தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

28 May 2014

மக்காவுக்கு நேராக சூரியன் வருகிறது - கிப்லாவை அறிந்துகொள்ள அரிய வாய்ப்பு

வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம்
கொடுக்கிறது. அவை
May 28 at 9:18 GMT
July 15 at 9:27 GMT

ஆகிய நேரம் ஆகும்.
எனவே குறித்த கிறீன்விச் நேரத்தை தான் இருக்கும் உள்நாட்டு நேரத்துக்கு
கணிப்பிட்டுக்கொள்ள வேண்டும்,உதாரணமாக இலங்கையாயின் +5.30 சேர்க்க
வேண்டும் அப்போது கொழும்பு நேரம் சரியாக
May 28 at 2:48 pm -colombo
July 15 at 2:57 pm -colombo
ஆகும்.
அன்றைய தினம் குறித்த அந்நேரத்தில் செங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு
ஏற்படும் நிழலினூடாக
சூரியனை முன்னோக்குவது கஃபாவை முன்னோக்குவதாகவே அமையும்.
ஆகவே சரியான கிப்லாவை அறிந்து கொள்வதற்கு நேரகாலத்துடன்
நேர்த்தியான ஒரு தடியை 90 பாகை (அதாவது பூமிக்கும் அந்தத்
தடிக்குமிடையிலான கோணம் செங்கோணமாக இருக்கும் விதத்தில்)
நாட்டுவதுடன் பிரயோகிக்கும் கடிகாரத்தின் நேரத்தையும்
சரி செய்து கொள்ளவேண்டும். பின்னர் குறித்த நேரத்தில்
சூரியனின் மூலம் அந்தத் தடிக்கு ஏற்படும் நிழலின் மீது கோடிட்டுக்
கொள்ளவேண்டும் பிறகு கோட்டினூடாக
தடியை நோக்கும் திசையையே கிப்லாவாக எடுத்துக்
கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment