
இந்தகற்துண்டுகளைத் தவிர இந்த பாலஸ்தீன தேசத்தில் எதுவும் மீதமில்லை' ஜூலை எட்டாம் திகதியிலிருந்து பிணக் காடாக மாறி இருக்கும் காசா பிரதேசத்தில் சுவாசிப்பதற்காக வழங்கப்பட்ட பனிரெண்டு மணி நேரயுத்த நிறுத்தத்தில் காற்றிலே காணாமல் போயுள்ள தனது வீட்டு அழிவுகளுக்குள் நின்று புலம்புகிறார் உம்மு அஹ்மத் எனும் பாலஸ்தீன தாய் .
இறந்த சஹீதுகளின் உடலங்களை அடக்கம் செய்வது கூட அங்கு பெரும் சிரமமாக உள்ள சூழலில் இந்த திணிக்கப்பட்ட மனிதப் படுகொலைகளின் பின்னணியில் உள்ள சதி தனது காய்களை லாவகமாக நகர்த்தத் தொடக்கி விட்டுள்ளது.
காணமல் போன மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட போது இந்த கொலைகளை ஹமாஸ் இயக்கம் தான் செய்தது! என குற்றம் சாட்டியதுடன் இந்த இளைஞர்கள் எவ்வாறு இறந்து போனார்கள் எனும் மரணப் பரிசோதனை கூடசெய்யாமல் உடனடியாகவே தனது வான் வழித்தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தது. இந்த இளைஞர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்ததும், பின்னர் அதே கடற்கரையில் பிணமாக கிடப்பதும் போன்ற வீடியோ கட்சிகள் கிடைத்தும் கூட அதனை அப்படியே இருட்டடிப்புச் செய்துவிட்டு தனது கோரக் கொலைகளை இஸ்ரேல் தொடர்கிறது. இந்த திணிக்கப்பட்ட யுத்தத்தின் பின்னணியில் பாரிய சதி பின்னப் பட்டிருப்பது தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது, இது இந்த இனப் படு கொலைகளை விட பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்லாமிய உணர்வுள்ள எந்த முஸ்லிமுக்கும் மிகக் கொடூரமானது.
இந்தப் பின்னணி என்ன என்பதை சற்று நோக்குவோம். எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஜனநாயக வெற்றியை அநியாயமான சதி மூலம் கைப் பற்றிய சீசி எனும் இராணுவத் தளபதி அமெரிக்க சவு+தி அரேபிய மற்றும் இஸ்ரேலிய விசுவாசி ஆவார் இவரைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தமது மன்னர் ஆட்சிக்கு சவாலாக வரக் கூடிய ஜனநாயக வழியில் அமைந்த ஆட்சி தனது அண்;மித்த தேசமான எகிப்தில் ஆட்சிக் கதிரையில் அமர்வதை சவு+தி அரசு கிஞ்சித்தும் விரும்பவில்லை. இதற்காக அமெரிக்கமற்றும் இஸ்ரேல் ஒத்துழைப்புடன் எகிப்திய ஜனநாயக அரசினை தனது ஏnஜண்டுகளைப் பயன்படுத்தி வீழ்த்தியது நாம் அறிந்ததே. அது அத்தோடு நின்று விடாமல் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் செல்வாக்குமிக்க அறிஞர்களையும் தலைவர்களை யும் தேச விரோத குற்றச்சாடுகளுக்கு உற்படுத்திக் கொன்று குவித்தது. இதனை ஏன் இங்கு நான் குறிப்பிடுகின்றேன் என்றால் எகிப்தில் வீழ்த்தப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சகோதர இயக்கம்தான் தற்போது பலஸ்தீனமக்களின் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியில் இருக்கும் ஹமாஸ் இயக்கமாகும்.
வெளிப்படையாக பெரும் மக்கள் ஆதரவோடு அதிகாரத்தில் இருக்கும் இந்த ஹமாஸ் இயக்கமானது உயிர் வாழுமானால்; கழுத்து நெரிக்கப் பட்டுள்ள எகிப்திய சகோதரத்துவ இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கக் கூடும் என்பதோடு எதிர்கால அமெரிக்க, சவு+தி மற்றும் எகிப்;திய கூட்டு நலன்களுக்கும் சவாலாக அமைவதோடு இஸ்ரேலுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்நான்கு சதிகாரர்களும் சரியாக கணிப்பிட்டுள்ளனர்.
எனவே மக்களின் பெரும் ஆதரவோடு ஆட்சியிலிருக்கும் ஹமாஸ் இயக்கத்தை நிராயுதபாணிகளாக்கி மக்களின் படுகொலைகளுக்கான சு+த்திரதாரிகளாக கட்டமைப்பு செய்து மக்களை விட்டும் தூரப்படுத்தி நசுக்கிவிடுவதே இந்த சதிவலையின் நோக்கமாகும். ஆனால் இன்று எகிப்தில் முர்ஸி அவர்களின் ஆட்சி இருந்திருந்தால் இஸ்ரேல் இந்த வெறியாட்டத்தை ஆரம்பித்தே இருக்காது.
இந்த சு+ழ்ச்சியின் அடுத்தகட்ட நகர்விற்கு இப்போது இந்த நாசகார சக்தியினர் மிக சாதுர்யமாக காய் நகர்த்தியு ள்ளனர். பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டுத்தனமான கொலைகள் அரங்கேறி சரியாக ஒரு வாரத்தின் பின்னர் எகிப்;திய அரசு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்தது. நிபந்தனையுடனான யுத்த நிறுத்தமொன்றை அறிவிப்பு செய்து ஹமாஸ் இயக்கத்தின் கனரக ஆயதங்களையும் ராக்கெட்டுகளையும் மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதும் மற்றும் அவர்களின் கட்டுப் பாட்டிலுள்ள சுரங்க வாயில்களை அழித்து விடுவதும் இதன் பின்னர் பாலஸ்தீனத்தில் சர்வதேச பிரசன்னத்தோடு கூடிய மீள்கட்டுமானத்தை செய்வதும் என்கின்ற இஸ்ரேலுக்கு மிகவும் சாதகமான முன்மொழிவுகளை தந்திரோபாயமாக முன்வைத்தது.
இந்த முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டாலும் நிராகரித்தாலும் மீளமுடியாத பாதிப்புக்கு ஹமாஸ் இயக்கமும் பாலஸ்தீன மக்களும் உற்பட்டே ஆகுவார்கள் என்பது சிறு பிள்ளைக்கு கூட விளங்கும். ஏனெனில் இதனை ஒத்துக்கொள்ளும் போது ஹமாஸ் இயக்கத்தினர் நிராயுதபாணிகள் ஆவதோடு அவர்களது இதுகாலவரையான யுத்த தந்திரோபாய நிலைகளாகக் கருதப்படும் சுரங்கப் பாதைகள் அழிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் செத்தபாம்பிற்கு சமம்.
இந்த முன்மொழிவுகளை அவர்கள் நிராகரிக்கின்ற போது இந்த திணிக்கப்பட்ட யுத்தத்திற்கும் பாலஸ்தீன மக்களின் அழிவிற்கும் காரண கர்த்தாக்களாக உலக அரங்கில் சித்திரிக்கப்பட்டு இஸ்ரேலின் மனிதப்படுகொலைகளை இஸ்ரேலின் பாது காப்பிற்கான நடவடிக்கையாக நியாயப்படுத்த முடியும். இந்த அநீதியான உடன்படிக்கைகளை ஹமாஸ் இயக்கம் இதிலுள்ள சு+ழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு நிராகரித்தது இதனால் அவர்களது இரண்டாவது தந்திரோபாயத்தை நோக்கி இப்போது நகர்ந்துள்ளனர்.
இதற்கான இன்னுமொருபக்க ஆதாரம்தான் இந்த யுத்த நிறுத்த செயற்பாட்டில் துருக்கியின் எந்தபங்களிப்பையும் இஸ்ரேல் சவு+தி எகிப்து மற்றும் அமெரிக்க கூட்டாளிகள் விரும்பவில்லை, இன்னுமொருபடி மேலாக சென்று மேற்குக் கரையின் ஜனாதிபதியான மஹ்மூத் அப்பசினையும் தூண்டி விட்டு அவரும் இந்த எகிப்திய ஆலோசனைகளை முன்னெடுக்குமாறும் இதற்கு தான் பங்களிப்பு செய்ய முடியும் எனவும் கூற வைத்துள்ளனர். ஏனெனில் பாலஸ்தீன மக்களின் சமாதான வாழ்விற்கு மஹ்மூத் அப்பாஸ் போன்ற நடுநிலையாளர்கள், (உண்மையில் சியோனிச சதிவலைக்குள் இலகுவில் மாட்டிவிடக் கூடிய அடிவருடிகள்) தான் மிகப் பொருத்தம் என்ற தோற்றப்பாட்டை நிறுவி காசா மக்களையும் அப்பாசின் தலைமைத்துவத்துக்குள் கொண்டுவருவதற்கான சதிமுயற்சியையும் முடுக்கிவிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய தரப்பு தற்போது முன்வைத்துவரும் நிபந்தனைகள் இதற்கு தகுந்த ஆதாரமாக உள்ளன அப்டெல் மொபாஸ் என்கிற இஸ்ரேலிய இராஜ தந்திரி அண்மையில் வெளியிட்ட பத்திரிகை செய்திகள் இதனை நமக்கு உணர்த்துகின்றன.
அவர் குறிப்பிடும் போது ~பலஸ்தீன மக்களின் சாவுக்கும் பேரழிவுக்கும் ஹமாஸ் இயக்கமே காரணமாகும்”.
பாலஸ்தீன மக்கள் ஹமாஸ் இயக்கத்தை விட்டு தூரமாக்கப்பட்டால் இவர்களின் மறுவாழ்விற்கும் அபிவிருத்திக்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்க சவு+தி அரசும் ஐக்கிய அரபு இராச்சியமும் தயாராக உள்ளன' என சுட்டிக் காட்டுகிறார். சவு+தி அரசு சார்பாக கருத்துத் தெரிவுக்கும் அளவிற்கு இந்த உறவு உள்ளது என்றால் இந்த அரசுகளோடு எந்த அளவில் இஸ்ரேல் தொடர்புடனுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.
இன்னொருபுறம் ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக சித்திரிக்கும் பணியில் மேற்கத்தேய மற்றும் சவு+திய அடிவருடிகள் மற்றும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் காட்டிவரும் முனைப்பும் இதனை நமக்கு நன்கு உணர்த்துகின்றன. இந்தப் பணிக்காக இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களில் யுத்த அறைகள் (றுயச சுழழஅள) எனும் தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்கள் இரவுபகலாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்காக இவர்கள் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் எட்டு இஸ்ரேலிய நாணயங்;கள் ஊதியமாக வழங்கப்படுகின்றன, நாற்பது மொழிகளில் அனைத்து சமூக ஊடகங்களிலும் மற்றும் வலைத்தளங்களிலும் வரும் பாலஸ்தீன ஆதரவு செய்திகளுக்கு மறுப்புகளை எழுதுவதோடு, முஸ்லிம் பெயர்களில் பல காட்டுரைகளையும் கருத்துரைகளையும் எழுதுவதுடன் ஹமாஸ் என்பது முஸ்லிம் விரோத பயங்கரவாத இயக்கம் என்பதனை வலியுறுத்தி அதற்கான போலியான நியாயங்களை சித்திரித்து முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் பரப்புவதே இவர்களுக்கான பணி இதனை சர்வதேச ஊடகங்களில் குறிப்பாக அல்nஜசீரா செய்திகளுக்கு வரும் கருத்துரைகளில் தெளிவாக காணமுடியும்.
எத்தனை பெரிய சதிகள் எவ்வளவு அரசியல் வஞ்சங்கள், பதவிகளைப் பாதுகாப்பதற்காக இஸ்லாத்தையும் அப்பாவி உயிர்களையும் பலிகொடுக்கும் முஸ்லிம் தேசங்களது தலைமைகள், இறைவனின் கட்டளைகளை மீறி அநியாயக் காரர்களுக்கு துணைபோகும் இவர்கள் இதே அக்கிரமக் காரர்களுக்கு தாமும் இரையாகிப் போவோம் என்பதை மறந்து விட்டார்கள் ஆனால் வரலாறு எனும் சக்கரம் இந்த பாடத்தை நமக்கு தெளிவாக போத்தித்துக் கொண்டே இருக்கிறது.
ஆயினும் இந்த அத்தனை சதிகளையும் புரிந்து கொண்டு மக்களின் பேராதரவோடு ஹமாஸ் போராடி வருகிறது, பாலஸ்தீனத்தில் அவர்களது அஸ்தமனம் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் உழைப்பின் பெரும் தியாகங்களின் அறுபது வருட போராட்டத்தின் முஸ்லிம் சமூக அரசியல் எழுச்சியின் நம்பிக்கைகளை மூர்ச்சையுறச் செய்யும். இதிலிருந்து விடுபட முஸ்லிம் சமுகத்திற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு என்ன முகாந்திரம் உள்ளது.
thanks:thinakaran





No comments:
Post a Comment