தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 March 2015

குடும்ப உளவியல் - Family Psychology

கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சினைகளை கலைந்து, குடும்பத்தை மகிழ்ச்சியான குடும்பமாக மாற்றியமைக்க உங்களால் இயலும். இந்த வீடியோவை பாருங்கள். (இறைவன் நாடினால்) நிச்சயம் உங்களை மாற்றிக்கொள்ள விரும்புவீர்கள்!

வழங்குபவர்:அஷ்ஷைக், ஆதில் ஹஸன்

இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்

ByAl-Shaik Adil Hasan

Director of Islamic Research Organization, Sri Lanka and the famous Psychologist

Thanks:islamkalvi.com

29 March 2015

மக்கொன அஹதியா பாடசாலையின் 15 ஆண்டு பூர்த்தி விழா

மக்கொன அஹதியா பாடசாலையின் 15 ஆண்டு பூர்த்தி விழாவும் பரிசளிப்பு நிகழ்வுகளும் அல் ஹஸனியா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பிரதம அதிதியாக பாராளுமன்ற உருப்பினர் அஸ்லம் ஹாஜியார் அவர்களும் கெளரவ அதிதியாக மேல் மாகாண சபை உருப்பினர் இப்திகார் ஜமீல் அவர்களும் விசேட பேச்சாளராக அர்க்கம் நூராமித் மெளலவி அவர்களும் மற்றும் புரவலர் ஹாஷிம் உமர் உற்பட இன்னும் பல விசேட அதிதிகளும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
மக்கொன அஹதியாவின் அதிபர் உவைஸ் ஆசிரியர் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார்,
இன்று வெளியிடப்பட்ட மக்கொன அஹதியாவின் 15 ஆண்டு பூர்த்தி நினைவு மலரின் முதற் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இன்னும் மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.




28 March 2015

கல்கந்துவில-மக்கொன-கொழும்பு: புதிய பஸ் சேவை

இலங்கை போக்குவரத்து சபை அளுத்கம டிப்போவினால் தற்பொழுது கல்கந்துவிலயில்
இருந்து கொழும்புக்கான நேரடி புதிய பஸ் சேவை ஒன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தினமும் காலை 6:20 க்கு கல்கந்துவிலயிலிருந்து
பயணத்தை ஆரம்பித்து சுமார் 6:40 மணிக்கு மக்கொனையிணூடாக கொழும்பை நோக்கி
பயணத்தை தொடரும்.

23 March 2015

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள கார்


பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ
வாகனத்தின் இலக்கமானது இதுவரை இலங்கை வீதிகளில் பயணித்த வாகனங்களில்
காணப்படாத அடையாளத்துடன் கூடிய இலக்கமாக அது அமைந்துள்ளது.
வாகனத்தின் முன் பகுதியில் 5 நட்சத்திரங்களும் பின் பகுதியில் 5
நட்சத்திரங்களும் காணப்படுகின்றன.
பீல்ட் மார்ஷல் ஒருவரின் வாகனம் செல்கிறது என்பதை ஏனையோர் அறிந்து
கொள்ளும் வகையில் விசேட அடையாளமாக இந்த நட்சத்திரங்கள் அதில்
பொறிக்கப்பட்டுள்ளன.
எஸ். 400 என்ற பென்ஸ் கார் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது
ஐப்ரைட் ரக வாகனமாகும். வாகனத்தின் இலக்கம் யு.ஏ.555 ஆகும். காரின் விலை
சுமார் 34 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks:Tamilwin

சரத் பொன்சேகாவுக்கு 'பீல்ட் மார்ஷல்' தரம் வழங்கப்பட்டுள்ளது

முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 'பீல்ட் மார்ஷல்' வழங்கும்
நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் முன்வளாகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின்
போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தலைமையில் அவருக்கான பீல்ட் மார்ஷல் தரம் வழங்கப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பீல்ட் மார்ஷல் தரத்தை முன்;னாள்
ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
பீல்ட் மார்ஷல் தரத்தின் போது 5 நட்சத்திரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
ஜெனரல் நிலைக்கு 4 நட்சத்திரங்களும், பீல்ட் மார்ஷல் தரத்திற்கு 5
நட்சத்திரங்களும் வழங்கப்படுகின்றன.
முப்படைகளின் மரியாதை அணிவகுப்புகளுக்கு மத்தியில் புதிய தரத்திற்கான
அடையாளங்கள் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டன.
பீல்ட் மார்ஷல் தரம் வழங்கப்படும் நடைமுறை 13 வது நூற்றாண்டுக்கு
முன்னதான வரலாற்றை கொண்டுள்ள போதும், இலங்கைக்கு இது புதிய அனுபவமாகும்.
சர்வதேச நாடுகள் பலவற்றில் ஏற்கனவே பீல்ட் மார்ஷல் தரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஓய்வூதியம் பெறும் நிலை ஏற்படாது
எனவும் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Thanks:Hiru

எச்சரிக்கை..!!எச்சரிக்கை..!! முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது.


பலருடைய முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது.
ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள்
நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான விடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது.
இதை எதோ ஹாக் ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள்.
(இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு
மொழியில் உள்ளது.)
இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது என்ன..!
# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUP செய்துகொள்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download a copy of your
Facebook data. மூலம் BACKUP செய்துகொள்ளுங்கள்.
# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert when
anyone logs into your account from a new device or browser. -> அனைத்து
Notificationsம் வருவது போல செட்டிங் செய்து கொள்ளுங்கள்.
# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள் கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த
நண்பர்கள் மூலம் திரும்ப பெறலாம்.
Settings -> Security Settings -> Trusted Contacts -> இதில் ஐந்து
நண்பர்கள் வரைக்கும் தேர்வு செய்ய முடியும்.
உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர் சற்று நன்கு தெரிந்த ஐந்து
நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.
# இந்த செட்டிங் உங்கள் அனுமதி இல்லாமல் யார் டாக் செய்த பதிவும் உங்கள்
டைம்லைனில் தெரியாது.
Settings -> Timeline and Tagging Settings -> who can add things to my
timeline? -> Review posts friends tag you in before they appear on
your timeline? -> ENABLED.
# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில் வரும் வெளிநாட்டு நட்பு அழைப்புகளை
ஏற்கவேண்டாம்.
எனக்கு தெரிந்த அளவு செட்டிங் கொடுத்துள்ளேன் மேலும் விளக்கம்
தெரிந்தார்கள் கமெண்ட்ஸ் செய்யுங்கள். நன்றி.
ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் நான் பேசிய வரைக்கும், அவர்களுடைய
கம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில் இருந்து Log-out செய்யவோ,
அந்த பதிவுகளை நீக்கவோ, அல்லது சில மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை.
ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில் இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்ற
முடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் Browser Cookies மூலமே உங்கள் கணக்கை
ஹாக் செய்வதாக நினைக்கிறேன். முடிந்த அளவு Browser Settingsல் Remember
password எடுத்து விடவும். மேலும், ஒவ்வொரு முறையும் ப்ரௌசெரை விட்டு
வெளியேறும்போது Clear History கொடுத்து Browser Cookies உட்பட
அழித்துவிடவும்.
சில ப்ரௌசெர்களில் ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும் போது தானாகவே
History Cleaning செயும்படி இருக்கிறது. முடிந்த அளவு அதையும்
பயன்படுத்தலாம். நன்றி.

மூலம்: இனையம்

18 March 2015

பேஸ்புக்கின் புதியவிதிகள்

பேஸ்புக், அதாவது முகநூலில் இனிமேல் என்னென்னவையெல்லாம் அனுமதிக்கப்படும்;
எவையெவையெல்லாம் அனுமதிக்கப்படாது என்பது குறித்த தனது புதிய
விதிமுறைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆபாசமானவை, ஆபத்தை
விளைவிப்பவை, தற்கொலை, கொலை போன்ற உயிர்ப்பலியை
ஊக்குவிப்பவை, குற்றச்செயல் தொடர்புடையவை, துவேஷத்தை தூண்டுபவை, பொதுவாழ்வில்
இருப்பவர்கள் மீதான வன்மான தாக்குதல் உள்ளிட்ட பலவிதமானவை இனிமேல் முகநூலில்
அனுமதிப்படாது என்று முகநூலின் புதிய விதிகள் பட்டியலிட்டுள்ளன. இந்த
புதிய விதிமுறைகள் முகநூலை பாதுகாப்பான இணையத்தின் சமூகவெளியாக
மாற்றும் என்றும், முகநூலின் ஆபாசத்தைக் கட்டுப்படுத்தும் என்றும் அதன் ஆதரவாளர்கள்
கூறுகிறார்கள். அதேசமயம், இந்த புதிய விதிகள் அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள்
உள்ளிட்ட பல்வேறுவகையான வலுவான கட்டமைப்புகளுக்கு எதிரான பொதுமக்களின்
எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும்; கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் என்கிற
கவலைகளும் சிலரால் வெளியிடப்படுகின்றன.


Thanks:bbc

08 March 2015

பார்வையைப் பறிக்கும் குழுக்கோமா


இன்று தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் குழுக்கோமா வாரம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
தேசிய கண் மருத்துமனை இந்த வாரத்தில், இலங்கையில், இந்த நோய் தொடர்பில் முழுமையான விபரங்களை அறிந்து கொள்வது மற்றும் அந்த நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதும் குறித்து புரிந்துணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.




காரிருளில் சப்தமின்றி கன்னமிடும் திருடன் போல நோயாளிக்கு எந்த வித அசுமிசமும் காட்டாது படிப்படியாகப் பார்வையைப் பறிப்பதுதான் குளுக்கோமா நோயாகும்.
உலகளாவிய ரீதியில் கண் பார்வை இழப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணம் குளுக்கோமாதான். முதற் காரணம் வெண் புரை என்று சொல்லப்படும் கற்றரக்ட் cataract ஆகும்.

கற்றரக்ட்டால் ஏற்படும் பார்வை இழப்பை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் குளுக்கோமாவின் பார்வை இழப்பு மாற்ற முடியாதது ஆகும்.

இது கண்ணின் பார்வையைக் கொடுக்கும் பார்வை நரம்பைப் (optic nerve) பாதிப்பதால் பார்வை இழப்பைக் கொண்டுவருகிறது. நரம்பைப் பாதிப்பதால் பார்வை இழந்தால் அதை சிகிச்சைகள் மூலம் திரும்பக் கொண்டுவருவது இயலாத காரியமாகும்.

கண்ணில் உள்ள நுண்ணிய வடிகால் குழாய்கள் சற்று தடைபடுவதால் கண்ணின் திரவமான அக்வஸ் கியூமர் (aqueous humour) தேங்குகிறது.

இதனால் கண்ணினுள் உள்ள திரவத்தி்ன அழுத்தம் (fluid pressure) அதிகரிக்கிறது. இந்த அழுத்தத்தை கண் பிரஷர் (Intraocular pressure) என்பர்.

ஆரம்ப நிலைகளில் வெளிப்டையான எந்த அறிகுறிகளும் இல்லாதிருப்பதே இதன் மிக ஆபத்தான அம்சமாகும்.

எனவேதான் இந்த நோயைக் கண்டு பிடிப்பதற்கு ஒழுங்கான கண் மருத்துவப் பரிசோதனை அவசியமாகிறது.

இந் நோய் வருவதற்கான சாத்தியம் உள்ளவர்கள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

யாருக்கு குள்கோவிற்கான கண்பரிசோதனை அவசியம்

*.பரம்பரையில் குளுக்கோமா நோய் உள்ளவர்கள்

*.அதே போல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.

*.வெள்யைர்களைவிட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.

*.நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.

*.ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண்துளிகளாக அதிகம் உபயோகித்தவர்களுக்கும்.

*.கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு அதிகம்.

ஆரம்பத்தில் கண்டு பிடித்தால் கண்ணுக்குள் விடும் துளி மருந்துகளுடன் நோய் மோசமாவதைத் தடுக்க முடியும்.

கடுமையான பாதிப்பு ஏற்படுமாயின் சத்திர சிகிச்சை, லேஸர் சிகிச்சை போன்றவை தேவைப்படும்.


Thanks:DR.முருகானந்தன் .

04 March 2015

நேபாளத்தில் விமான விபத்து (video)

துருக்கி நாட்டின் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று நேபாளத்தின்
காத்மண்டுவில் உள்ள விமானநிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
துருக்கியின் ஸ்தான்புல் நகரிலிருந்து வந்த விமானமொன்று 'திரிபுவன்'
விமானநிலையத்தில் தரையிரங்க முற்பட்ட வேளையில் ஓடுபாதையை விட்டு
விலகியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது 238 பேர் விமானத்தில் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக
மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிலர் சிறு காயங்களுக்கு
உள்ளதாகவும் அவர்களுக்கு முதலுதவிச் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும்
தெரியவருகின்றது.
கடும் பனிமூட்டமே விமானம் ஓடுபாதையை விட்டு விலகுவதற்கு ஏதுவான காரணியாக
அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானநிலையம் தற்போது
மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

03 March 2015

திஹாரியில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணும் படிப்பினையும்

கடந்த 25.02.2015 அன்று திஹாரியில் இடம்பெற்ற 27 வயதான ஒரு கர்ப்பிணி
தாயின் மரணம் ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் அனைவருக்கும்
பாரிய படிப்பினையை வழங்கியது. ஆகவே இம்மரணம் பற்றிய சில தகவல்களை பொது
மக்களுக்கு புரியும் வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
குறிப்பிட்ட நபர் திருமணமாகி 3 வயது குழந்தையின் தாயாவார். சிறுநீர்
பரிசோதனையின் மூலம் ஏறத்தாள 6 வார கால கருவை சுமந்திருப்பதாக
கருதப்பட்டார். குறித்த தினம் காலையில் வயிற்றுவலி, வாந்தி போன்ற
அசௌகரியங்கள் ஏற்பட அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோரால்
அழைத்து செல்லப்பட்டார்.
இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் சாதாரண அறிகுறி என்பதாலும் அரசாங்க
மருத்துவமனைக்கு செல்லுமிடத்து உடன் இருப்பதற்கு யாரும் இல்லை என்பதாலும்
இவர்கள் தனியார் வைத்திய சாலையை நாடியிருக்கிறார்கள்.
வைத்திய பரிசோதனையின் பின் வழமை போன்று Saline ஏற்றப்பட்டு வீட்டுக்கு
திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட குறித்த பெண்
மாலை ஆகும் போது மிகுந்த
சிரமத்துக்குள்ளாகியுள்ளார். உடம்பின் அசௌகரியங்கள் மேலும் அதிகரிக்க
தொடங்கவே அருகில் உள்ள அரச மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவ மனைக்கு நுழையும் போதே துரதிஷ்டவசமாக உயிர் பிரிந்து விட்டது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பிரேத பரிசோதனையின் மூலம் கருப்பை குழாய் வெடித்து மரணம் சம்பவித்ததாக
உறுதி செய்யப்பட்டது. ( ruptured ectopic pregnancy ) இம்மரணம் இறைவனின்
நாட்டப்படி நடந்த போதிலும் கூட எமக்கு நிறையவே படிப்பினைகளை சுமந்து
நிற்கின்றது.
ஒரு பெண் கருத்தரித்து விட்டால் அந்த சிசு கருப்பையினுள் இருக்க வேண்டிய
இடத்தில் இருக்க வேண்டும். ( intra uterine pregnancy)அதுதான் சாதாரண
நிலை. மாற்றமாக கருப்பையின் வழமைக்கு மாற்றமான இடத்திலோ அல்லது
கருப்பைக்கு வெளியிலோ அது காணப்பட்டால் அதை நாங்கள் ectopic pregnancy
என்கிறோம். இவ்வாறு அசாதாரண இடத்தில் சிசு வளரும் போது அந்த இடம்
வெடித்து உடனில் உள்ளே குருதிப்பெருக்கு ஏற்படுகின்றது.
உண்மையில் நாம் மேற்சொன்ன பெண்ணுக்கு நாங்கள் கூறிய அந்த ectopic
pregnancy இருந்துள்ளது. அது ஒரு scan (USS) செய்யப்பட்டு
கண்டுபிடிக்கப்படாமல் saline மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே scan (USS) பண்ணப்படாத நிலையில் வயிற்றுவலி, வாந்தி, தலைச்சுற்று
போன்றன ஏற்பட்டால் saline கொடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியாது.உரிய
நேரத்தில் சத்திர சிகிச்சை செய்வதன் மூலம் உயிராபத்துக்களில் இருந்து
பாதுகாத்துக்கொள்ளலாம்.
உண்மை நிலை இவ்வாறிருக்க வைத்தியரிடம் போகும் போது எமது சமூகம் விடுகின்ற
மிகப்பெரும் தவறு என்னவென்றால் வைத்தியர்களிடம் தாங்களாகவே முன்வந்து
saline ஒன்று கொடுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்கிறோம். அவர்களும்
பணத்துக்காக இதை கண்மூடி தனமாக செய்கிறார்கள்.
இவ்வாறானதொரு உயிராபத்தை தான் நாங்கள் கடந்த வாரம் சந்தித்தோம்.
ஆகவே இதன்பிறகாவது அனைவரும் விழிப்புடன் இருந்து இது போன்ற
அசம்பாவிதங்கள், உயிராபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இந்த
செய்தியை எமது சமூகத்துக்கு மட்டுமல்ல தெரிந்த அனைவருக்கும்
எத்திவையுங்கள்.

Dr. Ahamed Rifath (MBBS)

Dr. Mifraaz shaheed (MBBS)
Source:sonakar.com