தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 June 2016

E-bracelets a 'must' for pilgrims this Haj


JEDDAH: Pilgrims will be required to use electronic identification bracelets starting this coming Haj as part of a safety measure, the Saudi Press Agency (SPA) said, quoting the Ministry of Haj and Umrah.
Launched last week, the electronic bracelet stores the personal information of each pilgrim including where the person entered the Kingdom, visa number, passport number and address.
During last week’s launch of the device, Eisa Mohammad Rawas, undersecretary for Umrah affairs at the ministry, said the new device would allow better service provision by government and private sector bodies including for those who are lost, elderly and do not speak Arabic.
It is water-resistant, connected to GPS, and contains personal and medical information, helping authorities provide care and identify people.
SPA said the devices will also instruct worshippers on timings of prayers and a multi-lingual help desk to guide especially non-Arabic speaking pilgrims around the various rituals of the annual Islamic event.
Saudi Arabia oversees the annual pilgrimage to Makkah by more than two million Muslims from around the world.
The Haj, the world’s largest annual gathering of Muslims, has witnessed numerous deadly stampedes, fires and riots in the past with authorities having only limited ability to control the masses.
Nearly a thousand new surveillance cameras were installed this month at Makkah’s Grand Mosque and linked to control rooms staffed by special forces monitoring pilgrim movements for the event scheduled for August, Haj officials have said.
Undersecretary Rawas said the ministry consulted with travel agents and Haj and Umrah companies here and abroad before designing the bracelets. The information can be accessed using a smartphone by employees of the ministry, and security and services bodies.
source:Arab News

26 June 2016

கண்ணியமிக்க இரவு..!


– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்களும் பூமிக்கு இறங்குகின்றனர். இதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம்சமாகும்.

ரமலான் இறுதி பத்து நாட்களும் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்வதும்

ரமலான் இறுதி பத்து நாட்கள்
வழங்குபவர்: மவ்லவி. அப்துல் பாஸித்




லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்வது எப்படி?
வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

25 June 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகல்:உலகத் தலைவர்கள் கவலை; ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் அதிர்ச்சி; ஸ்டெர்லிங் பவுண்ட் பெரும் வீழ்ச்ச

june 24,
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் "வெளியேற வேண்டும்" என்று வாக்களித்துள்ளனர்.

ஏறக்குறைய 52 சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் , விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
வெளியுறவுச் செயலர் பிலிப் ஹேமண்ட் வாக்காளர்கள் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் விலகவேண்டும் என்று பிரிட்டனில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருப்பது குறித்து உலகத் தலைவர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டனின் நாணயமான ஸ்டெர்லிங் பவுண்ட் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன், உலக அளவில் பங்குச்சந்தைகள் கணிசமான சரிவை சந்தித்துள்ளன.





source BBC

24 June 2016

Two trains every hour between the holy cities


MADINAH: Thirty-six trains would be running every day, two every hour between Makkah and Madinah, transporting on average 15,000 passengers.
Most parts of the multibillion high-speed Haramain railway line will be completed this year.
There are major stations in each of these cities including Jeddah, supported by bus stops and footpaths. The train station in Madinah contains world-class facilities.
Currently, tests are being conducted on the lines. The main train station is 9 km from the Prophet’s Mosque and 13 km from Madinah’s airport.
The main building includes a lounge for visitors, VIP lounge, mosque that can accommodate about 1,000 worshippers, center for Civil Defense, helipad, sidewalks for passengers waiting, and car park with a capacity of about 1,000 vehicles for short periods and of about 690 cars for long periods.
The main building has 19 elevators for travelers and staff, and a tunnel that links King Abdul Aziz Road and the station, in addition to elevators in the car parks and at the mosque.
It will have 12 electric escalators that link the ground floor, second floor and the third floor. It will also have a stairway inside the main building, parking lots, subway and a civil defense building.
Air conditioning systems are spread out in all the station buildings and facilities. All project facilities are covered with 417 surveillance cameras, in addition to a safety system.
Thanks:Arab News

அபீசீனிய ஹிஜ்ரத்தும் நஜ்ஜாஷி மன்னரும்


இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவில் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். இதிலிருந்து தங்களையும் தங்கள் கொள்கையையும் காத்துக் கொள்வதற்காக அபீசீனியாவிற்கு ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தலைமையில் அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.
அப்போது அவர்களுக்கு அங்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது  என்று சூழ்ச்சி செய்து, தடுப்பதற்காக மக்காவின் இணை வைப்பாளர்கள் ஒரு குழுவினரை அபீசீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் நஜ்ஜாஷி மன்னர், மக்கா இணை வைப்பாளர்களின் கோரிக்கையை நிராகரித்து முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னர் முஸ்லிம்களின் இந்த ஹிஜ்ரத் அமைந்ததால் இது முதல் ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த முதல் ஹிஜ்ரத் தொடர்பாக முஸ்னத் அஹ்மதில் இடம்பெற்றுள்ள செய்தியைப் பார்ப்போம்.
அபீசீனியாவிற்கு நபித்தோழர்கள் அடைக்கலம் சென்றதும், மக்கத்துக் காஃபிர்கள் அபீசீனியாவிற்கு அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ இப்னுல் முகீரா அல்மக்ஸும்மிய்யி என்பவரையும், அம்ருப்னுல் ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மிய்யி என்பவரையும் தூதுக்குழுவாக அனுப்பி வைக்கிறார்கள். மக்காவில் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அபிசீனியா வரை சென்றும் தொந்தரவு கொடுத்தனர்
இந்தக் காஃபிர்கள். கீழுள்ள அதிகாரிகளுக்கு காணிக்கைகளை கொடுத்து முன்கூட்டியே அவர்களை சரிக்கட்டி வைத்துக் கொண்டு, பிறகு அங்குள்ள மன்னரிடம் பேசுவதாகவும், காணிக்கைகள் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நமக்குச் சாதகமாகப் பேசுவார்கள் என்பதுதான் இந்த மக்கத்து காஃபிர்களின் திட்டம். அதேபோன்று கீழுள்ள அதிகாரிகள் அனைவருக்கும் காணிக்கைகள் கொடுக்கப்பட்டு, அவர்களும் நீங்கள் அரசவையில் உங்களது கோரிக்கை களை வையுங்கள். நாங்கள் அதற்குரிய ஆதரவைத் தெரிவிக்கிறோம் என்றும் பேசி முடிக்கப்பட்டது.

17 June 2016

ஆறு வகையான “ ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்


மாரடைப்பா… இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.
கோல்டன் அவர் – Golden Hour
************************************
முதல் 2 மணி நேரம் “கோல்டன் அவர்’ என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.
ஆறு வகை மாரடைப்பு
************************
மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது;

04 June 2016

Boxing legend Muhammad Ali dies at 74

'தி கிரேட்டஸ்ட்' என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி(74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். 

Ali is held back by the referee after he dropped challenger Sonny Liston less than two minutes into the first round of their heavyweight title fight in Lewiston, Maine, on May 25, 1965. [AP]
காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முஹம்மது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் குடிசூடா சக்கரவர்த்தியாக திகழ்ந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் முஹம்மது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாக முஹம்மது அலியின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
''பாக்ஸிங் ரிங்குக்குள் பட்டாம் பூச்சியை போல பறப்பேன், தேனியை போல கொட்டுவேன்'' என்பது முகமது அலியின் மிக பிரபலமான வரி.1964ல் குத்துச்சண்டையில் ஜாம்பவானாக இருந்த சோனி லிஸ்டனை முகமது அலி வீழ்த்தினார்.ஜோ ப்ரேஸியருடன் பரப்பரபான சண்டைகளை போட்ட முகமது அலி, ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தி 'ரம்பிள் இன் த ஜங்கிள்' பட்டத்தை கைப்பற்றினார் .இனவெறிக்கு எதிராக கடுமையாக செயல்பட்டவர் முகமது அலி. வியட்நாமுக்கு எதிரான போரின்போது அமெரிக்க ராணுவத்தில் இணைந்து பணியாற்ற மறுத்தது மற்றும் 'நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற கருப்பின இஸ்லாம் குழுவில் இணைந்தது ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்கர்களின் வெறுப்புக்கு ஆளானார்.அவரது மத நம்பிக்கைகள் காரணமாக, வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்த்தால், அவரது உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் அவரது குத்துச்சண்டை போட்டிகள் முடங்கிப் போயின.