தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

31 October 2013

குளிர்காலத்தில் கண்ணாடிகள் மூலம் முதல் தடவையாக ஒளிபெறும் நகரம்

வழமையாக குளிர் காலத்தில் சூரிய
ஒளி இன்றி இருண்டு கிடக்கும் நோர்வேயின் ஒரு நகரான
யூகானுக்கு (Rjukan மக்கள் தொகை 3,400)மூன்று இராட்சத
கண்ணாடிகள்(heliostats) மூலம் முதற்தடவையாக
இந்த ஆண்டு ஒளி கிடைத்துள்ளது.
ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த நகருக்கு,
அதனைச் சூழ்ந்துள்ள மூன்று
மலைகளால் குளிர் காலத்தில்
6 மாதங்களுக்கு சூரிய ஒளி கிடைக்காது. அந்த மலைகள் சூரிய
ஒளியை அந்த நகருக்கு கிடைக்காமல் மறைத்துவிடும். ஆகவே இந்த நகருக்கு
இராட்சத கண்ணாடிகளை பயன்படுத்தி இந்தக்
காலகட்டத்தில் ஒளி வழங்க வேண்டும் என்ற யோசனை 100
ஆண்டுகளுக்கு முன்னதாக முன்வைக்கப்பட்டது. ஆனால், அதற்கான தொழில்நுட்பம்
2003 இல்தான்
கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்காலத்தில் முதல் தடவையாக சூரியனை வரவேற்க இந்த நகரம்
தற்போது பெரும் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்பாராத ஒளி
கண்பார்வையை கெடுத்துவிடலாம் என்பதற்காக
அந்த நகர பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு எல்லாம் கூளிங்கிளாஸ்
வழங்கப்பட்டுள்ளது.
இது $ 847,000 டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.



Source:http://adf.ly/Ya8MG

28 October 2013

அவதானம்! P67799159 என்ற தொடர் இலக்கத்தை கொண்ட போலி 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள்

சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள்
மாலபே பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதோடு பணம் அச்சிட்ட
அச்சகமும் இன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட
அனைத்தும் போலி நாணயத் தாள்களும் இரண்டாயிரம் ரூபா நாணய
தாள்கள் என பொலிஸ் குற்ற புலனாய்வு திணைக்களம்
தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட அனைத்து போலி நாணயத்தாள்களிலும் P67799159
என்ற தொடர் இலக்கம் காணப்படுவதாகவும் இவ்வாறான
போலி நாணயத்தாள்கள் பல புழக்கத்தில் இருப்பதாகவும் அத்
திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே P67799159 என்ற தொடரிலக்கத்தையுடைய 2000
ரூபா நாணயத் தாள்கள் கிடைக்கப்பெறுமாயின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ்
நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம்
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.





Source:http://adf.ly/YNRFL

27 October 2013

கொழும்பு -கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையான கொழும்பு-
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை
9.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு பேலியகொட களனி பாலத்திற்கு அருகில் இந்த அதிவேக
நெடுஞ்சாலையினை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
4500 கோடி ாய் சீன நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக
நெடுஞ்சாலையானது சுமார் 26 கிலோமீற்றர் நீளமுடையது.
இதன் மூலம் கொழும்பிலிருந்து 20 நிமிடத்தில் கட்டுநாயக்கவுக்கு செல்ல
முடியும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நெடுஞ்சாலையானது திறந்து வைக்கப்பட்டதால் நீர்கொழும்பு மற்றும்
கண்டி வீதிகளின் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை இந்த நெடுஞ்சாலையினூடாக நாளொன்றிற்கு
சுமார் 15,000 இற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை ஜனாதிபதியினால் இந்த அதிவேக நெடுஞ்சாலை
திறந்துவைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்று மாலை முதல் வாகன போக்குவரத்து
இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகு ரக வாகனங்களுக்கு
பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவுக்கு செல்ல 300 ரூபாவும் ஜ-எல வரை
செல்ல 200 ரூபாவும் அறவிடப்படும்.
இதேவேளை 9 ஆசனங்களையுடைய வேன் மற்றும் 33 ஆசனங்களையுடைய பஸ்
வண்டிகளுக்கும் பேலியாகொடையிலிருந்து ஜா-எல வரை 350 ரூபாவும்
கட்டுநாயக்கவுக்கு 450 ரூபாவும் ஜா-எலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு 300
ரூபாவும் அறவிடப்படும்.
லொறி மற்றும் 33 க்கும் அதிகமான ஆசனங்களை கொண்ட பஸ்களுக்கும்
பேலியகொடையிலிருந்து ஜ-எல வரை 400 ரூபாவும் கட்டுநாயக்க வரை 600 ரூபாவும்
கட்டணமாக அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source:http://adf.ly/YIEw0

23 October 2013

மெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''

ிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள்,
பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை
கவனிப்பதில்லை.
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும்.
இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த
பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள்
எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்)
வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.
எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்)
வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண்
''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால்
தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4''
எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால்
உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.
எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற
உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்)
வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக்
பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7''
இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட
பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.
இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள்
தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம்
செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர்
நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர்
பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில்
வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது,
ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென
மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ
வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது
அவசியம்.
தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு
சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு
அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க
பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர்
வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை
பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின்
வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி''
நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''
என்றார்.

Source:http://adf.ly/Y2DTc

22 October 2013

வழுக்கைக்கு வந்துவிட்டது தீர்வு?

உலக அளவில் ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை.
ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது.
இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்.
தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க
ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை
தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த
முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை
என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை
எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை
என்றே பார்க்கப்படுகிறது.
ஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக
கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் டர்ரம்
பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும்
இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக
வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில் இருக்கும் நுண்ணிய திசுக்களை
எடுத்து, அவற்றை பரிசோதனைக்கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில்
வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில்
இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக
முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து
காட்டியிருக்கிறார்கள்.
மொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்துபேருக்கு ஆறுவாரங்களில்
புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த
பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும், டர்ரம்
பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஜஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள்
வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்கவேண்டிய தடைகள் இன்னும் சில
இருக்கின்றன என்கிறார்.
ஆனாலும் இந்த ஆய்வின் முடிவு, வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக
குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியப்பாட்டை
நிகழ்த்திக்காட்டியிருப்பதாக கூறுகிறார் அவர்.



Source:BBC

15 October 2013

இம்முறை ஹஜ் கடமையில் 1.38 மில். யாத்திரிகர்கள் பங்கேற்பு

இம்முறை ஹஜ் கடமையை நிறை வேற்ற 118 நாடுகளிலி ருந்து சுமார் 1.38
மில்லியன் யாத்திரிகர் சவூதி அரேபியா வந்திருப் பதாக அந்நாட்டின் உள்துறை
அமைச்சரும் ஹஜ் உயர்மட்டக் குழுவின் தலைவருமான இளவரசர் முஹம்மத் பின்
தையாப் அறிவித்து ள்ளார். இந்த யாத்திரிகர்கள் பாதுகாப்பாகவும்
சிக்கலின்றியும் நாட்டை வந்தடைந்ததாக இரு புனித பள்ளிவாசல்களின் பொறுப்பா
ளரான மன்னர் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1,379,531 வெளிநாட்டு ஹஜ் யாத்திரிகர்களில் 55 வீதமானவர்கள் அதாவது
752,424 ஆண்கள் என்றும் 627,107 பேர் (45 வீதம்) பெண் யாத்திரிகர்கள்
என்றும் இளவரசர் முஹம்மத் குறிப்பிட்டார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில்
இந்த ஆண்டில் 377,439 (21 வீதம்) வெளிநாட்டு யாத்திரிகர்களின் எண்ணிக்கை
குறைவடைந்துள்ளது. ஹஜ் கடமைக்காக 1.29 மில்லியன் யாத்திரிகர்கள் வான்
வழியாகவும், 72,000க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கடல் வழியாகவும்,
14,898 யாத்திரிகர்கள் தரைவழியாகவும் ஹஜ் கடமைக்காகக் வந்திருப்பதாக
இளவரசர் முஹம்மத் மேலும் கூறினார்.


Source:thinakaran .lk

14 October 2013

அரபா நோன்பின் மாண்பு

'அரபா தினம்' என்பது ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை
ஒன்பதாம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க
தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்)
அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை
முழுமைப்படுத்தினான். 'இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான்
முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு
செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக
ஏற்றுக் கொண்டுவிட்டேன்' (திருக்குர்ஆன் 5:3)
இந்த வசனம் ஹிஜ்ரி 10–ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின்
போதும், துல்ஹஜ் பிறை 9–ம் நாளான அரபாதினத்தின் போதும் தான் இறங்கியது.
இந்த வசனம் குறித்து அப்போதைய யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம்
கூறும்போது, 'நீங்கள் ஓர் இறை வசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும்
எங்களிடையே இறங்கியிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக்
கொண்டிருப்போம்' என்றார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், 'அது எப்போது
இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரபா (துல்ஹஜ் 9–ம்)
நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே இருந்தார்கள்
என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீது ஆணை! நாங்கள் அப்போது
அரபாவில் இருந்தோம்' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: தாரிக்பின்
ஷிஹாப் (ரஹ்) புகாரி: 4606)

'அரபா தான் ஹஜ்'
ஹஜ் என்பதே அரபா (வில் தங்குவது) தான். துல்ஹஜ் பத்தாம் இரவில்
அதிகாலைக்கு முன்பு ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால், அவர் ஹஜ்ஜை
அடைந்து கொள்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்:
அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி) நூல்கள்: அஹ்மது, அபூதாவூத், நஸயீ,
திர்மிதி)

அரபாவில் எங்கே தங்கவேண்டும்?
அரபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான்
தங்கவேண்டும் என்பதில்லை. அரபா மைதானத்தின் எந்த ஒரு இடத்தில்
வேண்டுமானாலும் தங்கலாம். துல்ஹஜ் 9–ம் நாளின் அதிகாலை 'சுபுஹ்' எனும்
தொழுகையை முடித்துவிட்டு, சூரியன் உதயமானபின்பு 'மினா' எனும்
இடத்திலிருந்து அரபாவை நோக்கி புறப்படவேண்டும். அரபாவிற்கு வந்து சேர
நண்பகலாக ஆகிவிடும். இந்த நண்பகலில் இருந்து மறுநாள் அதிகாலை வரைக்கும்
எப்போது வேண்டுமானாலும் அரபாவில் தங்கினாலோ,
அல்லது அரபா மைதானத்தை கடந்து சென்றாலோ புனித ஹஜ் நிறைவேறிவிடும்.
அரபாவில் இவ்வளவு நேரம்தான் தங்கவேண்டும் என்ற வரம்பு கிடையாது.

அரபாவில் என்ன செய்ய வேண்டும்?

அரபாவில் உலக அமைதிக்காகவும், உலக நன்மைக்காகவும், தாய் நாட்டின்
வளர்ச்சிக்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும்,
மனித வளத்திற்காகவும், பசியிலிருந்து விடுதலை பெறவும், பயத்திலிருந்து
விடுபடவும், நோயிலிருந்து நிவாரணம் பெறவும், கடனிலிருந்து நிம்மதி
பெறவும், மனிதவளம் மேம்படவும், மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம்
பிரார்த்திக்க வேண்டும். மேலும் அரபாவில் நண்பகல் தொழுகையான 'லுஹரையும்'
மாலை நேரத் தொழுகையான 'அஸரையும்' நண்பகலில் சேர்த்து தொழுதிட வேண்டும்.
'நபி (ஸல்) அவர்கள் அரபா நாளில் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்)
உங்களின் ரத்தங்களுக்கு உங்களின் செல்வங்களும் புனிதமானவை என்று
தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு தொழுகைக்கான அழைப்பு
(பாங்கு) கூறி, தொழுகையில் நிற்பதற்குரிய வாசகம் (இகாமத்) கூறி லுஹர்
தொழுது, பிறகு அஸரும் தொழுதார்கள்' (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல்:
முஸ்லிம்) நான் அரபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்)
அமர்ந்திருந்தேன். அவர்கள்
தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள்
. (அறிவிப்பாளர்: உஸாமா பின் ஸைத் (ரலி) நூல்: நஸயீ) புனித ஹஜ்ஜிக்கு
செல்லும் இஸ்லாமியர்கள் மக்கா நகரில் ஆங்காங்கே தங்கியிருந்து, குழு
குழுவாக தங்களது ஹஜ் கடமைகளை ஆற்றுவார்கள். இவர்களுக்குப் பிறகு, பின்
வரக்கூடியவர்கள், பின் வரக்கூடியவர்களுக்குப் பின் வருபவர்கள் என
தொடர்ந்து வந்துகொண்டே இருப்பவர்கள் கடமையை ஆற்றிவிட்டு, பின்
வரக்கூடியவர்களுக்கு இடமளிப்பார்கள். அரபாவைத் தவிர ஒட்டுமொத்தமாக ஒரே
இடத்தில், ஒரே நேரத்தில் யாரும் ஒன்று கூடமாட்டார்கள். அவரவர் தமது
கடமையை நிறைவேற்றிவிட்டு, அடுத்த கடமைக்கு முன்னேறி விடுவார். உலகின் பல
பாகங்கலிருந்தும் மக்காவுக்கு வருகை தரக்கூடிய அனைத்து முஸ்லிம்களையும்
ஒன்றிணைக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற தினம்தான் 'அரபா தினம்'. அன்றைய தினத்தில்
'அரபா திடலில்' அனைவரும் ஒன்று திரண்டு, நிறம், மொழி, குலம், நாடு, பணம்,
பதவி, சாதி, அமைப்பு அனைத்தையும் துறந்து, வேற்றுமையை குழிதோண்டி
புதைத்து, தீண்டாமையை வேரோடு சாய்த்து உலக ஒற்றுமையை நிலைநாட்டி
வைக்கிறார்கள். உலக ஒற்றுமையை வலியுறுத்தும் உலக மகாநாடு அரபா தினத்தில்,
அரபா திடலில் நடை பெறுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
மக்காவும், அதன் சுற்றுப்புறமும் ஆசீர்வதிக்கப்பட்ட பகுதியாகவும்,
மகத்துவம் நிறைந்த பகுதியாகவும் இருந்துவரும் வேளையில் அரபா எனும் பகுதி
ஆசீர்வதிக்கப்பட்ட, மகத்துவம் வழங்கப்பட்ட பகுதிக்கு அப்பால் இருக்கிறது.
இதனால் அன்றைய அறியாமைகால அரபிகள் (குறைஷிகள்) தங்களுக்கு மற்ற அரபுகளை
விடத்
தனிச்சிறப்பு உண்டு. காரணம் புனித கஅபா நமது ஊரில் இருப்பதும், நாம் அதன்
எல்லை வாசலில் இருப்பதும் தான் என கருதிவந்தனர். இதனால் அவர்கள் மக்களோடு
மக்களாக அரபாவில் தங்காமல் 'முஸ்தலிபா' எனும் இடத்தில் தங்குவார்கள்.
காரணம் 'முஸ்தலிபா' புனித கஅபாவின் எல்லைக்கு உள்ளேயும், 'அரபா' புனித
கஅபாவின் எல்லைக்கு வெளியேயும் இருப்பது தான். உயர் குலத்தவரான குறைஷிகள்
மட்டும் புனித எல்லையில் தங்கிவிட்டு, அரபா என்பது ஊருக்கு வெளியே
ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடமாக கருதி வந்தார்கள். இத்தகைய தீண்டாமைக்
கொடுமையை இஸ்லாம் பின்வருமாறு ஒழித்துக்காட்டியது. 'பின்னர் மக்கள்
(அனைவரும்) திரும்பி வருகின்ற (அரபா எனும்) இடத்திலிருந்து
திரும்பிவாருங்கள்' ( திருக்குர்ஆன் 2:199) (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்
போது) குறைஷியரும், அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிபாவிலேயே
தங்கிவிடுவார்கள். (கஅபாவின் புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்)
அவர்கள் (இந்த விஷயத்தில்) உறுதிமிக்கவர்கள் என பெயரிடப்பட்டு வந்தனர்.
மற்ற அரபுகள் அனைவருமே அரபாவில் தங்கி வந்தார்கள். இஸ்லாம் வந்த போது நபி
(ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் 9–ம் நாளில்) அரபா சென்று, அங்கே
தங்கியிருந்து விட்டு திரும்ப வேண்டும் என அல்லாஹ் (2:199 வது வசனத்தில்)
கட்டளையிட்டான். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) புகாரி: 4520) இஸ்லாத்தில்
தீண்டாமைக்கு அணு அளவுகூட அனுமதி இல்லை என்பதை அரபா தினம் படம்பிடித்து
காட்டுகிறது. பாடம் பெறுபவர்கள் பக்குவம் பெறலாம்! பயனை அடையலாம்!

அரபா நோன்பின் மாண்பு:
அரபா தினத்தில் ஹஜ்ஜிக்கு செல்லாதவர்கள் நோன்பு நோற்பது சிறப்பான
வழிபாடாகும். புனித ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் அரபா தினத்தில் அதிகமதிகம்
நன்மைகள் பலவற்றை புரிவதற்கும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும்,
புத்துணர்ச்சியுடனும் செயல்படுவதற்கும் ஹாஜிகள் நோன்பு நோற்கத்
தேவையில்லை! 'அரபா நாளின் நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம்
கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது கடந்துபோன ஓராண்டு மற்றும்
எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு
பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்' என கூறினார்கள்'. (அறிவிப்பாளர்:
அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்) அரபா தினத்தை விட சிறந்தநாள் வேறெதுவும்
கிடையாது. மற்ற தினங்களைவிட அன்றைய தினத்தில் அதிகமான நரக கைதிகளுக்கு
எல்லாம் வல்ல அல்லாஹ் விடுதலை அளிக்கிறான். அன்று அல்லாஹ் அடியார்களிடம்
நெருங்கி வந்து, அவர்களின் மாண்பு குறித்து வானவர்களிடம் பெருமை
பாராட்டுகிறான் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்).

–மவுலவி அ.செய்யது அலி,


நன்றி :dailythanthi .com

11 October 2013

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 KitKat)

கிட்காட் - ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடுத்த
பதிப்பிற்கான பெயர். மிகுந்த
எதிர்பார்ப்புடன் இருக்கும் கிட்காட் பற்றிய
புதிய தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட்

ஆண்ட்ராய்ட் பதிப்புகளின் பெயர்கள் இனிப்பின்
பெயர்களாகவும், ஆங்கில எழுத்துக்களின்
(Alphabets) வரிசைப்படியும் அமைந்திருக்கும்.

*Android 1.5 Cupcake
*Android 1.6 Donut
*Android 2.0 Eclair
*Android 2.2 Froyo
*Android 2.3 Gingerbread
* Android 3.0 Honeycomb
*Android 4.0 Ice Cream Sandwich
*Android 4.1 Jelly Bean

இந்த வரிசையில் Android 5.0 பதிப்பாக "Key Lime Pie" வெளிவரலாம் என
எதிர்பார்த்த நிலையில் Android 4.4, KitKat என்று தனது புதிய பதிப்பின்
பெயரை அறிவித்தது கூகுள்.

Have a Kit Kat! Have a Nexus Tablet!

ஆண்ட்ராய்ட் கிட்காட் பதிப்பை பிரபலப்படுத்த
முதல்கட்டமாக கிட் காட் சாக்லேட்டின்
தயாரிப்பாளரான நெஸ்ட்லே நிறுவனத்துடன்
இணைந்து போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்ட் படத்துடன்கூடிய கிட் காட்
சாக்லேட்டில் பிரத்யேக எண்கள் இருக்கும். அதனை www.android.com/kitkat
என்ற முகவரிக்கு சென்று உங்கள் விவரத்துடன்
கொடுத்தால் புதிய நெக்ஸஸ் டேப்லட் பரிசாக
பெறும் வாய்ப்பை பெறலாம்.

எதிர்பார்க்கப்படும் வசதிகள்

ஜெல்லி பீன் தோற்றத்திலிருந்து சில மாற்றங்களை செய்துள்ளதாக இணையத்தில் பரவும்
சில புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. மேலும்
android.com தளத்தில்
"It's our goal with Android KitKat to make an amazing Android
experience available for everybody."
என்று தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம்
குறைந்தபட்சம் 512 MB Ram கொண்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும்
இதை பயன்படுத்தலாம் என நம்பப்படுகின்றது.
இதுமட்டும் உண்மையானால் நிச்சயம் ஆப்பிள்
நிறுவனத்துக்கு பெரும் சவாலாக அமையும்.

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் இம்மாதம் வெளியீடு

இந்த மாதம் 15-ஆம் தேதி புதிய Nexus 5 மொபைலுடன் சேர்த்து கிட்காட்
பதிப்பை வெளியிடப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி :ப்ளாக்கர் நண்பன்

10 October 2013

25 மாவட்டங்களில் நாளை அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை

நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் நாளைய தினம்
(11) சுனாமி, மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட
அனர்த்தங்கள் தொடர்பான
முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு இடம்பெறும்
என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது. சர்வதேச அனர்த்தக்
குறைப்பு தினத்தை முன்னிட்டு இந்த
முன்னெச்சரிக்கை ஒத்திகை
முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த
முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாளை (11) வெள்ள அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு ஊட்டும்
நிகழ்வு அநுராதபுரம், பொலன்னறுவை,
வவுனியா, மொனராகலை, குருநாகல் ஆகிய
மாவட்டங்களில் முற்பகல் 11 மணியிலிருந்து 12
மணிவரை முன்னெடுக்கப்படும்.
மண்சரிவு அனர்த்த ஒத்திகை இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, கேகாலை, மாத்தளை,
கண்டி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2
மணியிலிருந்து 3
மணிவரை முன்னெடுக்கப்படும்.
சுனாமி ஒத்திகை அம்பாறை, மட்டக்களப்பு,
திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம்,
மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,
கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 3
மணியிலிருந்து 4
மணிவரை முன்னெடுக்கப்படும்.
சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்தினையின் போது ஹம்பாந்தோட்டை பொலிஸ்
பிரிவு மணிக்கோபுரம், திவினுவர
மீன்பிடி துறைமுக மணிக்கோபுரம்,
முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால்
மணிக்கோபுரம் என்பவற்றில்
ஒலி எழுப்பப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


Source:அத தெரண - தமிழ்

09 October 2013

விமான ஒலியால் இதய நோய், மூளைச் செயலிழப்பு அதிகமாகும் ? -

'விமான ஒலியால் நோய்
ஆபத்து அதிகரிக்கிறது'-- ஆய்வு


விமான ஒலி மிக அதிகமாக இருக்கும்
பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இதய நோய்
அல்லது ஸ்ட்ரோக் எனப்படும் மூளைக்கு ரத்தம்
எடுத்துச் செல்லும் குழாய்களில்
அடைப்பு ஏற்பட்டு மூளை செயலிழக்கும்
வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட மருத்துவ
ஆய்வொன்று தெரிவிக்கிறது. மேற்கு லண்டன் பகுதியில் உள்ள ஹீத்ரோ விமான
நிலையத்திற்கு அருகே வசிக்கும் சுமார் 35
லட்சம் மக்களை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இந்த
முடிவுக்கு வந்துள்ளனர். விமானங்களின் ஒலி மிக அதிகமாக இருக்கும்
பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஸ்ட்ரோக்
காரணமாகவோ அல்லது இதய நோய்
காரணமாகவோ மருத்துவமனைக்கு
அனுமதிக்கப்படுவது அல்லது இறக்கும்
நிகழ்வுகள் சாதாரணமாக மற்ற பகுதிகளில் இருப்பதைக் காட்டிலும் 10லிருந்து 20 சதவீதம்
அதிகமாக இருப்பதாகக்
கண்டறிந்திருக்கிறார்கள். விமான ஒலி மக்களின் ரத்த
அழுத்தத்தை அதிகப்படுத்துவது இதற்கு ஒரு
காரணமாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ்
மருத்துவ சஞ்சிகையில் இந்தக்
கட்டுரையை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்
கூறியிருக்கிறார்கள்.


Source:BBC

புதிய கட்டுநாயக்க அதிவேகப் பாதையில், 3 நாட்கள் இலவசமாக பயணிக்கலாம் (வீடியோ)

எதிர்வரும் 28ம் திகதி திறக்கவிருக்கும் கொழும்பு - கட்டுநாயக அதிவேக
பாதையை மூன்று நாட்களுக்கு இலவசமாக பொதுமக்கள் உபயோகிக்கலாமென துறைமுக
மற்றும் பெரும்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் நிர்மலா கொத்தலாவல
தெரிவித்துள்ளார். இதன்படி 23.24.25ம் திகதிகளில் பொதுமக்களுக்காக
திறந்திருக்கும் இவ் வீதியில் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளும்
இடம்பெறுமென அவர் மேலும் கூறியுள்ளார். கொழும்பு கட்டுநாயக்க வரை
செல்வதற்கு தற்போது உங்களுக்கு ஒரு மணித்தியாளதிற்கும் அதிக நேரம்
செலவாகும். எனினும் இன்னும் ஒரு சில தினங்களில் 20 நிமிடங்களில் அந்தப்
பயணத்தை நிறைவு செய்ய முடியும். குறித்த அதிவேக வீதிகளில் பயணிப்பதற்கான
சந்தர்ப்பம் 08-10-2013 ஊடகவியலாளர்களுக்கு கிடைத்தது.

www.youtube.com/watch?v=kuvwBbS4R0k

Thanks:jaffna muslim

08 October 2013

உலக சிறுவர் தினத்தில்இலங்கை சிறுவர்களுக்கு அதிர்ச்சி! மனிதஉரிமை ஆணைக்குழு விசாரணை

உலக சிறுவர் தினத்தன்று தரம்
ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள்
வெளியானமை குறித்து அரச நிறுவனங்களிடம்
கருத்தறிய இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 35 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் 10ம்
திகதி இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு
விடுத்துள்ளதாக அதன் தலைவர்
பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர், தேசிய சிறுவர்
பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்
உள்ளிட்ட குழுவினருக்கு இவ்வாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தன்று தரம்
ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சித்தியடைய தவறிய மாணவர்கள் சிறுவர்
தினத்தன்று வீட்டைவிட்டு வெளியில்
விரட்டப்பட்டமை, சூடு வைக்கப்பட்டமை,
திட்டப்பட்டமை, மனம் நோகடிக்கப்பட்டமை போன்ற
பல சம்பவங்கள் நாடு முழுவதும் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.


அத தெரண - தமிழ்

3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும்
உயிரியல் பேராசிரியர்கள்


மருத்துவதுறைக்கான நோபல் பரிசு, மனித
செல்கள்(கலங்கள்) குறித்த உரியியல்
ஆய்வுகளைச் செய்த
மூன்று பேராசிரியர்களுக்கு கூட்டாக
வழங்கப்படுகின்றது. இரசாயனங்களை உடலில் உள்ள செல்கள்
கொண்டு செல்லும் முறை குறித்த
இவர்களது ஆய்வுகளுக்காக இந்த
பரிசு அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அமெரிக்கார்களான ஜேம்ஸ் றொத்மன்,
ராண்டி ஷெக்மன் மற்றும் ஜேர்மனியில் பிறந்த
தோமஸ் சுதோவ்
ஆகியோருக்கு இது வழங்கப்படுகிண்றது. நொதிமங்கள் மற்றும் ஹோர்மோன்கள் போன்ற மனித
செல்களினால் தயாரிக்கப்படும் மூலக்கூறுகள்,
வெசிக்கல்ஸ் என்ற சிறு பொதிகளாக உரிய
நேரத்தில் உரிய
இடத்துக்கு எவ்வாறு கொண்டுசெல்லப்படுகின்றன
என்பதை இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீரிழிவு மற்றும் மூளை
குறைபாடுகள் போன்ற
நோய்கள் குறித்த ஆய்வுகளுக்கு இந்த
கண்டுபிடிப்பு உதவும்
என்று நம்பப்படுகின்றது.


Source:BBC

05 October 2013

களுத்துறை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலயம்,மாவட்டத்தில் சாதனை படைத்தது

வெளியாகியுள்ள 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்
அடிப்படையில் களுத்துறை முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயத்தில் 7
மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்

1. Aiman Fais 187 (District wise 1st)

2. Hafsa Fousul Careem 185 (District wise 2nd)

3. Rasla Rasool 170

4. Zainab Fayas 167

5. Ashfa Ali 161

6. Fathima Nifal 160

7. Nafra Niswan 157

Thanks:jaffna muslim

03 October 2013

பன்றி இறைச்சி இல்லாத பேக்கன், மது இல்லாத ஷாம்பெய்ன்: லண்டன் ஹலால் உணவுத் திருவிழா

இலங்கையிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும்
ஹலால் உணவுக்கு அண்மையில்
எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால் ஐக்கிய
ராஜ்ஜியத்திலோ முதல்முறையாக ஹலால் உணவுத்
திருவிழா ஒன்று சென்ற வாரக் கடைசியில்
அரங்கேறியது. "ஹலால் ஃபுட் ஃபெஸ்டிவெல் 2013" என்ற பெயரில்
நடக்கும் உணவுத் திருவிழாவின்
இயக்குநர்களில் ஒருவரான நோமன் கவாஜா இந்த
திருவிழாவின் நோக்கம்
பற்றி பிபிசி தமிழோசையிடம் விளக்கினார். "நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால்
உங்களுக்கு ஃபெர்ராரி சொகுசுக் கார் ஓட்டும்
உரிமை இல்லை என்று சொன்னால்
எப்படியிருக்குமோ அதுபோலத்தான் நீங்கள்
ஒரு முஸ்லிம் அதனால் நீங்கள் மிஷலின்
நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவு விடுதிகளில் சாப்பிட
முடியாது என்று சொல்வதும் இருக்கிறது.
முஸ்லிம்களுக்கும் அதுமாதிரியான
இடங்களில் சென்று சாப்பிட
உரிமை இருக்கிறது. அவர்களுக்கென சில
ஹலால் உணவுகளையும் அவ்விடுதிகள் பரிமாறுவது அவசியம்," என அவர்
வாதிட்டார். ஐக்கிய ராஜ்ஜியத்தில் மொத்தம் கிட்டத்தட்ட
முப்பது லட்சம் முஸ்லிம்கள் வாழுகின்றனர். நல்ல வேலையில் உள்ளவர்களாகவும், நல்ல
வருவாய் ஈட்டுபவர்களாகவும் பிரிட்டனின்
இரண்டாம் தலைமுறை முஸ்லிம்கள் குடியேறிகள்
பலர் உருவாகியிருக்கின்றனர். பிரிட்டனின் முஸ்லிம் மக்களுடைய வாழ்க்கைத்
தரம் உயர்ந்துவருகின்ற சூழலில்
அவர்களுக்குரிய
உணவுகளை தயாரித்து வழங்குவதில் வியாபார
நலன் இருப்பதை பிரிட்டிஷ்
உணவு நிறுவனங்களும், மேட்டுக்குடி மக்களுக்கான
உணவு விடுதிகளும் உணர்ந்துள்ளன
என்பதை பறைசாற்றுவதாக இந்த
நிகழ்வு அமைந்திருந்தது. ஹலால் என்றால் என்ன? ஹலால் என்பது
முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தினால்
அனுமதிக்கப்பட்ட விஷயங்களைக் குறிக்கிறது. உணவு என்று வரும்போது, ஆரோக்கியமாகவும்
உயிரோடு இருக்கும்
விலங்குகளை மட்டுமே அறுக்க வேண்டும்,
விலங்கின் குரல்வளையை ஒரே வெட்டில் வேகமாக
அறுத்து, அதனுடைய எல்லா ரத்தத்தையும்
முழுமையாக வடியவிட வேண்டும் என்றுள்ளது. பன்றி இறைச்சியை சாப்பிடக்கூடாது,
மது கலந்திருக்கக்கூடாது போன்ற
நிபந்தனைகளும் உண்டு. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில்,
உணவுக்காக விலங்குகளைக் கொல்லும்போது,
அது அறவே வலியை உணராமல் இருக்கவேண்டும்
என்பதற்காக
அதனை உணர்விழக்கச்செய்து பின்னர் கொல்ல
வேண்டும் என்ற விதி உள்ளது. தலையில் இரும்பு குட்டி ஒன்றை சட்டென
அடித்தோ, மின்சாரத்தை பாய்ச்சியோ,
சுயநினைவு இழக்கச்செய்கிற
மருந்து கொடுத்தோ விலங்கை உணர்விழக்கச்
செய்யும் வழிமுறைகள் கையாளப்படுகின்றன. ஆனால் முஸ்லிம் சமூகத்தாருக்கும், யூத
சமூகத்தாருக்கும் மதக்
காரணங்களை முன்னிட்டு இந்த விதியில்
இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஹலால் முறையில் சுயநினைவோடு இருக்கும்
விலங்கைக் கொல்வதில் மிருகச்
சித்ரவதை அடங்கியிருக்கிறது என
மேற்குலகில் பலர் கருதுகின்றனர். ஆனால் ஹலால் முறையில் விலங்குகளைக்
கொல்வதில் சித்ரவதை இல்லை என உணவுத்
திருவிழாவின் தோற்றுநர் இம்ரான் கவுசர்
வாதிடுகிறார். "கூரான கத்தியால் கழுத்தை ஒரே வெட்டில்
அறுக்க வேண்டும் என்பதேகூட
விலங்குக்கு வலியைக் குறைக்க வேண்டும் என்ற
நோக்கில்தான்," என்கிறார் அவர். உணர்விழக்கச் செய்து அறுத்தால் ஹலாலா?
இன்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் சந்தையில்
கிடைக்கும் ஹலால் இறைச்சியில் 80
சதவீதத்துக்கும்
அதிகமானவை முன்கூட்டியே உணர்விழக்கச்
செய்து பின்னர் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட
விலங்குகள்தான். விலங்கை உணர்விழக்கச் செய்து பின்னர் ஹலால்
முறையில் அறுத்தாலும் அது ஹலால்
ஆகுமா என்ற
வேறு ஒரு கருத்தொற்றுமை இல்லாத
விவகாரமும் இதில் உள்ளது. இந்த ஹலால் உணவுத் திருவிழாவுக்கு சில
எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. ஆனால்
தற்போது லண்டன் வாழ் மக்களில் பத்தில் ஒருவர்
முஸ்லிம் என்பதை சுட்டிக்காட்டி மாநகரின்
மேயர் போரிஸ் ஜான்சன் இந்த
நிகழ்ச்சிக்கு ஆதரவு நல்கியிருந்தார்.


source:bbctamil

02 October 2013

பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க

நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள
RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற
முடியாது. RAM இன் விலை காரணமாக
அதை சிலர் வாங்காமல் இருப்போம்.
மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக
பயன்படுத்தலாம்வாங்க. பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். My Computer
மீது Right Click செய்யவும். இப்போது Properties என்பதை செலக்ட்
செய்யவும். இப்போது அதில் Advanced Option/ Advanced
settings செல்லவும். இப்போது வரும் Pop- up விண்டோவில்
Performance என்பதில் Settings ஐ கிளிக்
செய்யவும். இப்போது வரும் புதிய pop-up விண்டோவில்
Advanced என்பதை செலக்ட் செய்யவும். இப்போது Change என்பதை தெரிவு
செய்யவும். இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள
பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு,
கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென்
ட்ரைவை தெரிவு செய்யவும். இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப
அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். இப்போது இதனை save செய்யவும்.
கம்ப்யூட்டரை Restart செய்யவும்.

Source:karpom .com/2011/04/ram.html

01 October 2013

துருக்கியில் ஹிஜாப் தடை நீக்கம்

துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகனின் புதிய அரசியல் சீர்திருத்த
திட்டத்தின் கீழ் அந்நாட்டு அரச நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிய
விதிக்கப்பட்டிருக்கும் தடை விலக்கிக் கொள்ளப்படவுள்ளது. "பொது
நிறுவனங்களில் ஹிஜாப் தடையை அகற்றுகிறோம்" என்று பிரதமர் அறிவித்தார்.
அதேபோன்று புதிய சீர்திருத்த திட்டத்தில் நாட்டின் குர்த்கள் மற்றும்
ஏனைய சிறுபான்மையினருக்கு மேலும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில்
குர்திஷ் ஆதரவு மற்றும் சிறு கட்சிகளுக்கு பாராளுமன்றத்திற்கு நுழைய
இருந்த தடை விலக்கிக் கொள்ளப்படவுள்ளதோடு தனியார் பாடசாலைகளில் குர்திஷ்
மொழி கல்விக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த தருணம் என்று நேற்று புதிய அரசியல் சீர்திருத்தத்தை அறிவித்த
எர்டொகன் கூறினார். "துருக்கி நகரங்களுக்கு மீண்டும் குர்திஷ் பெயர்
வைக்கப்படும். குர்திஷ் எழுத்துக்கான தடை விலக்கிக் கொள்ளப்படும்" என்று
எர்டொகன் குறிப்பிட்டார். துருக்கியில் தடை செய்யப்பட்ட குர்திஷ்
தொழிலாளர் கட்சியுடனான அரசின் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாகவே
இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அரச சேவையில்
இருக்கும் பெண்களுக்கு நடைமுறையில் இருந்த உடை கட்டுப்பாடு
விலக்கிக்கொள்ள எர்டொகனின் அரசியல் சீர்திருத்தத் திட்டத்தில் அறிவிக்கப்
பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு ஹிஜாப் அணிய அனுமதியளிக்கப்படுகிறது.
அதேபோன்று ஆண்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம்
அரச சேவையில் இருக்கும் ஆண்களுக்கு தாடி வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மதச்சார்பற்ற துருக்கியில் இஸ்லாமிய பின்னணியுடன் ஆட்சிக்கு வந்த பிரதமர்
எர்டொகன் அரசு, நாட்டின் ஹிஜாப் தடையை விலக்க நீண்ட காலமாக போராடி வந்தமை
குறிப்பிடத்தக்கது.

நன்றி:தினகரன்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது;198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரி மாணவன் முன்னிலை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
தற்போது வெளியாகியுள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் www.doenets.lk என்ற
இணையதளத்திற்கூடாக பார்வையிட முடியும்.
வெளிவந்துள்ள 5ம் தர புலமைப் பரிசில்
பரீட்சை பெறுபேறுகளின் படி 198 புள்ளிகளைப்
பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன்
சந்தரு தத்சரா பலஹேவா அகில
இலங்கை ரீதியில் அதிக புள்ளிகள் பெற்ற
மாணவராக முன்னிலையில் இருப்பதாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


Source:adaderana