அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலிஸில் நகரில் நிலத்தடியில் சென்ற
பெரிய தண்ணீர்க் குழாய் உடைப்பெடுக்க நடுவீதியில் ராட்சத
நீரூற்று உருவானது. மூன்றரை மணி நேரங்கள் கழித்தே நீர்வரத்தை நிறுத்த முடிந்ததால்
அந்த வட்டகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
Thanks:BBC
ஊர் செய்திகள்
date
31 July 2014
காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் கொய்தா கொடிகளுடன் நடந்தபோராட்டத்தால் பரபரப்பு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காஸா மீதான
இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இஸ்ரேலைக்
கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்
கொய்தா உள்ளிட்ட அமைப்புகளின் கொடிகளுடன் இளைஞர்கள்
முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் தனிநாடு கோரும்
இயக்கங்கள், பாகிஸ்தானுடன்
இணைய கோரும் இயக்கங்கள் என பல்வேறு அமைப்புகள்
செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த மாதம் அல்கொய்தா அமைப்பு வெளியிட்ட
வீடியோ ஒன்றில், ஜம்மு காஷ்மீர் விடுதலைக்கான
ஜிஹாத்தை இளைஞர்கள் தொடங்க வேண்டும்
என்று அழைப்பு விடுத்திருந்தது. இதேபோல் ஈராக்கில்
செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பும் காஷ்மீர் விடுதலைக்கான
ஜிஹாத்தை ஆதரிக்கிறது. இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் 3 வார
காலத்துக்கும் மேலாக கொடூர
தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான
அப்பாவிகளை பலி கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள்
தங்களது சொந்த வாழ்விடங்களை விட்டு அகதிகளாக
வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலின் வெறியாட்டத்துக்கு எதிராக உலகம்
முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன,
காஷ்மீரில் நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரிலும் நேற்று முன்தினம் ரமலான் பெருநாள்
தொழுகை முடிந்த பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது சில
இளைஞர்கள் முகங்களை மூடிக் கொண்டு ஈராக்கின்
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின்
கொடியை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். அதேபோல் அல் கொய்தா
இயக்கத்தின் கொடியையும்
ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் "ஐ.எஸ்.ஜே.கே" என்ற பதாகையையும்
ஏந்தி இளைஞர்கள்
ஆர்ப்பாட்டம் நடத்தியது பாதுகாப்பு படையினரை பெரும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
Thanks:oneindia

30 July 2014
காசாவை காப்பாற்றுங்கள்- மொயின் அலியின் ரிஸ்ட்பேண்டுக்கு தடை விதித்த நடுவர்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட்
சவுத்ஆம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று போது தீவிரவாத இஸ்ரேலியயூத
தீவிரவாதிகளால் அழிந்து வரும் காசா வுக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின்
ஆல்ரவுண்டர் மொயின் அலி தனது கையில் (Wristbands) அணிந்திருந்த ரப்பர்
பேண்டில் காசாவை காப்பாற்றுங்கள் (Save Gaza),
பாலஸ்தீனத்திற்கு விடுதலை (Free Palestine)
என்று எழுதப்படிருந்தது.
இதை அணிவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும்
போட்டி நடுவருமான டேவிட் பூன் தடை விதித்தார்.
''மொயின் அலி எழுதியிருந்த வாசகம் மனிதநேயத்தை குறிக்குமே தவிர, இது
அரசியல் அல்ல. முதல்
உலகப்போர் தொடங்கிய 100-வது வருடத்தை நினைவுபடுத்தும்
வகையில் போரில் பங்கேற்ற வீரர்கள் நினைவாக தொண்டு நிறுவனத்தின்
லோகோ பொறித்த ஆடைகளை இங்கிலாந்து வீரர்கள் அணிய இருந்தார்கள்''
என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
தனது விளக்கத்தை கூறியது. சர்வதேச போட்டிகளில் அரசியல், மதம், இன
நடவடிக்கைகள் போன்ற
வாசகங்கள் இடம்பெறக் கூடாது என்று ஐ.சி.சி.
விதிமுறை கூறுகிறது.
இதுகுறித்து மொயின் அலி கூறும்போது ''இதுபோன்று ரிஸ்ட்பேண்ட்
அணிய நடைமுறை இல்லை. இனிமேல் இதுபோல்
அணியக்கூடாது என்று போட்டி நடுவர் எச்சரித்தார்'' என்றார்.
Thanks:
www.maalaimalar .com
www.adiraipirai .in

மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: மணப்பாக்கத்தில் இருந்து முகப்பேருக்கு 8 நிமிடத்தில் சென்ற இதயம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
செய்யப்பட்டதால், 6
பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மணப்பாக்கத்தில்
இருந்து முகப் பேருக்கு 8 நிமிடங்களில் அவரது இதயம்
கொண்டு செல்லப்பட்டது. சென்னை பாடி புதுநகரைச் சேர்ந்தவர் எல்.ஷீபா (22). சோழிங்க
நல்லூரில் உள்ள ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கடந்த 27ம் தேதி மாலை 5.30 மணிக்கு அவர் அசோக் பில்லரில்
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

காஸா: இஸ்ரேலிய தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர்உயிரிழப்பு
நேற்றைய தினம் காஸா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களால் 100
பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் கடந்த மூன்று
வாரங்களாகதொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களினால் உயிரிழந்தோர் தொகை 1200 ஆக
உயர்ந்திருப்பதாக பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸா
பகுதிக்கெனவிருந்த ஒரேயொரு மின்பரிமாற்ற நிலையமும் சேதமடைந்துள்ள
நிலையில் வைத்தியசாலைகள் மற்றும் நீர் வசதிகளும்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள்
தெரிவிக்கும் அதேவேளை யுத்த நிறுத்தம் குறித்த இழுபறியும் தொடர்கிறது.
காஸா மீது திணிக்கப்பட்டிருக்கும் தடைகள்நீக்கப்படாமல் யுத்த நிறுத்தம்
எனும் பேச்சுக்கே இடமில்லையெனஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளஅதேவேளை
இஸ்ரேலுக்குள் நுழையக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள
சுரங்கப்பாதைகளைத் தகர்ப்பதற்கான தமது நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேலிய
தரப்பும் அறிவித்துள்ளது. இதுவரை 53 இராணுவத்தினரை இழந்துள்ளதாக இஸ்ரேலிய
இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் "நாங்கள் மரணத்தைஎதிர்பார்த்தே
காத்திருககிறோம்" அவர்கள் மரண குழிக்குள் வருவதை எதிர்பார்த்தே வர
வேண்டும்எனஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும், யுத்த நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் மறுபுறத்தில்
தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் இடம்பெற்ற
தாக்குதல்களில் மாத்திரம் நான்கு பள்ளிவாசல்கள்
தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Source:http://www. sonakar.com/?p=22076

26 July 2014
-தாத்தாரியர்களைத்-தோற்கடித்த-காஸா-இஸ்ரேல்-சிக்கியுள்ள-பொறி
-அப்துல் மலிக் அபூபக்கர்-
ஆக்கிரமிப்பாளன்- ஆக்கிரமிக்கப்பட்டவன் ஆக்கிரமிப்பாளன் யார்? என்பதை
மீள் நினைவுபடுத்த வேண்டிய ஓர் அவசியத்தைகாஸா மீதானபுதிய அத்துமீறல்
தோற்றுவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஆக்கிரமிப்பு இடம்பெறுவது போன்று,
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு நிலைப்பாடுகளைத் தோற்றுவித்து, உலகின்
கவனத்தை வேறு திசைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றது. இங்கு பலஸ்தீன
தேசிய முன்னெடுப்புக்கான நிறுவனத்தின்தலைவர்கலாநிதி முஸ்தபா அல்பர்கூஸி
சிறப்பான ஓர் உதாரணத்தின் மூலம் ஆக்கிரமிப்பாளனை மீண்டும்
அடையாளப்படுத்தியுள்ளார். 1940- 1944 காலப் பகுதியில் வட பிரான்ஸை நாஸி
ஜேர்மனி ஆக்கிரமித்து, புரிந்த அட்டூழியங்களை உலகமே அறியும். நாஸி
இராணுவத்தைஎதிர்த்து பிரான்ஸின் கிராமப் புறங்களில் Maquis எனும்பேரில்
போராட்டக் குழுக்கள் தோன்றின.பின்னர், அனைத்துசுதந்திர போராளிகளும்
கூட்டாக French Forces of Interior எனும் பேரில் நாஸி இராணுவத்தை
பிரான்ஸிலிருந்து வெளியேற்றின.

18 July 2014
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH 17;சிதறிக் கிடக்கும் சிதிலங்கள்
நேற்று( 17.7.14) மலேசியன் ஏர்லைன்ஸின் போயிங் 777 ரக
விமானம், உக்ரைனின் டோனியேஸ்க் பிரதேசத்திலுள்ள,
கிராபோவோ எனும் இடத்தில் நொறுங்கி விழுந்தது.
இது குறித்து ஒரு சர்வதேச விசாரணைத் தேவை என உலகக்
தலைவர்கள் கோரியுள்ளனர். அந்த விமானத்தில் இருந்த 298 பேரும்
உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன்
கூறுகிறது. இச்சம்பவத்தை அடுத்து உக்ரைன்-
ரஷ்யா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. நொறுகி விழுந்த இந்த
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம் எச் 17ல்
இருந்த 298 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம்
நொறுங்கி விழுந்த இடத்தில், சிதறிக் கிடக்கும் சிதிலங்கள். இந்தச்
சிதிலங்களில் கை கடிகாரம் ஒன்றும், பிரேஸ்லெட் ஒன்றும்
அடங்கும். மேலும் உடற்பகுதிகள், உடமைகள் ஆகியவற்றை தேடும்
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரோஸ்பைன் எனும்
கிராமத்துக்கு அருகில், அந்த விமானம் நொறுங்கி விழுந்த
இடத்தில் தேடுதல் நடவடிக்கையில், பணிக் கடமையில் இல்லாத
காவல்துறையினர், நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் உட்பட பலர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த கிராமத்துக்கு மேலாகத்தான் அந்த விமானம்
வெடித்து, எரிந்து, நொறுங்கி விழுந்தது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில்,
கிளர்ச்சியாளர்களின்
கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், நொறுங்கி விழுந்த
விமானத்தில் இருந்தவர்களின் உடல்களை தேடும்
பணி தொடருகிறது. அந்த விமானத்தின் முக்கிய சமிஞ்கைகள்
மற்றும் உரையாடல்கள் அடங்கிய கறுப்புப் பெட்டிகளில்
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமபவத்துக்கு ரஷ்யாவும்,
உக்ரைனும் ஒருவர் மீது ஒருவர்
குற்றஞ்சாட்டுகின்றனர்.
Source:bbc

295 பேருடன் மலேஷிய விமானம் யுக்ரெய்னில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
July 17; மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று யுக்ரெய்னில்
விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 295
பயணிகள் இருந்தனர். இந்த விமானம்
ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த
வழியில் இப்படி நடந்திருக்கிறது. தனது விமானத்துடனான (எண் எம்எச்17)
தகவல்தொடர்பு அனைத்தும்
துண்டிக்கப்பட்டுவிட்டதாக மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம்
தெரிவித்திருக்கிறது. கடைசியாக அந்த விமானத்துடனான தகவல்
தொடர்பு என்பது அந்த விமானம் யுக்ரெய்ன் வான்பரப்பில்
பறந்துகொண்டிருந்தபோதுதான் இருந்தது என்று மலேஷியன்
ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது.
யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில்
கிழக்கு யுக்ரெய்னில் இந்த விமானம் தரையில் எரிந்ததை கண்டதாக
மாஸ்கோவில் இருக்கும் வான்வழி கண்காணிப்பு அதிகாரி ஒருவர்
தம்மிடம் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம்
கூறியிருக்கிறது. அந்த குறிப்பிட்ட விமானம் ரஷ்ய
வான்பறப்பிற்குள் நுழையவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்ததாகவும்
அந்த செய்தியில்
கூறப்பட்டிருக்கிறது. இந்த விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் ஏவுகணை மூலம்
தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சரின்
ஆலோசகர் ஆண்டன் ஹெரஷெங்கோ தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ்
செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் காரணமா?
கிழக்கு யுக்ரெய்னில் யுக்ரெய்ன் ராணுவ விமானங்கள்
ஏவுகணைதாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த
பிராந்தியத்தில் தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள்
யுக்ரெய்னிய
அரசை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள். இந்த விபத்து
குறித்து தமக்கு தெரியவந்திருப்பதாக கூறும்
பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம், என்ன
நடந்தது என்பது குறித்து விசாரித்துவருவதாகவும்
தெரிவித்திருக்கிறது. முன்னதாக யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில்
ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த
போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தது. யுக்ரெய்னிய
ராணுவத்துக்கு சொந்தமான எஸ்.யு 25 ரக விமானம்
ஒன்று புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால்
விமானி வெளியே குதித்து விட்டார் என்றும், அவர்
காயமின்றி மீட்கப்பட்டார் என்றும் யுக்ரெய்னிய
பாதுகாப்பு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர்
கூறினார்.
ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து ஒரு யுக்ரெயினிய கிராமம் ஒன்றில்
க்ராட் ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது போல காட்டும் amateur
வீடியோ காட்சிகளை யுக்ரெயினிய ஊடகங்கள் காட்டின. இந்த காட்சிகளை
பிபிசியால் முழுமையாக உறுதிப்படுத்த
முடியவில்லை. கிழக்கு யுக்ரெயினில் பிரிவினைவாதிகளுக்குத் தான்
உதவி செய்வதாகக்
கூறப்படுவதை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது. 10,000 அடி
உயரத்தில் பறக்கும் விமானத்தை எதனால்
சுட்டு வீழ்த்த முடியும்? இதேவேளை 10,000 அடி உயரத்தில் பறக்கும்
ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தவேண்டுமானால் அது தொலைதூரம்
பறக்கவல்ல நிலத்தில் இருந்து வான்வெளிக்கு ஏவக்கூடிய
நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையால் மட்டுமே சாத்தியம்
என்றும், அதுவும் கூட அத்தகைய ஏவுகணை ராடார் உதவியுடன்
வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை நிபுணர் ஒருவர்
பிபிசியிடம் தெவித்தார். அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த
விமானமானது மனிதர்கள் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய
மேன்பேட் என்கிற ஏவுகணைத்தாக்குதல் மூலம்
சுட்டு வீழ்த்தப்பட்டிருக்காது என்று கருதப்படுகிறது.
ஏனென்றால் அத்தகைய குறுகிய தூர ஏவுகணையின் வீச்சு விமானம்
பறந்துகொண்டிருந்த உயரத்த்க்கு செல்லாது என்று மதிப்பிடப்படுகிறது. இவை
தவிர வானிலிருந்தபடியே ஏவப்பட்டு தாக்கக்கூடிய
ஏவுகணைகளை ஏற்றிச் சென்ற ராணுவ தாக்குதல் விமானத்தினால்
மட்டுமே இந்த விமானம் தாக்கப்பட்டிருக்க முடியும் என்றும்
கூறப்படுகிறது. இதில் எந்த
ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கிறது அல்லது எப்படி இந்த
விமானம் வீழ்ந்து நொறுங்கியது என்பதை அமெரிக்காவின் வசம்
இருக்கும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டறிய முடியும்
என்று நம்பப்படுகிறது. நிலத்தில் இருந்து வான் நோக்கிச் சென்று தொலைதூர தாக்குதல்
நடத்தப்படும்போது அத்தகைய ஏவுகணைகள் வெளி உமிழும் புற
ஊதாநிற புகையை இந்த செயற்கைக்கோள்களின் படங்கள்
காட்டிக்கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
Source;bbc

09 July 2014
பெரும் விமான விபத்தைத் தவிர்த்த விமானி (வீடியோ)
பார்சிலோனா விமான நிலையத்தில் விமானம் தரையிரங்கும் போது மற்றொரு
விமானத்தை நோக்கிச் சென்றதைக் கவனித்துச் சாமர்த்தியமாக, பெரும் விபத்து
நேராமல் விமானியால் தவிர்க்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை
ரஷ்யாவின்மாஸ்கோவிலிருந்து, யூ.டீ. ஏர் விமான நிறுவனத்தின் போயிங்
767-300 ரக விமானம் ஒன்று பார்சிலோனாவின் எல் பரட் விமான நிலையத்தில்
தரையிரங்கிக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாரத விதமாக ஏய்ரோலினா
அர்ஜெண்டினா நிறுவனத்தின்ஏல்ர்பஸ் ஏ340-300 ரக விமானம்ஒன்றுஒடுபாதை
நோக்கி வந்துகொண்டிருந்தது. அதைரஷ்ய விமானிகள் கண்டுகொண்டனர்.
இருப்பினும் ரஷ்யா விமானிகள் விமானத்தைத் தரையிரக்க எத்தனிக்கையில்
மேலும் அதிர்ச்சியாக ஏய்ரோலினா அர்ஜெண்டினாவின் ஏர்பஸ் விமானம் ஒடுபாதையை
வேகமாக கடக்க முயன்றது.
அதைக் கண நேரத்தில் உணர்ந்த ரஷ்யா விமானிகள், சமயோஜிதமாக தங்கள் போயிங்
விமானத்தை மேல் எழச் செய்தனர். சற்று தாமதித்திருந்தால் இரண்டு
விமானங்களும் மோதியிருக்கும். பின்னார் ரஷ்ய விமானம் 2ஆம் ஒடுபாதையில்
பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பின்னார் ஏய்ரோலினா
அர்ஜெண்டினாவின் விமானமும் பறந்து சென்றது. ரஷ்ய விமானிகளின் சமயோஜித
நடவவடிக்கையால் பெரும் உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டன.
நன்றி: -Webdunia
-youtube

06 July 2014
ISIS கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை :இந்தியா திரும்பிய நர்ஸ்கள் பேட்டி
இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கித் தவித்த இந்திய
நர்ஸ்கள் 46 பேர் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஏர்
இந்தியா விமானம் மூலம் கொச்சி விமான நிலையம்
வந்தடைந்த கேரளத்தைச் சேர்ந்த சாண்ட்ரா செபாஸ்டின் கூறுகையில்:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதிதான் இராக் சென்றேன்.
திக்ரித் அரசு பயிற்சி மருத்துவமனையில் பணியாற்றிய
எனக்கு கடந்த 4 மாதங்களாகவே ஊதியம் வழங்கப்படவில்லை. அந்த
மருத்துவமனையில் நாங்கள் 23 பேர் மட்டுமே இருந்த
நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எங்களுடன் மேலும் 15 பேர்
சேர்ந்து கொண்டனர். திக்ரித் நகர் கிளர்ச்சியாளர்கள் பிடியில் சென்ற பிறகு அந்த
மருத்துவமனையில் சிக்கியிருந்த நாட்களில்,
பலமுறை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள்
எங்களை வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும்
இந்திய தூதரகம் அந்த இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என
தெரிவித்திருந்ததால் நாங்கள் வெளியேறவில்லை. ஆனால், 3-ம் தேதி எங்களை
சுற்றிவளைத்த கிளர்ச்சியாளர்கள் 15 நிமிடத்தில்
நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என
நிர்பந்தப்படுத்தினர். நீங்கள் அனைவரும் எங்கள் சகோதரிகள்.
உங்களை நாங்கள் தாக்க மாட்டோம் என்றனர். ஆனாலும்
எங்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை பிறக்கவில்லை.
கட்டாயப்படுத்தி 4 பேருந்துகளில் நாங்கள் ஏற்றப்பட்டோம். திக்ரித்தில்
இருந்து மோசுல் நகர் செல்ல 7 மணி நேரம் ஆனது.
இனி ஒருபோதும் இராக்கிற்கு திரும்பிச் செல்ல மாட்டோம் என்றார். இராக்கில்
இருந்து திரும்பிய நர்ஸ்கள் பலரும்
இதையே தெரிவித்தனர். இராக்கில் நிலைமை சீரடைந்தாலும்
அங்கு செல்லும் எண்ணம் இல்லை என்றனர். எர்ணாகுளத்தைச் சேர்ந்த
பாலகிருஷ்ணன் கூறுகையில்: என் மகள்
ரேணு கடந்த ஆகஸ்டில் தான் இராக் சென்றாள்.
அவளை அங்கு அனுப்பி வைக்க 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றேன்.
ஆனால் கடந்த 3 மாதங்களாக அவளால் பணம் அனுப்ப முடியவில்லை என
வேதனையுடன் தெரிவித்தார். கோட்டயத்தைச் சேர்ந்த மெரீனா 11 மாதங்களுக்கு
பின்னர் தன் மகள்
ரியாவையும், மகன் மெரினையும் கட்டித் தழுவினார். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள்
எங்களை துன்புறுத்தவில்லை என தெரிவித்தார்.
கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை:
கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை. அவர்கள்
நோன்பு இருந்த போதுகூட எங்களுக்கு உணவு அளித்தனர்.
அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கேரள
மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நர்ஸ் மெரீனா ஜோஸ் 'தி இந்து' ஆங்கில
நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
உயிருடன் மீண்டு வருவோம் என நாங்கள்
ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. எங்களை பத்திரமாக மீட்க
உதவிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக மத்திய, மாநில
அரசுகள், அதிகாரிகள், ஊடகத்தினருக்கு நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன் என தெரிவித்தார். இந்தியா திரும்பியுள்ள 46 நர்ஸ்களில் 45 பேர் கேரள
மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழகத்தின்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
Source: தி இந்து

02 July 2014
புதிய ‘இஸ்லாமிய தேச’த்தில் முஸ்லிம்கள் குடியேற ISIS.கலீபா அல் பாக்தாதி அனைத்து உலக முஸ்லிம்களுக்கும் அழைப்பு.
சிரியா- ஈராக் நகரங்களை இணைத்து தாங்கள் உருவாகியிருக்கும்
புதிய இஸ்லாமிய தேசத்தில் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள்
வந்து குடியேற வேண்டும் என்று அதன் கலீபாவாகிய அபு பக்ர் அல்
பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி
முஸ்லிம்களின் ஆயுதப்படையான
ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன் இந்த
நகரங்களை ஒருங்கிணைத்து புதிய இஸ்லாமிய தேசம்
என்ற தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இதன் கலீபாவாக
(தலைவராக) அபு பக்ர் அல் பாக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்
அபு பக்ர் அல் பாக்தாதி வெளியிட்டுள்ள
ஆடியோ செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் எங்கும் வாழும்
முஸ்லிம்கள் ஈராக் மற்றும்
சிரியாவுக்கு வந்து புதிதாக உருவானதாக
அறிவிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசை பலப்படுத்த வேண்டும். இந்தப் புதிய இஸ்லாமிய
நாட்டுக்கு வந்து குடியேறுவது என்பது முஸ்லிம்களின்
"கடமை". நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும்
நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய
தேசத்துக்கு வரவேண்டும். சிரியா , சிரியர்களுக்கு மட்டுமானதல்ல, ஈராக்,
ஈராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல, முஸ்லிம் மக்களே உங்கள்
நாட்டுக்கு விரைந்து வாருங்கள். அல்லாஹ் காட்டிய வழியில் நமது புனிதப்
போரை நடத்துவதைத்
தவிர இந்த புனிதமான ரமலான் மாதத்தில் செய்யக்கூடிய
புனிதமான பணி வேறு எதுவுமே இருக்கமுடியாது, எனவே இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி உங்கள் தூய்மையான
முன்னோர்களின் வழியில் செல்லுங்கள் இவ்வாறு அல்
பக்பாக்தாதி தமது ஆடியோ செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.
Source:
-madawalanews
-bbc

Subscribe to:
Posts (Atom)