"அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியுடன்,
150 கிலோ இரும்பு சங்கிலிகள் இணைக்கப்பட்டு கட லில் மூழ்கடிக்கப்பட்டது"
என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் தலைவரும், அமெரிக்க
முன்னாள் பாதுகாப்புச் செயலாள ருமான லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானின் அபோதா பாத் நகரில் பதுங்கியிருந்த போது
2011இல் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். அவ ரது உடல் அடையாளம் காண
முடியாத படி கட லில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந் நிலையில்,
அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டபோது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாள
ராக இருந்த லியோன் பனெட்டா, இப்போது புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்
அவர் தெரிவித்துள்ளதாவது:
ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார்;. அவர் உடலை ஏற்றிக் கொண்டு
அமெரிக்க ஹெலிகொப்டர், கடலில் காத்திருந்த யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன்
கப்பலில் இறங்கியது. ஒசாமா உடலுடன் பயணித்த அந்த கப்பலில் வைத்தே,
ஒசாமாவுக்கு இறுதிச்சடங்குகள் செய் யப்பட்டன. அரபி மொழியில், முஸ்லிம்
இறுதிச் சடங்கு வாசகங்கள் ஓதப்பட்டு, கறுப்பு நிற பையில் அவர் உடல்
வைக்கப்பட்டது.
அந்த உடல் கனமான இரும்புப் பெட்டியில் திறக்க முடியாத படி மூடப்பட்டது.
அதனுடன் 150 கிலோ எடையுள்ள இரும்பு சங்கிலிகள் இணைக் கப்பட்டன. வெள்ளை
நிற மேiஜயில் அந்த இரும்பு சவப்பெட்டி வைக்கப்பட்டு கப்பல் மேல் தளத்தில்
இருந்த இரும்பு தண்டவாளத்தில் வைக்கப்பட்டு, கப்பலின் ஓரத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. கடலுக்குள் மேiஜயுடன் அப்படியே தாழ்த்தப்பட்டது.
இரும்பு பெட்டியில் கனமான இரும்பு சங்கிலிகள் இணைக்கப்பட்டிருந் ததால்,
அந்த பெட்டி, கடலின் அடிமட்டத்தை நோக்கி வேகமாக பயணித்து கடலின்
அடிமட்டத்தை அடைந்தது. எந்த இடத்தில் அந்த பெட்டி மூழ்கடிக்கப்பட்டது
என்பது யாருக்கும் தெரியாது. ஒசாமா கொல்லப்பட்டது குறித்து, பாகிஸ்
தானின் அப்போதைய இராணுவ தளபதி அஸ்பக் கயானியிடம் தெரிவித்த போது, "மிக
நல்லது இந்த விடயத்தை வெளிப்படையாக அறிவியுங்கள்" என்றார். இதன் மூலம்,
ஒசாமா படுகொலையில் பாகிஸ்தானுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை அவர்
உறுதிபடுத்த விரும்பி னார். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment