உலகளவில் இயங்கும் குற்றக்கும்பல் ஒன்று சில
மணி நேரங்களில் வங்கி-பண அட்டை ( ஏடிஎம்-
டெபிட் கார்ட்) தகவல்களை மோசடி செய்து 45
மில்லியன் (நாலரைக் கோடி) அமெரிக்க
டாலர்களை திருடியுள்ளது. இணையதள ஹாக்கிங் மூலம் வங்கிக்
கணக்கை ஊடறுத்து நுழைந்தே குற்றக்கும்பல்
இந்த பெரும் பணத் திருட்டை நடத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள வங்கித் திருட்டுகளில்
மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்றாக
இது பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் நியுயோர்க்கில் 7 பேர்
கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால் பெரும் உலகளாவிய கும்பலின் உள்ளூர்
ஆட்களாக மட்டுமே இவர்கள் இருக்கமுடியும்
என்றும் 'பெருந்தலைகள்' வெளிநாடுகளில்
இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள்
நம்புகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளின்
இரண்டு வங்கிகளின் பண அட்டைகளில்
நாளொன்றுக்கு எடுக்கக்கூடிய பணத்தின்
உச்சதொகையை ஹாக்கிங் குற்றவாளிகள்
மாற்றியுள்ளனர். பின்னர் அந்த வங்கிகளின் பண அட்டைகள்
வெளிநாடுகளில் உள்ள அவர்களின்
ஆட்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த அட்டைகளைப் பயன்படுத்தி 27 நாடுகளில்
40 ஆயிரத்துக்கும் அதிகமான தடவைகள் பணம்
எடுக்கப்பட்டிருக்கிறது. பணம் திருடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில்
இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:bbc
No comments:
Post a Comment