தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 October 2014

ஹல்துமுல்ல மண்சரிவு : இரண்டாம் நாளாக மீட்பு பணிகள் இன்று ஆரம்பம் (VIDEO)

பதுளை மாவட்டம் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீரியபெத்த பெருந்தோட்டத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் அந்தக் கிராமம் முற்று முழுதாக மண்ணில் புதையுண்டது. நேற்றுக் காலை 7 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் ஏழு லயன் குடியிருப்புக்களைக் கொண்ட 140 வீடுகள் நிலத்தினுள் புதைந்ததாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் 300 க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படுகின்றது. அதேநேரம், புதையுண்டவர்களில் 10 சடலங்கள் நேற்று மாலை வரை மீட்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று அறிவித்தது.
சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான மூவர் சிகிச்சைகளுக்காக பதுளை அரசினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட சுமார் 250 இற்கும் அதிகமான மக்கள் அரசாங்க அதிகாரிகளினால் பொது இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லயன் குடியிருப்புக்களை மூடி சுமார் 10 அடி உயரம் வரை மண்மேடு காணப்பட்டதனால் உடனடியாக மீட்பு பணிகளை ஆரம்பிக்க முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டது. எனினும் முப்படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட பகீரத பிரயத்தனத்தினால் காலை சுமார் 11.45 மணியளவிலேயே முழுமையான மீட்புப் பணிகளில் களமிறங்க முடிந்தது. மீட்பு பணிகளில் நேற்றைய தினம் சுமார் 500 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக இராணுவப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயவீர தெரிவித்தார்.
மனிதர்கள் நெருங்கமுடியாத பகுதிகளில் விமானப் படையினர் ஹெலிக்கொப் டர்களைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். “எவ்வித முன்னறிகுறியுமின்றி ஒரே நொடியில் மண்மேடு சரிந்து விழுந்ததனால் எமக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தப்பி ஓடக்கூட காலஅவகாசம் எமக்கு இருக்கவில்லை” என அனர்த்தத்திலிருந்து தப்பி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் கூறினார். இதேவேளை “காலை 7 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதால் பாடசாலை மாணவர்களும் தோட்டத் தொழிலாளிகளும் மண் சரிவில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை” என அப்பிரதேசத்திலிருந்து உயிர்தப்பிய மற்றொருவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மூன்று தினங்களாக அங்கு அடைமழைபெய்து வந்த போதிலும் நேற்றைய தினம் மழை கூடுதலாகப் பெய்யவில்லையென பிரதேசவாசியொருவர் கூறினார். ஹல்துமுல்லையில் நேற்றுக் காலை இடம்பெற்ற பாரிய அனர்த்தத்தை கேள்வியுற்றதும் இயலுமானவரை மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உயிர்களை காப்பாற்றுமாறும் உயிர் தப்பியோருக்கு தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அவசர பணிப்புரை விடுத்திருந்தார்.

13 October 2014

24 வருடங்களின் பின் யாழ் மண்ணை அடைந்தது யாழ் தேவி (video)


யாழ் தேவி ரயில் சேவை சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மீண்டும்
உத்தியோகபூர்வமாக யாழ் மண்ணைச் சென்றடைந்தது.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ரயில் சேவை,
கொழும்பில் இருந்து காங்கேசன் துறை வரை தனது சேவையை மேற்கொண்டு வந்தது.
எனினும் இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பல்வேறு
பாதிப்புக்களையும் எதிர்நோக்கிய இந்த யாழ் தேவி சேவையானது, 1990ம் ஆண்டு
ஜூன் 12ம் திகதி முறிகண்டியில் வைத்து கண்ணிவெடிக்கு இலக்காகியது.


இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டு, மதவாச்சி வரை
மட்டுப்படுத்தப்பட்டு, பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.
2009ம் ஆண்டு மீண்டும் யாழ் தேவி சேவையை யாழ்ப்பாணம் வரை நீடிக்க
நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. இதன் முதற்கட்டமாக
யாழ்தேவி புகையிரதம் தாண்டிக்குளத்தை சென்றடைந்தது.
பின்னர் யாழ்தேவி 2011 மே மாதம் ஓமந்தையை சென்றடைந்தது.


அடுத்த கட்டமாக கிளிநொச்சி வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டமையால்,
2013 செப்டம்பர் 14 முதல் கிளிநொச்சி வரை யாழ் தேவியின் பயணம்
விஸ்தரிக்கப்பட்டது.
பின்னர் இந்த சேவை 2014 மார்ச் 4ம் திகதி பளை வரை நீடிக்கப்பட்டது.


இதனையடுத்து இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையப்
புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று (திங்கட்கிழமை)
ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவியின் பயணத்தை
உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.


Thanks:-
Adaderana
Bbc

11 October 2014

புதிய மின் கட்டண முறை (அட்டவணை இணைப்பு)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய செப்டம்பர் மாதம் 16ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் வீட்டு இணைப்பு மின் நுகர்வோருக்கு மின் கட்டணம் 25% குறைக்கப்பட்டுள்ளது.

புதிய மின் கட்டண கணக்கீட்டு முறை குறித்த அட்டவணை.







































தொகுதி
(அலகு)_____________________
மாதாந்த மின் பாவனை(30 நாட்கள்)
அலகு
16/09/2014 க்கு முன் மின் கட்டணம்(ரூ.) 25% குறையும் தொகை(ரூ.) புதிய மாத மின் கட்டணம்(ரூ.)
0-30 30 142.50 37.50105.00
31-60 60 371.85 91.35 280.50
61-90 90 1,146.00 285.00 861.00
91-120 120 2,772.00 688.502,083.50
121-180 180 5,334.00 1,330.504,003.50
181-210 210 7,203.00 1,789.505,413.50
211-240 240 8,967.00 2,203.506,763.50
241-270 270 10,731.00 2,617.508,113.50
271-300 300 12,495.00 3,031.509,463.50
301-900 900 47,775.00 11,311.5036,463.50
901-1,000 1,000 53,655.00 12,691.5040,963.50

09 October 2014

ஒசாமா உடல் இரும்பு பெட்டியில் வைத்து 150 கிலோ சங்கிலியுடன் மூழ்கடிப்பு

"அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியுடன்,
150 கிலோ இரும்பு சங்கிலிகள் இணைக்கப்பட்டு கட லில் மூழ்கடிக்கப்பட்டது"
என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் தலைவரும், அமெரிக்க
முன்னாள் பாதுகாப்புச் செயலாள ருமான லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானின் அபோதா பாத் நகரில் பதுங்கியிருந்த போது
2011இல் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். அவ ரது உடல் அடையாளம் காண
முடியாத படி கட லில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந் நிலையில்,
அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டபோது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாள
ராக இருந்த லியோன் பனெட்டா, இப்போது புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்
அவர் தெரிவித்துள்ளதாவது:
ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார்;. அவர் உடலை ஏற்றிக் கொண்டு
அமெரிக்க ஹெலிகொப்டர், கடலில் காத்திருந்த யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன்
கப்பலில் இறங்கியது. ஒசாமா உடலுடன் பயணித்த அந்த கப்பலில் வைத்தே,
ஒசாமாவுக்கு இறுதிச்சடங்குகள் செய் யப்பட்டன. அரபி மொழியில், முஸ்லிம்
இறுதிச் சடங்கு வாசகங்கள் ஓதப்பட்டு, கறுப்பு நிற பையில் அவர் உடல்
வைக்கப்பட்டது.
அந்த உடல் கனமான இரும்புப் பெட்டியில் திறக்க முடியாத படி மூடப்பட்டது.
அதனுடன் 150 கிலோ எடையுள்ள இரும்பு சங்கிலிகள் இணைக் கப்பட்டன. வெள்ளை
நிற மேiஜயில் அந்த இரும்பு சவப்பெட்டி வைக்கப்பட்டு கப்பல் மேல் தளத்தில்
இருந்த இரும்பு தண்டவாளத்தில் வைக்கப்பட்டு, கப்பலின் ஓரத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. கடலுக்குள் மேiஜயுடன் அப்படியே தாழ்த்தப்பட்டது.
இரும்பு பெட்டியில் கனமான இரும்பு சங்கிலிகள் இணைக்கப்பட்டிருந் ததால்,
அந்த பெட்டி, கடலின் அடிமட்டத்தை நோக்கி வேகமாக பயணித்து கடலின்
அடிமட்டத்தை அடைந்தது. எந்த இடத்தில் அந்த பெட்டி மூழ்கடிக்கப்பட்டது
என்பது யாருக்கும் தெரியாது. ஒசாமா கொல்லப்பட்டது குறித்து, பாகிஸ்
தானின் அப்போதைய இராணுவ தளபதி அஸ்பக் கயானியிடம் தெரிவித்த போது, "மிக
நல்லது இந்த விடயத்தை வெளிப்படையாக அறிவியுங்கள்" என்றார். இதன் மூலம்,
ஒசாமா படுகொலையில் பாகிஸ்தானுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை அவர்
உறுதிபடுத்த விரும்பி னார். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

08 October 2014

இன்று சந்திரக் கிரகணம்: இலங்கையில் மாலையில் தென்படும்

2014ஆம் ஆண்டின் இறுதி சந்திரக்கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.46க்கு தொடங்கும் சந்திரக் கிரகணம்,
இரவு 7.04க்கு முடிவடையவுள்ளதாகவும், இலங்கையில் மாலை 6 மணிமுதல் 6.3
வரையான கலப்பகுதியில் இலங்கையில் தென்படுமெனவும் இலங்கையிலுள்ள
பேராசிரியர் சந்தன ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையர்களால் சந்திரக் கிரணத்தின் இறுதிப் பகுதியை மாத்திரமே
பார்க்கமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா, கனடா, வட அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள்
சந்திரக் கிரகணத்தை முழுமையாக பார்க்கமுடியுமென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இவ்வாண்டின் இறுதி சூரிய கிரகணம் இம்மாதம் 24ஆம் திகதி பிற்பகல்
1.08இற்கு தென்படவுள்ளது.
எனினும் இதனை இலங்கையர்களால் பார்க்க முடியாதென்றும் கனடா மற்றும்
அமெரிக்காவுக்கு முமையாக தென்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.


Source: ATHAVANNEWS