தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 November 2014

DXO Optics Pro 8 இலவசம் - 31 ஜனவரி 2015 வரையிலும்..

DXO Optics Pro 8….ம்ம்ம்இரண்டுவருடங்களுக்குமுன்னர்சுமார்150லிருந்து200 அமெரிக்கடாலர்களுக்குவிற்பனைசெய்யப்பட்ட ஒருஇமேஜ் எடிட்டிங்டூலாகும்.
DXO Optics Proன் பதிப்பு10ஐ சமீபத்தில்அறிமுகம்செய்துள்ளது.எனவேஅந்நிறுவனம் தனதுபழையபதிப்பான8.5ஐ இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனஅறிவித்துள்ளது.
நீங்கள்செய்யவேண்டியதெல்லாம் 31-1-2015க்குள்ளாககீழேயிருக்கும்சுட்டியைகிளிக்செய்து உங்களதுமின்னஞ்சல் முகவரியைதெரிவித்தாலேபோதும்.
ஆக்டிவேஷன் எண்ணை இலவசமாகவே தருகிறார்கள்.
Download Link:
http://www.dxo.com/intl/dphotographer


DXO Optics Pro 8 கிட்டத்தட்ட அடோபியின்லைட்ரூமுக்கு இணையாகபணிபுரியும்.
பொதுவாக‌ விண்டோஸ் xpபயன்படுத்துபவர்கள் லைட்ரூமின் புதியபதிப்புகளை (since
version 4)பயன்படுத்தமுடியாது.
ஆனால் DXO Optics Pro 8,Windows XPயிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Raw கோப்புகளையும்,jpg கோப்புகளையும்கையாள்கிறது.
பொதுவாக இமேஜ் எடிட்டிங்கில்போதிய அனுபவமில்லாதவர்களுக்கு பயனளிக்கும்விதமாக ஆட்டோமோட்இருப்பது இதன்சிறப்பாகும்.

ஒரு புகைப்படக்கலைஞருக்குதேவையான
அம்சங்களும்இதிலிருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
உதாரணமாக‌ :
White Balance Correction,
Exposure compensation(Auto mode available)
DXO Smart Lighting(Auto mode available)
Color Rendering(Auto mode available)
Noise Reduction(Auto mode available)
Sharpening using Unsharp mask
Lens corrections
DXO Optics pro பொதுவாக3 tabகளைகொண்டுள்ளது.

1.Organize :இதில்
நீங்கள்எடிட்செய்யவிரும்பும்உங்களதுபடங்களைதேர்வுசெய்துகொள்ளலாம்.
2.Customize : இதில் உங்களதுபடங்களைஎடிட்செய்துகொள்ளலாம்.
3.Process :எடிட்டிங்முடித்தபின்னர்Processஎன்பதனைகிளிக்செய்து Start
Processing என்பதனை கிளிக்செய்யபடமானது process செய்யப்படும்.Output
செய்யப்படும் படங்களை நீங்கள்விரும்பும் இடத்தில் சேமித்துக்கொள்ளவும் வழி இருக்கிறது.

பயன்படுத்திப்பாருங்கள் பயனடையுங்கள்.
நன்றி:
நித்திஆனந்த்
photography-in-tamil

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!

இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்.
விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக்
காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில்
பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர,
வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும்
செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார்
தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.
ஸ்கிரீன் லாக்!
எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி.
இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா
ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில்,
இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம்.
இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர்
கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும்
ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த
வழி.
என்க்ரிப்ட் வசதி!
மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக்
கீழ் 'என்க்ரிப்ட்' என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன்
மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் 'என்கிரிப்ட்'
செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம்
'டிகிரிப்ட்' செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன்
தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!
செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது.
இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது android.com/devicemanager என்ற
முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங்
ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள் அனைத்தையும்
அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு
இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும் கூடாது.
இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.
அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!
பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில்
வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40% வைரஸ் பிரச்னையால்
பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை
பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை
நெட்வொர்க் அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது
பாதுகாப்பானது.
இதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும்
கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம் பயன்படுத்த வேண்டிய
அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான்
பாதுகாப்பானது.
முக்கியமான தகவல்கள் பத்திரம்!
உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில்
பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவது தவிர, போன் பழுதாகி
அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!
குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை,
பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.
குறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால்
செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.
அப்ளிகேஷன் லாக்!
முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை
எப்போதும் லாக் செய்து வைக்கலாம்.
இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது,
ஒவ்வொருமுறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு
பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.
ரூட் (Root) செய்ய வேண்டாம்!
போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை
பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங்
சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல்வேறு வசதிகள்
கிடைக்கும்.
ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும்
அறியும் வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன்
மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.
பிரவுஸர்கள் எச்சரிக்கை!
போனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர
தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை
அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.
அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை
டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.
அப்டேட் அவசியம்!
போனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது
அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட் வசதி
வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.
ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள்
நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி
வழங்க வேண்டும்.
போன் தொலைந்துவிட்டால்..?
இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன்
தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில்,
ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்றுவது.
அடுத்தபடியாக, 'ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்' மூலம் போனில் இருக்கும்
தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.
ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த
வழிகளை நீங்களும் பின்பற்றலாமே!

நன்றி – பிரபு கிருஷ்ணா

27 November 2014

தலையில் பந்து பட்டதால் காயமடைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!

சிட்னி: ஆஸ்திரேலிய முதல்தர கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து
பலமாக மோதியதால் படு காயமடைந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ்
சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
நேற்றுமுன் தினம் நியூ சவுத் வேல்ஸில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட்
போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் அபாட்டின் பந்து, பிலிப்பின்
தலையில் பலமாக தாக்கி விட்டது. இதனால் படுகாயமடைந்து நிலை குலைந்து கீழே
விழுந்தார் ஹியூக்ஸ்.
தலையில் ரத்தம் சொட்டச், சொட்ட சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தது.
இரண்டு நாட்களாக கோமாவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி தற்போது
உயிரிழந்துள்ளார்.
25 வயதேயான பிலிப் ஹியூக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட்
போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
பிலிப் ஹியூக்ஸின் மரணம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல், விளையாட்டு
உலகையும் உலுக்கியுள்ளது. ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். பல நாட்டு
வீரர்கள் ஹியூக்ஸுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஹியூக்ஸ் அணிந்திருந்த ஹெல்மெட்டின் மோசமான வடிவமைப்புதான்
அவருடைய உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்றும் சில தகவல்கள்
வெளியாகியுள்ளது.
வருகின்ற 30 ஆம் தேதி, அதாவது இன்னும் இரு தினங்களில் ஹியூக்ஸின்
பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:oneindia

22 November 2014

மக்கொன: ஐ.தே.க பிரதேசசபை உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு

எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட தினத்திலேயே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து மூத்த அமைச்சர்கள் உட்பட பெருமளவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ளமையை ஐ.தே.கவின் ஆதரவாளர்கள், மக்கொன பகுதியில் கொண்டாடிக்கொண்டிருந்தவேளை, இனந்தெரியாதோர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியிருக்கிறார்கள்.

இதன்போது ஐ.தே.க வின் முன்னார் பேருவளை எதிர்க்கட்சித் தலைவர் சமில ரணசிங்க என்பவர் தலையில் குண்டடிபட்டு ஆபத்தான நிலையில் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லையென ஐ.தே.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 November 2014

கூகிள் உங்களைப் பற்றி அறிந்துள்ள விடயங்களைக் காட்டுகின்ற ஆறு இணைப்புகள்

உங்களைப் பற்றி, கூகிள் அறிந்து வைத்துள்ள அனைத்து விடயங்களையும் அறிந்து
கொள்ள விரும்புகிறீர்களா? கீழுள்ள ஆறு இணைப்புகளும், உங்களைப் பற்றி
கூகிள் அறிந்துள்ள தரவுகளை உங்களுக்குக் காண்பிக்கும்.
1. உங்களை கூகிள் எப்படிப் பார்க்கிறது?
உங்கள் வயது, பால், விருப்பங்கள் என அனைத்து பற்றியதான சுயவிபரக் கோவையை
கூகிள் உருவாக்க முயற்சிக்கிறது. இது, உங்களுக்குப் பொருத்தமான
விளம்பரங்களைக் காட்சிப்படுத்த தேவையானது. இந்த இணைப்பில் கூகிள் உங்களை
எப்படிக் காண்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம், மாற்றங்களும் செய்யலாம்:
https://www.google.com/ads/preferences/
2. உங்களின் இருப்பிடங்களின் வரலாற்றை அறிந்திட
நீங்கள் அண்ட்ராய்டு திறன்பேசியை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள்
இருப்பிடம் தொடர்பான தரவுகளும், கூகிளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த இணைப்பில், உங்களின் மொத்த இருப்பிட வரலாற்றை அறிந்து கொள்ள
முடிவதோடு, அதனை தரவிறக்கிக் கொள்ளவும் முடியும்.
https://maps.google.com/locationhistory
3. உங்களின் மொத்த கூகிள் தேடலின் வரலாற்றையும் காண
நீங்கள் கூகிளில் மேற்கொண்ட ஒவ்வொரு தேடலையும், கூகிள் சேமிக்கிறது.
அத்தோடு, நீங்கள் கிளிக் செய்த, கூகிள் விளம்பர இணைப்புகளையும் அது
சேமித்து வைத்திருக்கிறது. இந்த இணைப்பில் அவற்றைக் கண்டு கொள்ளலாம்.
https://history.google.com
4. உங்கள் கூகிள் கணக்கைப் பாவித்த அத்தனை சாதனங்களையும் அறிந்திட
உங்கள் கூகிள் கணக்கை, வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என சந்தேகக்
கவலை தோன்றினால், உங்கள் கூகிள் கணக்கைப் பாவிக்கும் அத்தனை சாதனங்கள்,
அதன் ஐபி முகவரி மற்றும் அண்ணளவான இருப்பிடம் என்பனவெல்லாம் இந்த
இணைப்பில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
https://security.google.com/settings/security/activity
5. உங்கள் கூகிள் தரவுகளை அணுகும் அத்தனை செயலிகள் மற்றும் நீட்சிகள் பற்றி அறிய
உங்கள் கூகிள் கணக்கில், எந்த செயலிகள் மற்றும் நீட்சிகள் அணுக்கம்
பெற்றுள்ளது, எவ்வகையான அணுக்கங்கள் என்பன பற்றி இந்த இணைப்பில்
அறியலாம். அணுக்கத்தை நீக்கிவிடவும் முடியும்.
https://security.google.com/settings/security/activity
6. உங்களின் அத்தனை கூகிள் தரவுகளையும் பதிவிறக்க
உங்களின் அத்தனை தரவுகளையும் கூகிள் தரவிறக்கிக் கொள்ள வழிசமைக்கிறது:
உரலிகளின் சேமிப்பு, மின்னஞ்சல்கள், தொடர்பாடல்கள், கோப்புகள்,
சுயவிபரக்கோவை, உங்கள் யூடியுப் காணொளிகள், நிழற்படங்கள் என அனைத்தையும்
இந்த இணைப்பில் தரவிறக்கிக் கொள்ளலாம்.
https://www.google.com/takeout

Written by Cloud Fender Translated by Tharique Azeez


Thanks

16 November 2014

ஸ்டார்லிங் குருவிகளின் அதிசயிக்க வைக்கும் குழு நடனம்

ஆடும் கருமேகம் போல அஸ்தமன வானத்தில் ஸ்டார்லிங் குருவிகள் அரங்கேற்றும் அற்புத
நடனத்தை பிரிட்டனில் இலையுதிர் காலத்தில் கண்டு ரசிக்க முடியும். ஸ்டார்லிங் குருவிகளின் இந்த நடனத்தைப் பற்றிய ஆய்வு ஒன்றை க்ளோஸ்டர் பல்கலைக்கழகம்
இப்போது நடத்திவருகிறது. நாற்பது ஆண்டுகளில் 80 சதவீதம் அழிந்துவிட்ட இந்தப் குருவி இனம் முற்றும்
இல்லாதுபோவதைத் தடுக்க இந்த ஆய்வு உதவுமா?
கீழே உள்ள வீடியோவைப் பார்த்து ரசிக்கவும்

இதையும் பார்க்கவும்


Thanks:
Bbc,
youtube

15 November 2014

சிங்கக்கூட்டத்திடம் சிக்கிய யானைக்குட்டி;இணையத்தைக் கலக்கும் வீடியோ

கிட்டதட்ட 14 சிங்கங்களைக் கொண்ட சிங்க கூட்டம் ஒன்றிடம் சிக்கிக்கொண்ட யானைக்குட்டி ஒன்றை இரையாக்கிக்கொள்ள முயற்சிக்கும் வீடியோ ஒன்று அப்பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட்ட ஒரு குழுவினரால்
தற்போது இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது நீங்களும் காணத்தவராதீர்கள்.

10 November 2014

சூரத்துல் பகராவின் சிறப்புகள்

அல்லாஹ்தஆலாஇந்தசமுதாயத்திற்குவழங்கியிருக்கும்அருட்கொடைகளில்மிகப்பெரியஅருட்கொடையாகதிருக்குர்ஆன்திகழ்கிறது.அந்தகுர்ஆனைஓதுபவர்களுக்குபலசிறப்புகளையும்அல்லாஹ்வழங்கியுள்ளான்.
நபிகள்நாயகம்(ஸல்)அவர்கள்கூறுகிறார்கள்.
யார்அல்லாஹ்வுடையவேதத்திருந்துஒருசொல்லைஓதுவாரோஅதற்குஒருநன்மைஉண்டு.ஒருநன்மைஎன்பதுஅதுபோல்பத்துமடங்குவரைஉண்டு. ”அஃப்லாம்மீம்”என்பதைநான்ஒருஎழுத்துஎன்றுசொல்லமாட்டேன்.மாறாகஅப்ஒருஎழுத்துலாம்ஒருஎழுத்துமீம்ஒருஎழுத்துஎன்றுநபிஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்:இப்னுமஸ்வூத்(ரலி­),நூல்:திர்மிதீ(2835)
­ ­­
இதேபோன்றுசிலகுறிப்பிட்டசூராக்களுக்குகுறிப்பிட்டசிறப்புகளைநபிகள்நாயகம்(ஸல்)அவர்கள்கூறியிருப்பதுஆதாரப்பூர்வமானஹதீஸ்களில்பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திரு குர்ஆனில் சிறப்பித்து கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக உள்ள ஹதீஸ்களில் ஆதாரமற்ற ஹதீஸ்கள் அதிகமாக உள்ளது
ஆகவே அவற்றை தவிர்த்து கொண்டு .. ஆதாரமான ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்.









09 November 2014

38 Facts about Your Body you maybe didn’t know?!


It’s not an overstatement to say that every part of your body is a miracle.




Here is some of facts about your body you maybe didn’t know:




1.Your nose can remember 50,000 different scents.

2.Humans shed about 600,000 particles of skin every hour.

3.An adult human being is made up of around 7,000,000,000,000,000,000,000,000,000 atoms.

4.A human baby has over 60 more bones than an adult.

5.There are 100,000 miles of blood vessels in an adult human body.

6.An average person produces about 25,000 quarts of saliva in a lifetime, enough to fill two swimming pools.

7.Your body has enough iron in it to make a metal nail 3 inches long.

8.We all have tiny mites living in our eyelashes.

9.The strongest muscle in the human body is the masseter (jaw muscle).

10.Sweat itself is odorless. It’s the bacteria on the skin that mingles with it and produces body odor.

11.Having excessive body hair is linked to higher intellect.

12.Ears and Nose never stop growing.

13.Similar to fingerprints, everyone also has a Unique Tongue Print.

14.When awake, the human brain produces enough electricity to power a small lightbulb.

15.Human Bones are ounce for ounce, stronger than steel.

16.People with blue eyes have a higher alcohol tolerance.

17.The human eye can distinguish about 10 million different colors.

18.We spend about 10% of our waking hours with our eyes closed, blinking.

19.If the human eye was a digital camera it would have 576 megapixels.

20.All of the bacteria in our body collectively weighs about 4 pounds.

21.The human body produces about a litre (0.26 gal) of mucus per day.

22.There are more than 100 types of cancers; any part of the body can be affected.

23.Your heartbeat changes and mimics the music you listen to.

24.Your brain uses 20% of the total oxygen and blood in your body.

25.Your bones are composed of 31% water.

26.There’s more bacteria in your mouth than there are people in the world.

27.Every day, your heart creates enough energy to drive a truck for 20 miles (32 km).

28.If uncoiled, the DNA in all the cells in your body would stretch 10 billion miles, from here to Pluto and back.

29.Most of the dust underneath your bed is actually your own dead skin.

30.Within three days of death, the enzymes that once digested your dinner begin to eat you.

31.Sleeping less than 7 hours each night reduces your life expectancy.

32.In a lifetime, your brain’s long-term memory can hold as many as 1 quadrillion (1 million billion) separate bits of information.

33.The gastrointestinal tract is a 30-foot (9 m) tube running from your mouth to your anus.

34.Your heart will pump nearly 1.5 million barrels of blood during your lifetime, enough to fill 200 train tank cars.

35.Your heart can keep beating even if it is separated from the body because it has its own electrical impulse.

36.Your brain keeps developing until your late 40s.

37.Our lungs and nasal passages have exquisitely tiny hairs called cilia that can “taste” bitter flavors.

38.When you take one step, you are using up to 200 muscles.
Thanks: FactsSlides,
Nurseland.

08 November 2014

3டி படங்களால் குழந்தைகளின் கண்திறனில் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க
அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான
அன்செஸ் பரிந்துரைத்துள்ளது.
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள்
ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப்
பரிந்துரையைச் செய்துள்ளது.
ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே
நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக
புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம்
கிரகித்துக்கொள்கிறோம்.
ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி
அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது
அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால்
அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும்
அதிகமாக இருக்கிறது என என அன்செஸ் வாதிடுகிறது.
13 வயது வரும் வரைக்கும் பிள்ளைகள் முப்பரிமாண படங்களை குறைவாகவே பார்க்க
அனுமதிக்கப்பட வேண்டும் என உணவு, சுற்றுச்சூழல், வேலையிட ஆரோக்கியம்
மற்றும் பாதுகாப்புக்கான இந்த பிரஞ்சு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறார்களுக்கான படங்கள் அதிக அளவில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில்
வெளிவருகின்ற ஒரு காலகட்டம் இது. வீடியோ கேம்கள், தொலைக்காட்சிகள்,
கணினித் திரைகள் என்று எல்லாவற்றிலும் முப்பரிமாணத் திரை வந்துவிட்டது.
தற்போது கூடுதலான நிறுவனங்கள் முப்பரிமாணப் படங்களுக்கான கருவிகளை
உருவாக்கி வருகின்றன.
ஆப்பிள் நிறுவனம் கண்ணாடி அணியாமலேயே முப்பரிமாணப் படங்களைப் பார்க்க
உதவுகிற திரை ஒன்றை உருவாக்கி வருவதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள்
கூறுகின்றன.
முப்பரிமாணப் படங்கள் கண்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு பற்றி
குரல்கள் ஒலிப்பது இது முதல் முறை என்றில்லை.
ஏற்கனவே இத்தாலியில் இளம் பிள்ளைகள் முப்பரிமாணப் படங்களைப்
பார்ப்பதற்குரிய கண்ணாடிகளை அணிவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த
நாட்டின் சுகாதார கண்காணிப்பு நிறுவனம் எச்சரித்ததை அடுத்து இந்த
கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
நிண்டெண்டோ என்ற வீடியோ கேம் நிறுவனம் 2010ல் ஒரு புதிய முப்பரிமான
கருவியை அறிமுகப்படுத்தியபோது, ஆறு வயதுக்கும் குறைவானப் பிள்ளைகள்
அவற்றைப் பயன்படுத்தினால் அவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம் என
எச்சரித்திருந்தது.
அதேநேரம் முப்பரிமாணப் படங்களைப் பார்த்ததன் விளைவாக பார்வைத் திறன்
கெட்டுப்போனதாக தங்களிடம் புகார்கள் வந்ததில்லை என அமெரிக்க கண்திறன்
சங்கம் கூறியுள்ளது.

Source:BBC

02 November 2014

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள்
அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில்
தெளிவாகவே வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு
நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். "இது
மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ்
காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே,
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை
நோற்றார்கள்" என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை
விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும்
நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை
இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3397
நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன்
ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள்
தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான்
ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க
நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார்
நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ்
அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம்
என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.
ஆஷூரா நோன்பின் சிறப்புகள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர
வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்)
அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
நூல்: புகாரி 2006
நாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறோம். அதனை அன்றே நாம்
மறந்தும் விடுகின்றோம். நாம் பெரிதாகச் செய்த பாவங்களுக்காக மட்டும் தான்
பாவமன்னிப்புத் தேடுகின்றோம். இதனால் சிறு பாவங்கள் அப்படியே கூடிக்
கொண்டே வருகின்றன.
இது போன்ற சிறு பாவங்களை நாம் செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹ்
மன்னிக்கின்றான். இப்படிப்பட்ட நல்லறங்களில் ஒன்று தான் ஆஷூரா
நோன்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு
நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ்
ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1976
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது
கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977
அல்லாஹ் அளவற்ற அருளாளன் என்பதற்கு மேற்கண்ட செய்தியும் ஒரு சான்றாகும்.
யூதர்களுக்கு மாறு செய்வோம்
ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும்
யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு
மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக்
கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று,
நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள்,
(அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று
வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த
ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று
கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் இறந்து விட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால்,
ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1916, 1917
நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது
நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய
இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
10வது நாளும் 11வது நாளும் நோன்பு நோற்கலாமா?
சிலர் 9,10 அல்லது 10,11 வது நாள் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர்.
அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும்
மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ
நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: அஹ்மத் 2047, பைஹகீ
இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம்
பெறுகிறார். இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை
அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ்
பலவீனமானதாகும்.
முஹர்ரம் 9,10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய
செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும். எனவே, 10,11வது நாள் நோன்பு
நோற்பது கூடாது.
குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தல்
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் இது போன்ற சுன்னத்தான
நோன்புகளில் குழந்தைகளுக்கும் நோன்பு நோற்க பயிற்சி அளித்துள்ளனர்.
ருபய்யிவு பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் துôதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் 10வது) நாளன்று
காலையில் மதினா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி
(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர் தமது நோன்பைத் தொடரட்டும்.
நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய
பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர், அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள்
சிறுவர்களையும் அல்லாஹ் நாடினால் நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள்
பள்ளிவாசலுக்குச் செல்லும் போது கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை
அவர்களுக்காகச் செய்து அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்
போது, நோன்பு திறக்கும் வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த
விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
நூல்: முஸ்லிம் 1919
சிறப்பு மிக்க இந்த ஆஷூரா நோன்பை நோற்று இம்மையிலும் மறுமையிலும்
அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!


source:sltj. lk

01 November 2014

கருவில் இருக்கும் சிசுவுக்கு “இதய அறுவை சிகிச்சை” – ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை (video)

ஹைதராபாத்: இந்தியாவில் முதல்முறையாக கருவில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது இந்த புதிய முறை அறுவை சிகிச்சை.
இந்த அறுவைச் சிகிச்சை மூலம், சிரிஷா எனும் 25 வயது பெண்ணின் கருவில் இருந்த சிசுவின் இதய ரத்தகுழாய் அடைப்பு வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இடது பக்க ரத்தக் குழாய் பாதிப்பு:
சிசுவிற்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் நாகேஸ்வர ராவ் இது குறித்து தெரிவிக்கையில், "25 வார சிசுவின் இதயத்தின் இடது பக்க ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து:
அந்த ரத்தகுழாய் சுருங்க ஆரம்பித்திருந்ததால் குழந்தை பிறக்கும்போது இதயத்தின் இடது பக்கம் மிகவும் சிறியதாக இருந்திருக்கும்.
வால்வோட்டமி அறுவை சிகிச்சை:
அதனால், சிசுவிற்கு "ஃபோட்டல் ஆர்டல் வால்வோட்டமி" என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.
12 மருத்துவ நிபுணர்கள்:
இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை 12 மருத்துவ நிபுணர்கள் செய்துள்ளனர்.
பலூன் மூலமாக சிகிச்சை:
சிசுவின் 27 வது வாரத்தில் தாய்க்கும், சிசுவிற்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்ட ஊசியின் உதவியோடு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பலூன் மற்றும் கம்பியை பயன்படுத்தி சிசுவின் இதயத்தில் இருந்த ரத்த குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டது.
60 சதவீதம் குறைப்பு:
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயின் கருப்பைக்குள் இருந்த சிசுவின் இதயத்தில் இருந்த 99 சதவீத அடைப்பு 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் ஆசிரியை:
சிரிஷா அறிவியல் ஆசிரியர் என்பதால், அவருக்கும் அவரது குழந்தைக்கும் என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது எனவும் அவர் கூறினார்.
இதயதுடிப்பு அதிகரிப்பு:
அறுவை சிகிச்சைக்குப்பின் சிசுவின் உடல்நிலை நலமாக இருப்பதாகவும், சிசுவின் எடை 830 கிராமிலிருந்து 1200 கிராமாக அதிகரித்துள்ளதாகவும், ரத்த கசிவின்றி இதய துடிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.