தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

31 March 2024

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ர் இரவு

 ஆயிரம் மாதங்களின் நன்மை ஒரே இரவில்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முன் செய்த பாவங்கள் அழிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

03 March 2024

"எரியும் நட்சத்திரம்"


ர்ஹூமா ஷஹ்னா ஸப்வான் எழுதிய கவிதைகளின் தொகுப்பான எரியும் நட்சத்திரம் நூல் வெளியீட்டு விழா 02.03.2024 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.


 

இந் நிகழ்விற்கு பேனாத் துளிகள் சஞ்சிகையின் ஆசிரியர் ஏ. ஆர். றஜா முஹம்மத் தலைமை தாங்கியதுடன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரும்பு இதழ் ஆசிரியர், ஓய்வு பெற்ற இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்  மதிப்பிற்குரிய ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.


04 January 2024

சின்னமுத்து தடுப்பூசியின் மேலதிக டோஸ் பற்றிய அறிவிப்பு

பெற்றோர்களுக்கான விசேட அறிவிப்பு 
--------------------------------------------------
ஏப்ரல் 7, 2023 க்கும் ஜூலை 5, 2023 க்கும் (இரண்டு நாட்களும் உட்பட) இடையே பிறந்த குழந்தைகளின் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கானது.

மூளை பாதிப்பு, நுரையீரல் அழற்சி (நிமோனியா), பார்வை குறைப்பாடு, காது கேளாமை, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய சின்னமுத்து, தற்போது உலகின் பல நாடுகளிலும், இலங்கையிலும் இளம் குழந்தைகளிடையே பரவி வருகிறது.

 

15 October 2023

இறை வசனங்கள்

'மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. கடலிலும் திடலிலும் இருப்பவை அனைத்தையும் அவன் அறிகிறான். மரத்தில் இருந்து எந்த இலையும் அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களினுள் மறைந்திருக்கும் எந்த விதையும் அவன் அறியாமல் இல்லை. பசுமை யான மற்றும் உலர்ந்த அனைத்துமே தெளிவான ஓர் ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை! (6:59)



'உயரமான தூண்களையுடைய இரம் என்ற ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவர்களைப் போன்று எந்தச் சமுதாயமும் உலக நாடுகளில் படைக்கப்படவில்லை. மேலும் பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?) அந்த மக்களோ உலக நாடுகளில் பெரும் குழப்பத்தை விளைவித்திருந்தார்கள். இறுதியில் அவர்கள் மீது உம் இறைவன் தண்டனையின் சாட்டைகளைப் பொழிந்தான். உண்மையில் உம் இறைவன் குறிவைத்துக் காத்திருக்கிறான்' (89:6- 14)

11 December 2021

Scholarship award ceremony

சென்றமுறை புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற அல் ஹஸனியா மாணவர்கள் இன்று 11-12-2021 பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.