புதிதாக பரவிவரும் இன்புளுவன்ஸா AH1NI
வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும்
கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக
வைத்தியர்களை நாட வேண்டும் என சுகாதார
அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைபெற தயாராகும் காலத்தில்
அவர்களுக்கு நோய்த்தடுப்பு சக்தி
குறைவதாகவும் அதன்போது குறித்த வைரஸ்
உடம்பினுள் உட்புகும்போது பாரிய சிக்கல்
ஏற்படும் எனவும் சுகாதார
அமைச்சு எச்சரித்துள்ளது. இருமல், காய்ச்சல், தலைவலி, உடம்புவலி போன்ற
நோய் அறிகுறிகள் காணப்பட்டால்
அது இன்புளுவன்ஸா AH1NI வைரஸாக இருக்கலாம்
என சுகாதார
அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
விலங்குகள் மூலம் உருவாகும் இன்புளுவன்ஸா AH1NI வைரஸ், விரைவில் பரவிச்
செல்லக்கூடியது எனவும்
கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள்,
முதியவர்கள் மிகவும் அவதானமாக இருக்க
வேண்டும் எனவும் சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment