காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைக்
கண்டித்து நேற்று கொழும்பு,
மாளிகாவத்தை பிரதேசத்திலிருந்து பஞ்சிகாவத்தை பகுதி
வரையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் ஆர்ப்பாட்டம்
ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த
இடத்துக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர்
கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட ஒரு குழுவினர் சென்றதாகவும்
அதன் போது பொலிஸார் இரு தரப்பினரிடமும் சுமுகமாகப்
பேசி அமைதியான முறையில்
அவ்விடத்திலிருந்து அனுப்பி வைத்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்தது. பொதுபலசேன, சிஹலராவய, தெவ்ஹீத் ஜமாத் அமைப்புகளால் கோட்டை,
புறக்கோட்டை பிரதேசங்களில் நேற்று நடாத்த
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும்
கூட்டங்களுக்கு பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான்
நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்
தடை உத்தரவு ஒன்றினை பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத்
ஜமாத், குறித்த ஆர்ப்பாட்டத்தை மாளிகாவத்தையில்
நேற்று நடத்தியது. பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான
தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால்
ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க ஏற்பாடு செய்திருந்த
போது பொதுபலசேன அமைப்பினர் உலகில் எங்குமே இடம் பெறாத
வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஓர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க
முயற்சித்ததனையடுத்து பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப்
பெற்று கொழும்பு கோட்டை, புறகோட்டை பிரதேசங்களில்
ஆர்ப்பாட்டம் செய்வதனைத் தடுத்தாகவும்
அதனை அடுத்தே இப்பிரதேசத்தில் தாங்கள்
நேற்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தாகவும் இதில் சுமார் 10,000
பேர் கலந்து கொண்டதகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணைச்
செயலாளர் ரஸ்மின் தெரிவித்தார்.
ஐ. நா ஈரான், ஈராக் யுத்தங்களின்
போது தமது படைகளை அனுப்பியது போல் இஸ்ரேலுக்கும்
படைகளை அனுப்பி இந்த யுத்ததை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்,
நவனீதன் பிள்ளை இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும்
விசாரணை போன்றே இஸ்ரோலில் இடம் பெறும்
செயற்பாடுகளுக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், இலங்கை
அரசு இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும்
துண்டிக்கவேண்டும் எனவும் இலங்கையில் உள்ள இஸ்ரேல்
நலன்புரி நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும்
தமது கோரிக்கைகளை இவ்வார்பாட்டதில் முன்வைத்தாகவும்
தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஞானசார தேரர் உட்பட ஒரு குழுவினர்
இரு ஜீப்வண்டிகளில்
வந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கூறியதாகவும் அதன்
போது பொலிஸார்
தலையிட்டு அவர்களை திருப்பி அனுப்பியதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார். சட்ட ஆட்சி அமுலில் உள்ள ஒரு நாட்டில் சாதாரணமான இவ்வாறான
அமைப்புகள்
வந்து இவ்வாறு தமது அழுத்தங்களை பிரயோகிப்பது கவலைக்குரிய
விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
video-
http://tinyurl.com/kuljy96
Thanks:metro news
No comments:
Post a Comment