தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

05 August 2014

மார்ச்சுவரிகள் நிரம்பின: பிஞ்சுக்குழந்தைகளின் உடல்கள்ஃப்ரீசரில்!

காஸ்ஸா: மார்ச்சுவரிகள்(இறந்த உடல்களை பாதுகாக்கும் கிடங்குகள்)
நிரம்பிவிட்டதால் இறந்தஉடல்களைபாதுகாக்க வேறு வழிமுறைகளை காஸ்ஸா
மருத்துவக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். இஸ்ரேல்ராணுவத்தின்
தாக்குதலில் சேதமடையாத கட்டிடங்கள், வாகனங்களில் குளிரூட்டும் முறைகளை
கையாண்டு அவற்றில் இறந்தஉடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஐஸ்க்ரீமை
குளிர்விக்க பயன்படும் பெரிய ஐஸ்பெட்டிகளில் பிஞ்சுக் குழந்தைகளின்
உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன. வயதானவர்களின் உடல்கள் காய்கறிகள், இதர
சாதனங்கள் பாதுகாக்கப்படும் அறைகள் மற்றும் வாகனங்களில்
பாதுகாக்கப்படுகின்றன. ரஃபாவில் உள்ள மருத்துவமனைகளில் மார்ச்சுவரிகள்
நிரம்பிவிட்டதால் இத்தகையதொரு முயற்சிக்கு மருத்துவக் குழுவினர்
தயாராகினர். நேற்று முன் தினம்இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட
அல்-கோல் குடும்பத்தைச்சார்ந்த பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் ஐஸ்
பெட்டிகளில் பாதுகாக்கப்படுகின்றன. அதேவேளையில் காஸ்ஸாவில் உள்ளமருத்துவ
சேவை மையங்கள் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பாலான மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால்
பணியாளர்கள் வரவும் இயலவில்லை. கப்ருஸ்தானங்களில் கூட இஸ்ரேல் தாக்குதலை
தொடர்வதால் மார்ச்சுவரிகளில் இறந்தஉடல்களை பாதுகாக்கும் நிர்பந்தம்
ஏற்பட்டுள்ளது.



Thanks:Popular Front of India

No comments:

Post a Comment