
பெறுபேறுகளை கணக்கிடுவதற்காக 608 வாக்கு எண்ணும் நிலையங்கள்
நிறுவப்பட்டுள்ளன. முறைகேடுகளற்ற விதத்தில் நீதியாகவும் நேர்மையாகவும்
தேர்தலை நடத்துவதற்காக இரண்டு மாகாணங்களிலும் சுமார் 26,000க்கும்
அதிகமான பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு
நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளுக்கென
விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன் கலகத் தடுப்பு
பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தலுக்குப்
பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார். தேர்தல்
கண்காணிப்பு பணிகளில் 300 தொடக்கம் 500 வரையிலான உள்நாட்டு
கண்காணிப்பாளர்கள் பங்குபற்றவுள்ளனர். மாகாண சபைத் தேர்தலுக்கு
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவதற்கான அதிகாரம் சட்ட
விதிமுறைகளில் உள்ளடக்கப்படாமையினால் வேறு நாடுகளிலிருந்து எந்தவொரு கண்
காணிப்பாளரும் அழைக்கப்படவில்லை யெனவும் தேர்தல் ஆணையாளர் கூறினார்.
தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச்
செல்லப்பட வேண்டிய வாக்குப் பொட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள்
மாவட்டந்தோறும் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதான மத்திய நிலையங்களுக்கு
எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இம்முறை மேல்மாகாணத்திற்கு 250 பிளாஸ்டிக்
வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவிருப் பதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் கடமைக்களுக்கென சுமார் 70 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு
கடமை நிமித்தம் சமுகமளித்துள்ளனர். வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரும்
தேர்தல் தினத்தன்று நேர காலத்துடனேயே சென்று தமது வாக்குகளை வழங்க
வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். மேல்
மாகாணத்தில் மாத்திரம் 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2
ஆயிரத்து 743 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு
செய்வதற்காக 03 மாவட்டங்களிலுமுள்ள 36 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 40
இலட்சத்து 24 ஆயிரத்து 623 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கொழும்பு
மாவட்டத்தில் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 18 அரசியல் கட்சிகள்
மற்றும் 11 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த ஆகக்கூடிய வேட்பாளர்களாக 1247
பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தின் 15 தேர்தல்
தொகுதிகளிலிருந்தும் பதினைந்து இலட்சத்தி 52 ஆயிரத்தி 733 பேர்
வாக்களிக்கவுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 40 உறுப்பினர்களைத் தெரிவு
செய்வதற்காக 13 அரசியல் கட்சிகள் மற்றும் 09 சுயேச்சைக் குழுக்களைச்
சேர்ந்த 946 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடு கின்றனர். கம்பஹாவில் 13
தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 15 இலட்சத்து 90 ஆயிரத்து 76 பேர்
வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 22 உறுப்பினர்கள்
தெரிவு செய்யப்படவுள்ளனர். இம்மாவட்டத்தில் 13 கட்சிகள் மற்றும் 09
சுயேச்சைகளைச் சேர்ந்த 550 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடு கின்றனர்.
களுத்துறையிலுள்ள எட்டு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 8 இலட்சத்து 81
ஆயிரத்து 814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தென் மாகாணத்தில்
மூன்று மாவட்டங்களிலிருந்து 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1057
வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம் மாகாணத்தின் 21 தேர்தல்
தொகுதிகளிலி ருந்தும் 18 இலட்சத்து 73 ஆயிரத்தி 804 பேர் வாக்களிக்க
தகுதி பெற்றுள்ளனர். காலி மாவட்டத்திலிருந்து 22 உறுப்பினர்களைத் தெரிவு
செய்வதற்கான 14 அரசியல் கட்சிகள் மற்றும் 04 சுயேச்சைக்
குழுக்களிலிருந்தும் 450 வேட்பாளர்கள் இம்முறை போட்டி யிடுகின்றனர்.
இம்மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகளிலுமிருந்தும் 8 இலட்சத்து 9
ஆயிரத்து 882 பேர் வாக்களிக்கவுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 17
உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 அரசியற் கட்சிகள் மற்றும் 05
சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 380 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியி
டுகின்றனர். இம்மாவட்டத்தின் 07 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 6 இலட்சத்து
08 ஆயிரத்தி 524 பேர் வாக்களிக்கவுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 14
உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 09 கட்சிகள் மற்றும் 04
சுயேச்சைகளைச் சேர்ந்த மிகவும் குறைந்த வேட்பாளர்களான 221 பேர்
போட்டியிடவுள்ளனர். இம்மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகலுமிருந்து 4
இலட்சத்து 55 ஆயிரத்து 398 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதேவேளை, தபால் மூல
வாக்களிப்பு, கடந்த 13 மற்றும் 14 ம் திகதிகளில் சுமுகமான முறையில்
நடைபெற்றது. இம்முறை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 796 பேர் தபால் மூலம்
வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். கொழும்பில் 175 வாக்கு எண்ணும்
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. றோயல் கல்லூரியில் 74 நிலையங்களிலும்
டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 53 நிலையங்களிலும் இஸிபத்தான கல்லூரியின்
48 நிலையங்களிலும் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறும். கம்பஹா
மாவட்டத்தில் 160 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. சியகே
தேசிய கல்விக் கல்லூரியில் 77 நிலையங்களும் வேயங்கொடை பண்டார நாயக்க
மத்திய மகா வித்தியாலயத்தில் 55 நிலையங்களும் பத்தலாகெதர வித்தியாலோக்க
வித்தியாலயத்தில் 28 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. களுத்துறை
மாவட்டத்தில் 85 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
ஸத்துன்ரத்த தேசிய கல்விக் கல்லூரியில் 56 நிலையங்களும் திஸ்ஸ தேசிய
பாடசாலையில் 29 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. காலியில் 80 நிலையங்களின்
கீழ் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. காலி தொழில்நுட்ப கல்லூரியில் 36 நிலையங்
களும் சவுத்லெண்ட் வித்தியாலயத்தில் 32 நிலையங்களும் மாவட்ட செயலகத்தின்
கீழ் 12 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. மாத்தறையில் 62 நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. ரோஹண மத்திய வித்தியாலயத்தில் 24 நிலையங்களும்
தொழில்நுட்ப கல்லூரியில் 38 நிலையங் களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டையில் சுச்சி தேசிய பாடசாலையில் மாத்திரம் 46 நிலைங்கள்
வாக்குகளை எண்ணுவதற்காக நிறுவப்பட் டுள்ளன. தேர்தல் நடைபெறும் தினமான
நாளை இரவு 8 மணிக்குள் முதலாவது பெறுபேறாக தபால் மூல வாக்களிப்பின்
பெறுபேறுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்குள்ளாக
முதலாவது பிரதேச வாரியான பெறுபேற்றினை அறிவிக்க தேர்தல்கள் திணைக்களம்
நடவடிக்கை மேற்கொள்ளுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். மேல்
மற்றும் தென் மாகாண சபைகள் ஜனவரி 12ம் திகதி கலைக்கப்பட்டன. அதனைத்
தொடர்ந்து ஜனவரி 30ம் திகதி முதல் பெப்ரவரி 06 ம் திகதி வரையில் வேட்பு
மனுக்கள் கையேற்கப் பட்டன.




Source:http://adf.ly/hmBeJ

25 March 2014

மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது உறுதியானது: மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச்.25-
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்
புறப்பட்ட விமானம், கடந்த 8-ந் தேதி அதிகாலையில்
திடீரென்று மாயமானது.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக
விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர்.
தெற்கு சீனா கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்தபோது, அந்த
விமானத்துடனான தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது.
மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் இந்தியா உள்பட 26
நாடுகளின் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தீவிரமாக
ஈடுபட்டு வந்தன. இருப்பினும் விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து
வந்தது. இந்த நிலையில்,
ஆஸ்திரேலியா அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள்
மிதப்பதாக, நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு போர்க்கப்பல்கள் விரைந்தன.
இதற்கிடையில், இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் மற்றும்
விமான விபத்து புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில், 17
நாட்களுக்கு பிறகு அந்த விமானம்
குறித்து நேற்று உறுதியான தகவல் கிடைத்தது.
அதன்படி, இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில்
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏறத்தாழ 2500
கிலோமீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள்
நொறுங்கி விழுந்து மூழ்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகார
பூர்வமாக அறிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர்களின்
சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர், ஆழ்ந்த துயரத்துடன் இந்த
தகவலை அறிவிப்பதாக குறிப்பிட்டார். "இன்மர்சாட் என்ற
இங்கிலாந்து செயற்கை கோள் நிறுவனம் அளித்த தகவலின்படி கடைசியாக அந்த
விமானம் தெற்கு இந்திய
பெருங்கடலின் மத்திய பகுதிக்கு மேல் பறந்தபோது கடலுக்குள்
விழுந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து இருப்பதாக" அவர்
தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன்
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 8 மணி நேரம் ஆகாயத்தில்
பறந்த அந்த விமானம் அதன் பிறகு கடலில்
விழுந்து மூழ்கி உள்ளது. விமானங்கள் இறங்கும் வசதி உள்ள
இடங்களுக்கு வெகு தொலைவான இடத்தில் விமானம்
விழுந்து இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கொண்டு விவரங்கள் எதையும் தெரிவிக்க மறுத்த அவர்,
விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினரின் மன உணர்வுகளை மதித்து
நடந்து கொள்ளும்படி செய்தியாளர்களிடம்
வேண்டுகோள் விடுத்தார். கடந்த சில வாரங்களாக மனம் உடைந்த
நிலையில் உள்ள அவர்களுக்கு இந்த தகவல் மேலும் மோசமானதாக
அமையும் என்றும் ரசாக் குறிப்பிட்டார்.
மிகவும் சோகமாக காணப்பட்ட பிரதமர் ரசாக்,
செவ்வாய்க்கிழமை (இன்று) மீண்டும் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறி, தனது
பேட்டியை முடித்துக்கொண்டார். இதனால், இன்றைய
பேட்டியின்போது அவர் மேலும் சில விவரங்களை வெளியிடலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலுக்குள் விழுந்த அந்த விமானத்தில்
இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் (சிக்னல்)
வந்து கொண்டு இருப்பதால் அதன் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்று செயல்பட்டு
வருவதாக, இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம்
ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அது குறித்து அந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
எந்த நேரங்களில், எத்தனை தகவல்கள் அதுபோல் வந்தன
என்பதை தெரிவிக்க மறுத்து விட்டனர். அனைத்து விவரங்களையும்
உலகம் முழுவதிலும் உள்ள புலனாய்வு பிரிவுகளுக்கு வழங்கி இருப்பதாகவும், அதன்
அடிப்படையில் விமானம் விழுந்த இடத்தை கண்டறியும்
பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மலேசிய பிரதமர் ரசாக் பேட்டி அளிப்பதற்கு முன்பாக, விமான
நிறுவனம் சார்பில் அதில் பயணம் செய்த அனைவருடைய
குடும்பத்தினருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், "விமானத்தில்
இருந்தவர்கள் ஒருவர் கூட உயிர் பிழைக்கும்
வாய்ப்பு இல்லை என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிய
வந்திருப்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிப்பதாக"
குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தகவல் அறிய வந்ததும்
பீஜிங்கை சேர்ந்த பல பயணிகளின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மலேசிய விமானம் மாயமான நாளில் இருந்து அந்த விமானம் என்ன ஆனது?
தீவிரவாதிகள் அதை கடத்தி இருக்கலாமா? என்பது உள்ளிட்ட
பல்வேறு கோணங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. அவற்றில்
எதையுமே உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது.
தற்போது இங்கிலாந்து செயற்கை கோள் நிறுவனம் அளித்த
தகவலின்படி மாயமான விமானம் குறித்த மர்மம் விலகி உள்ளது.
ஆனால், எதனால்-எப்படி அந்த விமானத்துக்கு இந்த கதி ஏற்பட்டது? என்பது
இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
விமானத்தில் பயணித்தவர்கள்

சீனர்கள் 153

மலேசியர்கள் 38

இந்தோனேசியர்கள் 7

அவுஸ்திரேலியா 6

இந்தியர்கள் 5
பிரான்ஸ் 4

அமெரிக்கா 3

நியுஸிலாந்து, உக்ரேன், கனடா, தலா 2

ரஷ்யா, தாய்வான், இத்தாலி, நெதர்லாந்து ,ஆஸ்திரியா தலா 1

பணியாளர்கள் 12


Thanks:மாலைமலர

20 March 2014

சிக்கல்களை எதிர்நோக்கும் விமானத் தேடும் பணிகள் - காணொளி

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 12 நாட்கள் ஆகியுள்ளன.
தேடுதல் நடவடிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் விமானம்
இது வரையில் கிடைக்கவில்லை. இந்திய பெருங்கடலில் நடைபெற்று வரும் தேடுதல்
நடவடிக்கையில்
பங்கேற்பதற்காக மேலும் ஒன்பது கப்பல்களை சீனா அனுப்பியுள்ளது.
சீனா தன்னுடைய செயற்கை கோள்கள் மூலமாக தன்னுடைய
பிரதேசங்களை தேடுகிறது. தாய்லாந்து, தன்னுடைய இராணுவ ராடாரில் பதிவான தகவல்களின்
படி மலேசியாவில் இருந்து மலாக்கா நீரிணைப் பக்கமாக
ஒரு விமானம் சென்றுள்ளதாகக் கூறுகிறது. இப்போது ஐரோப்பாவின் பரப்பளவுக்கு தேடுதல்
நடைபெற்று வருகிறது, தேடுதல் நடவடிக்கையில் 26 நாடுகள்
ஈடுப்பட்டு வருகின்றன.

Thanks:BBC

16 March 2014

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பவுரியா நூர் முஹமது மெஹர்தாத்;சில தகவல்கள்

கடந்த 08-03-2014 ல் மாயமான மலேசிய விமானத்தில்,
போலி கடவுச்சீட்டில் பயணம் செய்த
ஈரான் நாட்டைச் சேர்ந்த பவுரியா நூர் முஹமது மெஹர்தாத் (வயது 19) என்பவர்
ஜேர்மனியில் குடியேறும் நோக்குடன்,கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்
சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் ஜேர்மன் செல்ல அவர்
திட்டமிட்டிருந்ததாக ஜேர்மனியில் காத்திருந்த அவரது தாயாரிடம் நடத்திய
விசாரணைகளில் தெரியவந்ிருந்தது.
பவுரியா நூர் முஹமது மெஹர்தாத்்தின் பேஸ்புக் கணக்கில் அவரது பெயர்
pouria NM என்று இருந்தது, பெப்ரவரி 27ம் திகதி அவர் தனது பதிவில்
"நண்பர்களே! இறைவன் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று
பிராத்தியுங்கள்;நான் உங்கள் அனைவரையும் நேசிக்கின்றேன் என்று
எழுதியிருந்தார்.
பெப்ரவரி 28 முதல் மார்ச் 8 MH370 விமானத்தில் புறப்படும்வரை அவர்
கோலாலம்பூரில் தங்கியிருந்தபோது பிடிக்கப்பட்ட தனது மூன்று
புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார்.
அவரது பேஸ்புக் கணக்கு


https://facebook.com/pouria.nourmohammadi?v=timeline&refid=17

15 March 2014

சக்கரம் உடைந்ததால் ஓடு பாதையில் மோதுண்டவிமானத்தின் முன்பகுதி:பயணிகள் அல்லோலம்

அமெரிக்க பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து அமெரிக்க
எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான பயணிகள்
விமானமொன்று புறப்பட தயாரான வேளையில் அதன் சக்கரம்
உடைந்து அந்த விமானத்தின் முன்பகுதி ஓடு பாதையில் மோதுண்ட
பரபரப்பு சம்பவம் வியாழக்கிழமை (13-03-2014)இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது அந்த எயார் பஸ் 320 விமானத்தில் 149
பயணிகளும் 5 விமான உத்தியோகத்தர்களும் இருந்துள்ளனர்.
மேற்படி அனர்த்தத்தில் ஒருவருக்கு மட்டும் மருத்துவ
உதவி தேவைப்பட்டுள்ளது. வேறு எவருக்கும் பாரதூரமான
காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பின்னர்
வேறொரு விமானத்தில் போர்ட் லோடர்டேல்
நகருக்கு பயணத்தை மேற்கொண்டனர்.
Source:http://adf.ly/g0shQ

13 March 2014

MH370 விமான குறியீட்டுக்கு ஓய்வு: மலேசியன் ஏர்லைன்ஸ் முடிவு

கோலாலம்பூர், மார்ச் 13- மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் MH370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று கடந்த 8ஆம் தேதி புறப்பட்டது. புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலைய கண்காணிப்பிலிருந்து அந்த விமானம் மாயமானது. கடந்த ஆறு நாட்களாக பல நாடுகளால் தேடப்பட்டு வரும் இந்த விமானம் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 27,000 கடல் மைல் பரப்பளவில் இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. விமானத்தில் காணாமல் போன பயணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக MH370 மற்றும் MH371 என்ற குறியீட்டு எண்களைத் திரும்பப் பயன்படுத்துவதில்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும்போது MH370 என்று குறிப்பிடப்படும் இந்த பயண சேவை இனி MH318 என்றும், பீஜிங்கிலிருந்து கோலாலம்பூர் திரும்பும் விமானம் MH319 என்றும் குறிப்பிடப்படும். இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு கொண்டுவரப்படும். பயணத் திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இரட்டை தினசரி சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் தங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அன்று விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் குடும்பங்களுடன் இணைந்திருப்பதாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. Thanks:மாலைமலர்

மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் நீடிப்பு: தொடர்கிறது தேடுதல் வேட்டை

கோலாலம்பூர்: விமான கட்டுப்பாட்டு அறையுடனான
தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர், மாயமானதாக கூறப்படும்
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்ந்து 4 மணி நேரம்
பறந்துள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கூறி உள்ளனர்.
கடந்த 8ம் தேதி, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான
எம்.எச்.370 விமானம், 239 பயணிகளுடன் கோலாம்பூரில் இருந்து பீஜிங்
நகருக்கு புறப்பட்டது. இந்நிலையில்,
கோலாலம்பூர் விமான நிலைய விமான கட்டுப்பாட்டு அறையுடன்
இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. 'ஆல் ரைட்', 'குட் நைட்'
என்று பைலட் கூறியதுடன், தகவல் பரிமாற்றம் நின்று போனது.
பின்னர் அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. மலேசிய
அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், பல்வேறு நாடுகள் மாயமான விமானத்தை தேட
துவங்கின. 42 கப்பல்கள், 39 விமானங்கள்,
ஏராளமான ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் உள்ளன.
இந்நிலையில், விமானம் 'யு டர்ன்'
எடுத்து திசைமாறியுள்ளது ராடார் மூலம் தெரிய வந்துள்ள
தாகவும், அனேகமாக
அது மலாக்கா ஜலசந்தியை நோக்கி சென்றிருக்கலாம் என்றும், மலேசிய ராணுவ
அதிகாரி ஒருவர் கூறினார். இதையடுத்து,
மலாக்கா ஜலசந்தியில் தேடுதல் பணி துவக்கப்பட்டது. பின்னர்
அந்தமான் கடல் வரை, தேடும் எல்லை விரிவுபடுத்தப்பட்டது. ஆனால்,
இதுவரை மாயமான விமானம் குறித்த தகவல் இல்லை.
குறிப்பிட்ட விமானத்தில் சீனர்கள் அதிகமாக இருப்பதால்,
சீனா தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளது. 10 செயற்கைகோள்கள்
மூலம், தென்சீன மற்றும் வியட்நாம் கடல்
பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறது. இதில், தென்சீனக்கடலில்
சந்தேகப்படும்படியான வகையில் மூன்று பொருட்கள்
மிதந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவை, மாயமான
விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்குமா என
ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விமான கட்டுப்பாட்டு அறையுடன்
தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தொடர்ந்து 4
மணி நேரம் அந்த விமானம் பறந்துள்ளதாக, அமெரிக்க நிபுணர்கள்
கூறி உள்ளனர். பைலட் இல்லாத நிலையில், தானியங்கி முறையில்
அந்த விமானம் பறந்திருக்கலாம் என, நிபுணர்கள் கூறி உள்ளனர்.
இதனால், விமானம் மாயமான விஷயத்தில் மேலும் ஒரு புதிர் போடப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ள இந்த கால கட்டத்தில், கிட்டத்தட்ட
5 நாட்களாக விமானம் என்ன ஆனது என்று கண்டுபிடிக்க முடியாமல்
மலேசிய அரசு திணறி வருகிறது. தொழில்நுட்பத்தில்
முன்னணியில் உள்ள சீனாவும் இந்த விஷயத்தில் ஒரு முடிவு காண
முடியவில்லை. பயணிகள் விமான போக்குவரத்து வரலாற்றில், இப்படி ஒரு மர்மமான
சூழ்நிலை உருவானது இல்லை என்று,
பத்திரிகைகள் கூறி உள்ளன. இந்நிலையில், மாயமான விமானம்
குறித்தும், அதில் பயணம் செய்தவர்களின் விவரம் குறித்தும்
மலேசிய அரசு போதிய அளவில் தகவல்களை தரவில்லை என, தேடும்
பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன.

Source:http://adf.ly/fldr6

11 March 2014

மாயமான மலேசிய விமானம்: நிபுணர்கள் கூறுவது என்ன?

மலேசியா ஏர்லைன்ஸ் 370 காணாமல் போய் நாட்கள்
சென்று கொண்டிருக்கின்றன. இன்னும் விமானம் 239 பயணிகளுடன்
என்னவாயிற்று என்பதன் சுவடு கூட தெரியவில்லை. இந்தப் புதிர்
குறித்து நிபுணர்களே ஆடிப்போயுள்ளனர். என்னஎன்ன விதங்களில் ஒரு விமானம் மாயமாகும்
வாய்ப்பிருக்கிறது என்ற தெரிந்த மட்டத்தில் தேடுதல்
வேட்டை நடத்தப்படுகிறது. ஆனால் முன் பின் தெரியாத காரணங்கள்
இருக்கலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
1. திருட்டு பாஸ்போர்ட்டில் இருவர் பயணம் செய்த விவகாரம்:
இது குறித்து அமெரிக்க முன்னாள் விமானப் போக்குவரத்துத்
துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேரி ஷியாவோ என்ன கூறுகிறார்
என்றால், திருட்டு பாஸ்போர்ட் என்பதனால் பயங்கரவாத தொடர்புடைய
நபர், விமானம் எங்காவது வெடிக்கச்செய்ய பட்டிருக்கலாம்
என்று கூற முடியாது. எதிர்கால ஒரு திட்டத்திற்காக
பயங்கரவாதிகள் ஒரு வெள்ளோட்டம் பார்த்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
2. விமானத்தின் பாகங்கள் இதுவரை தென்படவில்லை. இதனால் பாம்
வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம்:
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின்
முன்னாள் துணைத் தலைவர் ராபர்ட் பிரான்சிஸ் கூறுகையில், "இந்த
மாயமான சமாச்சாரம் கேள்விப்பட்டவுடன் நான்
நினைத்தது என்னவெனில் ஏதோ காரணங்களால் விமானம் வெடித்துச்
சிதறியிருக்கும், இதற்கான சிக்னல் எதுவும்
இல்லாமலேயே இது நடந்திருக்கலாம் என்று. ராடாரிலிருந்து விமானம்
சுவடின்றி மாயமாகியுள்ளது என்றால் அது காணாமல்
போவதற்கு முன்பு எதிர்பாராதது ஏதோவொன்று நடந்துள்ளது.
என்றார்.
3. சரி செயற்கைக்கோள் தொழில் நுட்பம் என்னவாயிற்று?
விமானம் வெடித்துச் சிதறியிரிந்தால்
அதிலிருந்து வெளியாகும் உஷ்ணம்
அல்லது வேறு ஏதாவது சிக்னல்களை சாட்டிலைட்கள்
பிடித்து விடாதா? அமெரிக்க விமானப்படையில் இதே வேலையாக
இருந்த நிபுணர் பிரையன் வீடன் என்ன கூறுகிறார் என்றால்,
"சாட்டிலைட்கள் அதுபோன்ற ஒன்றை படம் பிடிப்பது கடினம். 300 கிமீ-லிருந்து
1500 கிமீ தூரத்தில் கீழே நிகழும் ஒன்றை படம்
பிடிப்பது கடினம், அது விமானமாகவே இல்லாமல் வேறு ஒன்றாக
இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் ஒரு வாய்ப்பு உள்ளது.
விண்வெளியில் 22,000 மைல்கள்
அமெரிக்க அரசின் செயற்கைக்கோள் உலகம் முழுதும்
நடப்பதை பிடிக்கக்கூடிய திறன் கொண்டது. அது பாலிஸ்டிக்
ஏவுகணைகளை படம் பிடிக்கக்கூடியது. ஆனாலும்
குண்டு வெடிப்பு போன்ற ஒன்றை அதனால் டிராக் செய்ய
முடியுமா என்பது தெரியவில்லை.
4. கடத்தல்:
விமானம் மாயமாவதற்கு முன்னால் அது யு-டர்ன் எடுத்ததாக
கூறப்படுகிறது. அது உண்மையெனில் கடத்தல் காரர்கள்
கோலாலம்பூர் போ என்று கூறியிருக்கலாமோ? ஆனால் கிடைத்திருக்கும்
சாட்சியங்களின் படி கடத்தப்பட்டதற்கான
தடயங்கள் எதுவும் இல்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
5. விமானத்தின் உடைந்த பாகங்கள் இல்லாத நிலையில்,
விமானத்தை கடலுக்குள் செலுத்தப்
பணிக்கப்பட்டு கடலுக்கு அடியில் அது சென்றிருக்குமோ என்ற
கோட்பாடு. அப்படி நடந்திருக்கக் கூடும் என்றால் அவசர நிலை சிக்னல் ஏன்
இல்லை? இரண்டு இஞ்சின்களுமே பழுதானாலும்100 மைல்கள்
வரை தண்ணீரிலேயே அதனால் செல்ல முடியுமாறு அமைக்கப்பட்ட உயர்
தொழில் நுட்ப விமானங்கள் இவை என்கிறார் பைலட் கெய்த் வோல்சிங்கர்.
அப்படி 100 மைல்கள் செல்ல முடியும் என்றால் பைலட்கள் அதற்குள்
சிக்னல் கொடுக்க முடியும் என்கிறார் இவர். இது பல பரிசோதனைகளுக்குப் பிறகே வர்த்தக
பயன்களுக்கு விடப்பட்டுள்ள விமானம் ஆகும். இதன் தொழில்
நுட்பத்தில் கோளாறுகள் இருக்க வாய்ப்பில்லை என்று அவர் மேலும்
கூறுகிறார்.
6. விமானிகளின் தவறு காரணமா?
இந்த விமானம் மாயமானதை 2009ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில்
விழுந்த பிரான்ஸ் விமான விபத்துடன் ஒப்பிடுகின்றனர்
நிபுணர்கள். அதில் 228பேர் பலையாகியுள்ளனர். பிரேசிலில்
இருந்து பாரீஸ் சென்று கொண்டிருந்த விமானம் அட்லாண்டிக்
பெருங்கடலின் ஏற்பட்ட கடும் புயலில் சிக்கி கடலுக்குள்
சென்றது. மிகவும் செலவு பிட்த்த ஒரு நடமுறையில் சுமார் 2 ஆண்டுகள்
தேடுதல் வேட்டையில் விமானத்தின் 2 இஞ்சின்கள், குரல்
மற்றும் தரவு பதிவு எந்திரங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் இந்த முறை வானிலை மிகவும் தெள்ளத் தெளிவாக
இருந்துள்ளது. தற்போது திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்தவர் ஜெர்மனியில்
புகலிடம் கேட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ள்து.
எனவே பயங்கரவாத தாக்குதல் என்ற யூகமும் பொய்த்துப்போயுள்ளது. முற்றிலும்
எதிர்பாராத ஒன்று நிகழ்ந்துள்ளது அது என்ன
என்பதை யாரல் கூற முடியும்?

10 March 2014

மாயமான மலேசிய விமானம் :தொடரும் மர்மம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற விமானம்
காணாமல் போன விவகாரத்தில் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. காணாமல் போன
விமானத்தை, கடலில் தேடும் பணிகள் ஒரு புறம்
தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், குறிப்பிட்ட
விமானத்தின் பயண திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்களும், அதில் பயணம்
செய்த பயணிகளின் பின்னணியும் தீவிரமாக
ஆராயப்பட்டு வருகிறது. விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்தில் கடற்பரப்பில்
பறந்து கொண்டிருந்த போது விமானம் மாயமானதால், விமானம்
விபத்தில் சிக்கியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அந்த
விமானத்தில் 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததாக வந்த
தகவலை அடுத்து அது கடத்தப்பட்டிருக்கலாம்
என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்த தகவலை மலேசிய ராணுவ அமைச்சரும்,
போக்குவரத்துதுறை (பொறுப்பு) அமைச்சருமான சாமுதீன் உசேன்
தெரிவித்தார். அதாவது, விமான பயணிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த
ஆஸ்திரியாவை சேர்ந்த கிறிஸ்டியன் கோசல், இத்தாலியர்
லுய்கி மரால்டி ஆகிய இருவரும் விமானத்தில் பயணம்
செய்யவில்லை என்பதை அந்த நாடுகளின்
வெளியுறவுத்துறை அலுவலகங்கள் உறுதி செய்துள்ளன. தாய்லாந்தில் அவர்களது
பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளதாகவும்
அவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்களது பாஸ்போர்ட்டில் பயணம்
செய்த 2 பேர் யார், யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள்
இருவருக்கும் டிக்கெட் ஒன்றாக வாங்கப்பட்டுள்ளது மேலும்
சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே விமானம், ரேடார் திரையில்
இருந்து மறைவதற்கு முன்பு, பீஜிங் செல்வதற்கான திட்டமிட்ட
பாதையிலிருந்து விலகி சிறிது தூரம் பறந்து, மீண்டும்
புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதற்கான சுவடுகளும் ரேடாரில்
பதிவாகி உள்ளது. இதற்கு காரணம் என்ன
என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. தெரிவிப்புகளும், மறுப்புகளும்
காணாமல் போன விமானத்தில் உதிரி பாகங்கள் வியட்நாம் அருகில்
கண்டுபிடிக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளி வந்தன. ஆனால்,
வியட்நாம் அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. விமான
கதவு ஒன்று கடற்பரப்பில் மிதப்பதாக வந்த தகவலும்
தவறானது என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் காணாமல் போன
விமானத்தின் நிலை என்ன
ஆனது என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான தகவல்களும்
கிடைக்கப் பெறவில்லை. இதனால், அந்த விமானத்தில் பயணம்
செய்தவர்களின் உறவினர்கள், ஏதேனும் நல்ல
செய்தி கிடைக்குமா என்ற நம்பிக்கையோடும், ஒரு புறம் கலங்கிய
மனநிலையோடும் விமான நிலைய வளாகத்தில் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே
விமானத்தில்
சென்ற ஒருவரின் உறவினர், விமானத்தில் பயணம் செய்த தன்னுடைய
உறவினருக்கு போன் செய்தபோது அந்த போன் ரிங் ஆனதாகவும் ஆனால்
யாரும் அந்த போன்காலை எடுத்து பேசவில்லை என்றும்
கூறியுள்ளார். இந்த தகவலை அவர் போலீஸாரிடம் கூறியிருப்பதால் விமானம்
கடத்தப்பட்டு பயணிகள் அனைவரும் உயிருடன் இருப்பார்களோ என்ற
சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் சென்ற ஒருவருடைய போன்
ரிங் ஆவதாக சீன
தொலைக்காட்சியில் செய்திகள் பரவியதும் மற்ற உறவினர்களும்,
விமானத்தில் பயணம் செய்த தங்கள் உறவினர்களுக்கு போன்
செய்து பார்த்தனர். ஆனால் வேறு எவருடைய மொபைல் போனும் ரிங்
ஆகவில்லை. வியட்நாம் கடலில் விழுந்து இந்தவிமானம் மூழ்கியிருக்கலாம்
என்று நினைத்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக அதில் பயணம்
செய்த மொபைல்போன் ரிங் ஆவது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்ரோயிட் சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும்
மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய
பதிப்பினை வெளியிட்டது Opera. இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும்
அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது. இந்த
உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக
இருப்பது விசேட அம்சமாகும். இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம்
செய்துகொள்ள முடியும்.

தரவிறக்கச் சுட்டி
http://www.operasoftware.com/press/releases/mobile/2014-03-06


Source:http://adf.ly/fDRSA

08 March 2014

239 பயணிகளுடன் மலேசிய விமானம் விபத்த

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், 239 பயணிகளுடன் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் வியட்நாமுக்குத் தெற்கே பறந்துகொண்டிருந்தபோது ராடார் தொடர்பை இழந்தது என்று கூறப்படுகிறது. சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்த போயிங் ரக விமானத்தில் பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 153 பேர் சீனர்கள், 38 பேர் மலேசியர்கள், 12 பேர் இந்தோனேசியர்கள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த சிலரும்,12 விமான சிப்பந்திகளும் இதில் பயணித்துக்கொண்டிருந்தனர். மலேசியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே கடற்பரப்பில் இந்த விமானத்தின் துகள்களைத் தேடும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆசியாவின் மிகப் பெரும் விமான நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் தினசரி சுமார் 37,000 பயணிகளை உலகெங்கும் உள்ள சுமார் 80 இடங்களுக்கு ஏற்றிச் செல்கிறது. இந்த போயிங் 777 ரக விமானமும் அதன் 20 ஆண்டு வரலாற்றில் கடந்த ஆண்டு ஜூலையில் சான் பிராஸிஸ்கோ விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்து வரை, எந்த ஒரு மோசமான விபத்தையும் சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. Thanks:BBC

05 March 2014

உலகின் முதல் செயற்கை இருதயம் பொருத்தப்பட்டவர் ‘தொழில்நுட்பக்கோளாறால்’ மரணம்

மாற்று இருதயம


பாரீஸ்: உலகிலேயே முதன் முறையாக செயற்கை இருதயம்
பொருத்தப்பட்ட நோயாளி ஒருவர், தனது செயற்கை இருதயம்
எதிர்பாராத விதமாக செயல்பாட்டை நிறுத்தியதால்
மரணமடைந்துள்ளார். பொதுவாக இருதய நோயினால்
பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம்
இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம்
பொருத்தப்படுவது வழக்கம். ஆனால், அவ்வாறு இருதயம் வேண்டிக்
காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகையால் உயிர்
இழப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய உயிர் இழப்புகளைக் குறைக்கும் வகையில்
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று செயற்கையாக இருதயம் தயாரிக்கும்
முயற்சியில் இறக்கி வெற்றி பெற்றது. ஆனால்,
அவ்வாறு செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி மிகக்
குறைந்த நாட்களிலேயே மரணமடைந்திருப்பது அனைவரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அறிவியலின் துணை கொண்டு முன்னேறி வரும் மருத்துவத் துறையில்
மாற்று இருதயம் கிடைக்கும் வரை செயற்கை இருதயத்தைத்
தற்காலிகமாகப் பயன் படுத்தி வந்தன. இவற்றின் ஆயுட்காலம் சில
தினங்கள் தான்.
கார்மேட் நிறுவனம்...
ஆனால், அத்தகைய செயற்கை இருதயங்களின் வாழ்நாளை அதிகப்
படுத்தினால் இருதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக
இருக்கும் எனக் கருதிய பிரெஞ்ச் பயோமெடிக்கல் நிறுவனமான
கார்மேட் அதற்கான முயற்சியில் இறங்கியது.
வெற்றி.. வெற்றி...
அதன்படி, அந்நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இருதயம் 76
வயது இருதய நோயாளி ஒருவருக்கு கடந்த டிசம்பர் 18-
ந்தேதி பொருத்தப்பட்டது. செயற்கை இருதயம் சிறந்த முறையில்
இயங்கியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில்
இருந்து வீடு திரும்பினார்.
மரணம்...
இந்நிலையில் கடந்த 2-ந்தேதி அவரது செயற்கை இருதயம் திடீரென
தனது செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் உடல் நலம்
பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி 3ம் தேதி அவர்
பரிதாபமாக உயிரிழந்தார்.
தோல்வி...
அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இருதயம் 75 நாட்கள்
மட்டுமே இயங்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு வரும் என எதிர்பார்த்த
முயற்சி தோல்வி அடைந்துள்ளது சம்பந்தப்பட்ட செயற்கை இருதயக்
கம்பெனி மற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட
மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Source:http://adf.ly/ePP5K