நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதோடு,
ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 10பேர் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
என்பதோடு, மற்றைய இருவரும் மாலபே பகுதியைச்
சேர்ந்தவர்களாவர். களுத்துறையில் அகலவத்தை, புலத்சிஙகள, மதுகம மற்றும்
வெலிபெத்த ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள்
பதிவாகியுள்ளன.
இதில் அகலவத்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஐவர்
பலியாகினர்.
மேலும் காணாமல் போனவர் புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகள்
பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொழும்பு, களுத்துறை மற்றும் காலி ஆகிய
மாவட்டங்களில் பிரதான வீதிகள் வௌ்ளத்தால் பாதிப்புக்குள்ளாகின.
இவ்வாறான வௌ்ளநிலை காரணமாக பலர் வீடுகளில் அடைந்துள்ளதாக அனர்த்த
முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐந்து குழுக்கள்
அனுப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்
உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு கடற்படை மற்றும் விமானப்
படையினரும் உதவியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேர மழைவீழ்ச்சியில்
களுத்துறை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
அகலவத்த, வெலிபென்ன, மதுகம, பாலித்த நுவர மற்றும் ஓமத்தை பிரதேசத்தின் பல
இடங்கள் நீரில் முழ்கியுள்ளன.
இந்த நிலையில், பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கான
நிவாரணத்தின் பொருட்டு முப்படையினரும் காவல்துறையினரும்
சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் 2 உலங்குவானூர்திகளும், 8
படகுகளும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய
நிலையத்தின்
நிறைவேற்று அதிகாரி பிரதீப் கொடிப்பில்லி தெரிவித்தார்.
இதனிடையே, கொழும்பு, களுத்துரை, மாத்தறை மற்றும் ரட்ணபுர
மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர்
மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம்
குறிப்பிப்பட்டுள்ளது.
இதேவேளை, பெந்தர கங்கை மற்றும் கிங் கங்கை என்பன
கரைபுரண்டுள்ளமையால் அதன் கரையோரங்களில் உள்ள கிராமங்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, றாகம தொடரூந்து நிலையம் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டமை காரணமாக வடக்கு தொடரூந்து சேவைகள்
தாமதமடைந்துள்ளன.
இதனிடையே, கடும் காற்று காலநிலையால் எதிர்வரும் 24
மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும்
மழை தொடரக்கூடியும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Thanks:
-Adaderana
-Hirunews
No comments:
Post a Comment