இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையான கொழும்பு-
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை
9.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு பேலியகொட களனி பாலத்திற்கு அருகில் இந்த அதிவேக
நெடுஞ்சாலையினை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
4500 கோடி ாய் சீன நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக
நெடுஞ்சாலையானது சுமார் 26 கிலோமீற்றர் நீளமுடையது.
இதன் மூலம் கொழும்பிலிருந்து 20 நிமிடத்தில் கட்டுநாயக்கவுக்கு செல்ல
முடியும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நெடுஞ்சாலையானது திறந்து வைக்கப்பட்டதால் நீர்கொழும்பு மற்றும்
கண்டி வீதிகளின் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை இந்த நெடுஞ்சாலையினூடாக நாளொன்றிற்கு
சுமார் 15,000 இற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை ஜனாதிபதியினால் இந்த அதிவேக நெடுஞ்சாலை
திறந்துவைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்று மாலை முதல் வாகன போக்குவரத்து
இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகு ரக வாகனங்களுக்கு
பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவுக்கு செல்ல 300 ரூபாவும் ஜ-எல வரை
செல்ல 200 ரூபாவும் அறவிடப்படும்.
இதேவேளை 9 ஆசனங்களையுடைய வேன் மற்றும் 33 ஆசனங்களையுடைய பஸ்
வண்டிகளுக்கும் பேலியாகொடையிலிருந்து ஜா-எல வரை 350 ரூபாவும்
கட்டுநாயக்கவுக்கு 450 ரூபாவும் ஜா-எலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு 300
ரூபாவும் அறவிடப்படும்.
லொறி மற்றும் 33 க்கும் அதிகமான ஆசனங்களை கொண்ட பஸ்களுக்கும்
பேலியகொடையிலிருந்து ஜ-எல வரை 400 ரூபாவும் கட்டுநாயக்க வரை 600 ரூபாவும்
கட்டணமாக அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:http://adf.ly/YIEw0
No comments:
Post a Comment