அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில், சிறுவனை மீட்பதற்காக கொரில்லாவை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம், சின்சினாட்டி நகரில் உள்ள உயிரியல் பூங்காவில், ஹாரம்பே என பெயர்சூட்டப்பட்ட 17-வயது ஆண் கொரில்லா பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த பகுதிக்குச் சென்ற 4 வயது சிறுவன் ஒருவன், உலோகத்தால் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பை தாண்டி, கொரில்லாவின் உறைவிடத்தில் தவறி விழுந்துள்ளான். அப்போது, அங்கு வந்த கொரில்லா, அந்த சிறுவனை தூக்கிச் சென்று போக்கு காட்டியுள்ளது. இதனைக் கண்ட பாதுகாவலர்கள், கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர். கொரில்லாவுக்கு மயக்க ஊசி போட்டு குழந்தையை காப்பாற்றுவதற்கு பதிலாக சுட்டு கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெற்றோரின் கவனக்குறைவு காரணமாகவே சிறுவன் தவறி விழுந்து கொரில்லாவிடம் சிக்கியதாகவும், வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக அம்மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment