தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

20 September 2011

முதன் முதலாக சூரிய ஒளியைப் பார்த்த குரங்குகளின் ஆனந்தம் (வீடியோ இணைப்பு)






இதுவரை வெளி உலகமே தெரியாமல் மருத்துவ பரிசோதனை கூடத்தில் வளர்ந்து வந்த குரங்குகள் முதன் முதலாக சூரிய ஒளியைக் கண்டு மகிழ்ச்சியில் குதிக்கும் தருணத்தை ஜேர்மனிய தொலைக்காட்சி ஒன்று வீடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்துள்ளது.











அண்மையில் இவ்வாறு மருத்துவ பரிசோதனைக்காக அடைக்கப்பட்டுள்ள குரங்குகளை சுதந்திரமாக நடமாட விடவேண்டும் என பல தரப்புக்களிடமிருந்து எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார்கள்.

எது எவ்வாறாயினும் வெளியில் வந்ததும் கட்டித் தழுவி தங்களுக்குள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி நெகிழ வைக்கிறது.
நன்றி. மனிதன்.com08 Sep 2011




ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அனுராதபுரமாவட்டத்தைச் சேர்ந்த கெக்கிராவ முஸ்லிம் வித்தியாலய மாணவன் மொஹமட் நளீம் ஸகீ அஹமட் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் மூவர் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். அதில் ஸகி அஹமட் தமிழ் மொழிமூலம் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

மற்றைய இருவரும் சிங்கள மொழி மூலம் தோற்றியவர்களாகும். களுத்துறை மகளிர் கல்லூரி மாணவியான ஒசாதி ரஷி பிரபா பொன்சேகாவும் மற்றவர் களுத்துறை தொடங்கொட, மிரிஸ்வெல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கே.டி.வி.நெத்மி ரணவீர ஆகியோராவர்.

இதற்கு அடுத்தபடியாக 194 புள்ளிகளை இருவர் பெற்றுள்ளனர். ஒருவர் விஸ்வமடு மேற்கு நெத்தலியாரு வித்தியாலயத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் சேதுராமன் என்பவரும் பிபிலை,மெதகமவைச் சேர்ந்த இசான் லசிந்தசத்சர என்பவருமாவர்
நன்றி .வீரகேசரி இணையம் 9/15/2011 5:37:48 PM

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை ஆயிரத்தால் அதிகரிப்பு _

 சவூதி அரேபியாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான ஒதுக்கீட்டு எண்ணிக்கை ஆயிரத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜெத்தாவில் உள்ள அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் ஆதம் பாவா தெரிவித்துள்ளார்.

இதன் படி எதிர்வரும் வருடத்திற்கான இலங்கை ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 3800 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை முதற் தடவையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இம்முறை முன்னுரிமை வழங்கப்படுமென அமைச்சர் எ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.

மேலும் இம்முறை 5000 யாத்திரீகர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முதற்கட்ட யாத்திரீகர்கள் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி சவூதி அரேபியாவைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
__

நன்றி வீரகேசரி இணையம் 9/19/2011 2:27:14 PM

18 September 2011

அளவ்வ சந்தியில் ரயில் விபத்து: பாரிய சேதம் _

  கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெலவுக்குச் சென்ற ரயில் வண்டி  அளவ்வ சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவ்விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 30 பேர் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதிவேக இன்டசிற்றி ரயில் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதனால் பெருமள விலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரிகள்  மேலும் தெரிவித்தனர். 
__

14 September 2011

பிரித்தானிய நெடுஞ்சாலையில் 120 மைல் வேகத்தில் துரத்திப் பிடித்த பொலிசார்: காணொளியைப் பாருங்கள் !

சமீபத்தில் பிரித்தானிய நெடுஞ்சாலையான M1 இல் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்றை பொலிசார் மணித்தியாலக் கணக்கில் துரத்தி இறுதியாகப் பிடித்தனர். சுமார் 5 நிமிடம் காண்பிக்கப்படும் இக் காணொளி ஏதோ விறுவிறுப்பு சினிமா படம்போல அமைந்துள்ளது. 






M1 நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற கார் ஒன்றைப் பொலிசார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது அது மிகவும் லாவகமாகத் தப்பிச் சென்றுவிட்டது. அதனைக் கோட்டைவிட்ட பொலிசார், உடனடியாக உலங்கு வானூர்தியின் உதவியை நாடியிருந்தனர். கமரா பொருத்தப்பட்ட உலங்கு வானூர்த்தி M1 நெடுஞ்சாலையில் தப்பிச் சென்ற காரை அடையாளம் கண்டு கீழே உள்ள பொலிசாருக்கு தகவல் வழங்க திரும்பவும் பொலிசார் அதனை துரத்தும் படலம் ஆரம்பமாகியது

பல குச்சி ஒழுங்கைகளூடாக தனது காரைச் செலுத்துவதும் பின்னர் நெடுஞ்சாலையில் ஏற்றி காரை 120 தொடக்கம் 130 மைல் வேகத்தில் செலுத்துவதுமாக இருந்த அந்த வாகன ஓட்டுனருக்கு ஒரு விடையம் தெரியாமல்போய்விட்டது. அதாவது வானத்தில் தன்னை பொலிசாரின் ஹெலிகாப்டர் துரத்துவது அவருக்கு தெரியாது. ஒரு முறை பொலிசார் கிட்ட நெருங்கும்போது நெடுஞ்சாலையில் எதிர் திசையாகக் காரை ஓட்டி சாகசம் கூடப் புரிந்துள்ளார் இந்த ஓட்டுனர். இவரைப் பொலிசார் மடக்கிப் பிடித்தார்களா இல்லை கோட்டைவிட்டார்களா என வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 
19 Aug 2011
நன்றி manithan.com

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.

இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.

அத்தளம் www.soovle.com

இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.

இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.

மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும். _

நன்றி
வீரகேசரி இணையம் 9/5/2011 11:41:30 AM