தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

13 October 2014

24 வருடங்களின் பின் யாழ் மண்ணை அடைந்தது யாழ் தேவி (video)


யாழ் தேவி ரயில் சேவை சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மீண்டும்
உத்தியோகபூர்வமாக யாழ் மண்ணைச் சென்றடைந்தது.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ரயில் சேவை,
கொழும்பில் இருந்து காங்கேசன் துறை வரை தனது சேவையை மேற்கொண்டு வந்தது.
எனினும் இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பல்வேறு
பாதிப்புக்களையும் எதிர்நோக்கிய இந்த யாழ் தேவி சேவையானது, 1990ம் ஆண்டு
ஜூன் 12ம் திகதி முறிகண்டியில் வைத்து கண்ணிவெடிக்கு இலக்காகியது.


இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டு, மதவாச்சி வரை
மட்டுப்படுத்தப்பட்டு, பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.
2009ம் ஆண்டு மீண்டும் யாழ் தேவி சேவையை யாழ்ப்பாணம் வரை நீடிக்க
நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. இதன் முதற்கட்டமாக
யாழ்தேவி புகையிரதம் தாண்டிக்குளத்தை சென்றடைந்தது.
பின்னர் யாழ்தேவி 2011 மே மாதம் ஓமந்தையை சென்றடைந்தது.


அடுத்த கட்டமாக கிளிநொச்சி வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டமையால்,
2013 செப்டம்பர் 14 முதல் கிளிநொச்சி வரை யாழ் தேவியின் பயணம்
விஸ்தரிக்கப்பட்டது.
பின்னர் இந்த சேவை 2014 மார்ச் 4ம் திகதி பளை வரை நீடிக்கப்பட்டது.


இதனையடுத்து இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையப்
புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று (திங்கட்கிழமை)
ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவியின் பயணத்தை
உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.


Thanks:-
Adaderana
Bbc

No comments:

Post a Comment