இஸ்லாமியர்களின் புனித மறையான அல்-குர்ஆனின் ஆகப் பழைய எழுத்துப் பிரதியின் சில பக்கங்கள் தமது ஆவணத் தொகுப்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக பிரிட்டனின் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த எழுத்துப் பிரதியை கார்பன் டேட்டின் முறையில் பரிசோதித்தபோது அவை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெரியவருகிறது.
இந்தப் பிரதியை எழுதியவர் இறைதூதர் முகம்மத் நபியைக் கண்டும் கேட்டும் இருந்த ஒருவராக இருந்திருப்பார் என பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த குர்ஆன் கையெழுத்துப்பிரதி குறைந்தது 1,370 ஆண்டுகள் பழைமையானது என்று ரேடியோகார்பன் காலக்கணிப்பு முறைமூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மிக ஆரம்பகால குர்ஆன் பிரதிகளில் ஒன்றாக இது இடம்பிடித்துள்ளது.
முஸ்லிம்களின் இந்த புனித நூலின் பாகங்கள் பெர் மிங்ஹாம் பல்கலைக்கழக நூலகத்தில் யாராலும் அடை யாளம் காணப்படாத நிலையில் சுமார் கடந்த ஒரு நூற் றாண்டாக இருந்து வந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத் தும் ‘அற்புதமான கண்டுபிடிப்பு” என்று பிரிட்டன் நூலகங் கள் தொடர்பான நிபுணரான கலாநிதி முஹமது இஸா வலி குறிப்பிட்டார். இந்த கையெழுத்துப் பிரதி, நூலகத்தின் மத்திய கிழக்கு புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் சேமிக்கப்பட்ட பகுதியில் உலகின் மிகப் பழைமையான அல் குர்ஆன் பிரதிகளில் ஒன்று என அடையாளம் காணப்படாமல் இருந்துள்ளது.
No comments:
Post a Comment