'தி கிரேட்டஸ்ட்' என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி(74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.
காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முஹம்மது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் குடிசூடா சக்கரவர்த்தியாக திகழ்ந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வருகிறார்.
சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் முஹம்மது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாக முஹம்மது அலியின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
''பாக்ஸிங் ரிங்குக்குள் பட்டாம் பூச்சியை போல பறப்பேன், தேனியை போல கொட்டுவேன்'' என்பது முகமது அலியின் மிக பிரபலமான வரி.1964ல் குத்துச்சண்டையில் ஜாம்பவானாக இருந்த சோனி லிஸ்டனை முகமது அலி வீழ்த்தினார்.ஜோ ப்ரேஸியருடன் பரப்பரபான சண்டைகளை போட்ட முகமது அலி, ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தி 'ரம்பிள் இன் த ஜங்கிள்' பட்டத்தை கைப்பற்றினார் .இனவெறிக்கு எதிராக கடுமையாக செயல்பட்டவர் முகமது அலி. வியட்நாமுக்கு எதிரான போரின்போது அமெரிக்க ராணுவத்தில் இணைந்து பணியாற்ற மறுத்தது மற்றும் 'நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற கருப்பின இஸ்லாம் குழுவில் இணைந்தது ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்கர்களின் வெறுப்புக்கு ஆளானார்.அவரது மத நம்பிக்கைகள் காரணமாக, வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்த்தால், அவரது உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் அவரது குத்துச்சண்டை போட்டிகள் முடங்கிப் போயின.Sports promoter Don King stands between Muhammad Ali and Joe Frazier in New York on July 17, 1975. [AP]
Muhammad Ali is greeted in downtown Kinshasa, Zaire, where he was to fight George Foreman on September 17, 1974. [AP]
Spray flies from the head of Frazier as Ali connects with a right in their title fight in Manila in the Philippines on October 1, 1975. [Mitsunori Chigita/AP]
Ali jabs at photographers while arriving at the Orpheum Theatre for the premiere of the film Collateral in Los Angeles on August 2, 2004. [Robert Galbraith/Reuters]
No comments:
Post a Comment