முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 'பீல்ட் மார்ஷல்' வழங்கும்
நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் முன்வளாகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின்
போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தலைமையில் அவருக்கான பீல்ட் மார்ஷல் தரம் வழங்கப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பீல்ட் மார்ஷல் தரத்தை முன்;னாள்
ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
பீல்ட் மார்ஷல் தரத்தின் போது 5 நட்சத்திரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
ஜெனரல் நிலைக்கு 4 நட்சத்திரங்களும், பீல்ட் மார்ஷல் தரத்திற்கு 5
நட்சத்திரங்களும் வழங்கப்படுகின்றன.
முப்படைகளின் மரியாதை அணிவகுப்புகளுக்கு மத்தியில் புதிய தரத்திற்கான
அடையாளங்கள் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டன.
பீல்ட் மார்ஷல் தரம் வழங்கப்படும் நடைமுறை 13 வது நூற்றாண்டுக்கு
முன்னதான வரலாற்றை கொண்டுள்ள போதும், இலங்கைக்கு இது புதிய அனுபவமாகும்.
சர்வதேச நாடுகள் பலவற்றில் ஏற்கனவே பீல்ட் மார்ஷல் தரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஓய்வூதியம் பெறும் நிலை ஏற்படாது
எனவும் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Thanks:Hiru
No comments:
Post a Comment