இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் தனது 84வது வயதில் திங்கட்கிழமை இரவு காலமானார்.
மேகாலயாவில் கருத்தரங்கில் கலாம் உரையாற்றிய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம். 2002 முதல் 2007 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியா அனுவல்லமை நாடாக குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் கலாம். பொக்ரான்-2 அணுகுண்டு சோதனையில் பிரதமரின் தலைமை அறிவியியல் ஆலோசகராகவும் செயல்பட்டார். 1931 அக்டோபர் 15ம் தேதி ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தார். அவர் இந்தியாவின் ஏவுகணை திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்தியாவின் அணுத்திட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நாட்டின் அதியுயர் விருதான பாரத ரத்னா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பள்ளிப் படிப்புக்கு பின் தந்தைக்கு பத்திரிகை விநியோகப் பணி செய்தார். கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார், திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளநிலை இயற்பியியல் பயின்றார் கலாம். 1960ல் DRDO வானூர்தி மேம்பாட்டு அமைப்பில் விஞ்ஞானியாக சேர்ந்தார். ராணுவத்துக்கு சிறிய ரக ஹெலிகாப்ட்டர் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார். 1969ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மாற்றப்பட்டார். உள்நாட்டு செயற்கைக்கோள் செலுத்து வாகன திட்ட இயக்குனராக இருந்தார். கலாம் 20 ஆண்டு பணியாற்றிய SLV மற்றும் SLV-3 திட்டங்கள் வெற்றி பெற்றன. கலாமின் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
நன்றி:தினகரன்,bbc
No comments:
Post a Comment