க. பொ. த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்
எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படுமென
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார
தெரிவித்தார்.
அன்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின்
www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பரீட்சார்த்திகள்
தமது பெறுபேறுகளை அறிந்துகொள்ள
முடியும்.
அதேவேளை, அன்றைய
தினமே அனைத்து பாடசாலைகளுக்கும்
பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுமெனவும் பரீட்சைகள்
ஆணையாளர் கூறினார்.
2012 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தரப்
பரீட்சை கடந்த ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதி முதல்
30 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இப்பரீட்சையில் இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 535 பாடசாலை பரீட்சார்த்திகளும் 15
ஆயிரத்து 239 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும்
தோற்றினர். இவர்களில் பழைய மற்றும் புதிய
பாடத் திட்டங்களுக்கமைய இரு சாராருக்கும்
வெவ்வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள்
நடத்தப்பட்டன. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
தொடர்ச்சியாக 100
நாட்களுக்கு மேற்கொண்டிருந்த
பணி பகிஷ்கரிப்பின் காரணமாக
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்
காலதாமதமாயின. இருப்பினும் கல்வியமைச்சரினும் பரீட்சைகள்
ஆணையாளரினதும் வேண்டுகோளுக்கிணங்க
விடைத்தாள் திருத்தும் பணிகள்
துரிதப்படுத்தப்பட்டு மூன்று கட்டங்களில்
அவை நிறைவேற்றப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
thanks:adaderana.lk
No comments:
Post a Comment