தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

28 July 2015

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ


கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய, வஅஃபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த

பொருள் : இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்: புகாரி

27 July 2015

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார்



இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் தனது 84வது வயதில் திங்கட்கிழமை இரவு காலமானார்.
மேகாலயாவில் கருத்தரங்கில் கலாம் உரையாற்றிய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம். 2002 முதல் 2007 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியா அனுவல்லமை நாடாக குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் கலாம். பொக்ரான்-2 அணுகுண்டு சோதனையில் பிரதமரின் தலைமை அறிவியியல் ஆலோசகராகவும் செயல்பட்டார்.  1931 அக்டோபர் 15ம் தேதி ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தார்.  அவர் இந்தியாவின் ஏவுகணை திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்தியாவின் அணுத்திட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நாட்டின் அதியுயர் விருதான பாரத ரத்னா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பள்ளிப் படிப்புக்கு பின் தந்தைக்கு பத்திரிகை விநியோகப் பணி செய்தார். கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார், திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளநிலை இயற்பியியல் பயின்றார் கலாம். 1960ல் DRDO வானூர்தி மேம்பாட்டு அமைப்பில் விஞ்ஞானியாக சேர்ந்தார். ராணுவத்துக்கு சிறிய ரக ஹெலிகாப்ட்டர் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார். 1969ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மாற்றப்பட்டார். உள்நாட்டு செயற்கைக்கோள் செலுத்து வாகன திட்ட இயக்குனராக இருந்தார். கலாம் 20 ஆண்டு பணியாற்றிய SLV  மற்றும் SLV-3 திட்டங்கள் வெற்றி பெற்றன. கலாமின் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

நன்றி:தினகரன்,bbc

25 July 2015

நபி வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த மிகப்பழைமையான புனித அல் குர்ஆனின் கையெழுத்துப் பிரதி கண்டுபிடிப்பு(VIDEO))



இஸ்லாமியர்களின் புனித மறையான அல்-குர்ஆனின் ஆகப் பழைய எழுத்துப் பிரதியின் சில பக்கங்கள் தமது ஆவணத் தொகுப்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக பிரிட்டனின் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த எழுத்துப் பிரதியை கார்பன் டேட்டின் முறையில் பரிசோதித்தபோது அவை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெரியவருகிறது.

இந்தப் பிரதியை எழுதியவர் இறைதூதர் முகம்மத் நபியைக் கண்டும் கேட்டும் இருந்த ஒருவராக இருந்திருப்பார் என பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இராக்கில் பிறந்த சரித்திர ஆர்வலரான அல்ஃபோன்ஸ் மிங்கானா என்பவரால் 1920கள் காலகட்டத்தில் இந்த குரான் எழுத்துப் பிரதியின் பக்கங்கள் பர்மிங்ஹாமுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

23 July 2015

Names of the Qur'an


எண் குர்ஆனின் பெயர்கள் வசனஎண்

1 அல் கிதாப் (திருவேதம்) 2:2
2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174
4 அல்ஃபுர்கான் 2:185
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
6 அந் நூர் (பேரொளி) 4:174
7 அல் ஹக்கு (மெய்யானது) 2:91
8 அல் கரீம் (கண்ணியமானது) 56:77
9 அல் முபீன் (தெளிவானது) 5:17
10 அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 36:2
11 அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) 41:41
12 அல் ஹுதா (நேர் வழிகாட்டி) 3:138
13 அர் ரஹ்மத் (அருள்) 6:157
14 அஷ் ஷிஃபா (அருமருந்து) 10:57
15 அல் மவ்இளத் (நற்போதனை) 3:138
16 அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) 2:151
17 அல் முஹைமின் (பாதுகாப்பது) 5:48
18 அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) 18:1-2
19 அந் நிஃமத் (அருட்கொடை) 93:11
20 அர் ரூஹ் (ஆன்மா) 42:52
21 அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) 20:4
22 அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) 13:37
23 அல் முபாரக் (நல்லாசிகள்) 6:92
24 அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) 6:92
25 அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) 41:4
26 அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) 41:4
27 அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) 80:14
28 அல் முகர்ராமா (சங்கையானது) 80:13
29 அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) 50:1
30 அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) 12:2
31 அல் மர்ஃபூஆ (உயர்வானது) 80:14
32 அல் அஜப் (ஆச்சரியமானது) 72:1
33 அல் பஸாயிர் (அறிவொளி) 7:203
34 அல் திக்ரா (நல்லுபபேதசம்) 7:2
35 ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) 3:103

உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா? கவனிக்க வேண்டிய விடயங்கள்


ஃப்ரிட்ஜை ஒரு தடவை அணைத்துவிட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ஃப்ரிட்ஜ் இயங்கு வதற்கு அதன் உள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணம். மேலும், ஃப்ரிட்ஜை அணைத்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். அந்த பைப்பில் காற்றும் போகாது. எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ஃப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பி யிருக்கும்.

ஃப்ரிட்ஜ் வாங்கியவுடன், ஃப்ரீசர் கதவுக்குப் பின்னால், என்னென்ன பொருட்களை யெல்லாம் பயன்படுதக் கூடாது என்ற வழிமுறைகளை எழுதியிருப்பார்கள். முதலில் அதனை தெளிவாகப் படியுங்கள். சம்பந்தப்பட்ட கம்பெனி ஆட் களோ, சர்வீஸ் ஆட்களோகூட இதைப் பற்றி யெல்லாம் சொல்ல மாட்டார்கள். நீங்களாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஃப்ரீசரில் பொருட்கள் நன்றாக உறைந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்காக கூரான ஆயுதங்களைப் பயன்படுத்தகூடாது. ஃப்ரீசர் அமைந்து இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருந்தப் பட்டிருக்கும். கூரான பொருட்கள் பயன்படுத்தினால், இந்த டப்பாவை கீறி, அதன் கீழே இருக்கும் அலுமினியம் காயிலின் மீது படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி படும்போது, 'டப்' என்று வெடித்து உள்ளிருந்து கேஸ் வெளியேறி, உங்கள் உடம்பில் பட்டுவிடலாம். இதனால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சுவாசிப்பதால் பாதிப்பில்லை என்றாலும், உடம்பில் படும்போது பாதிப்புகள் ஏற்படும்.

ஃப்ரீசரில் இருந்து உறைந்த பொருட்களை எடுக்கும்போது, டீஃப்ராஸ்ட் பட்டனை அழுத் துங்கள். இதனால் ஃப்ரிட்ஜில் உள்ள அதிகப்படியான ஐஸ் கரைந்து, அதன் பின்புறம் இருக்கும் டிரேவில் விழுந்து விடும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்வதால் ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடையாமல் இருக்கும்.

ஃப்ரிட்ஜ் ரிப்பேரானாலோ... தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டாலோ... அதனுள் இருக்கும் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை வெளியே எடுத்து விடுங்கள். இல்லையென்றால் அது அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கும். ரிப்பேரான ஃப்ரிட்ஜை ஈரத் துணியால் நன்றாக துடைத்து, எலுமிச்சம் பழத்தை வெட்டி ஃப்ரிட்ஜினுள்ளே ஆங்காங்கே வைத்து விடுங்கள். இதனால் துர்நாற்றம் அடிக்காது. கதவையும் திறந்து வையுங்கள்.

ஃப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும். அந்த இடத்தில் குளுமையான காற்றும் வீசாததால் கிருமிகள் மெதுவாக ஃப்ரிட்ஜ் உட்பகுதியில் பரவும் அபாயமும் நேரலாம். அது பல வியாதிகளுக்கு வழி வகுக்கலாம். கேஸ்கட் சரியாகப் பொருந்தியிருக்கிறதா? இடைவெளி இருக்கிறதா என்று அடிக்கடி கவனியுங்கள்.

சாதாரண சோப்புத் தண்ணீரினால் ஃப்ரிட்ஜின், உள், வெளிப்புறங்களில் துடைத்தாலே போதுமானது. எந்த பாதிப்பும் வராது.

ஃப்ரிட்ஜின் வாழ்நாள் என்பது அதிகபட்சம் 12 ஆண்டுகள்தான். அதற்கு மேல் அதன் செயல்பாடுகள் தொய்வடைந்து விடும். எந்த விதத்தில் அதனால் தீங்கு ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே, 12 ஆண்டுகளாகிவிட்டால் உடனே டிஸ்போஸ் செய்துவிடுவது நல்லது.

ஃப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்து கொள்ளுங்கள்.

வெளியூர் சென்று இரண்டு நாளில் திரும்பும் பட்சத்தில் ஃப்ரிட்ஜை ஆனில் வைத்து செல்லலாம். ஆனால், 10 நாட்களாகும் என்றால் பொருட்களை வெளியே வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு போவதுதான் நல்லது.

ஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது அதனை நன்கு சுத்தம் செய்து விடுங்கள்.

நன்றி:விகடன்

14 July 2015

முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?


தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள்
கருவில் 59 கலோரியும் உள்ளது.
ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5
கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.
முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம்,
சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.
மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற சத்துகள் உள்ளது.
முட்டையில் இயற்கையாகவே வைட்டமின், 'பி12' மற்றும் ரைபோபிளமின் போன்ற
நினைவாற்றலை மேம்படுத்தும் விட்டமின்கள் உள்ளன.
இந்தச்சத்துகள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலுாட்டும்
தாய்மார்களுக்கும் முக்கியத் தேவை.
முட்டையில் உள்ள குறிப்பிட்ட சில ஆன்டி ஆக்சிடென்ட், கண் புரை போன்ற
பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது.எலும்பு வளர்ச்சிக்குத்
தேவையான வைட்டமின், 'டி' முட்டையில் உள்ளது.
அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் 'ஈ' மற்றும் ரத்த சிவப்பணுக்கள்
உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
துத்தநாகம் போன்றவையும் முட்டையில் உள்ளன.
செல் சுவர்களை உருவாக்கும், மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் கோலின் என்ற
நுண்ணுாட்டச் சத்தும் முட்டையில் உள்ளது.
மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மட்டும் 185 மில்லி கிராம் உள்ளது. இளம் வயதினர்
தினமும், 300 கிராம் கொழுப்பு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதய நோய், சர்க்கரை நோய் பிரச்னை, அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில்
இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.
வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும்
முட்டையை தவிர்க்கலாம்.
கொழுப்பை தவிர்க்க விரும்புபவர்கள் காலை உணவில் இரு முட்டைகளின்
வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

08 July 2015

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ


“ அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர்
இரவை நான் அடைந்து கொண்டால் அதில்
நான் என்ன பிரார்த்திப்பது?”
என்று நான் நபி(ஸல்) அவர்களிடம்
கேட்டேன். அதற்கு அவர்கள், “ அல்லாஹும்ம
இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ
ஃப’ஃபுஅன்னீ ” (இறைவா! நீ மன்னிப்பவன்.
மன்னிப்பையே விரும்புபவன்.
எனவே என்னுடைய
பாவங்களை மன்னித்தருள்வாயாக!)
என்று பிரார்த்திக்குமாறு கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 25168

06 July 2015

தராவீஹ் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?


இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா?

இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு.

இது போன்ற சந்தர்ப்பங்களில் தனியாகத் தொழாமல் அல்லது வேறு ஜமாஅத் நடாத்தாமல் தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதே சிறந்ததாகும். இமாமினதும், மஃமூமினதும் நிய்யத்து ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சுருக்கித் தொழும் இமாமைப் பின்பற்றி பூரணமாகத் தொழுபவர்கள் தொழுகின்றனர். இங்கு இமாமின் நிய்யத்தும் மஃமூமின் நிய்யத்தும் முரண்படுகின்றனவே! இதில் பிரச்சினை இல்லை.

முஆத்(றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று இஷாவைத் தொழுதுவிட்டு பின்னர் தனது பகுதிக்குச் சென்று அதே தொழுகையை மக்களுக்குத் தொழுவிப்பார்கள். (புஹாரி, முஸ்லிம்) இதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

முஆத்(றழி) அவர்கள் முதலில் தொழுத இஷா கடமையாகவும் பின்னர் தொழுதது ஸுன்னத்தாகவும் கொள்ளப்படும். அவரைப் பின்பற்றி அவரது பகுதி மக்கள் தொழுதுள்ளனர். அதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. எனவே, தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றி இஷாவைத் தொழுவது ஆகுமானதாகும்.
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி –