தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

25 June 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகல்:உலகத் தலைவர்கள் கவலை; ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் அதிர்ச்சி; ஸ்டெர்லிங் பவுண்ட் பெரும் வீழ்ச்ச

june 24,
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் "வெளியேற வேண்டும்" என்று வாக்களித்துள்ளனர்.

ஏறக்குறைய 52 சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் , விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
வெளியுறவுச் செயலர் பிலிப் ஹேமண்ட் வாக்காளர்கள் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் விலகவேண்டும் என்று பிரிட்டனில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருப்பது குறித்து உலகத் தலைவர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டனின் நாணயமான ஸ்டெர்லிங் பவுண்ட் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன், உலக அளவில் பங்குச்சந்தைகள் கணிசமான சரிவை சந்தித்துள்ளன.





source BBC

No comments:

Post a Comment