இலங்கையிலிருந்து ஏற்கனவே ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் பத்து வருடங்களுக்கு
பின்பே அவர் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்ல முடியு மென முஸ்லிம் சமய பண்
பாட்டலுவல்கள் திணைக் களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் நbமி
தெரிவித்தார். இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லவுள்ள
ஹஜ்ஜாஜிகளுக்கான கூட்டத்தில் உரை யாற்றும்போதே அவர் மேற் கண்டவாறு
குறிப்பிட்டார். காத்தான்குடியில் ஹிஸ்புல் லாஹ் மண்டபத்தில் சனிக் கிழமை
நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் நbமி ஹஜ்
கோட்டாவை கருத்திற்கொண்டு இலங்கையிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒரு முறை
மாத்திரமே ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்ல முடியும் என்பதை முஸ்லிம் சமய பண்பாட்ட
லுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதேபோன்று பதில் ஹஜ்ஜுக்காகவும்
செல்ல முடியாது. இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்வதற்காக 7800
பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் எமது இலங்கைக்கு சவூதி அரேபியா
அரசாங்கம் 2800 பேருக்கு மாத்திரமே இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு செல்வதற்கான
கோட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை மையப்படுத்தி சில நடைமுறைகளை முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பின்பற்ற தீர்மானித்துள்ளது. அதில்
இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு செல்ல விண்ணப்பித்தவர்களில் புதிதாக செல்பவர்களுக்கு
சந்தர்ப்பம் வழங்குதல், அதேபோன்று முதியவர்களுக்கு முன்னுரிமையளித்தல்
போன்ற நடைமுறைகளையும் எமது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
நடைமுறைப்படுத்தவுள்ளது. கடந்த வருடம் ஹஜ்ஜுக்காக செல்வதற்கு
விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் இம்முறை சந்தர்ப்பம்
வழங்கப்படல் வேண்டும். பெண் ஒருவருடன் மஹரமாக (திருணம் செய்ய
அனுமதிக்கப்படாதவர்) செல்லும் ஆண் ஏற்கெனவே சென்றிருந்தாலும் அவர்
குறித்து ஆராய்ந்து அனுமதி வழங்கப்படும். இம்முறை ஹஜ் பிரயாணம்
மேற்கொள்ளவுள்ளவர்களுக்கான கட்டணம் பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
கடந்த வருடம் சில முகவர்கள் கூடிய பணங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சகல முகவர்களையும் வைத்து கலந்துரையாடலை மேற்கொண்டு
இதற்கான கட்டணம் தீர்மானிக்கப்படும். சில முகவர்கள் அவர்கள் ஹாஜிகளுக்கு
வழங்கும் விசேட தேவைகளை கருத்திற்கொண்டும் கட்டணங்கள் அறவிடுவர். ஏதும்
பிரச்சினைகள் இருப்பின் அவைகள் தொடர்பில் எமக்கு அறிவித்தால் அவற்றை
நாங்கள் கவனத்தில் கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதில்
முஸ்லிம் சமய பண்பாட் டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர்
அஷ்ஷெய்க் எம். ஜுனைத் நbமி உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஹஜ்
முகவர்கள் கலந்து கொண்டனர்.
Thanks:thiinakaran
ஊர் செய்திகள்
date
30 May 2013
28 May 2013
ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழுவின் அறிவித்தல்
சூரியன் கஃபாவுக்கு நேராக இன்று (மே-28) உச்சம் கொடுக்கிறது - கிப்லாவை
சரிபார்த்துக்கொள்ள அரியவாய்ப்பு இன்று (மே) 28 ம் திகதி கொழும்பு
நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம்
கொடுக்கின்றது. குறித்த அந்நேரத்தில் செங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு
ஏற்படும் நிழலினூடாக
சூரியனை முன்னோக்குவது சரியாக கஃபாவையே முன்னோக்குவதாக அமையும். ஆகவே,
சரியான கிப்லாவை அறிந்து கொள்வதற்கு நேரகாலத்துடன்
நேர்த்தியான ஒரு தடியை 90 பாகையில் (அதாவது பூமிக்கும் அந்தத்
தடிக்குமிடையிலான கோணம் செங்கோணமாக இருக்கும் விதத்தில்) நாட்டுவதுடன்
பிரயோகிக்கும் கடிகாரத்தின் நேரத்தையும் சரி செய்து கொள்ளவேண்டும்.
பின்னர் குறித்த நேரத்தில் சூரியனின் மூலம் அந்தத் தடிக்கு ஏற்படும்
நிழலின் மீது கோடிட்டுக் கொள்ளவேண்டும். பிறகு அக்கோட்டினூடாக தடியை
நோக்கும் திசையையே கிப்லாவாக எடுத்துக் கொள்ளவேண்டும். சூரியன் மக்காவை
உச்சங்கொடுக்கும் இன்றைய தினத்தில் தங்களது மஸ்ஜிதுகள், வீடுகள் மற்றும்
தேவையான இடங்களுக்கான சரியான கிப்லாவுடைய திசையை அறிந்து கொள்ள மேல்
குறிப்பிட்டவாறு செய்துகொள்ளும்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்
பிறைக்குழு கேட்டுக்கொள்கிறது.
மேலதிக தகவல்களுக்கு : 0115373148 - 0117458885
Thanks:Jaffna Muslim

26 May 2013
தனியாக இருக்கும் போது மாரடைப்பு! -வந்தால் என்ன செய்யலாம்..?
மாரடைப்பு என்றால் என்ன?
அது எவ்வாறு ஏற்படுகிறது?
அதன் அறிகுறிகள் என்ன?
அதை குணப்படுத்துவது எவ்வாறு?
கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது. இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம். பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம். ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம்; ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு. வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....? வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம, ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்.? உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இருமுதல் வேண்டும்”, ஒவ்வொரு முறை இருமலுக்கும் முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில் அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்".. பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்

பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில
சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா?
அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out செய்ய மறந்து விட்டால் அல்லது
திடீர் என்று துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது facebook பக்கத்தை சிலர்
தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் அல்லவா.....?
இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்யலாம் .......
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் facebook கணக்கினுள்
நுழையுங்கள். பின் Account Settings ------> Security எனும் பகுதிக்கு
செல்லுங்கள். அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை
சுட்டுங்கள்.
இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் facebook
Account இணை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில்
நீங்கள் Log out செய்ய மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை
சுட்டுங்கள்.
நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர்
அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு
மிரட்டுகிறது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு
பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2
லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில்
வெளியானது.
அதில் இடம்பெற்ற விபரங்கள்:
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்
கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன்
ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து
இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர்
அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.
2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை
ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது.
ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும்
அவசியம்தான்.

25 May 2013
வெள்ளி, வியாழன், புதன் முக்கோண பாதையில் காட்சி : வானில் அரிய காட்சி!
வெள்ளி, வியாழன், புதன் ஆகிய
மூன்று கிரகங்களும் முக்கோண பாதையில்
ஒன்றாகக் காட்சியளிக்கும்
அரியதொரு நிகழ்வை இலங்கையர்கள் வெறும்
கண்களால் பார்க்க முடியும். இதனை நாளையும், நாளை மறுதினமும் வானில்
காணமுடியும். இம் மூன்று கிரகங்களும், சூரிய அஸ்தமனத்தின்
பின்னர் வானத்தின் வடமேல் திசையில் தென்படும்
என தெரிவிக்கப்படுகின்றது. சூரிய அஸ்தமனமாகி 30-45 நிமிடங்களில்
இவற்றை தெளிவாக காணமுடியுமென
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்றதொரு காட்சியை நாம் மீண்டும் 2026
ஆம் ஆண்டிலேயே காணமுடியுமென விஞ்ஞானிகள்
குறிப்பிடுகின்றனர். இதுமட்டுமன்றி எதிர்வரும் சில
தினங்களுக்கு இக்கோள்களை வெறும் கண்களால்
பார்க்கக்கூடியதாக இருக்குமெனவும்
தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளி மற்றும் வியாழன் கிரகங்கள்
தத்தமது சுற்று வட்டப்பாதையில்
ஒன்றை ஒன்று நெருங்கி வருவதை கடந்த சில
வாரங்களாக காணக்கூடியதாகவுள்ளதாகவும்
தற்போது புதனும்
அவற்றுக்கு நெருங்கி வருவதால் முக்கோண பாதையில் அவை காட்சியளிப்பதாகவும்
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பார்வைக்கு இவ்வாறு தோன்றிய போதிலும்
இவற்றுக்கிடையிலான உண்மையான தூரம் பல
மில்லியன் கிலோமீற்றர்களாகும்.
இலங்கை மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில்
உள்ளோர் இக்காட்சியை கண்டுகளிக்கவுள்ளனர். இதேபோன்று இன்று வானத்தில்
சந்திரகிரகணமொன்று ஏற்படவுள்ளதாகவும்
இதை அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில்
உள்ளோர் தெளிவாகக் காணமுடியுமெனவும்
தெரிவிக்கப்படுகின்றது.

20 May 2013
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியில் இரசாயன கலப்படம
இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை சீனியில்
கட்மியம் என்படும் விஷஇரசாயனம்
கலக்கப்பட்டிருக்கின்றமை ஆய்வுகளில்
இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக விவசாய
அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ரஜரட்ட பகுதியில் சிறுநீரக நோய்
காணப்படுகின்றமை தொடர்பில் உலக சுகாதார
நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் பின்னர்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னரே விடயம்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின்
மேலதிக செயலாளர் கலாநிதி டீ.பீ.டீ.விஜேரத்ன குறிப்பிட்டார். அளவுக்கு
அதிகமாக சீனியில் இரசாயன
பொருட்கள் சில
கலக்கப்பட்டுள்ளமை இதன்போது கண்டறியப்பட்டதா
க அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக மேலும் சில
ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர்
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விவசாய
அமைச்சு தெரிவித்துள்ளது.

17 May 2013
பாலூட்டல் பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும்
இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்
பழக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக
குறைந்து வருகின்றது. புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல்
உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும்
என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் தாய்ப்பால்
கொடுக்காமல் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு புட்டிப்பால்
கொடுப்பார்களேயானால் குழந்தைகளும் சரியான நோய் எதிர்ப்பு சக்தி பெறாமல்
சீரழிவதோடு, பெண்களுக்கும் இதனால் புற்றுநோய் ஏற்படுகின்றது என்றும்,
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும்,
மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய
ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு : இங்கிலாந்து
நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள
3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களுக்கு மேல்
பரிசோதித்ததில், தாய்ப்பால்
கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம்,
பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல்
இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத் தொடர்ந்து
கடைப்பிடிப்பதன்மூலம், பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள
முடியும். உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி மையமும், அமெரிக்காவின்
புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் கூறியுள்ள வழிமுறைகளைக்
கடைப்பிடிப்பதன்மூலம் ஒருவர் 34 சதவிகிதம் தம்மை நோயிலிருந்து
காத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த
வழிமுறைகள் வருமாறு: · ஆரோக்கியமான உடல் எடை, · சுறுசுறுப்பாக
இருத்தல், · உடல் எடையைக் கூட்டும் உணவுப்பொருட்கள் பானங்களைத்
தவிர்த்தல், · தாவர உணவு வகைகளையே அதிகம் உட்கொள்ளுதல், · மது
அருந்துவதைத் தவிர்த்தல் மற்றும் · 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத்
தாய்ப்பால் அளித்தல் மேற்கண்ட விஷயங்களை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக
வாழலாம் என்று இந்த ஆய்வு கூறுகின்றது. லண்டனில் உள்ள இம்பீரியல்
கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இந்த ஆராய்ச்சியை வழி நடத்தியவர். இந்த
வழிமுறைகளை பின்பற்றுவோருக்கு புற்றுநோய்,
ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகள்
குறைவு என்று அவர் கூறியுள்ளார். மனிதனுக்கு அவனது பெற்றோரைக்
குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல்
பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.
எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி
வருதல் உண்டு. அல்குர் ஆன் 31 : 14 பாலூட்ட வேண்டும் என்று
விரும்புகிறவனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு
ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும்
வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும்
சிரமம் தரப்பட மாட்டார். அல்குர் ஆன் 2 : 233 மேற்கண்ட வசனங்களில்
பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று
இறைவன் கட்டளையிடுகின்றான். தங்களது குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்ட
வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில்தான் இறைக்கட்டளையாக
போடப்பட்டுள்ளது. வேறெந்த மதமோ,
சித்தாந்தமோ பாலூட்டுவதை கட்டளையாகப் போடவில்லை. இஸ்லாம்
கட்டளையிடக்கூடிய ஒவ்வொரு வழிமுறையும் மனித குலத்துக்கு நன்மைப்
பயப்பதாகவே அமைந்துள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள்
உண்மைப்படுத்துகின்றன.
Thanks:http://www.onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/pengal-putru-noi/

10 May 2013
நவீன வங்கிக் கொள்ளை: சில மணி நேரங்களில் நாலரை கோடி டாலர்
உலகளவில் இயங்கும் குற்றக்கும்பல் ஒன்று சில
மணி நேரங்களில் வங்கி-பண அட்டை ( ஏடிஎம்-
டெபிட் கார்ட்) தகவல்களை மோசடி செய்து 45
மில்லியன் (நாலரைக் கோடி) அமெரிக்க
டாலர்களை திருடியுள்ளது. இணையதள ஹாக்கிங் மூலம் வங்கிக்
கணக்கை ஊடறுத்து நுழைந்தே குற்றக்கும்பல்
இந்த பெரும் பணத் திருட்டை நடத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள வங்கித் திருட்டுகளில்
மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்றாக
இது பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் நியுயோர்க்கில் 7 பேர்
கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால் பெரும் உலகளாவிய கும்பலின் உள்ளூர்
ஆட்களாக மட்டுமே இவர்கள் இருக்கமுடியும்
என்றும் 'பெருந்தலைகள்' வெளிநாடுகளில்
இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள்
நம்புகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளின்
இரண்டு வங்கிகளின் பண அட்டைகளில்
நாளொன்றுக்கு எடுக்கக்கூடிய பணத்தின்
உச்சதொகையை ஹாக்கிங் குற்றவாளிகள்
மாற்றியுள்ளனர். பின்னர் அந்த வங்கிகளின் பண அட்டைகள்
வெளிநாடுகளில் உள்ள அவர்களின்
ஆட்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த அட்டைகளைப் பயன்படுத்தி 27 நாடுகளில்
40 ஆயிரத்துக்கும் அதிகமான தடவைகள் பணம்
எடுக்கப்பட்டிருக்கிறது. பணம் திருடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில்
இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:bbc

08 May 2013
அமெரிக்காவை கலக்கிய சகோதரர்கள
அமெரிக்காவின் மௌசுசெட்ஸ் பிராந்தியத்தின் பொஸ்டன் நகரில் கடந்த 15ஆம்
திகதி இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியின் போது, வெடிக்கப்பட்ட இரு
குண்டுகளுக்குமான சூத்திரதாரிகள் எனக் கருதும் இருவரது புகைப்படங்கள்
கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ஊடகங்கள் மூலம் வெளியாகியிருந்தன.
தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட பொஸ்டன் பொலிஸ் அதிகாரிகளும்
அமெரிக்க பெடரல் பரிசோதகர்கள் எனும் எப்.பீ.ஐ. அதிகாரிகளும், மேற்படி இரு
வாலிபர்கள் நடந்து கொண்ட விதத்திலேயே அவர்கள் மீது சந்தேகம்
கொண்டிருக்கிறார்கள். இவர்களது நடமாட்டம் அங்குள்ள வியாபார நிலையங்களில்
பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியிருக்கின்றன. அதன்
மூலமே இவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. குண்டுகள்
வெடித்த போது அங்கிருந்தவர்கள் கண்ட நின்றவாறு ஓடிய போதும் இந்த
வாலிபர்கள் இருவரும் மிகவும் அமைதியான முறையில் அந்த இடத்திலிருந்து
நகன்றிருக்கிறார்கள். இது கெமராவில் பதிவாகியிருக்கிறது.
கெமரா பதிவில் இவர்களது முகங்கள் தெளிவாக
தெரியாதிருந்த போதிலும் அவற்றை ஊடகங்களில் வெளியிட்டு, இவர்கள் குறித்து
தெரிந்தவர்கள் உடனே எப்.பீ.ஐ பரிசோதகருடன்
தொடர்பு கொள்ளும்படி கேட்கப்பட்டிருந்தனர். அத்துடன் பொஸ்டன் நகரைச்
சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சந்தேக நபர்கள் இருவரதும்
தெளிவற்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டு சில மணித்தியாலங்களில்
பாதுகாப்பு பிரிவினருக்கு ப்ளோரிடா மாநிலத்திலிருந்து டேவிட் கிறீன்
என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. இவர் மேற்படி மரதன்
ஓட்டப் போட்டியில் பங்குபற்றியவராவார். அவர், அவருடைய கையடக்க
தொலைபேசியிலிருக்கும் கெமராவில் எடுத்த புகைப்படத்தில் இவர்கள் இருவரதும்
தெளிவான புகைப்படங்கள் பதிந்திருந்தமையை அறிவிக்கவே தொடர்பு
கொண்டிருந்தனர். இந்த அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் சரியாக இனங்கண்டு
கொள்வதில் பாதுகாப்பு தரப்பினர் வெற்றி கண்டனர். இவர்கள் இருவர்
குறித்தும் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை. இவர்கள் இருவரும் அமெரிக்காவில்
வசிக்கும் செச்னிய நாட்டைச் சேர்ந்த சகோதரர்களாவர். 26 வயதுடைய டெமரன்லன்
சர்னோவ், 19 வயதுடைய சொ ஹார் சர்னோவ் என்ற சகோதரர்களாவர். இவர்கள்
2002 ஆம் ஆண்டு இங்கு குடியேறியிருக்கிறார்கள். 18 ஆம் திகதி இரவு 10.00
மணியளவில் கேம்பிரிஜில் அமைந்துள்ள மௌசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில்
ஏற்பட்ட குழப்பமொன்றில் அங்கு கடமையிலிருந்த பொலிஸார் பலியான தகவல்
வெளியாகியது. 26 வயதுடைய சோன் கொரியர் என்ற பொலிஸ் அதிகாரியே
மரணமானவராவார். குண்டு சந்தேக சூத்திரதாரிகள் குறித்து அங்கு ஏதும்
தகவல்கள் கிடைத்திருக்கும் என்று பாதுகாப்புத் தரப்பினரால் உணர்ந்து
கொள்ள முடிந்திருக்கிறது. அதனால் கேம்பிரிஜ், பொஸ்டன் பொலிஸ் அதிகாரிகள்
அந்த தொழில்நுட்ப கல்லூரியை சோதனையிட்டனர். கே9 பொலிஸ் நாய்கள் கூட
ஈடுபடுத்தப்பட்டன. மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும்படி
பணிக்கப்பட்டனர். கல்லூரியை மாத்திரமன்றி சூழவுள்ள வீடுகள், கட்டிடங்கள்
எல்லாம் சோதனை செய்யப்பட்டன. பல மணி நேரம் கடந்தும் யாரும் கைதாகவில்லை.
இந்தக் கல்லூரி துப்பாக்கிச் சூடு குறித்தும் குண்டுகள் செயலிழக்கும்
படை, தீயணைப்புப் படை உட்பட பலதரப்பட்ட அணியினரும் இணைந்து பரிசோதனை
மேற்கொண்டனர். சர்னோவ் சகோதரர்கள் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றனர்
என்பதைப் பாதுகாப்புத் தரப்பு அறிந்திருந்த போதும் அதனை ஊடகங்களுக்கு
தெரிவிக்கவில்லை. இரவு 12 மணியளவில் பொஸ்டனிலிருந்து 6 மைல் தூரத்திலுள்ள
வேர்ட்டர் டவுன் நகர எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனக் கடத்தல்
ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இரு வாலிபர்கள் மர்சிடீஸ் ரக எஸ்.யூ.வீ.
வாகனம் ஒன்றை அதன் உரிமையாளருடன் கடத்திக் கொண்டு நகரை நோக்கிப் போய்க்
கொண்டிருந்தார்கள். சிறிது தூரம் சென்ற பின்னர்
உரிமையாளரை வழியே விட்டு விட்டு பயணத்தைத்
தொடர்ந்தனர் என்பது பின்னர் தெரிய வந்தது. குண்டு சூத்திரதாரிகள்
இருவரும் சுமார் 35000 மக்கள் வசிக்கும் வோட்டர் டவுன் நகருக்குள்
பிரவேசித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த பாதுகாப்புத் தரப்பினர் நகரைச்
சுற்றி வளைத்து சல்லடை போட்டனர். இதில் 9000 பொலிஸார்
ஈடுபட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்களும் பொலிஸாருடன் சென்றிருந்த
போதிலும் அவர்களது தொலைபேசிகளை செயலிழக்கச் செய்யும்படி பொலிஸாரால்
பணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களுக்குப் பிரவேசிக்க
ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாததுடன்
அவர்களது வாகனங்களும் சோ தனைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. 19 ஆம் திகதி
அதிகாலை 1.30 மணியளவில் சூத்திரதாரிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள்
பொலிஸாருக்கெதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் கைக்குண்டுகளையும்
வீசியுள்ளனர். அப்போது ரிச்சர்ட் டொனஹியு என்ற 33 வயதுடைய பொலிஸ் அதிகாரி
காயத்துக்குள்ளாகி உடனடியாக சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டார். சில
மணிநேர பரஸ்பரத் தாக்குதலின் பின்னர் மூத்த சகோதரன் டெமரன்லன் சர்னோவ்,
தான் சரணடைவதாக
தெரிவித்து முன்னுக்கு வந்திருக்கிறார். ஆனால், அவர் குண்டு
பொருத்தப்பட்ட உடை அணிந்திருந்தார். அதன் மேல் சுவெட்டர் போட்டிருந்ததால்
பொலிஸாரால் ஆரம்பத்தில் கண்டுகொள்ள முடியவில்லை. பின்னர் கண்டு
கொண்டவுடன் அருகே வர முன்னர் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் அவர் பலியானார். அவரது இளைய சகோதரன், கடத்தி வந்த வாகனத்தை தனது
மூத்த சகோதரனின் வீழ்ந்து கிடக்கும் உடல் மீது செலுத்தியவனாக தப்பிச்
சென் றிருக்கிறார். மூத்த சகோதரனின் மரண பரிசோதனையின் போதே இச்சம்பவமும்
வெளியாகியிருக்கிறது. அவர் மீதும் பொலிஸார் சுட்ட போதும் தப்பிச் சென்
றிருக்கிறார். ஆனால் அவரால் நகரத்தை விட்டும் வெளியேற முடியவில்லை.
அவரைத் தேடிப் பிடிப்பதில் பொலிஸார் நடவடிக்கையில் இறங்கினர். 19 ஆம்
திகதி மாலை வரை எத்தகைய தடயங்களும் கிடைக்கவில்லை. வோட்டர் டவுன் நகர
மக்களுக்கு வெளியே வராது வீடுகளில் இருக்கும்படி பணிக்கப்பட்டு வீடு
வீடாக சோ தனையிட்டனர். பலன் பூச்சியமே. இதேவேளை, சர்னோவ் சகோதரர்களின்
ரஷ்யாவில் வசிக்கும் தந்தையான அன்சோர் சர்னோவ்வும் தாய் சுபிதா சர்
னோவ்வும் ரஷ்ய ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், தமது பிள்ளைகள்
இருவரும் பயங்கரவாதிகள் அல்ல வென்றும், தாக்குதலுக்கு அவர்களுக்கு
சம்பளம் இல்லையென்றும் பொஸ்டன் கூறினர். அத்துடன் அமெரிக்காவில் வசித்து
வரும் தமது புதல்வர்கள் இருவரும் அடிக்கடி அமெரிக்க பாதுகாப்புப்
பிரிவினரது கெடுபிடிகளுக்கு இலக்காகி வருவதாகவும் ஸாஸ்டன் தாக்குதல்
விடயமாகவும் பொலிஸார் தொடர்புபடுத்தியே நோக்குகிறார்கள் என்றும்
தெரிவித்துள்ளனர். சொஹார் சர்னோவ் 8 வயதிலிருந்தே அமெரிக்க பிரஜா உரிமை
பெற்று அங்கு பயிலும் வைத்தியத்துறை மாணவனாவான். இதேநேரம், கனடாவில்
வசித்து வரும் சர்னோவ் சகோதரர்களின் மாமாவான ருஸ்லன் சார்னி கனடா
ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், இரு சர்னோவ் சகோதரர்களும் மேற்படி
தாக்குதலைச் செய்திருப்பார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.
தம்பி 8 வயதில் இங்கு வந்த போதிலும் அண்ணன் டெமரன்லன் அவரது 21 ஆம்
வயதிலேயே அமெரிக்கா வந்திருக்கிறார். அவர் "கிறீன்கார்ட்'
முறைமூலமே அமெரிக்கா வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் இஸ்லாத்தைப்
பின்பற்றும் முஸ்லிம்களாவார். அமெரிக்கா வந்த டெமரன் கல்லூரி மாணவியான
கெதரின் ரஸல் எனும் 24 வயதுடைய நடுத்தர குடும்பத்தைச் சேர் ந்த மங்கையை
விரும்பி திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு மூன்று வயதுடைய
ஸஹாரா என்ற பெண் பிள்ளையொன்றும் இருக்கிறது. டெமரன்லன் கதரின் தம்பதியும்
குட்டிமகள் ஸஹாராவும் வார இறுதி நாட்களில் கதரினின் பெற்றோர் வசிக்கும்
நிவ்யோர்க்கிலுள்ள ரோட்ஸ் தீவில் இருக்கும் அவர்களது இல்லத்துக்குச்
சென்று மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கம். இவர்களது திருமணத் தொடர்பு
காரணமாக கதரினும் அவரது பெற்றோர் குடும்பமும் கூட இஸ்லாம் மார்க்கத்தைத்
தழுவியிருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் டெமரன்லன்
தனியாக ரஷ்யா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சில வாரங்கள்
அங்கிருந்ததன் பின் அமெரிக்கா திரும்பியிருக்கிறார். இவரது பயணம்
குறித்து ரஷ்ய புலனாய்வுத் துறையினர் சந்தேகம் தெரிவித்திருப்பதுடன்
அதுகுறித்து அமெரிக்க எப்.பீ.ஐ ஆய்வுத் துறைக்கும் அறிவித்தும்
இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து பல சந்தர்பங்களிலும் எப்.பீ.ஐ பரிசோ
தகர்கள் டெமரன்லன்னிடம் பல்வேறு கோணங்களில் இருந்தும் விசாரணைகளை
முடுக்கியிருக்கிறார்கள். டெமர்லைன் ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டிருந்த
போது குண்டு தயாரிப்பது தொடர்பான பயிற்சியினை செச்சினிய
பிரிவினைவாதிகளிடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்கா, ரஷ்யா
பாதுகாப்புப் பிரிவினர் கூறுகின்றனர்.
செச்சினியா பிரிவினை கோருவோர் முஸ்லிம்களாவர். நீண்ட காலமாக சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் செச்னிய முஸ்லிம்கள், வேறு
வழியில்லாத சந்தர்ப்பத்திலேயே ஆயுதப் போராட்டத்தில்
குதித்திருக்கிறார்கள். ரஷ்ய ஆட்சியாளர்களுக்கும் இவர்களது சுதந்திரப்
போராட்டம் ஒரு பெரும் தலையிடியாகவே இருக்கிறது. இவர்களால் ரஷ்யாவிலும்
அடிக்கடி குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அது
அப்படியிருக்கையில், தம்பி சொஹார் சர்னோவைத் தேடிப் பிடிப்பதில் தோல்வி
கண்டுள்ளதாக வோட்டர் டவுன் நகரில் குவிந்துள்ள பொலிஸ் அதிகாரிகள்
கைவிரித்தனர்.
அப்போது மாலை ஐந்து மணியிருக்கும். இச் சந்தர்ப்பத்தில்
வீடுகளுக்குள்ளே அடங்கியிருக்கும்படி கூறியிருந்த பொலிஸாரின் கட்டளையை
மீறி ப்ரங்ளின் வீதியில் வசிக்கும் டேவிட் ஹென்பெரி என்பவர் மாலை 5.45
மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறி அவரது வளவுக்குள் சென்றிருக்கிறார்.
அங்கு தரையில் இரத்தச் சொட்டுக்கள் சிந்தப்பட்டிருப்பதை
அவதானித்திருக்கிறார்.
அந்த இரத்த அடையாளம் அவரது தோட்டத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்த சிறிய
படகை நோக்கிச் சென்று கொண்டிருந்ததை உணர்ந்தார். அந்தப் படகு
மூடப்பட்டிருந்ததால் அதனுள்ளே உயிரினம் ஒன்று இருப்பதைத் தெரிந்து
கொண்டார். பொலிஸாரால் தேடிக் கொண்டிருக்கும் நபராக இருக்கலாம் என்ற
தீர்மானத்திற்கு வந்தார். அதனால், குறித்த நபரிடம் ஆயுதங்கள் இருக்கலாம்
என்ற பொலிஸாரின் எச்சரிக்கையையும் கருத்தில் கொண்டு அங்கு அணுகாது 911
அவசரப் பிரிவுடன் தொடர்பு கொண்டார். இந்த இடத்திலிருந்து மூன்று மைல்
தொலைவில் கடத்தப்பட்ட மர்ஸிடில் வாகனம் கைவிடப்பட்டிருந்தது. இதனால்
தொடர்பு கொண்ட நபரின் வீட்டை நோக்கி பொலிஸ் அணியினர் விரைந்தனர்.
குறிப்பிட்ட படகைச் சுற் றி வளைத்தனர். அப்போது மாலை ஆறு
மணியாகியிருந்தது. ஆகாய மார்க்கமாக தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
ஹெலிகெப்டர் ஒன்று படகை நோக்கி ஒளி பாய்ச்சினர். அத்துடன்
புகைப்படக் கருவியையும் கொண்டு படம் பிடித்தனர். மாலை 7.05 மணி அளவில்
படகு உள்ளே இருந்தும் பொலிஸாருக்குக்கிடையேயும் பரஸ்பரம் துப்பாக்கிப்
பிரயோகம் நிகழ்ந்தது. குறித்த நபரை உயிருடன் பிடிப்பதற்கே பொலிஸார்
பிரயத்தனம் எடுத்தனர். அதன் விளைவாக "ஸ்வொட்' படையினர் படகினுள் குறித்து
சொஹார் சர்னோவை உயிருடன் பிடித்துக் கொண்டனர். அதற்கு முன்னர் அண்ணனைப்
போல் உடம்பில் குண்டுகள்
வைத்திருப்பாரோ என்பதை அவதானிப்பதில் பொலிஸார் மிகவும் ஜாக்கிரதையுடன்
நடந்தே சொஹாரின் இரு கரங்களையும் பற்றி விலங்கை மாட்டினர். இரவு 8.43
ஆகும் போது சொஹார் பொலிஸாரின் பிடியில் இருந்தார். அவர் துப்பாக்கிச்
சூட்டுக் காயங்களோடு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் உடனடியாக
அம்புலன்ஸ் வண்டியில் விசேட பாதுகாப்புடன் பெத் இஸ்ரேல் டெகொனெஸ்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குண்டு வெடிப்பு சந்தேக நபர்களான
இரு சகோதரர்களும் அமெரிக்காவுக்கு வந்து நல்ல விதத்தில்
வாழ்ந்தவர்களாவர். அவர்கள் மிகவும் சிறந்த முறையில் கல்வி பயின்ற
மாணவர்களாவர். இவ்விருவரும் இவ்வாறான குரூர நிலைக்கு எவ்வாறு
தள்ளப்பட்டார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. (தமிழாக்கம்:
ஏ.எல்.எம்.சத்தார்)
Thanks:nawamani.lk

07 May 2013
பர்மா கலவரம்: முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவ
பர்மாவில் புத்த பிக்கு ஒருவரை கொன்றதாக
ஆறு முஸ்லீம்கள் மீது குற்றச்சாட்டுகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் பர்மாவின்
மெயிக்டிலா நகரில் பல நாட்கள் நடந்த
வன்செயல்களில் குறைந்தது 43 பேர்
கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலோனோர்
முஸ்லீம்கள். இந்த சம்பவங்கள் தொடர்பாக பௌத்தர்கள் ஒருவர்
மீதும் குற்றச்சாட்டுகள் பதியப்படவில்லை. இந்தக்
கலவரங்களின்போது கொல்லப்பட்டவர்களில்
ஒரு புத்த பிக்குவும் அடங்குவார். இவர் மோட்டார்பைக்கில்
சென்று கொண்டிருந்தபோது அவரை முஸ்லீம்கள்
கூட்டமொன்று கீழே தள்ளி தாக்கியதில் அவர்
கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு முஸ்லீம்கள்
மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள்
நிருபிக்கப்பட்டால்
அவர்களுக்கு மரணதண்டனை கிடைக்கும்.
ஆனால் மெயிக்டிலாவில் நடந்த வன்முறையில்,
இந்த ஒரு புத்த பிக்குவைத் தவிர பிற
அனைத்து சம்பவங்களுமே முஸ்லீம்
சிறுபான்மையினருக்கு எதிராகவே குறிவைத்து நடத்தப்பட்டன. முஸ்லீம்கள்
தரப்பில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.
பிபிசிக்குக் கிடைத்த, போலிசாரால்
எடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான
வீடியோ பதிவுகள் , எரியும்
வீடுகளிலிருந்து தப்பியோடிய இளம் முஸ்லீம்கள் ,அரிவாளால்
வெட்டிக்கொல்லப்படுவதைக் காட்டின. இந்த படக்காட்சிகளில் தெளிவாகவே அடையாளம்
காணக்கூடிய நபர்களும் புத்த பிக்குகளும்
முஸ்லீம் கடைகளையும் மசூதிகளையும்
அழிப்பதைக் காணமுடிந்தது. பர்மிய ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த
ஆதாரங்களையும் மீறி, இது வரை எந்த
பௌத்தர்கள் மீதும் குற்றச்சாட்டுகள்
பதியப்படவில்லை. வேறு மூன்று பேர் நீதிமன்றத்தில்
ஆஜராயிருக்கின்றனர். இவர்கள் அனைவரும்
முஸ்லீம் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்தவர்கள்.
இந்த கடையில் தான் கலவரம் தொடங்கியது.
இந்தக் கடை சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. பர்மிய அதிபர் தெய்ன் செய்ன்
நாட்டின் முஸ்லீம்
சிறுபான்மையரின் உரிமைகளைப் பாதுகாக்கப்
போவதாக
திங்கட்கிழமை உறுதியளித்திருந்தார். ஆனால் மெயிக்டிலா நகரில்
இதுவரை நீதி ஒருதலைப்பட்சமாகவே
இருக்கிறது என்று பிபிசி செய்தியாளர்
ஒருவர் கூறுகிறார்.
Thanks:bbc

05 May 2013
அல் ஹஸனியாவுக்கு மூன்று மாடி கட்டிடம்
இன்று அல் ஹஸனியா ம.வி.க்கு மூன்று மாடி கட்டிடத்துக்கான அடிக்கல்லை
பிரபல தொழில் அதிபரும் கொடை வல்லளுமான ரிபாய் ஹாஜியார் அவர்கள்
நாட்டிவைத்தார்.ரிபாய் ஹாஜியார் தனது சொந்த செலவிலே இக் கட்டிடத்தை
நிர்மாணித்துத்தரவுள்ளார்.அவரை அல் ஹஸனியா மாணவர்கள் வரவேற்பு பா இசைத்து
அழைத்து வந்தனர்.அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் சகல சொவ்பாக்கியங்களையும்
வழங்குவானாக.

02 May 2013
AH1NI வைரஸ் தொற்று: கர்ப்பிணி தாய்மாரே கவனம்!
புதிதாக பரவிவரும் இன்புளுவன்ஸா AH1NI
வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும்
கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக
வைத்தியர்களை நாட வேண்டும் என சுகாதார
அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைபெற தயாராகும் காலத்தில்
அவர்களுக்கு நோய்த்தடுப்பு சக்தி
குறைவதாகவும் அதன்போது குறித்த வைரஸ்
உடம்பினுள் உட்புகும்போது பாரிய சிக்கல்
ஏற்படும் எனவும் சுகாதார
அமைச்சு எச்சரித்துள்ளது. இருமல், காய்ச்சல், தலைவலி, உடம்புவலி போன்ற
நோய் அறிகுறிகள் காணப்பட்டால்
அது இன்புளுவன்ஸா AH1NI வைரஸாக இருக்கலாம்
என சுகாதார
அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
விலங்குகள் மூலம் உருவாகும் இன்புளுவன்ஸா AH1NI வைரஸ், விரைவில் பரவிச்
செல்லக்கூடியது எனவும்
கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள்,
முதியவர்கள் மிகவும் அவதானமாக இருக்க
வேண்டும் எனவும் சுகாதார

அசாத் சாலி கைது!
முஸ்லிம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள்
உறுப்பினருமான அசாத் சாலி குற்றப்
புலனாய்வுப் பிரிவினரால்
இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில்
வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to:
Posts (Atom)