தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

03 May 2014

'ஆப்கன் மண்சரிவில் 2000 மக்கள் பலியாகியிருக்கலாம்'

ஆப்கானிஸ்தானில் வடகிழக்குப் பிராந்தியத்தில் நடந்துள்ள
பெரும் மண்சரிவில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களைத்
தேடி கிராம மக்களும் மீட்புப்பணியாளர்களும்
இரண்டாவது நாளாகவும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பின்தங்கிய
பதாக்ஷான் மாகாணத்தில் பெய்த கடுமையான பருவ
மழையில் மலைப்பாங்கான பகுதியொன்று கிராமம் ஒன்றின்
மீது சரிந்துள்ளது. இந்த மண்சரிவு அவலத்தில் சுமார் இரண்டாயிரம் மக்கள்
வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக உள்ளூர்
அதிகாரிகள் கூறுகின்றனர். நேற்றிரவு 350க்கும் மேற்பட்ட சடலங்கள்
மீட்கப்பட்டன. எவரும்
உயிருடன் மீட்கப்படவில்லை. 10 அடி ஆழத்திற்கு சேற்றுமண் கிராமத்தை
மூடியுள்ளது. சவல்களைக் கொண்டும் வெறும் கைகளாலும் சேற்றுமண்ணைத்
தோண்டும்
நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்சரிவுகள் ஏற்படலாம் என்ற
அச்சம் உள்ளதாகவும் கிராம
மக்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஐநா கூறுகின்றது.

No comments:

Post a Comment