ஊர் செய்திகள்
date
26 August 2013
சிரிய இரசாயன தாக்குதல்: தீவிர நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகள் ஆலோசனை
சிரிய இரசாயன தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்கா மற்றும் அதனது கூட்டு நாடுகள் எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் பராக் ஒபாமா தனது ஆலோசகர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூடனும் நேற்று முன்தினம் தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சிரியா தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரு நாட்டு தலைவர்களும் எவ்வாறான நடவடிக்கையை எடுப்பது என்பது பற்றி ஆலோசித்ததாக அந்த செய்திக் குறிப்பில் விபரிக்கப்படவில்லை. அதேபோன்று இந்த விடயத்தில் தீர்மானம் எட்டுவதற்கு ஒபாமா நிர்வாகம் கால எல்லையை நிர்ணயித்ததா? என்பது பற்றியும் தெளிவுபடுத்தப் படவில்லை. ஆனால் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு ஒபாமா தீர்மானித்தால் பென்டகன் அதற்கு தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செய லாளர் சக் ஹேகல் நேற்று தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு தயாராக இருக்கும்படி ஜனாதிபதி ஒபாமா கோரினால் நாம் அனைத்து திடீர் முடிவுகளுக்கும் தயாராகவே இருக்கிறோம். எந்த வகையான தேர்வாக இருந்தாலும் நாம் அதற்கு தயாராகவே இருக்கிறோம். அதனை செயற்படுத்துவோம் என்று ஹேகல் வலியுறுத்தினார். எனினும் சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் நடத்தப்பட்ட இந்த இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை திரட்டுமாறு ஒபாமா கோரியுள்ளார். இந்த தாக்குதலில் சுமார் 1300 பேர் அளவில் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. “நட்பு நாடுகள், தாக்குதல் சம்பவத்தை நேரில்கண்ட ஆதாரங்கள் மற்றும் கொல்லப்பட்டோரது பிரேத பரிசோதனைகளை கொண்டு அமெரிக்க உளவு பிரிவு சம்பவம் குறித்த உண்மைத் தன்மையை திரட்டி வருகிறது" என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி, சிரிய வெளியுறவு அமைச்சர் லபித் அல் முவல்லம்மை கடந்த வியாழக்கிழமை தொடர்புகொண்டு இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பகுதிகளில் ஆய்வு நடத்த ஐ. நா. நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தார். “இந்த விடயத்தில் சிரிய அரசுக்கு மறைக்க ஒன்றுமில்லை என்றால் பாதிக்கப்பட்ட பகுதியை முடக்கிவைத்து தாக்குதல் நடத்துவதை நிறுத்தி, அங்கு சோதனை நடத்த உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்” என்று கெர்ரி வலியுறுத்தினார். இதனிடையே பிரிட்டன் பிரதமர் கெமரூனின் பேச்சாளர் ஒருவர் வெளியிட்ட தகவலில், சிரியாவில் இராசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கு கடுமையாக பதிலளிக்க பிரிட்டன் பிரதமருக்கும், ஒபாமாவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். புதன்கிழமை டமஸ்கஸ ¤க்கு அருகில் சிரிய அரசினால் தனது சொந்த மக்கள் மீதே நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர் என்று மேற்படி பேச்சாளர் கூறியுள்ளார். டேவிட் கெமரூன் இது தொடர்பில் கனடா பிரதமர் ஸ்டிபன் ஹாப்பருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் சிரியாவின் தற்போதைய நிலவரத்திற்கு சரியான பதிலடிகொடுக்க இரு தலைவர்களும் இணங்கியதாக கெமரூனின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் இரசாயன ஆயுதம் பயன்படுத்தியிருந்தால் அவர் சிகப்பு எல்லையை தாண்டிவிட்டதாக தொடர்ந்து எச்சரித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இது சிரியாவுக்கு எதிரான கட்டாய நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரசாயன தாக்குதல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் 1980 களில் சதாம் ஹுஸைனின் ஈராக் அரசு, குர்திஷ் கிளர்ச்சியாளர் பகுதியில் ஈரான் படைகளுக்கு எதிராக நடத்திய இரசாயன தாக்குதலுக்கு பின்னர் அதிக உயிர்களை பலிகொண்ட தாக்குதலாக வரலாற்றில் இடம்பிடிக்கும். எனினும் சிரிய அரசு இந்த தாக்குதலை நிராகரிப்பதோடு, கிளர்ச்சியாளர்கள் மீது அது பலி சுமத்தி வருகிறது. இந்த தாக்குதல் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு சாத்தியத்தை ஏற்படுத்தியிருப்பதாக சக் ஹேகல் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார். ஆனால் அவ்வாறான ஒரு இராணுவ நடவடிக்கை அமெரிக்கா மத்திய கிழக்கில் மேலுமொரு நீண்ட யுத்தத்திற்கு முகம்கொடுக்கவேண்டியதாக இருக்கும் என ஒபாமா கூறியிருந்தார். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அந்நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடத்தலாம் என்று பிரான்ஸ் கருத்து தெரிவித்துள்ளது. இதனிடையே ஐ. நா. துணைச் செயலாளர் ஏஞ்சலா கெய்ன் சனிக்கிழமை சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைந்தார். சிரியாவில் இரசாயன ஆயுதங்களால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐ. நா. நிபுணர்கள் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் அவர் கோர உள்ளார். இதற்காக சிரியா அரசுப் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துவார். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விரிவான விசாரணை தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று பான் கீ மூன் ஏற்கெனவே வலியுறுத் தியுள்ளார்.
நன்றி:தினகரன்
25 August 2013
ஷஹீதான தனது மகள் அஸ்மா பெல்தாகிக்கு அவரது தந்தை முஹம்மது பெல்தாகி எழுதிய கடிதத்தை பார்த்து துருக்கி பிரதமர் கண்ணீர் விட்டு அழுதார்.
எகிப்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரி அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருந்த போது சர்வாதிகார இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அஸ்மா பெல்தாகிக்கு அவரது தந்தையும், இஃக்வானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்ட்டியின் பொதுச் செயலாளருமான முஹம்மது பெல்தாகி எழுதிய கடிதத்தை பார்த்து துருக்கி
பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கண்ணீர் விட்டு அழுதார். தனியார் தொலைக்காட்சி சானலின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட எர்துகானிடம்,
அஸ்மாவுக்கு அவரது தந்தை எழுதிய கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது. கடிதத்தை படிப்பதை கவனமாக கேட்ட எர்துகானின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. சில நிமிடங்கள் மவுனமாக இருந்த எர்துகான், பின்னர் கண்ணீரை துடைத்துவிட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார். முஹம்மது பெல்தாகி, தன் அன்பு மகள் அஸ்மாவுக்கு எழுதிய கடிதம்: நேசத்துக்குரிய என்னருமை மகளே! எனக்கே ஆசானாக மாறிய ஷஹீதா அஸ்மா
பெல்தாகியே! நான் உனக்கு பிரியாவிடை வாழ்த்து சொல்ல வரவில்லை. நாளை நாம் சந்திப்போம் என்று சொல்லத்தான் வந்தேன். நீ அநியாயத்திற்கெதிராக தலைநிமிர்ந்து வாழ்ந்தாய். அதன் அனைத்து விலங்குகளையும் நிராகரித்தாய். எல்லையற்ற சுதந்திரத்தை காதலித்தாய். இந்த உம்மத்தை மீளெழுச்சி பெறச் செய்யும் வழிகளையும் அது தன் சொந்த நாகரீகத்தை மீளவும் புதிதாய் அடைவதற்கான புதிய
திசைகளையும் அமைதியாக தேடினாய். உன்னுடைய வயதை ஒத்தவர்கள் ஈடுபட்டிருந்த செயற்பாடுகளில் நீ ஈடுபடவில்லை. பாரம்பரிய
கல்வி முறை உமது அபிலாஷைகளை, உனது நலன்களை நிறைவேற்றாதபோதிலும், எப்போதும் நீதான் வகுப்பில் முதலாவதாக வந்தாய். உனது இந்த சொற்ப வாழ்நாளில் உனக்கருகே இருந்து அன்பை சுவாசிக்க முடியவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கவும் உனக்கருகே இருந்து கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்கவும் எனது நேரம் இடம் தரவில்லை. கடைசியாக நாம் சாவதானமாக அமர்ந்திருந்த றாபியா மைதானத்தில் வைத்து
நீ என்னிடம் ஆதங்கப்பட்டாய்:
"எங்களுடன் இருந்து கொண்டே நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள்." நாம் பரஸ்பரம் சந்தோஷமாயிருந்து அனுபவிப்பதற்கு இந்த வாழ்வு நமக்கு இடம் தராது என நான் சொன்னேன். நாம் அருகருகே இருந்து பரஸ்பரம் மகிழ்வுறும் இன்பம் சுவனத்தில் நமக்கு கிடைக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்தேன். நீ
ஷஹீதாவதற்கு இரு நாட்களுக்கு முன்பு உன்னை நான் மணமகள் ஆடையுடன் கனவில் கண்டேன். அதில் வர்ணிக்க முடியா அழகுடன் பளிச்சிட்டுக் கொண்டிருந்தாய். நீ எனக்கருகில் தூங்கிக் கொண்டிருந்த வேளை, "இந்த இரவு உனக்கு திருமண நாளா?" என்று நான் உன்னிடம் இரகசியமாகக் கேட்டேன். ஆனால், மாலையில் அல்ல, பகல் நேரத்திலே என்றுஎனக்கு நீ சுவனத்து திருமண
நாளை அறிவித்துவிட்டு விடை பெற்றுவிட்டாய். வியாழனன்று பகல் நேரத்தில் உன்னுடைய ஷஹாதத் செய்தி கேட்டபோது என் கனவின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன். அல்லாஹ் உனது ஷஹாதத்தை ஏற்றுக் கொண்டான் என்ற நற்செய்தியையும் நீ சொல்லித்தான் சென்றாய். நாம் சத்தியத்திலே இருக்கிறோம். நமது எதிரி அசத்தியத்தில் இருக்கிறான் என்ற நம்பிக்கையை நீ மேலும் அதிகரித்து விட்டாய். உனது
கடைசிப் பிரியாவிடையில் இருக்கக் கிடைக்கவில்லை. அந்தப் பிரியாவிடையை எனது இரு கண்களால் பார்க்க கிடைக்கவில்லை. உனது நெற்றியில் கடைசி முத்தமொன்றை தரமுடியாமல் போய்விட்டது. உனக்கு இமாமத் செய்யும் கண்ணியத்தையும் பெற முடியவில்லை. இவை எல்லாம் என்னை வாட்டி வதைக்கிறது. அல்லாஹ் மீது ஆணையாக, என்னருமை மகளே என்னை தடுத்தது வாழ்க்கை மீதான அச்சமோ அநியாயக்காரனின் சிறை
பற்றிய பயமோ அல்ல. நீ எதற்காக உனது இன்னுயிரை நீத்தாயோ, அந்தத் தூதினை முழுமைப்படுத்தும் பேராசைதான் என்னைத் தடுத்தது. அந்தத் தூதுதான் நாம் வெற்றி பெறப் போகின்ற – இலக்குகளை நிறைவேற்றப்போகின்ற – புரட்சியை முழுமைப்படுத்தும் பணியாகும். நீ தலைநிமிர்ந்து முன்னோக்கி சென்ற நிலையிலே உனது உயிர் பிரிந்திருக்கிறது. ஏமாற்றத்தின் தோட்டாக்களை உன் மீது பாய்ச்சிய அந்தக்
கொடிய அநியாயக்கார்களை நீ மிகக் கடுமையாக எதிர்த்த நிலையிலே உன்னை ஷஹாதத் வந்தடைந்திருக்கிறது. இந்தக் கவலை எவ்வளவு உயர்ந்தது. எவ்வளவு தூய்மையான உள்ளம் இது. நீ அல்லாஹ்வை உண்மைப்படுத்தினாய், அல்லாஹ்வும் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஷஹாதத்தை கண்ணியப்படுத்துவதற்காக நமக்கு முன்னால் அவன் உன்னைத் தெரிவு செய்திருக்கிறான்.
கடைசியாக, பாசம் நிறைந்த என்னருமை மகளே! என் ஆசானே! நான் உனக்கு பிரியாவிடை சொல்ல வரவில்லை. மீண்டும் சந்திப்போம் என்று சொல்லவே வந்தேன். அன்பு நபியின் நீர்த்தடாகத்தில் அவர்களின் தோழர்களுடன் மிக விரைவில் நாம் நீரருந்துவோம். ஆட்சியதிகாரமும் வல்லமையும் கொண்டவனிடம் உண்மையின் சிம்மாசனத்தில் மிக விரைவில் உட்காருவோம். அந்த சந்திப்பில்தான் நமது பேராசைகள்
நிறைவேறப்போகின்றன. அன்றுதான் நாம் நமது அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியைப் பருக முடியும். அதன் பிறகு நமக்கு தாகமென்பதே கிடையாது. இவ்வாறு முஹம்மது பெல்தாகி, தன் அன்பு மகள் அஸ்மாவுக்கு உருக்கமாக எழுதியிருந்தார்.
thanks:Jaffna Muslim

22 August 2013
புதிய கல்விக் கொள்கையின் முக்கிய சில பரிந்துரைகள்
5 வயது முதல் 16 வயது வரையான சகல பிள்ளைகளுக்கும் கல்வியினை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோரை தண்டிக்க சட்டம் அமைக்க வேண்டும் எனவும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழு பரிந்துரை செய்துள்ளது. முதலாம், இரண்டாம் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு வேலை (Home work) கட்டாயமாக்கப்படக்கூடாது எனவும் பாட சாலைப் பிள்ளைகள் கையடக்கத் தொலை பேசியினைப் பயன்படுத்துவது தடை செய்ய வேண்டுமெனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையொன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய 23 பேரடங்கிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் அறிக்கையை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். புதிய கல்விக் கொள்கை மற்றும் யோசனை அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர், அரசாங்கம் மாறும்போதும், கட்சிகளின் ஆட்சிகள் மாறும் போதும் கல்விக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவாறு புதிய கல்விக் கொள்கை மற்றும் யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆளும் மற்றும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த 23 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு இப்புதிய கல்விக் கொள்கை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தே இதனைத் தயாரித்துள்ளது. மதத் தலைவர்கள், கல்வி மான்கள், பாடசாலை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை தெரிவுக் குழுவுக்கு அழைத்து அவர்களின் சாட்சிகள் மற்றும் யோசனைகளைப் பெற்றே இப்புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலவசக் கல்வியை மேலும் பலப்படுத்தும் வகையிலும் ஆட்சிமாறும் போது மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு இப்புதிய கல்விக் கொள்கையை நாம் தயாரித்துள்ளோம். இப்புதிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்புதிய கொள்கையின் மூலம் இலவசக் கல்வியைப் பெறும் 40 இலட்சம் மாணவர்கள் நன்மையடைவதுடன் இலவசக் கல்வியும் பலப்படுத்தப்படும். இதன் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை சட்டமூலம் தயாரிக்கப்படும் என்றார். புதிய கல்விக் கொள்கையில் கல்வி முறைமை, கல்வி முகாமைத்துவம், தலைமைத்துவம், கல்வித் தரம், கல்வித் துறைசார் சேவைகள், அடங்கலாக கல்வித் துறையுடன் தொடர்புடைய சகல விடயங்களையும் உள்ளடக்கி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தினூடாக கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை 5 வீதமாக உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆரம்பப் பாடசாலை கல்வி மத்திய அதிகாரப் பிரிவினால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய சில பரிந்துரைகள்,
* பண்புசார் தரமிக்க சமநிலைமையான கல்வியினைப் பெறுவதற்காக சகல பிள்ளைகளுக்கும் நியாயமான சந்தர்ப்பங்களை வழங்குவது அரசின் பொறுப்பாகும்.
* சகல பிள்ளைகளுக்கும் இலவசக் கல்விச் சந்தர்ப்பத்தினை உறுதி செய்து பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்.
* பெரும்பான்மையான இலங்கை சிறார்களின் தாய்மொழி மற்றும் தேசிய மொழி சிங்களம் அல்லது தமிழாக இருக்க வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச இணைப்பு மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும்.
* பாடசாலைகளில் தமது சமயத்தைக் கற்க மற்றும் பின்பற்றவும் மாணவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும்.
* பாடவிதானம், கற்றல் - கற்பித்தல் ஒழுங்கு விதிமுறைகள், நேரசூசிகள் என்பன சகல 5 வருடங்களுக்கும் ஒருமுறை மாற்றப்பட வேண்டும்.
* சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் கிடைக்கும் பெறுபேறு களுக்கு அமைய பிள்ளைகளுக்கு உயர்தர கல்விக்கு அல்லது பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் பயிற்சிப் பாடநெறிக்கு வகைப்படுத்தி உள்ளடக்கப்பட வேண்டும்.
* உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பிள்ளைகள் பொருத்தமான பல்கலைக்கழகக் கல்விக்கு ஏனைய மூன்றாம் நிலைக் கல்விக்கு அல்லது பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் பாட நெறியில் வகைப்படுத்தி ஈடுபடுத்த வேண்டும்.
* பரீட்சைத் திணைக்களத்தினால் தேசிய மட்டத்தில் நடக்கும் பரீட்சைகளின் கால எல்லை மீளாய்வு செய்யப்பட வேண்டும். எந்தப் பரீட்சை பெறுபேறுகளை மதிப்பிடும் கால எல்லை 10 வாரங்களில் இருந்து 8 வார காலமாக குறைத்து பெறுபேறு வழங்கப்பட வேண்டும்.
* குறைந்த பட்சம் நாளொன்றில் ஆரம்பப் பிரிவு வகுப்புகள் 5 மணித்தியாலங்களும் இடை நிலைப் பிரிவுக்காக 6 மணித்தியாலங் களும் கற்பிக்கப்பட வேண்டும்.
* பாடசாலை பையின் நிறையை குறைப்பதற்கான ஒழுங்குகள் வகுக்கப்பட வேண்டும். புத்தகங்க ளின் பருமனை குறைக்கக் கூடியவாறு அவற்றை சிறிய பிரிவுகளாக அச்சிடுவது மிக முக்கியமாகும்.
* கனிஷ்ட இடைநிலை மட்டங் களுக்கு மேற்பட்ட பாடங்களை ஆங்கில மொழி மூலம் கற்பித்தலை முடியுமான அளவு ஊக்குவிக்க வேண்டும்.
* உயர்தர வகுப்புகளுக்காக கணிப்பொறி (Calculator) பயன்படுத்த இடமளிக்க வேண்டும்.
* சகல மாணவர்களதும் பாடசாலை சமுகமளிப்பு 80 வீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
* தேசிய கல்விக் கல்லூரிகளின் பாடநெறிக்கால எல்லையை 4 வருடங்கள் வரை நீடித்து அதனை பட்டப்பாடநெறியாக மாற்ற வேண்டும்.
* பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்க்கையில் தேசிய கல்வி நிறுவகத்தினூடாக 3 மாதங்களை விட கூடுதல் காலம் முழு நேரப் பயிற்சி வழங்குவது கட்டாயம்.
source:தினகரன்

20 August 2013
மக்கொனையில் விசேட வைத்திய நிபுணர்கள்
தற்பொழுது மக்கொனையில் பின்வரும் விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளை குறிப்பிட்ட தினங்களில் பெற்றுக்கொள்ளலாம்.குழந்தை நல மருத்துவ நிபுணர்கள்,தோல் நோய் மருத்துவ நிபுணர்,மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் [சகல போயா தினங்களிலும்],மற்றும் ஞாயிறு தோறும் பல் வைத்தியர்
ST.THERESE MEDICAL CENTRE
| pediatrician | Dr.Anoma weerasinghe | Monday |
| pediatrician | Dr.suroopi Abegunawardana | --- |
| Dermatologist | Dr.chintha Perera | --- |
| V.O.G | Dr.Rani Sithambarapillai | poya day |
| Dental doctor | ----- | sunday |
மேலதிக விபரங்கலுக்கு:
ST.THERESE MEDICAL CENTRE
GALLE ROAD
MAGGONA.
TEL:034-2277185 / 077-2293931
18 August 2013
1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நேற்று வெளியிட்ட அறிக்கை
ஊடக அறிக்கை
09.10.1434
17.08.2013
1434 ஷவ்வால் மாத தலைப்பிறை
சம்பந்தமாக ..
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு 1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை. இலங்கையில் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள்
இருந்து அதனால் வந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2006ஆம் ஆண்டு சகல தரப்பு உலமாக்களினது அங்கீகாரத்தோடும் உடன்பாட்டோடும்
ஐந்து தீர்மானங்களை மேற்கொண்டது என்பதையும் முஸ்லிம் சமூகம் அறிந்துவைத்துள்ளது என நம்புகிறோம். இத்தீர்மானங்களின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டுகளில் தலைப்பிறைத் தொடர்பான முடிவுகள் பெறப்பட்டு வந்தன. இவ்வாண்டு றமழான் மாதத் தலைப்பிறையும் ஷவ்வால் மாதத் தலைப்பிறையும் வழமைபோல் குறித்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே முடிவ செய்யப்பட்டன. ஆயினும் இம்முறை
ஷவ்வால் மாதத் தலைப்பிறை முடிவு செய்யும் விடயத்தில் பிறையை வெற்றுக் கண்ணால் கண்ட சாட்சிகளை உறுதிசெய்யும் விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றியமை உண்மையாகும். இவ்வாறு குறித்த விடயத்தில் சில உலமாக்கள் முரண்பட்ட போதிலும் தலைப்பிறையைக் கண்டதாக கூறிய சாட்சிகளை தீர விசாரித்து உறுத்திப்படுத்தியதைத் தொடர்ந்து பிறையைத் தீர்மானிக்கும்
அதிகாரம் பெற்ற பெரிய பள்ளிவாயல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமயப் பண்பாட்டலவல்கள் திணைக்களம் ஆகிய முப்பெரும் நிறுவனங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துவோரின் ஏகமனதான உடன்பாட்டுடன் இவ்வருட ஷவ்வால் மாதத் தலைப்பிறை 09.08.2013 ஆந்திகதி வெள்ளிக் கிழமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச
உலமாக்களோடு 17.08.2013.08.17ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது. பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும்
சரியாகவே நடந்துள்ளனர் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இது பற்றி உலமா சபைத் தலைவர் அவர்கள் 2013.08.08 ஆம் திகதி 01:00 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன
சேவையில் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள் கிண்ணியா மூதூர் பிரதேச மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது என்பதை உணர்ந்த தலைமையகம் வருந்திக் கொள்கிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்தச் சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு செயற்பட இரு சாராரும் இணங்கி இதனை பகிரங்கப்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
source:www.acju.lk/news.php?nid=57

Subscribe to:
Posts (Atom)