மேலே காண்பது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியங்கல்லயில் இருந்து சில படங்கள்.
சீரற்ற வானிலையால் ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 300 க்கும்
அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ
நிலையம் தெரிவிக்கின்றது. இதுவரை 23 மரணங்கள் பதிவாகியுள்ளதாவும், 12 பேர்
காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் காணாமற்போயுள்ளதாகவும்
நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். 179 வீடுகள்
முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஆயிரத்து 142
வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை, 25,809 பேர் பாதுகாப்பான
பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, 128 தற்காலிக இடங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி கூறினார். இடர் முகாமைத்துவ
அமைச்சுடன் இணைந்து சீரற்ற வானிலையால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தேசிய கட்டட ஆய்வு நிலையம்
வெளியிட்டுள்ள மண்சரிவு அபாய
எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக இடர் முகாமைத்துவ
நிலையம் குறிப்பிடுகின்றது. களுத்துறை, இரத்தினபுரி, காலி, கேகாலை, பதுளை மற்றும்
நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment