தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

26 January 2014

'பூமிக்கு வெளியிலும் உயிர்கள்': இலங்கை விண்கற்களின் செய்தி

'அரலகங்விலவில் விழுந்த விண்கல்'


இலங்கையில் 2012-ம் ஆண்டின் இறுதியிலும் 2013-ம் ஆண்டின் முற்பகுதியிலும்
விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக
பாதுகாக்குமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானியான சந்திரா
விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து இதற்கான கோரிக்கையை
முன்வைத்துள்ளார்.
அதன்படி, பொலநறுவையை அண்டிய அரலகங்வில பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம்
மிக்க இடமாக பாதுகாக்கப்பட உடனடி நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக
பிபிசி தமிழோசையிடம் பேசிய விஞ்ஞானி சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.
'முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் கிடைத்த விண்கற்கள், பூமியை
கடந்தும் உயிர்கள் வாழக்கூடும் என்பதற்கு நிரூபணம்' என்று சந்திரா
விக்ரமசிங்க கூறினார்.
அரலகங்வில என்ற கிராமத்தில் விவசாயிகள் கண்டெடுத்திருந்த கற்களை நாங்கள்
ஆய்வுக்குட்படுத்தி இருந்தோம். ஆனால் ஆரம்பத்தில் அவை வழமையான
விண்கற்களுக்குரிய அடிப்படை தகைமைகளைக் கொண்டிருக்கவில்லை என்று
கருதப்பட்டதால் பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மட்டுமன்றி எங்களாலும்
அவை விண்கற்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் இருந்தன'
என்றார் விக்ரமசிங்க.
'அவை ஏற்கனவே கிடைத்திருக்கின்ற விண்கற்களைவிட முற்றிலும் வேறுபட்டு
இருந்தமையால் தான் இந்த சந்தேகம் வந்திருந்தது. ஆனால் அமெரிக்காவிலும்
ஜப்பானிலும் நடத்தப்பட்ட உயர் ரக இரசாயன ஆய்வுகளின் முடிவில் இவை
உண்மையில் விண்கற்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது' என்றும் அவர்
தமிழோசையிடம் கூறினார்.

அரலகங்வில- 'வரலாற்றுத் திருப்புமுனைக்குரிய இடம்

இலங்கையில் கிடைத்த இந்த விண்கற்கள் முன்னெப்போதும் வழங்காத, இன்னொரு
புதிய வரலாற்று திருப்புமுனையான தகவலையும் தந்திருப்பதாக பேராசிரியர்
சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.
'இந்த விண்கற்களில் நுண்ணுயிர் படிமங்கள் இருப்பது வாதப்பிரதிவாதங்கள்
இன்றி உறுதியாகியிருந்தது. வானிலிருந்து விழுந்த இந்த விண்கற்களில்
இவ்வாறான உயிர்படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் உயிர் என்பது
பூமியையும் தாண்டிய பேரண்ட பண்புகளைக் கொண்டது என்பது
நிரூபணமாகியிருக்கிறது' என்றார் அவர்.
உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்ட ஒரு விடயமல்ல என்பதுதான் இந்த
விண்கற்கள் மூலம் கிடைத்துள்ள முடிவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேராசிரியர் அவர்களே, இந்தக் கற்கள் பூமியில் வந்து விழுந்தபின்னர் தான்
ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பூமியில் வந்துசேர்ந்த பின்னர் கூட அவற்றில்
இந்த மாற்றங்கள் நடந்திருக்கலாம் அல்லவா? என்று தமிழோசை வினவியது.
பாதுகாக்கப்படும் பிரதேசத்தில் தொடர்ந்தும் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன
'இந்தக் கற்கள் பூமியில் நீண்டகாலத்திற்கு இருந்திருந்தால் நீங்கள்
சொல்வது சரியாகப்படலாம். ஆனால் அதற்கு நீண்டகாலம் எடுக்கும். ஆனால்,
இங்கு நாங்கள் ஆராய்ச்சி நடத்திய கற்கள் விழுந்து சில மணிநேரங்களில்
கண்டெடுக்கப்பட்டவை. அவை வானிலிருந்து விழுந்தவை தான் என்பதிலும்
சந்தேகம் ஏதுமில்லை. அதில் நுண்ணுயிர் படிமங்கள் இருந்தன என்பதிலும்
சந்தேகமில்லை' என்றார் பிரிட்டனின் பாக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண்
உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரும் முன்னணி விஞ்ஞானியுமான
பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க.
உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்டது என்கின்ற கோட்பாடுகளுக்கு
மாறான வாதத்துக்கு இலங்கையில் கிடைத்த விண்கற்கள் ஆதாரமாக அமைவதாகவும்
பேராசிரியர் விக்ரமசிங்க சுட்டிக்காட்டுகிறார்.
இதனாலேயே, குறித்த விண்கற்கள் கிடைத்த அரலகங்வில பிரதேசத்தை
பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிக்கும்படி ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
மீட்ரோய்ட்எனப்படும் விண்கற்கள்,கொமெட்எனப்படும் வால் வெள்ளிகள் அல்லது
எரிநட்சத்திரங்களின் சிதைவுகள். அதாவது வால்வெள்ளிகள் சூரியனுக்கு
அருகில் வரும்போது அவை எரிந்து விழும் சிதைவுகளே விண்கற்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

Source:bbctamil

23 January 2014

பல்கலைக்கழக அறையில் தனது தந்தையை தங்கவைத்து பராமரித்து வரும் மாணவன்

பல்கலைக்கழக கற்கைநெறியை தொடரும் தனது கனவு நிறைவேறுவதற்­
காக பாரிசவாத பாதிப்புக்குள்ளாகி உடல் செயலி­
ழந்து தனது முழு நேர கவனிப்பில் இருக்க வேண்டிய நிலையிலி­
ருந்த தந்தையை அலட்சியம் செய்து பிரிந்து செல்ல விரும்பாத மக­
னொருவர், தனது தந்தையை பல்கலைக்கழகத்தில் தான் தங்கியிருந்த
அறைக்கு அழைத்து வந்து பராமரித்துவரும் நெஞ்சை நெகிழ­ வைக்கும் சம்பவம்
சீனாவில் இடம்பெற்றுள்ளது.
மத்திய சீனாவில் அன்குயி மாகாணத்திலுள்ள லியுவான் நகரைச்
சேர்ந்த குவோ ஷிஜுன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு தனது தந்­
தையை பராமரித்தவாறு பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வரு­
கிறார். குவோ ஷிஜுனின் தாயாரும் மனநலப் பாதிப்புக்குள்ளாகி பிறரின்
முழு நேர கவனிப்பில் இருக்க வேண்டிய நிலையிலுள்ளமை குறிப்­
பிடத்தக்கது.
அதன் காரணமாக சிறு வயதிலேயே தனது தாயாரை பராமரிக்க வேண்­
டிய நிலைக்கு குவோ ஷிஜுன் உள்ளானார்.
இந்நிலையில் நிர்மாண தொழிலாளியான அவரது தந்தை பாலமொன்றில் பணியாற்றிய
வேளை 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்­
ததால் படுகாயத்துக்குள்ளாகி பாரிச வாத பாதிப்புக்குள்­
ளானார்
இதனால் ஏற்கனவே தனது தாயாரைக் கவனிக்க வேண்டிய நிலையிலி­
ருந்த குவோ ஷிஜுனின் பொறுப்பு இரு மடங்காக அதிகரித்தது.
அளவுக்கதிகமான குடும்ப பாரத்தை சுமக்க நேரிட்ட போதும், தனது கல்வியை
கைவிடாத அவர் சீனாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழ­
கத்திற்கு தெரிவானார். இதனையடுத்து குடும்ப பொறுப்புக்காக பல்கலைக்கழக கல்­
வியை தியாகம் செய்வதா அல்லது பல்கலைக்கழக கல்விக்காக குடும்ப
பொறுப்பை அலட்சியம் செய்வதா என்ற பெரும் குழப்ப
நிலைக்கு குவோ ஷிஜுன் உள்ளானார்.
அவரது மனநலம் பாதிக்கப்பட்ட தாயாரை பராமரிக்கும்
பொறுப்பை அவரது பாட்டாவும் பாட்டியும் ஏற்றுக்கொண்ட போதும், பாரிசவாத
பாதிப்புக்குள்ளாகிய தந்தையை பராமரிக்க எவரும்
முன்வரவில்லை.
இந்நிலையில் தீவிரமாக சிந்தித்த குவோ ஷிஜுன், குறிப்பிட்ட பல்­
கலைக்கழக நிர்வாகத்தை அணுகி தனது நிலையை விபரித்துள்ளார்.
அவரது நிலைமையை அறிந்து அவர் மீது அனுதாபம் கொண்ட பல்கலைக்க­
ழக நிர்வாகம், பல்கலைக்கழக வளாகத்தில் குவோ ஷிஜுனுக்கு வழங்­
கப்பட்டிருந்த அறையில் அவரது தந்தையை வைத்து பராமரிப்ப­
தற்கு அவருக்கு அனுமதியளித்துள்ளது. தற்போது குவோ ஷிஜுன் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள
தனது அறையில் தனது தந்தையை தங்க
வைத்து பாடசாலை பாடங்களிடையே அவரை கவனித்து வருகிறார்.
அவர் தனது நண்பர்களிடமும் உறவினர் களிடமும் பணத்தைக் கடனாகப்
பெற்றே தனது கல்வியைத்
தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: http://adf.ly/cV9rj

22 January 2014

ஐ.சி.சி. இருபது–20 உலகக்கிண்ண இலங்கையின் உத்தேச குழாம் அறிவிப்பு

இருபது-–20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கையின் உத்தேச
குழாமில் சிறிய இடைவெளிக்குப்பின்னர் தொடக்க வீரர் உபுல் தரங்க
இணைக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐ.சி.சி.யின் இருபது–20 உலகக்­
கிண்ண தொடருக்கான இலங்கையின் 30 பேர் கொண்ட உத்தேச குழாம்
அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம்
திகதி தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் 15 பேர் கொண்ட
இறுதி அணி இக்குழாமிலிருந்தே தெரிவு செய்யப்படவுள்ளது. இந்நிலையில்
டினேஷ் சந்திமால் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள
இக்குஇழாமில் தொடக்க வீரர் உபுல் தரங்க, தம்மிக்க பிரசாத், ஜீவன்
மென்டிஸ் மற்றும் இசுரு உதான போன்ற வீரர்கள் சிறிய இடை
வெளிக்குப் பின்னர் தேசிய இருபது-20 அணிக்கான பரிசீல­
னைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
டினேஷ் சந்திமால், திலகரட்ண டில்ஷான், குசால் ஜனித் பெரேரா,
மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, அஞ்சலோ மத்தியூஸ்,
லஹிரு திரிமன்ன, உபுல் தரங்க, அஷன் பிரியஞ்சன், கித்துருவன்
விதானகே, அஞ்சலோ பெரேரா, லசித் மலிங்க, நுவான் குலசேகர,
திஸர பெரேரா, சுரங்க லக்மால், ஷமின்ட எரங்க, தம்மிக்க பிரசாத்,
நுவான் பிரதீப், டில்ஹார லொக்குஹெட்டிகே, சச்சித்திர சேனநா­ யக்க, ரங்கன
ஹேரத், அஜந்த மென்டிஸ், டில்ருவான் பெரேரா, சீக்­
குகே பிரசன்ன, ஜீவன் மென்டிஸ், றமித் றம்புக்வெல்ல, சத்துரங்க டீ
சில்வா, மிலிந்த சிரிவர்தன, கோசல குலசேகர, இசுரு உதான.
Source: http://adf.ly/cTApD

19 January 2014

மூன்று மாடிக்கட்டிட திறப்புவிழா

அல் -ஹஸனியா  ம.வி . மூன்று மாடிக்கட்டிட  (ZAM BUILDING 1)
திறப்புவிழா இன்று இனிதே நடைபெற்றது .இக் கட்டிடத்தை
அமைத்துத்தந்த பிரபல கொடைவள்ளலும்  ZAM GEM
உரிமையாளருமான ரிபாய் ஹாஜியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.













16 January 2014

மேற்குக்கரை பள்ளிவாசல் மீது யூத குடியேற்றவாசிகள் தீவைப்பு

பலஸ்தீனின் மேற்குக் கரை, சல்பித் கிராமத்தில் இருக்கும் பள்ளிவாசல்
ஒன்று கடும்போக்கு யூதக் குடியேற்ற வாசிகளால் தீமூட்டப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை தீ வைக்கப்பட்ட இந்த பள்ளிவாசலின் ஒரு பகுதி
சேதமாகியுள்ளதோடு, பள்ளிவாசல் சுவர்களில் இனவாத வாசகங்களும்
எழுதப்பட்டுள்ளன. அலி இபின் அபூ தாலிப் பள்ளிவாசல் நேற்று அதிகாலை 3.30
மணியளவில் தீமூட்டப்பட்டிருப்பதாக நகர மேயர் அயூப் அபூ ஹலாஹ், அனடொலு
செய்திச் சேவைக்கு கூறினார். 'தீ பரவும் முன்னர் ஊர் மக்கள் ஒன்றிணைந்து
அணைத்து விட்டனர்' என்று அவர் கூறினார். யூத குடியேற்றவாசிகளால்
பள்ளிவாசல் சுவரில் 'அறபுகள் ஒழிக', 'முஸ்லிம்களுக்கு எதிராக
பழிதீர்க்கப்படும்' என்று ஹிப்ரு மொழியில் இனவாத வாசகங்கள்
எழுதப்பட்டிருந்ததாகவும் நகர மேயர் குறிப்பிட்டார். எனினும் இது குறித்து
இஸ்ரேல் தரப்பில் உடன் எந்த பதிலும் வெளியாகவில்லை. மேற்குக் கரையில்
இருக்கும் பலஸ்தீன பள்ளிவாசல்கள் மற்றும் சொத்துக்களை இலக்கு வைத்து யூத
குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் அண்மைய மாதங்களில் அதிகரித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமை அமைப்பு அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த
2013 இன் ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையான காலப் பகுதியில் யூத
குடியேற்றவாசிகளின் தாக்குதல்களால் குறைந்தது 145 பலஸ்தீனர்கள்
காயமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மொத்தம் 91
தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
Source: http://adf.ly/cAkbF