பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றுக் காலை மீரிகம - அம்பலன்வத்தை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்றது. சிறிய ரக லொறியொன்றுடன் ரயில் மோதியதில் லொறியில் பயணித்த இருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மைக்காலமாக பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் ஏற்படும் விபத்துகள்
அதிகரித்துள்ளதோடு இந்த வருடத்தில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 27 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 25 ஆம் திகதி அளுத்கமை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் இறந்ததோடு இந்துருவ கைகாவ ரயில் கடவையில் 26 ஆம் திகதி நடந்த விபத்தில் மற்றொருவர் இறந்தார். இந்த நிலையில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் ஏற்படும்
விபத்துகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. நாடு பூராவும் சுமார் 775 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் கூடுதல் ஆபத்துள்ள அதிக விபத்துக்கள் இடம்பெறும் 200 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் உள்ள இடங்களில் துரிதமாக பாதுகாப்பான ரயில்வே கடவைகளை இட உள்ளதாக ரயில்வே திணைக்களம்
கூறியது. பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினூடாக வாகனம் செலுத்துகையில் அவதானமாக வாகனம் ஓட்டாததாலும் அதிக விபத்துகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதிகள் கவனமாக செயற்படுவதன் மூலம் ரயில் கடவைகளில் நிகழும் விபத்துகளை மட்டுப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் கூறினர். இந்த வருடத்திலுன் மாத்திரம் இதுவரை 21 விபத்துகள் ரயில் கடவைகளில் பதிவாகியுள்ளன. இதற்கு
முன் ரயில் கடவைகளில் காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது தன்னிச்சையா, இயங்கும் மணி அடிக்கும் கடவைகள் பொருத்தி வருவதாக ரயில்வே திணைக்களம் கூறியது. புதிதாக ரயில் கடவைகள் பாதுகாப்பு முறையை நிர்மாணிக்க 640 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
நன்றி:தினகரன்
ஊர் செய்திகள்
date
29 June 2013
28 June 2013
உம்ராவுக்கான விசா விநியோகம், ஜுலை 08 இல் நிறைவு: 4 மில்லியன் விசாக்கள் இவ்வாண்டில் விநியோகம்
உம்ரா விசா விநியோகிக் கப்படும் கடைசி திகதி எதிர்வரும் ஜுலை 8 (சஹ்பான் 29) என சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி சஹ்பான் இறுதி வரை உம்ரா விசாக்களை விநியோகிக்கும் படி அனைத்து சவூதி தூதர கங்களுக்கும் அறிவுறுத் தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒசாமா நுகாலி குறிப்பிட்டார். எனினும், இந்த ஆண்டில் இது வரையில் சுமார்
நான்கு மில்லியன் உம்ரா விசாக்கள் விநியோகிக்கப் பட்டுள்ளதென சவூதி ஹஜ் அமைச்சின் தரவுகள் குறிப்பிடுகின்றன. "சவூதி அரசு இந்த செயற்பாட்டை ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுப்பது வழமையாகும்" என ரியாதில் ஹஜ் மற்றும் உம்ரா செயற்பாடுகளை முன்னெடுக்கும் பயண முகவர் ஆரிப் கன்னங்ஜி குறிப்பிட்டார். "ரமழான் காலத்தில் உம்ராஹ் விசாவை ஏற்க வேண்டாம் என்று ஒவ்வொரு ஆண்டும் நாம்
அறிவுறுத்துகிறோம்" என்றும் அவர் விபரித்தார். சஹ்பான் மாதத்தில் அனைவருக்கும் விசா விநியோகிக்கப்பட்டது என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என கன்னங்ஜி குறிப்பிட்டார். உம்ரா விசாவை பெறுவதற்கு 7 முதல் 14 தினங்கள் வரை எடுத்துக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய நாட்காட்டியின் இரண்டாவது மாதமான சபரில் ஆரம்பமாகும்
உம்ராஹ் காலம் ரமழான் முடிவுவரை நீடிக்கும். இதில் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி வரையான காலத்தில் 3.8 மில்லியன் உம்ராஹ் யாத்திரிகர்கள் சவூதியை வந்தடையவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியை விடவும் 400,000 அதிகரிப்பாகும். இந்த தகவலை சவூதி ஹஜ் அமைச்சு வெளியிட்டுள்ளது.

27 June 2013
பேருவளை மீனவர்களின் துணிகரம்
கடந்த 8.6.2013 அதிகாலை கடும் மழையுடன் ஏற்பட்ட புயல் காற்றினால் பேருவளைப் பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மரணமானார்கள். இரு மீனவர்கள் காணாமல் போயினர். 17 படகுகளில் சென்ற சுமார் 34 மீனவர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். பேருவளை மருதானைப் பகுதி முஸ்லிம் மீனவர்களின் துணிச்சலான செயல் காரணமாக
சுமார் 13 மணித்தியாலயங்கள் கடலில் தத்தளித்த சிங்கள- முஸ்லிம் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் தமது உயிரை பணயம் வைத்து கடலில் இறங்கிக் காப்பாற்றிய கூட மதிக்காமல் எம்.ஆர்.எம். இர்சாத் என்ற (28 வயதுடைய) கடற்றொழிலாளரை அனைவரும் பாராட்டுகின்றனர். 17 படகுகளையும் 34 மீனவர்களையும் காப்பாற்ற இவர் மேற்கொண்ட முயற்சியை சிங்கள
மீனவர்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர். புயல் காற்று வீசி அனர்த்தம் நிகழ்ந்த பின்னர் கடலுக்குச் சென்ற மீனவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து அவர்களது
குடும்பத்தினர்கள்
கதறி அழுதவாறு கடற்கரையை நோக்கி அணிதிரண்டனர். மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. கும்மிருட்டில் என்ன செய்வதென்று அறியாது மக்கள் கடலை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தனர். மீன்பிடிப் படகுகளில் மின் வெளிச்சம் காணப்படவில்லை.
24 June 2013
சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்க மேற்கு, அரபு நாடுகள் இணக்கம்
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு அவசர இராணுவ உதவிகளை வழங்க மேற்கு மற்றும் அரபு நாடுகள் இணக்கம் கண்டுள்ளன. கட்டாரில் சனிக்கிழமை கூடிய சிரியாவின் நட்பு நாடுகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 11 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்த இந்த கூட்டத்தில் "களத்தில் இருக்கும் எதிர்ப்பாளர்களுக்கு
தேவைப்படும் இராணுவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை வழங்க" இணக்கம் காணப்பட்டது. இந்த கூட்டத்தின் இறுதி அறிக்கையில், சிரிய யுத்தத்தில் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈராக், ஈரான் போராளிகள் தலையிட்டுள் ளதற்கும் கண்டனம் வெளியிடப் பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் சிரிய மோதலில் இதுவரை 90,000 க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வெளிநாட்டு ஆதரவு
பெற்ற தீவிரவாதிகளுடனேயே போராடி வருவதாக சிரிய அரசு கூறி வருகிறது. கடந்த சனிக்கிழமை கூடிய சிரிய நட்பு நாடுகள் குழுவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளடங்குவதோடு மறுபுறத்தில் சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. இதில் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கான இராணுவ உதவிகள்
கிளர்ச்சியாளர்களின் இராணுவ கட்டளையகத்தினூடாக விநியோகிக்க மேற்படி சிரிய நட்பு நாடுகள் இணங்கியுள்ளன. ஏற்கனவே கிளர்ச்சியாளர்களுக்கு நேரடி இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரியாவுக்கு எதிரான ஐ. நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை சீனா மற்றும் ரஷ்யா தொடர்ந்து முடக்கி வந்ததற்கு பகரமாகவே சிரிய
நட்பு நாடுகளின் குழு தோற்றுவிக்கப் பட்டது. "ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்ட தோல்வி எமது பயணத்தை நிறுத்திவிடாது" என சனிக்கிழமை கூட்டத்தில் கட்டார் பிரதமர் வலியுறுத்தினார். சிரிய கிளர்ச்சியாளர்கள் அண்மைக் காலத்தில் அரச தரப்பு தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால் தமக்கு புதிய ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும்
இது யுத்தத்தை திசைதிருப்பும் என்றும் கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமை கூறியிருந்தனர்.
Thanks:thinakaran

23 June 2013
வார இறுதி நாட்களை மாற்றும் சவுதி
சவுதி அரேபியா தனது அதிகாரபூர்வ வார
இறுதி நாட்களை வெள்ளி மற்றும்
சனிக்கிழமைகளாக மாற்றியுள்ளது. அடுத்த வாரத்தில்
இருந்து அமலுக்கு வரும் இதற்கான
உத்தரவை மன்னர் அப்துல்லாஹ்
அறிவித்துள்ளார். வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளில்
சவுதி அரேபியா மாத்திரந்தான்,
தமது வேலை வாரத்தை சனிக்கிழமை முதல்
புதன்கிழமை வரையாகப் பேணி வந்ததது. பொருளாதார வாய்ப்புக்களில் ஏற்படும்
இழப்பை சரி செய்ய இந்த மாற்றம்
தேவைப்படுவதாக மன்னர் அப்துல்லாஹ்
கூறியுள்ளார். ஓமான் இப்படியான ஒரு மாற்றத்தை கடந்த
மாதம் அறிவித்தது.
Source:bbc

Subscribe to:
Posts (Atom)