ஊர் செய்திகள்
date
08 March 2015
பார்வையைப் பறிக்கும் குழுக்கோமா
இன்று தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் குழுக்கோமா வாரம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
தேசிய கண் மருத்துமனை இந்த வாரத்தில், இலங்கையில், இந்த நோய் தொடர்பில் முழுமையான விபரங்களை அறிந்து கொள்வது மற்றும் அந்த நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதும் குறித்து புரிந்துணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரிருளில் சப்தமின்றி கன்னமிடும் திருடன் போல நோயாளிக்கு எந்த வித அசுமிசமும் காட்டாது படிப்படியாகப் பார்வையைப் பறிப்பதுதான் குளுக்கோமா நோயாகும்.
உலகளாவிய ரீதியில் கண் பார்வை இழப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணம் குளுக்கோமாதான். முதற் காரணம் வெண் புரை என்று சொல்லப்படும் கற்றரக்ட் cataract ஆகும்.
கற்றரக்ட்டால் ஏற்படும் பார்வை இழப்பை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் குளுக்கோமாவின் பார்வை இழப்பு மாற்ற முடியாதது ஆகும்.
இது கண்ணின் பார்வையைக் கொடுக்கும் பார்வை நரம்பைப் (optic nerve) பாதிப்பதால் பார்வை இழப்பைக் கொண்டுவருகிறது. நரம்பைப் பாதிப்பதால் பார்வை இழந்தால் அதை சிகிச்சைகள் மூலம் திரும்பக் கொண்டுவருவது இயலாத காரியமாகும்.
கண்ணில் உள்ள நுண்ணிய வடிகால் குழாய்கள் சற்று தடைபடுவதால் கண்ணின் திரவமான அக்வஸ் கியூமர் (aqueous humour) தேங்குகிறது.
இதனால் கண்ணினுள் உள்ள திரவத்தி்ன அழுத்தம் (fluid pressure) அதிகரிக்கிறது. இந்த அழுத்தத்தை கண் பிரஷர் (Intraocular pressure) என்பர்.
ஆரம்ப நிலைகளில் வெளிப்டையான எந்த அறிகுறிகளும் இல்லாதிருப்பதே இதன் மிக ஆபத்தான அம்சமாகும்.
எனவேதான் இந்த நோயைக் கண்டு பிடிப்பதற்கு ஒழுங்கான கண் மருத்துவப் பரிசோதனை அவசியமாகிறது.
இந் நோய் வருவதற்கான சாத்தியம் உள்ளவர்கள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியமாகும்.
யாருக்கு குள்கோவிற்கான கண்பரிசோதனை அவசியம்
*.பரம்பரையில் குளுக்கோமா நோய் உள்ளவர்கள்
*.அதே போல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.
*.வெள்யைர்களைவிட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.
*.நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
*.ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண்துளிகளாக அதிகம் உபயோகித்தவர்களுக்கும்.
*.கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
ஆரம்பத்தில் கண்டு பிடித்தால் கண்ணுக்குள் விடும் துளி மருந்துகளுடன் நோய் மோசமாவதைத் தடுக்க முடியும்.
கடுமையான பாதிப்பு ஏற்படுமாயின் சத்திர சிகிச்சை, லேஸர் சிகிச்சை போன்றவை தேவைப்படும்.
Thanks:DR.முருகானந்தன் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment