தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

31 October 2012

Tune your radios from Nov 1

இலங்கையில் இயங்கும் 45 பண்பலை (எப்.எம்)
ஒலிபரப்பு அலைவரிசைகளும்
தமது பண்பலை வானொலி அதிர்வெண்களை நவம்பர்
முதலாம் திகதி முதல் மாற்றியமைக்கவுள்ளன. தெளிவான ஒலி கிடைப்பதற்கு தடையாக உள்ள தொழில்நுட்பப் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு, வானொலி அதிர்வெண்களை மாற்றியமைத்துள்ளது. இலங்கையிலுள்ள 45 பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் 87.5 தொடக்கம் 108 வரையான மெகா ஹேட்ஸ் வீச்சில் ஒலிபரப்பு செய்துவருகின்றன. இப்போது இரண்டு
அலைவரிசைகளுக்கிடையில் 100 கிலோ ஹேட்ஸ் அதிர்வெண் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் 300 கிலோ ஹேட்ஸாக அதிகரிக்கும்போது இலங்கையின் எந்தப் பகுதியிலும் தெளிவான ஒலியை பெறக்கூடியதாக இருக்கும் என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 October 2012

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின்
காரத்தன்மைக்கு அதில் உள்ள
அலைல் புரோப்பைல்
டை சல்பைடு என்ற
எண்ணையே காரணம். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும்,
நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக
அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள்,
தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள்.
இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில்
கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து,
உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட
வைக்க உதவி செய்கிறது.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில்
சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அற்த
கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும்
மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல்
வெங்காயத்திற்கு உண்டு.
இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும்
சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்து விடும்.
செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான்
கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற
பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க
சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது.
வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான
செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம்
தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
சீதோஷண நிலை மாறும் போது அடிக்கடி இருமல்
வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல்
போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச்சாற்றில் தேன்
கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள்
நீங்கும். புற்றுநோயைத் தடுக்கும்
மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக
சமீபத்திய ஆராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புபைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன
இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல்
இறப்புகள, செல்
சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு
சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்,
பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு சில
வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
இதை மோரில் கலந்து குடிக்க இருமல்
குறையும். வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும்
கலந்த வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில்
தடவி வர வல்வலி, ஈறுவலி குறையும்.
அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள்
வெங்காயச்சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ்
வீதம் 3 வேளை சாப்பிட்டு வர நுரையீரல்
சுத்தமாகும்.

22 October 2012

கரையொதுங்கும் மீன்களில் நச்சுத்தன்மை இல்லை,உணவிற்கு உகந்தவையாகும்:தேசிய நீரியல் வளஆராய்ச்சியாளர்

கிழக்கில் கரையொதுங்கும் மீன்களில்
நச்சுத்தன்மை இல்லை. ஒட்சிசன்
குறைபாட்டினாலேயே அவை இறந்துள்ளன. இந்த
முடிவு இரசாயனப்
பகுப்பாய்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக
தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையின் இயக்குநர்
கலாநிதி கா.அருளானந்தன் அறிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மற்றும் தென்பகுதிக்
கடற்கரைகளில் மீனினங்கள் பெருமளவில்
கரையொதுங்கும் நிலையில் அது தொடர்பில்
பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் அவரிடம் கேட்ட
போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்
மேலும் தெரிவிக்கையில்:
ஜுலை மாதம் ஆரம்பமாகிய தென்மேல்
பருவப்பெயர்ச்சிக் காற்றின் காலம்
முடிவடைந்து நவம்பர்,டிசம்பர் மாதமளவில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலம்
ஆரம்பமாகவுள்ளது.
எனவே தற்போது அந்த இரண்டுக்கும் இடையில்
உள்ள காலமே இடைப்பருவப்பெயர்ச்சிக் காற்றுக்
காலமாகும். தென்மேல் பருவப் பெயர்ச்சிக்
காலத்தில் கடல் நீரோட்டமானது அரேபியன் தீவிலிருந்து இலங்கையின்
தெற்கு,கிழக்கு கடற்பகுதியூடாக வங்காள
விரிகுடாவை அடையும்.
இதேபோல் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலத்தில்
மீண்டும்
திசைமாற்றமடைந்து வந்து பாதையூடு கடல் நீரோட்டம் திரும்பிச் செல்லும். இவ்வாறு கடல்
நீரோட்டம் திசைமாற்றம் அடையும்
காலமே தற்போதய இடைப் பருவப் பெயர்ச்சிக்
காற்றுக்காலம். இந்தக் காலத்தில் ஆழ்கடலிலுள்ள குளிர் நீர்
கடற்கரையை நோக்கிவரும். இதனால் கரையோர
நீரின் வெப்பம் குறையும். அப்படி குறைந்த
வெப்பத்திலுள்ள நீர் "அல்கே பிளம்ஸ்' எனப்படும்
மிக நுண்ணிய தாவரங்களைத் தோற்றுவிக்கும்
அளவுக்கு அதிகமாக கரையோரத்தில் பல்கிப் பெருகும்""அல்கே பிளம்ஸை' உட்கொள்ள
கடலிலுள்ள சிறிய மீன்கள்
கரையை நாடும்.கூடவே அச்சிறிய மீன்களைத்
தேடி உண்ண பெரிய மீன்களும் வந்துவிடும்.
ஆனால் இந்த நுண்ணிய தாவரங்கள்
ஒளித்தொகுப்பில் ஈடுபடுவதற்காக நீரிலுள்ள ஒட்சிசனை முற்றாக உறிஞ்சிக் கொள்ளும். வந்த
மீன்கள் சுவாசிக்க ஒட்சிசன்
இன்றி உயிரிழந்து விடுகின்றன.
அத்தோடு நின்றுவிடாமல் குறுகிய
ஆயுள்காலம் கொண்ட இந்த அல்கே பிளம்ஸ்கள்
இறந்த நிலையில் கடலின் அடியில் சென்று பிரிகையடைகின்றன.
பிரிகைக்குத் தேவையான
ஒட்சிசனை கடலுக்கு அடியிலுள்ள
நீரிலிருந்தும் உறிஞ்சிக் கொள்கின்றன.
எனவே கடலுக்கு அடியிலுள்ள பெரிய இன
மீன்களும் சுவாசிக்க ஒட்சிசன் இன்றி உயிரிழக்கின்றன.
இதுவே தற்போது நிகழ்ந்துள்ள மாற்றத்துக்குக்
காரணம். இது ஒவ்வொரு வருடமும் இந்தக்
காலப்பகுதியில் நடைபெறுகின்றது. இந்த
முறை வழமையைவிட அதிகளவான மீன்கள்
கரையொதுங்குகின்றன. எனவே சுனாமிக்கான
அறிகுறி என்றோ அனர்த்தங்கள் நிகழப்
போவதாகவோ யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று அவர் மேலும்
தெரிவித்துள்ளார். வழமையாகப் பிடிக்கப்படும் மீனினங்கள்
கரையொதுங்குவது சுனாமிக்கான
அறிகுறி அல்லவென அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

thanks:virakesari

20 October 2012

பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி

தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்ட்ரோக்
என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம்
என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும்
நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய
ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும்
தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும்
பிரகாசமான சிகப்பு நிறமுடைய லைகோபீன்
என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும்
தன்மை கொண்டிருப்பதாக, இந்த ஆய்வாளர்கள்
தெரிவித்திருக்கிறார்கள். வாத நோய் குறித்து பின்லாந்தில் இருக்கும்
மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்காக
ஆயிரத்து முப்பத்தி ஓர்
ஆண்களை தேர்வு செய்துகொண்டனர்.
பரிசோதனையின் துவக்கத்தில் இவர்களின்
ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின் அளவு கணக்கிடப்பட்டது. ரத்தத்தில் லைகோபீன்
அளவு எவ்வளவு இருக்கிறது என்கிற
அடிப்படையில்,
இவர்களை நான்கு தனித்தனி குழுக்களாக
பிரித்த ஆய்வாளர்கள், இந்த
நான்கு குழுக்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர். இதில் ரத்தத்தில் லைகோபீனின்
அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258
பேர் இருந்தனர். இவர்களில் 25
பேருக்கு வாதநோய் தாக்கியது. அதேசமயம்,
லைகோபீனின் அளவு ரத்தத்தில் அதிகம் இருந்த
குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கியது. இதன் அடிப்படையில், லைகோபீன் அதிகம்
இருக்கும் தக்காளி உள்ளிட்ட
காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் வாதநோய்
தாக்குவதை 55 சதவீதம் குறைக்கமுடியும்
என்று இந்த ஆய்வாளர்கள்
கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்கிற
வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும்
தன்மை கொண்டது என்றும்,
இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன்
மூலம் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்
தன்மை கொண்டது என்றும் கூறுகிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக
பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி. எனவே இந்த லைகோபீன் அதிகம் இருக்கும்
தக்காளி போன்ற காய்கறிகளை அன்றாட உணவில்
அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம்
வாதநோயை தடுக்கலாம் என்பதை இந்த ஆய்வின்
முடிவுகள் தெரிவிப்பதாக கூறுகிறார் அவர்.

Thanks:bbc tamil.com

17 October 2012

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய
நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல்
அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின்
அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக
வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக
இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில்
ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில்
ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும்
அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்

1- ஹஜ் உம்ரா :- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும்
இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன்
ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல்
அமல்களில் ஈடுபடுவது.
குறிப்பு: - துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் – புகாரிமுஸ்லிம்
3- அரஃபா நோன்பு :-
அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய
வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ்
மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு: - அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது. அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த
பாலை அருந்தி தான்
நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்
4- தக்பீர் கூறுவது:-
கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல்
வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த
நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை.
ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற
திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத் இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர்
கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் – புகாரி
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின்
ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய்
ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும்
கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும்
பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்
6- உழ்ஹிய்யா :-
உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள்
வலியுறுத்திய சுன்னத்தாகும். கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யா வாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால்
அறுத்தார்கள்.
ஆதாரம் – புகாரி

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்

– ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)
– ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி) – மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம்
– (திர்மிதி) உழ்ஹிய்யா விற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது: கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள்
குறையுள்ளவை. நேரம் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யா வாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும்
ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி, முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின்
குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை
– ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)
– ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும்
கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
– அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி) உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக
கொடுக்கக்கூடாது. குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க
வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக
கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள்
தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்

உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும்
நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம் குறிப்பு: - இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.

மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

Source:islamkalvi.com

16 October 2012

'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' : கூகுள் அலுவலகம்முன்னால் ஆர்ப்பாட்டம்

'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்'
திரைப்படத்துக்கு எதிர்ப்புத்
தெரிவித்து லண்டனிலுள்ள கூகுள்
அலுவலகத்துக்கு முன்னால் ஆயிரக்கணக்கானோர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'யூடியூப்' இணையத்தளத்திலிருந்து 'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்' திரைப்படத்தின்
காணொளிகளை அகற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள்
இதன்போது வலியுறுத்தியிருந்தனர். "இது கருத்துச் சுதந்திரம் அல்ல, அதற்கு ஓர்
எல்லையுண்டு; நபிகள்
நாயகத்தை அவமானப்படுத்தும்
எந்தவொரு நடவடிக்கையையும் நாம்
அனுமதிக்கப்போவதில்லை" என ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டோர் கோஷம் எழுப்பியுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் சுமார் 4
மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது.
சுமார் 10,000 பேர் வரை இவ் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டதாக முஸ்லிம்
அமைப்பொன்று தெரிவித்துள்ளது. எனினும் சுமார் 3000 பேர் வரையிலேயே இதில்
ஈடுபட்டதாக லண்டன் பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.
கூகுள் குறித்த காணொளிகளை உடனடியாக
அகற்றாவிடின் பிரித்தானியா பூராகவும் இவ்
ஆர்ப்பாட்டத்தினைத் தொடரப் போவதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படம் மற்றும்
அதன் காணொளிகள் உலகம் பூராகவும் பெரும்
சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதன்காரணமாக லிபியாவில் இடம்பெற்ற
ஆர்ப்பாட்டத்தில் அந்நாட்டுக்கான அமெரிக்கத்
தூதுவரும் கொல்லப்பட்டார்.
மேலும் பல உலகநாடுகளில் அமைந்துள்ள
அமெரிக்கத் தூதரகங்களும்
தாக்குதலுக்குள்ளாகின. அண்மையில் இதே காரணத்துக்காக பாகிஸ்தான்
யூடியூப் உட்பட 20,000 இணையத்தளங்களைத்
தடை செய்தமை குறிப்பிடத்தக்கது.
thanks:virakesari

தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில்
ஒன்றுதான் தொழுகை,
தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய
முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில்
வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில்
இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான்
இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக்
கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல
ஒரு தெளிவு கிடைக்க வேண்டும்
என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தொழுகையில் வரிசையில் நிற்பதற்கான
ஒழுங்குகளில் பின்னுள்ளவைகளை பேணுதல்
அவசியமாகும். 1. முன் வரிசையின் சிறப்புகள்
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய
பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க
வேண்டும். 5. இமாமின்
வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க
வேண்டும்
6. பெண்கள் நிற்கும் வரிசை 1. தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு மக்கள் பாங்கிலும், முன் ஸஃப்பிலும் உள்ள சிறப்புகளை அறிந்து, பிறகு அவ்விரண்டும்
குலுக்கல் மூலம் தான்
பெறமுடியுமென்றிருந்தால் (அவர்கள் அதற்கும்
தயாராகி) குலுக்கல் மூலம் அவைகளைப்
பெற்றுக் கொள்வர் என நபி (ஸல்) கூறினார்கள்:
(புகாரி, முஸ்லிம்) ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம்
வந்தார்கள். மலக்குகள் தங்கள் இரட்சகனின்
சமுகத்தில் அணிவகுப்பது போல், தொழுகையில்
நீங்கள் அணிவகுக்கக் கூடாதா? எனக்
கூறினார்கள். அப்பொழுது நாங்கள்
யாரஸுலுல்லாஹ் மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் எவ்வாறு அணிவகுக்குகிறார்கள்?
எனக் கேட்டோம். அதற்கவர்கள், அவர்கள் முந்திய ஸஃப்புகளை முழுமைப் படுத்துகிறார்கள், ஸஃப்பில் நெருக்கமாக இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்) விளக்கம்: இவ்விரண்டு ஹதீதின் மூலம் முன்
வரிசையில் கிடைக்கும்
நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே முடிந்த அளவு முன்வரிசையில் தொழ
அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 2. வரிசையில் நேராக நிற்க வேண்டும் நபி(ஸல்) அவர்கள் தொழுகையின்
பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள்.
பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள்.
ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக
நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள்
உள்ளங்களும் வேறுபட்டுப் போகும். ( ஸஃப்பில்) என்னையடுத்து அறிவிற் சிறந்தோர்
நிற்கட்டும். பின்னர்,
அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும்,
பின்னர் அவர்களுக்கு அடுத்தவர்கள்
நிற்கட்டும். (முஸ்லிம்) உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய
விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்)
கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்) புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர்
செய்வது தொழுகையை நிலைநாட்டும்
விஷயங்களில் ஒன்றாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் ஸஃப்புகளைச் சீராக்குங்கள்! நன்றாக
நெருங்கி நில்லுங்கள், நிச்சயமாக நான் என்
முதுகுக்கு பின்னால் உங்களைப் பார்க்கிறேன்.
(இது புகாரியின் வாசகமும், முஸ்லிமின்
கருத்துமாகும்) புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில்
நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம்
தோள்பட்டையை அருகிலுள்ளவரின்
தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின்
பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நீங்கள் உங்கள் ஸப்புகளைச் சீராக்கி கொள்ளூங்கள்
இல்லையெனில் அல்லாஹுதஆலா உங்கள்
முகங்களுக்கிடையில் (உங்களுக்கிடையில்)
வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் என
நபி (ஸல்) கூறினார்கள்:. (புகாரி, முஸ்லிம்) முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்
கூறப்பட்டுள்ளது: நாங்கள்
புரிந்து கொண்டு சரியாக நிற்கிறோம்
என்பதை பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள்
அம்புகளை சீர்படுத்துவது போல் எங்கள்
ஸஃப்புகளைச் சீர்படுத்துவார்கள். பின்பு ஒரு நாள் அவர்கள் தொழுகைக்காக
வீட்டிலிருந்து வந்தார்கள்.
(தொழுகையை ஆரம்பிக்க) தக்பீர் சொல்ல
நெருங்கிவிட்டார்கள். அப்பொழுது ஒருவர்
ஸஃப்பை விட்டு தம்
நெஞ்சை வெளிப்படுத்தி (ஸஃப்பை விட்டு சற்று முன்னால்) நிற்பதை அவர்கள்
பார்த்துவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின்
அடியார்களே! உங்கள் ஸஃப்புகளை சீராக்கிக்
கொள்ளுங்கள் அவ்வாறு இல்லையெனில் அல்லாஹ்
உங்களுக்கு மத்தியில் பிளவையும்,
வேறுபாட்டையும் ஏற்படுத்தி விடுவான் என எச்சரித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஸஃப்பின்
ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குப்
புகுந்து செல்வார்கள். எங்கள் நெஞ்சுகளையும்
தோள்பட்டைகளையும் தடவி விடுவார்கள்.
அப்பொழுது கூறுவார்கள்: (ஸஃப்பில்) நீங்கள்
வேறு படாதீர்கள் அவ்வாறு நீங்கள் வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டு விடும். மேலும்
அவர்கள் கூறுவார்கள், நிச்சயமாக அல்லாஹ்வும்
அவனுடைய மலக்குகளும் முந்திய ஸப்புகளில்
உள்ளவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர்.
(அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள்:
அல்லாஹ், அவர்கள் மீது தன் அருள்களைப் பொழிகிறான் என்பதாகும். மலக்குகள் ஸலவாத்
கூறுகின்றார்கள் என்பதின் பொருள், மலக்குகள்
அவர்களுக்காக துஆச் செய்கின்றனர்
என்பதாகும்) (அபூதாவூது) விளக்கம்: தொழுகையில் வரிசையில் நிற்கும் போது நெருக்கமாகவும் நேராகவும் நிற்க
வேண்டும். நெருக்கமாக நிற்பதென்பது,
நமது வலது இடது பக்கத்தில் உள்ளவர்களின்
தோள்புயத்துடன் நமது தோள்புயமும் கால்
பாதத்துடன் கால் பாதமும் சேர்ந்திருக்க
வேண்டும். நேராக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்திலுள்ளவர்களின்
கணுக்காலுடன் நமது கணுக்கால் சேர்ந்திருக்க
வேண்டும். விரல் நுனிகளை வைத்து நேர்
பார்க்கக்கூடாது.
நமது காலை பக்கத்திலுள்ளவர்களின் காலுடன்
சேர்க்கும்போது மிருதுவைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோவினை ஏற்படும்
அளவிற்கு கடினத்தை கைவிட வேண்டும்.
பின்வரும்
ஹதீது அதை தெளிவுபடுத்துகின்றது. உங்கள் ஸஃப்புகளை நேராக நிலை நாட்டுங்கள்.
உங்கள் தோள் பட்டைகளுக்கு நேர் படுங்கள்,
இடைவெளிகளை நிரப்புங்கள். உங்கள்
சகோதரர்களின் கரங்களுடன் மென்மையைக்
கடைபிடியுங்கள். ஷைத்தானிற்காக
இடைவெளியை விட்டு விடாதீர்கள். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக்
கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக்
கொள்வான். யார்
ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ்
துண்டித்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அபூதாவூது) இந்த ஹதீதில், தொழுகையில் வரிசையில்
இடைவெளி விடுவதுபற்றி கடுமையாக
எச்சரிக்கை செய்யப்பட்டும் இன்னும்
இது விஷயத்தில் மக்கள் அறியாமையில்தான்
இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதுபற்றி அறியாமையில் உள்ள மக்களுக்கு பக்கத்தில் தொழும் போது பல
சிரமங்களையும் நாம் எதிர் நோக்கின்றோம்,
அவர்களின் கால் பாதத்துடன் நமது கால்
பாதத்தை சேர்க்க முனையும் போது அவர்கள்
ஏதோ அது ஒரு பாவகரமான செயல்
போன்று நினைத்து, அவர்கள் நம்மை விட்டும் வெகு தூரம் நகர்ந்து விடுகின்றார்கள்.
அப்படிப்பட்டவர்கள், இச்சுன்னாவை நினைவில்
வைத்து இனிமேலாவது இதை செயல் படுத்த
முன்வர வேண்டும். யார் ஸஃப்பை (நல்லமுறையில்)
சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ்
சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ்
துண்டித்து விடுவான் என்ற நபி(ஸல்) அவர்களின்
பொன்மொழிகளையும் இப்படிப்பட்டவர்கள்
ஞாபகம் வைத்து கொள்ளட்டும். 3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும் நீங்கள் உங்களின் வரிசைகளை நெருக்கமாகவும்
சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள்,
கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள், என்
உயிர் எவன் கைவசம்
இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக, வரிசையின்
இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டியின் தோற்றத்தில்
ஷைத்தான் நுழைகின்றான் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அபூதாவூத்) விளக்கம்: வரிசையில்
இடைவெளி விட்டு நின்றால் அங்கே ஷைத்தான்
கருப்பு ஆட்டுகுட்டி உருவத்தில்
நுழைந்து நமது உள்ளங்களில் பல
எண்ணங்களை உண்டுபண்ணி நமது தொழுகைகளை
பாழாக்கிவிடுவான், ஆகவே வரிசைகளில் இடைவெளி விடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள
வேண்டும். 4. முதல் வரிசையை முழுமைபடுத்திய
பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க
வேண்டும் முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள்.
பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள்.
ஸஃப்பில் குறை இருக்குமாயின்
அது கடைசி ஸப்பாக இருக்கட்டும்.
(அபூதாவூது) விளக்கம்: முன் உள்ள வரிசையில் இடம்
இருக்கும் போது அடுத்த
வரிசையை ஆரம்பிக்கக் கூடாது,
முன்வரிசையை முழுமை படுத்திய
பின்பே அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்.
இன்று சில பள்ளிகளில், தொழுகை முடிந்துதும் பள்ளியை விட்டும்
புறப்பட்டு விட வேண்டும் என்பதற்காக
அல்லது மின்விசிறிக்குக் கீழ் நிற்க வேண்டும்
அல்லது எயர் கண்டிஸனுக்கு நேராக நிற்க
வேண்டும் என்பதற்காக அல்லது இதுபோன்ற பல
காரணங்களுக்காக முன் வரிசையில் இடமிருந்தும் தன்
சுயநலத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஓர்
இடத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்கின்றார்கள்
. இது முற்றிலும் சுன்னாவிற்கு மாற்றமான
முறையும் முற்றிலும் தடுக்கப்பட
வேண்டியவையுமாகும். இப்படி நடந்து கொள்பவர்கள்
அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும். 5. இமாமின்
வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க
வேண்டும் தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச்
செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில்
இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்)
கூறினார்கள். (அபூதாவூது) இமாமின்
வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க
வேண்டும் ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன்
சேர்ந்து இரவு தொழுகை தொழுவதற்காக
அவர்களின் இடது பக்கம் எழுந்து நின்றேன்.
பின்பக்கமாக என் தலையை நபி (ஸல்) அவர்கள்
பிடித்து அவர்களின்
வலது பக்கத்திலே என்னை நிறுத்தினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதி) 6. பெண்கள் நிற்கும் வரிசை நானும் ஒரு அனாதையும் எங்களின் வீட்டிலே
நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (இரவுத்
தொழுகை) தொழுதோம், என் தாய் உம்மு சுலைம்
(ரலி) அவர்கள் எங்களுக்கு பின்
நின்றுதொழுதார்கள். (புகாரி) விளக்கம்: மேல்கூறப்பட்ட
ஹதீதுகளிலிருந்து பல சட்டங்களை நாம்
விளங்கலாம், இருவர் ஜமாஅத்தாக தொழுதால்
மஃமூமாக நிற்பவர் இமாமின் வலது பக்கத்தில்
நிற்க வேண்டும். இரண்டாவது நபர்
வந்து விட்டால் இவர் இமாமுக்கு பின்பக்கமாக சென்று அவ்விருவரும் இமாமுடைனய
வலது இலது பக்கத்தில் நிற்க வேண்டும். அதன்
பின் வருபவர்கள் வலது இடது பக்கமாக நிற்க
வேண்டும். மஃமூம்கள் இருவராக
இருந்து ஒருவர் ஆணாகவும் மற்றொருவர்
பெண்ணாக இருந்தால், ஆண் இமாமின் வலது பக்கத்திலும் பெண் பின் வரிசையிலும்
தனியாக நிற்க வேண்டும். அந்தப் பெண்
தனது தாயாக, மகளாக, மனைவியாக
இருந்தாலும் சரியே. பெண்களுக்கு சிறந்த
வரிசை பின் வரிசையாகும். பின்வரும்
ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது. தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச்
சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த
ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும்.
பெண்களின் ஸஃப்புகளில் மிகச்
சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும்.
அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) ஆகவே, தொழுகையில் வரிசையில் நிற்கும்
விஷயத்தில் மேல் கூறப்பட்ட
விஷயங்களை முழுமையாக பின்பற்ற அல்லாஹ் நம்
அனைவருக்கும் வாய்ப்பளிப்பானக!
K.L.M.இப்ராஹீம் மதனீ
நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்
islamkalvi

11 October 2012

ஐந்தில் திருந்து: இல்லையேல் ஐம்பதில் வருந்து

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பார்கள். 'ஐந்தில் திருந்து இல்லையேல் ஐப்பதில் வருந்து என்கிறது புதிய ஆ ¡ய்ச்சி ஒன்று. குழந்தையாக இருக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படாவிட்டால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு விதமான புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி. குழந்தை ஆசையாகக் கேட்கிறதே.
அடம்பிடிக்கிறதே என்பதற்காகத் தேவையற்ற நொறுக்குத் தீனிகளையும் 'ஸ்பாஸ்ற் பூட்' வகைகளையும் வாங்கித் தரும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்குள் புற்றுநோய் நுழைவதற்கான கதவையும் கூடவே திறக்கிறார்கள் என்பதே உண்மையாகும். இங்கிலாந்தில் மட்டும் சுமார் 17 வீதம் குழந்தைகள் மித மிஞ்சிய எடையுடன் இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இப்படி அதிக
எடையுடன் இருப்பது பிற்காலத்தில் சிறு நீரகம், கல்லீரல், மார்பு, புரோஸ்டேட், உணவுக்குழாய் என பல்வேறு இடங்களில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர நீரிழிவு இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக அதிகரித்து விடுகிறது. குழந்தைகளாய் இருக்கும் போது சரியான உணவுப் பழக்கத்துக்குள் வராவிடில் இளைஞர்களானபின் அவர்களால் ஆரோக்கிய
நிலைக்கு வர முடியாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரிட்சார்ட் ஜோன்ஸ். உடல் எடை அதிகரிப்பதால் வரும் புற்றுநோய் வருடம் தோறும் தனது வீதத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். வியிற்றுப் பகுதிகளில் அதிகமாய் சேரும் கொழும்பு மார்பகப் புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றுக்குக் காரணமாகி
விடுகிறது. சைட்டோகினஸ் எனும் நமது உடலிலுள்ள பொருள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. அதன் அளவை அதிகப்படியான கொழும்பு குறைத்துவிடுகிறது. எனவே புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வலுவிழந்து உடல் நோயில் விழுகிறது.
Thanks:thinakaran

02 October 2012

அல் - ஹஸனியா சிறுவர்தின கொண்டாட்டம்



 அல் - ஹஸனியா மகாவித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற
(01.10.2012)சிறுவர்தின கொண்டாட்டத்தில் ஒரு நிகழ்வு food fiesta

ஹஜ்ஜின் சிறப்புகள்

எம். ஷம்சுல்லுஹா

அமல்களில் சிறந்தது

"செயல்களில் சிறந்தது எது?" என நபி (ஸல்)
அவர்களிடம் கேட்கப்பட்டது. "அல்லாஹ்வையும்
அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது"
என்றார்கள். "பின்னர் எது?"
என்று கேட்கப்பட்டது. "அல்லாஹ்வின் பாதையில்
போர் புரிவது" என்றார்கள். "பின்னர் எது?" என்று கேட்கப்பட்டது. "ஏற்றுக் கொள்ளப்படும்
ஹஜ்" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26