தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

23 December 2017

டிசம்பர் 31 வரை அவகாசம்


வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம்செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களுக்கு 2017 திசெம்பா 31ம் திகதிக்குப் பின்னா அனைத்து வங்கிகளினாலும் கொடுப்பனவு செய்யப்படமாட்டாது.









சிந்தித்துப் பாருங்கள் நீங்களும் மக்களின் பணத்தை வீணடிப்பவரா?

நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்துதல்,மாற்றம் செய்தல்
அல்லது உருச்சிதைத்தல் போன்றவை குற்றமாகக் கருதப்படுவதுடன்
 அச்செயல்களுக்கு சிறைத்தண்டனை,தண்டப்பணம் அல்லது இரண்டும்
 விதிக்கப்படலாம்.
 இவ்வாரான நாணயத்தாள்கள் 2017 டிசம்பர் 31ம் திகதிக்குப்பின்னர்
 எந்த ஒரு வங்கியினாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.உங்களிடம்
 உள்ள இவ்வாரான நாணயத்தாள்களை 2017 டிசம்பர் 31ம் திகதிக்கு
முன்னர் அருகிலுள்ள வர்தகவங்கிக்கிளையில் மாற்றிக்கொள்ளுங்கள்
 நீங்களும் சட்டத்தை மதிக்கும் இலங்கைப் பிறஜையாகுங்கள்.
இலங்கை மத்திய வங்கியின் இவ்வறிவித்தலை மக்கொன நியூஸ்
 வாசகர்களே உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

01 December 2017

சூறைக்காற்று; கனத்த மழை

நேற்று முன்தினம் இரவு கடும் மழை மற்றும் காற்றுடன்
ஆரம்பமான சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட எமது பாடசாலை
உட்பட ஊரின் சில காட்சிகள்

19 November 2017

கிந்தொட்ட கலவரத்தில் நாசமாக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள்

காலி கிந்தொடயில் 17ம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாயல், வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன தீ வைக்கப்பட்டும், கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியும் இருந்தன. பொலிஸார் குவிக்கப்பட்ட போதும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதனால் அப்பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10 October 2017


Azhan Haneefa

"டாக்டர் ரயீஸின் முஸ்லிம்களுக்கான, முக்கிய அறிவுறுத்தல்கள்" பிள்ளை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு தூரம் தமது பிள்ளைகளுடன் தொடர்பு படுகின்றனறோ அந்த அளவிற்கு அது நன்மை பயக்கும், கார்ட்டூன்...


08 October 2017

மக்கொனை உட்பட சில பிரதேசங்களில் 09 மணி நேர நீர்வெட்டு


அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் எதிர்வரும் 2017.10.10 ம் திகதியன்று 09 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி அன்றைய தினம் காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

பயாகலை, மக்கொனை, பேருவளை, களுவாமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை போன்ற பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்காரணமாக பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.