தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

16 June 2014

முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய இனக்கலவரத்தை நோக்கி..!

அளுத்கம, பேருவெல நகரங்களில் நேற்றுமாலை சிங்கள பௌத்த அடிப்படைவாத பொதுபல
சேனா அமைப்பு நடத்திய பேரணியை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிரான
தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களில், முஸ்லிம்களின்
வீடுகள், கடைகள்,வாகனங்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டதுடன்,பலர்
காயங்களுக்கும் உள்ளாகினர். இதையடுத்து, அளுத்கம, பேருவெல பகுதிகளில்
நேற்றிரவு தொடக்கம் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்கு வித்திட்ட பொதுபல சேனா

நேற்றுமாலை அளுத்கம நகரில், பொதுபல சேனாவின் எதிர்ப்பு போராட்டம்
நடத்தப்பட்டது. இங்கு பேசிய,
பொதுபலசேனாவின் பொதுச்செயலர் கலகொடதத்த ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு
எதிரான கடுமையான கருத்துக்களை வெளியிட்டதுடன், அவர்களுடன்
கூட்டணிவைத்துள்ள சிறிலங்கா அரசாங்கத்தையும் கண்டித்தார். எம்மை அவர்கள்
இனவாதிகள், மத அடிப்படைவாதிகள் என்கிறார்கள். ஆம்,நாங்கள் இனவாதிகள்தான்.
இந்த நாடு ஒரு சிங்கள காவல்துறையை கொண்டுள்ளது. ஒரு சிங்கள இராணுவத்தைக்
கொண்டிருக்கிறது. சிங்களவர் ஒருவர் மீது கைவைத்தால், அதுவே அவர்கள்
எல்லோருக்கும் முடிவாக இருக்கும் என்றுஆவேசமாகபேசினார். இந்தக்
கூட்டத்தில்,பெருந்தொகையான சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கல்வீச்சுடன் தொடங்கியது வன்முறை

இந்தநிலையில், தர்கா நகரில், உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது, குண்டர்
குழுவொன்று கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகவும்,அதையடுத்தே
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்ததாகவும்
தகவல்கள்தெரிவிக்கின்றன. எனினும், சிங்களவர்கள் மீது கல்வீச்சு
நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், அண்மைக்காலமாக பதற்றம்
நிலவிய அளுத்கமவில், பொதுபல சேனாவுக்கு பேரணி நடத்த காவல்துறை
அனுமதிஅளித்ததேஇந்த வன்முறைக்கு முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு

நேற்றுமாலை பரவிய வன்முறைகளை அடுத்து, மாலை 6.45 மணியளவில்,
அளுத்கமநகரில் காவல்துறை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பின்னர்,
பேருவளையிலும் வன்முறைகள் வெடித்ததால், அங்கும் ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டது. அளுத்கம நகருக்கு உடனடியாக வரைவழைக்கப்பட்ட1200
காவல்துறையினர் மற்றும் 400 சிறப்பு அதிரடிப்படையினர், நிலைமையை
கட்டுக்குள் கொண்டு வரமுயன்றனர். எனினும், நிலைமையை முழுமையாக
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. முதலில், கண்ணீர்
புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், குண்டர்களைக் கலைக்க
மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி?
இந்தநிலையில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு
நடத்தியுள்ளனர். வல்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி மூன்று பேர் பலியானதாகவும், மேலும் பலர்,
காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ள போதிலும், காவல்துறை
இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. இந்தவன்முறைகளின்போது,
முஸ்லிம்களின்கடைகள், வீடுகள், பள்ளிவாசல்கள், வாகன்ஙகள் என்பன,
தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இதனால், நேற்றிரவு, அளுத்கமநகரில் இருந்து
பெரும் புகை மண்டலம் மேல் எழுந்ததை தொலைவில் இருந்தே காண முடிந்தது.
பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தஞ்சம் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள்,
பள்ளிவாசல்கள் பல தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்கள்
அச்சத்தில், வீடுகளை விட்டு வெளியேறி, பள்ளிவாசல்களில்
தஞ்சமடைந்துள்ளனர். எனினும், முஸ்லிம்களை வீடுகளை விட்டு வெளியே வர
வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் கேட்டுள்ளனர். மேலும்,
நாடெங்கும் உள்ள முஸ்லிம் மத வழிபாட்டு இடங்களில் காவல்துறையினர்
பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தர்க்கா நகரில் முஸ்லிம்களின் 10
கடைகள்சூறையாடப்பட்டுள்ளன. கொட்டப்பிட்டிய, மீரிபென்ன, அதிகாரி
கொடபகுதிகளில் உள்ள பல வீடுகள்தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.தர்கா நகரில்
இடம்பெற்ற வன்முறைகளில் முஸ்லிம்கள் பலர் காயமுற்றதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர்களும் தப்பவில்லை அதேவேளை, நேற்றுமாலை
தொடக்கம் நடந்துவரும்வன்முறைகளைபடம் பிடித்த ஊடகவியலாளர்கள் குண்டர்களால்
தாக்கப்பட்டு,அவர்களின், ஒளிப்படக்கருவிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த
நிலையில். நேற்றிரவு 9 மணியளவில், முஸ்லிம்கள்அதிகமாக வசிக்கும் பேருவெல
நகரில் நடத்தப்பட்ட பேரணியை அடுத்து, அங்கும் ஊரடங்குச்சட்டம்
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அளுத்கம நகரில், தொலைபேசிகளும்
துண்டிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் வானொலிகள், தொலைக்காட்சிகள், இந்த
சம்பவங்களை இருட்டடிப்புச் செய்துள்ளன. கொழும்புக்கும் பரவியது வன்முறை
அளுத்கமவன்முறைகளின் தொடர்ச்சியாக, கொழும்பு நகரில் தெகிவளைப் பகுதியில்
உள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வணிக நிலையம், நேற்றிரவு 11
மணியளவில் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. எனினும், இந்த தீ
அணைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறைகள் மற்றும்
ஊரடங்குச் சட்டத்தினால், தென்பகுதிக்கான தொடருந்து மற்றும்
வாகனப்போக்குவரத்துகள் நேற்றிரவு முதல் தடைப்பட்டுள்ளன.

Source:jaffnamuslim

No comments:

Post a Comment