அமெரிக்காவின் மௌசுசெட்ஸ் பிராந்தியத்தின் பொஸ்டன் நகரில் கடந்த 15ஆம்
திகதி இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியின் போது, வெடிக்கப்பட்ட இரு
குண்டுகளுக்குமான சூத்திரதாரிகள் எனக் கருதும் இருவரது புகைப்படங்கள்
கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ஊடகங்கள் மூலம் வெளியாகியிருந்தன.
தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட பொஸ்டன் பொலிஸ் அதிகாரிகளும்
அமெரிக்க பெடரல் பரிசோதகர்கள் எனும் எப்.பீ.ஐ. அதிகாரிகளும், மேற்படி இரு
வாலிபர்கள் நடந்து கொண்ட விதத்திலேயே அவர்கள் மீது சந்தேகம்
கொண்டிருக்கிறார்கள். இவர்களது நடமாட்டம் அங்குள்ள வியாபார நிலையங்களில்
பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியிருக்கின்றன. அதன்
மூலமே இவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. குண்டுகள்
வெடித்த போது அங்கிருந்தவர்கள் கண்ட நின்றவாறு ஓடிய போதும் இந்த
வாலிபர்கள் இருவரும் மிகவும் அமைதியான முறையில் அந்த இடத்திலிருந்து
நகன்றிருக்கிறார்கள். இது கெமராவில் பதிவாகியிருக்கிறது.
கெமரா பதிவில் இவர்களது முகங்கள் தெளிவாக
தெரியாதிருந்த போதிலும் அவற்றை ஊடகங்களில் வெளியிட்டு, இவர்கள் குறித்து
தெரிந்தவர்கள் உடனே எப்.பீ.ஐ பரிசோதகருடன்
தொடர்பு கொள்ளும்படி கேட்கப்பட்டிருந்தனர். அத்துடன் பொஸ்டன் நகரைச்
சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சந்தேக நபர்கள் இருவரதும்
தெளிவற்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டு சில மணித்தியாலங்களில்
பாதுகாப்பு பிரிவினருக்கு ப்ளோரிடா மாநிலத்திலிருந்து டேவிட் கிறீன்
என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. இவர் மேற்படி மரதன்
ஓட்டப் போட்டியில் பங்குபற்றியவராவார். அவர், அவருடைய கையடக்க
தொலைபேசியிலிருக்கும் கெமராவில் எடுத்த புகைப்படத்தில் இவர்கள் இருவரதும்
தெளிவான புகைப்படங்கள் பதிந்திருந்தமையை அறிவிக்கவே தொடர்பு
கொண்டிருந்தனர். இந்த அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் சரியாக இனங்கண்டு
கொள்வதில் பாதுகாப்பு தரப்பினர் வெற்றி கண்டனர். இவர்கள் இருவர்
குறித்தும் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை. இவர்கள் இருவரும் அமெரிக்காவில்
வசிக்கும் செச்னிய நாட்டைச் சேர்ந்த சகோதரர்களாவர். 26 வயதுடைய டெமரன்லன்
சர்னோவ், 19 வயதுடைய சொ ஹார் சர்னோவ் என்ற சகோதரர்களாவர். இவர்கள்
2002 ஆம் ஆண்டு இங்கு குடியேறியிருக்கிறார்கள். 18 ஆம் திகதி இரவு 10.00
மணியளவில் கேம்பிரிஜில் அமைந்துள்ள மௌசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில்
ஏற்பட்ட குழப்பமொன்றில் அங்கு கடமையிலிருந்த பொலிஸார் பலியான தகவல்
வெளியாகியது. 26 வயதுடைய சோன் கொரியர் என்ற பொலிஸ் அதிகாரியே
மரணமானவராவார். குண்டு சந்தேக சூத்திரதாரிகள் குறித்து அங்கு ஏதும்
தகவல்கள் கிடைத்திருக்கும் என்று பாதுகாப்புத் தரப்பினரால் உணர்ந்து
கொள்ள முடிந்திருக்கிறது. அதனால் கேம்பிரிஜ், பொஸ்டன் பொலிஸ் அதிகாரிகள்
அந்த தொழில்நுட்ப கல்லூரியை சோதனையிட்டனர். கே9 பொலிஸ் நாய்கள் கூட
ஈடுபடுத்தப்பட்டன. மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும்படி
பணிக்கப்பட்டனர். கல்லூரியை மாத்திரமன்றி சூழவுள்ள வீடுகள், கட்டிடங்கள்
எல்லாம் சோதனை செய்யப்பட்டன. பல மணி நேரம் கடந்தும் யாரும் கைதாகவில்லை.
இந்தக் கல்லூரி துப்பாக்கிச் சூடு குறித்தும் குண்டுகள் செயலிழக்கும்
படை, தீயணைப்புப் படை உட்பட பலதரப்பட்ட அணியினரும் இணைந்து பரிசோதனை
மேற்கொண்டனர். சர்னோவ் சகோதரர்கள் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றனர்
என்பதைப் பாதுகாப்புத் தரப்பு அறிந்திருந்த போதும் அதனை ஊடகங்களுக்கு
தெரிவிக்கவில்லை. இரவு 12 மணியளவில் பொஸ்டனிலிருந்து 6 மைல் தூரத்திலுள்ள
வேர்ட்டர் டவுன் நகர எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனக் கடத்தல்
ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இரு வாலிபர்கள் மர்சிடீஸ் ரக எஸ்.யூ.வீ.
வாகனம் ஒன்றை அதன் உரிமையாளருடன் கடத்திக் கொண்டு நகரை நோக்கிப் போய்க்
கொண்டிருந்தார்கள். சிறிது தூரம் சென்ற பின்னர்
உரிமையாளரை வழியே விட்டு விட்டு பயணத்தைத்
தொடர்ந்தனர் என்பது பின்னர் தெரிய வந்தது. குண்டு சூத்திரதாரிகள்
இருவரும் சுமார் 35000 மக்கள் வசிக்கும் வோட்டர் டவுன் நகருக்குள்
பிரவேசித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த பாதுகாப்புத் தரப்பினர் நகரைச்
சுற்றி வளைத்து சல்லடை போட்டனர். இதில் 9000 பொலிஸார்
ஈடுபட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்களும் பொலிஸாருடன் சென்றிருந்த
போதிலும் அவர்களது தொலைபேசிகளை செயலிழக்கச் செய்யும்படி பொலிஸாரால்
பணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களுக்குப் பிரவேசிக்க
ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாததுடன்
அவர்களது வாகனங்களும் சோ தனைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. 19 ஆம் திகதி
அதிகாலை 1.30 மணியளவில் சூத்திரதாரிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள்
பொலிஸாருக்கெதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் கைக்குண்டுகளையும்
வீசியுள்ளனர். அப்போது ரிச்சர்ட் டொனஹியு என்ற 33 வயதுடைய பொலிஸ் அதிகாரி
காயத்துக்குள்ளாகி உடனடியாக சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டார். சில
மணிநேர பரஸ்பரத் தாக்குதலின் பின்னர் மூத்த சகோதரன் டெமரன்லன் சர்னோவ்,
தான் சரணடைவதாக
தெரிவித்து முன்னுக்கு வந்திருக்கிறார். ஆனால், அவர் குண்டு
பொருத்தப்பட்ட உடை அணிந்திருந்தார். அதன் மேல் சுவெட்டர் போட்டிருந்ததால்
பொலிஸாரால் ஆரம்பத்தில் கண்டுகொள்ள முடியவில்லை. பின்னர் கண்டு
கொண்டவுடன் அருகே வர முன்னர் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் அவர் பலியானார். அவரது இளைய சகோதரன், கடத்தி வந்த வாகனத்தை தனது
மூத்த சகோதரனின் வீழ்ந்து கிடக்கும் உடல் மீது செலுத்தியவனாக தப்பிச்
சென் றிருக்கிறார். மூத்த சகோதரனின் மரண பரிசோதனையின் போதே இச்சம்பவமும்
வெளியாகியிருக்கிறது. அவர் மீதும் பொலிஸார் சுட்ட போதும் தப்பிச் சென்
றிருக்கிறார். ஆனால் அவரால் நகரத்தை விட்டும் வெளியேற முடியவில்லை.
அவரைத் தேடிப் பிடிப்பதில் பொலிஸார் நடவடிக்கையில் இறங்கினர். 19 ஆம்
திகதி மாலை வரை எத்தகைய தடயங்களும் கிடைக்கவில்லை. வோட்டர் டவுன் நகர
மக்களுக்கு வெளியே வராது வீடுகளில் இருக்கும்படி பணிக்கப்பட்டு வீடு
வீடாக சோ தனையிட்டனர். பலன் பூச்சியமே. இதேவேளை, சர்னோவ் சகோதரர்களின்
ரஷ்யாவில் வசிக்கும் தந்தையான அன்சோர் சர்னோவ்வும் தாய் சுபிதா சர்
னோவ்வும் ரஷ்ய ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், தமது பிள்ளைகள்
இருவரும் பயங்கரவாதிகள் அல்ல வென்றும், தாக்குதலுக்கு அவர்களுக்கு
சம்பளம் இல்லையென்றும் பொஸ்டன் கூறினர். அத்துடன் அமெரிக்காவில் வசித்து
வரும் தமது புதல்வர்கள் இருவரும் அடிக்கடி அமெரிக்க பாதுகாப்புப்
பிரிவினரது கெடுபிடிகளுக்கு இலக்காகி வருவதாகவும் ஸாஸ்டன் தாக்குதல்
விடயமாகவும் பொலிஸார் தொடர்புபடுத்தியே நோக்குகிறார்கள் என்றும்
தெரிவித்துள்ளனர். சொஹார் சர்னோவ் 8 வயதிலிருந்தே அமெரிக்க பிரஜா உரிமை
பெற்று அங்கு பயிலும் வைத்தியத்துறை மாணவனாவான். இதேநேரம், கனடாவில்
வசித்து வரும் சர்னோவ் சகோதரர்களின் மாமாவான ருஸ்லன் சார்னி கனடா
ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், இரு சர்னோவ் சகோதரர்களும் மேற்படி
தாக்குதலைச் செய்திருப்பார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.
தம்பி 8 வயதில் இங்கு வந்த போதிலும் அண்ணன் டெமரன்லன் அவரது 21 ஆம்
வயதிலேயே அமெரிக்கா வந்திருக்கிறார். அவர் "கிறீன்கார்ட்'
முறைமூலமே அமெரிக்கா வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் இஸ்லாத்தைப்
பின்பற்றும் முஸ்லிம்களாவார். அமெரிக்கா வந்த டெமரன் கல்லூரி மாணவியான
கெதரின் ரஸல் எனும் 24 வயதுடைய நடுத்தர குடும்பத்தைச் சேர் ந்த மங்கையை
விரும்பி திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு மூன்று வயதுடைய
ஸஹாரா என்ற பெண் பிள்ளையொன்றும் இருக்கிறது. டெமரன்லன் கதரின் தம்பதியும்
குட்டிமகள் ஸஹாராவும் வார இறுதி நாட்களில் கதரினின் பெற்றோர் வசிக்கும்
நிவ்யோர்க்கிலுள்ள ரோட்ஸ் தீவில் இருக்கும் அவர்களது இல்லத்துக்குச்
சென்று மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கம். இவர்களது திருமணத் தொடர்பு
காரணமாக கதரினும் அவரது பெற்றோர் குடும்பமும் கூட இஸ்லாம் மார்க்கத்தைத்
தழுவியிருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் டெமரன்லன்
தனியாக ரஷ்யா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சில வாரங்கள்
அங்கிருந்ததன் பின் அமெரிக்கா திரும்பியிருக்கிறார். இவரது பயணம்
குறித்து ரஷ்ய புலனாய்வுத் துறையினர் சந்தேகம் தெரிவித்திருப்பதுடன்
அதுகுறித்து அமெரிக்க எப்.பீ.ஐ ஆய்வுத் துறைக்கும் அறிவித்தும்
இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து பல சந்தர்பங்களிலும் எப்.பீ.ஐ பரிசோ
தகர்கள் டெமரன்லன்னிடம் பல்வேறு கோணங்களில் இருந்தும் விசாரணைகளை
முடுக்கியிருக்கிறார்கள். டெமர்லைன் ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டிருந்த
போது குண்டு தயாரிப்பது தொடர்பான பயிற்சியினை செச்சினிய
பிரிவினைவாதிகளிடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்கா, ரஷ்யா
பாதுகாப்புப் பிரிவினர் கூறுகின்றனர்.
செச்சினியா பிரிவினை கோருவோர் முஸ்லிம்களாவர். நீண்ட காலமாக சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் செச்னிய முஸ்லிம்கள், வேறு
வழியில்லாத சந்தர்ப்பத்திலேயே ஆயுதப் போராட்டத்தில்
குதித்திருக்கிறார்கள். ரஷ்ய ஆட்சியாளர்களுக்கும் இவர்களது சுதந்திரப்
போராட்டம் ஒரு பெரும் தலையிடியாகவே இருக்கிறது. இவர்களால் ரஷ்யாவிலும்
அடிக்கடி குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அது
அப்படியிருக்கையில், தம்பி சொஹார் சர்னோவைத் தேடிப் பிடிப்பதில் தோல்வி
கண்டுள்ளதாக வோட்டர் டவுன் நகரில் குவிந்துள்ள பொலிஸ் அதிகாரிகள்
கைவிரித்தனர்.
அப்போது மாலை ஐந்து மணியிருக்கும். இச் சந்தர்ப்பத்தில்
வீடுகளுக்குள்ளே அடங்கியிருக்கும்படி கூறியிருந்த பொலிஸாரின் கட்டளையை
மீறி ப்ரங்ளின் வீதியில் வசிக்கும் டேவிட் ஹென்பெரி என்பவர் மாலை 5.45
மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறி அவரது வளவுக்குள் சென்றிருக்கிறார்.
அங்கு தரையில் இரத்தச் சொட்டுக்கள் சிந்தப்பட்டிருப்பதை
அவதானித்திருக்கிறார்.
அந்த இரத்த அடையாளம் அவரது தோட்டத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்த சிறிய
படகை நோக்கிச் சென்று கொண்டிருந்ததை உணர்ந்தார். அந்தப் படகு
மூடப்பட்டிருந்ததால் அதனுள்ளே உயிரினம் ஒன்று இருப்பதைத் தெரிந்து
கொண்டார். பொலிஸாரால் தேடிக் கொண்டிருக்கும் நபராக இருக்கலாம் என்ற
தீர்மானத்திற்கு வந்தார். அதனால், குறித்த நபரிடம் ஆயுதங்கள் இருக்கலாம்
என்ற பொலிஸாரின் எச்சரிக்கையையும் கருத்தில் கொண்டு அங்கு அணுகாது 911
அவசரப் பிரிவுடன் தொடர்பு கொண்டார். இந்த இடத்திலிருந்து மூன்று மைல்
தொலைவில் கடத்தப்பட்ட மர்ஸிடில் வாகனம் கைவிடப்பட்டிருந்தது. இதனால்
தொடர்பு கொண்ட நபரின் வீட்டை நோக்கி பொலிஸ் அணியினர் விரைந்தனர்.
குறிப்பிட்ட படகைச் சுற் றி வளைத்தனர். அப்போது மாலை ஆறு
மணியாகியிருந்தது. ஆகாய மார்க்கமாக தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
ஹெலிகெப்டர் ஒன்று படகை நோக்கி ஒளி பாய்ச்சினர். அத்துடன்
புகைப்படக் கருவியையும் கொண்டு படம் பிடித்தனர். மாலை 7.05 மணி அளவில்
படகு உள்ளே இருந்தும் பொலிஸாருக்குக்கிடையேயும் பரஸ்பரம் துப்பாக்கிப்
பிரயோகம் நிகழ்ந்தது. குறித்த நபரை உயிருடன் பிடிப்பதற்கே பொலிஸார்
பிரயத்தனம் எடுத்தனர். அதன் விளைவாக "ஸ்வொட்' படையினர் படகினுள் குறித்து
சொஹார் சர்னோவை உயிருடன் பிடித்துக் கொண்டனர். அதற்கு முன்னர் அண்ணனைப்
போல் உடம்பில் குண்டுகள்
வைத்திருப்பாரோ என்பதை அவதானிப்பதில் பொலிஸார் மிகவும் ஜாக்கிரதையுடன்
நடந்தே சொஹாரின் இரு கரங்களையும் பற்றி விலங்கை மாட்டினர். இரவு 8.43
ஆகும் போது சொஹார் பொலிஸாரின் பிடியில் இருந்தார். அவர் துப்பாக்கிச்
சூட்டுக் காயங்களோடு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் உடனடியாக
அம்புலன்ஸ் வண்டியில் விசேட பாதுகாப்புடன் பெத் இஸ்ரேல் டெகொனெஸ்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குண்டு வெடிப்பு சந்தேக நபர்களான
இரு சகோதரர்களும் அமெரிக்காவுக்கு வந்து நல்ல விதத்தில்
வாழ்ந்தவர்களாவர். அவர்கள் மிகவும் சிறந்த முறையில் கல்வி பயின்ற
மாணவர்களாவர். இவ்விருவரும் இவ்வாறான குரூர நிலைக்கு எவ்வாறு
தள்ளப்பட்டார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. (தமிழாக்கம்:
ஏ.எல்.எம்.சத்தார்)
Thanks:nawamani.lk
No comments:
Post a Comment