தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

24 January 2013

காது கேளாதோரின் மூளை செயல்பாடுகள் குறையலாம்

காது கேளா சிறார்கள்


கேட்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு அந்தப்
பிரச்சினை இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில்
மூளையின் திறன்கள் வேகமாகக்
குறைந்துவருகின்றன என்று அமெரிக்காவில்
நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வு கூறுகிறது. ஒருவருடை கேட்கும் திறன் குறையக் குறைய
மூளையின் இணைப்புகளில் மாற்றங்கள்
நிகழ்வதும், மற்றவர்களுடன் உரையாட
முடியாமல் போவதால் சமூக ரீதியில் அவர்கள்
தனிமைப்படுத்தப்படுவதும் மூளைத் திறனின்
வீழ்ச்சிக்குக் காரணம் கருதப்படுகிறது. ஆகவே கேட்கும்
கோளாறுகளுக்கு தாமதமின்றி சிகிச்சை
அளிப்பதன் மூலமாகவும், கேட்பதில்
உதவக்கூடிய கருவிகளை அணிந்துகொள்வதன்
மூலமாகவும் மூளைத் திறன்
பாதிப்பு ஏற்படுவதை ஒத்திப்போட முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எழுபது வயதைத் தாண்டியவர்கள் சுமார்
இரண்டாயிரம் பேரிடம் ஆறு ஆண்டுகாலம்
கேட்கும் திறன் மற்றும் மூளைத் திறன்
பரிசோதனைகளை நடத்தி ஜான் ஹாப்கின்ஸ்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த
ஆய்வை நடத்தியுள்ளனர். எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களின் மூளைத்
திறன் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக
குறைந்து வந்தது என்றாலும், கேட்புத்
திறனில் பாதிப்பு உள்ளவர்களிடம் இந்தப்
பாதிப்பு மற்றவர்களை விட மிக வேகமாக
இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளைத் திறனில்
பாதிப்பு ஏற்படுவது டிமென்ஷியா எனப்படும்
மூளை அழுகள் நோயின் ஆரம்ப அறிகுறியாக
இருக்கலாம் என ஆய்வில்
பங்கேற்றிருந்தவர்களின் ஒருவரான டாக்டர்
பிராங்க் ளின் கூறுகிறார். ஆய்வு அமெரிக்காவிலேயே கூட காது கேட்பதில்
பிரச்சினை உள்ளவர்களில் 15 சதவீதம் பேர்தான்
காது கேட்பதில் உதவக்கூடிய ஹியரிங் எய்ட்
கருவிகளைப் பொறுத்திக்கொள்கிறார்கள்.
பெரும்பாலானோர் அந்தப்
பிரச்சினைக்கு சிகிச்சை பெறாமலேயே இருந்துவிடுகின்றனர் என்று டாக்டர் லின்
பிபிசியிடம் சுட்டிக்காட்டினார். கேட்புத் திறன் பாதிப்புக்கும் மூளைத் திறன்
பாதிப்புக்கும் நேரடித்
தொடர்பு உள்ளது என்பது இதுவரை உறுதியாக
கண்டறியப்படவில்லை என்று பிரிட்டனில்
அல்செய்மர்ஸ் நோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த
டாக்டர் எரிக் கர்ரன் கூறுகிறார். ஆனாலும் மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படும்
முக்கியமான ஒரு விஷயம் இது என்று அவர்
குறிப்பிட்டார். அப்படி தொடர்பு இருப்பது
உறுதிசெய்யப்படுமானால்,
முன்கூட்டியே கேட்புத் திறன்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து
அவர்களுக்கு மூளை அழுகள் போன்ற
பிரச்சினைகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்தார்

Thanks:bbctamil

23 January 2013

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகை

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும்
கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர்
கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக்
கூறிவிஸ்வரூபம்
திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும்
வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி தி
ரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ
லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
தொடர்ச்சியாக சினிமாக்கள் மூலம்
முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்
விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும்
கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய
எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவதின் மூலம்
முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், ஒழுக்கம்
கெட்டவர்களாகவும், சித்தரித்துள்ளதுடன்
முஸ்லிம்கள் புனிதமாக கருதும் திருமறைக்
குர்ஆனையும் கொச்சைப்படுத்தி இத் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
21ம் தேதி திங்கள் கிழமை தமிழ்நாட்டில்
இயங்கும் இஸ்லாமிய
அமைப்புகளுக்கு இத்திரைப்படம்
திரையிட்டுக் காட்டப்பட்டது. விஸ்வரூபம்
திரைப்படத்தின் காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் இது வரைக்கும் எந்தத்
திரைப்படத்திலும் இல்லாத
அளவு இஸ்லாத்தையும், முஸ்லிம்களும்
கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக
தமிழகத்தின் பலம் மிகு இஸ்லாமிய அமைப்பான
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளதுடன், இந்தியாவில் எந்தவொரு திரையரங்கிளும்
இத்திரைப்படத்தை ஓட விடமாட்டோம் என்றும்
அறிவித்துள்ளது.
இலங்கையிலும் இத்திரைப்படத்தை வெளியிட
அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத்
ஜமாத் சார்பில் இலங்கை திரைப்பட வெளியீட்டுக் கூட்டுத்தாபனத்திற்கு வேண்டுகோள்
விடுக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மற்றும்
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
ஆகியோருக்கும்
இத்திரைப்படத்தை தடை செய்யும்படி கோரிக்கை வ
ிடுத்து கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 25ம் திகதி விஸ்வரூபம்
திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாக
அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையில்
கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கில
ும் இத்திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை(25-01-2013)
ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ
லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக
சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக
இன்று நடந்த ஜமாத்தின் தலைமை நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Thanks:www.virakesari.lk/article/local .php?vid=2667

22 January 2013

இணையம் ஊடான நிதி மோசடிகள் தொடர்பில் அவதானம் தேவை!

இணையத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும்
பிரமிட் முறையிலான சட்டவிரோத
நிதி மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக
இருக்கும்படி இலங்கை கணனி பயன்பாட்டாளர்களி
ன் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான
குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய மோசடிகளில் பணத்தைப் பறிகொடுத்த
பலர் தம்மிடம்
முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக
அக்குழுவின் பாதுகாப்பு பொறியியலாளர்
ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார். பிரமிட் முறையிலான நிதிச்
சேகரிப்பு திட்டங்களை மத்திய
வங்கி தடைசெய்துள்ள போதிலும் சில குழுக்கள்
இணையம் ஊடாக இதனை மேற்கொண்டு வருவதாக
ரொஷான் சந்ரகுப்த குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இம் மோசடியில்
ஈடுபட்டுவருவோர் தொடர்பில் இரகசிய
பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.

Thanks:virakesari.lk

30ம் திகதி க.பொ.த உ/த பெறுபேறுகள் வெளியிடுவது உறுதி

க. பொ. த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்
எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படுமென
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார
தெரிவித்தார்.
அன்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின்
www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பரீட்சார்த்திகள்
தமது பெறுபேறுகளை அறிந்துகொள்ள
முடியும்.
அதேவேளை, அன்றைய
தினமே அனைத்து பாடசாலைகளுக்கும்
பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுமெனவும் பரீட்சைகள்
ஆணையாளர் கூறினார்.
2012 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தரப்
பரீட்சை கடந்த ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதி முதல்
30 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இப்பரீட்சையில் இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 535 பாடசாலை பரீட்சார்த்திகளும் 15
ஆயிரத்து 239 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும்
தோற்றினர். இவர்களில் பழைய மற்றும் புதிய
பாடத் திட்டங்களுக்கமைய இரு சாராருக்கும்
வெவ்வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள்
நடத்தப்பட்டன. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
தொடர்ச்சியாக 100
நாட்களுக்கு மேற்கொண்டிருந்த
பணி பகிஷ்கரிப்பின் காரணமாக
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்
காலதாமதமாயின. இருப்பினும் கல்வியமைச்சரினும் பரீட்சைகள்
ஆணையாளரினதும் வேண்டுகோளுக்கிணங்க
விடைத்தாள் திருத்தும் பணிகள்
துரிதப்படுத்தப்பட்டு மூன்று கட்டங்களில்
அவை நிறைவேற்றப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

thanks:adaderana.lk

05 January 2013

பிரிட்டனின் முதலாவது கை- மாற்று அறுவை சிகிச்சை

'விரல்களை அசைக்க முடிகிறது'



தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப்
பார்க்க முடிவதைப் பார்த்து வாயில்
சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த
மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார். 51
வயதான
அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை- மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பிரிட்டனில் முதல் தடவையாக
அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக்
கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர்
இவர்தான். பிரிட்டனில் லீட்ஸ்
மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின்
போதுதான் இவரது பழைய
கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர்
வழங்கியிருந்த கையொன்று அவருக்குப்
பொருத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர்
இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது.
பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர்
அவரது வலது கைக்கும் பரவியது.
அவரது கை விரல்களை விரிக்கமுடியாதபடி,
கையினால் எதனையும் செய்ய முடியாத
நிலையும் ஏற்பட்டது. 'எனது கை' பயோனிக் என்ற நவீன செயற்கை முறை இயந்திரக்
கையை பொருத்துவது தான்
ஒரே வழி என்று இருந்தபோது தான், இவர்
இன்னொரு மனிதக் கையை பொருத்தும் கை-
மாற்று அறுவை சிகிச்சை செய்துபார்க்கச்
சம்மதித்தார். இவருக்கு புதிய கையை பொருத்திய மருத்துவ
நிபுணர் பேராசிரியர் சைமன் கே,
இவரது புதிய கையில் இன்னும் பெரிய
முன்னேற்றம் தெரியும் என்று பிபிசியிடம்
நம்பிக்கை தெரிவித்தார்.
கை மாற்று சிகிச்சைகள் அமெரிக்காவிலும் பிரான்சிலும் இதற்கு முன்னர்
நடந்திருக்கின்றன. உலகெங்கிலும் இவ்வாறான
60 கை-மாற்று சிகிச்சைகள்
இதுவரை நடந்துள்ளன. லீட்ஸ் மருத்துவமனையில்
இப்போது நடந்திருக்கின்ற பிரிட்டனின்
முதலாவது முயற்சி, கை கால்களை இழந்துள்ள பலருக்கு இதுபோல உதவமுடியும் என்கிற
நம்பிக்கையை இன்னும்
அதிகப்படுத்தியிருக்கிறது. பிரிட்டனில்
கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்த கை-
மாற்று சிகிச்சைக்கான திட்டமிடல்கள்
நடந்துவந்தன. பிரிட்டன் மருத்துவத் துறையின் இந்தக்
கன்னி முயற்சிக்கு பொருத்தமான ஒருவர்
கிடைக்கும்வரை காத்திருந்தார்கள்.
உடல்நிலையில் பொருத்தமானவராகவும்
இன்னொருவரின்
கையை பொருத்திக்கொள்ளுமளவிற்கு மனதளவில் தயாரானவராகவும் ஒருவர் கிடைக்க
வேண்டி இருந்தது. 'இதனை இன்னொருவரின்
கை என்று நான்
நினைக்கவே இல்லை. எனது கையைப் போலத்தான்
நான் உணர்கிறேன். என்னால் எனது கையைபோல
அசைக்கமுடிகிறது.. அப்படித்தான் உணர்கிறேன்' என்று பிபிசியிடம் கூறினார்
மார்க் காஹில். இவரது ஆசை முழுமையாக
நிறைவேற இன்னும்
காலம் எடுக்கும். ஆனால் இப்போதே அவரால்
விரல்களை அசைத்துப்பார்க்க
முடிகிறது என்பதே ஒரு பெரிய தெம்பையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது.




Thanks:bbc