தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

08 January 2015

நேரகாலத்தோடு வாக்களியுங்கள்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 'ஜனாதிபதி தேர்தல்'
இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் பிற்பகல் 4
மணிவரையில் தேர்தல் நடாத்தப்படும். வாக்காளர்கள் இயலுமானவரை காலையிலேயே
சென்று தமது வாக்குகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை வாக்களிப்பினைத் தொடர்ந்து வாக்காளர்கள் அமைதியான முறையில்
வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேறுவது பணிகளை கிரமமாக முன்னெடுக்க
உதவுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர்கள் தமது வாக்காளர் அட்டையுடன் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்
ஏற்றுக் கொள்ளக்கூடிய அடையாள அட்டை மற்றும் அண்மையில் வெளிநாட்டிலிருந்து
வந்தவர்களாயின் செல்லுபடியாகும். கடவுச் சீட்டினையும் உடன் எடுத்துச்
செல்லப்பட வேண்டியது கட்டாயமெனவும் ஆணையாளர் வலியுறுத்தினார்.
தேர்தல் முடிவுகளாக தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை இன்று
இரவு 11 மணியளவில் வெளியிடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம்
தீர்மானித்திருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.
ஏழாவது ஜனாதிபதி தேர்தலிலேயே இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகூடிய
வேட்பாளர்களான 19 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 17
அரசியற்கட்சிகள் மற்றும் இரண்டு சயேச்சைக் குழுக்கள் சார்பில் களத்தில்
இறங்கியுள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பிற்கு அமைய இம்முறை ஒருகோடியே 50
இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு
முழுவதுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களின் 160 தேர்தல் தொகுதிகளிலும் இன்று
வாக்களிப் பினை நடாத்துவதற்காக 12 ஆயிரத்து 314 வாக்கெடுப்பு நிலையங்கள்
நிறுவப்பட்டுள்ளன. அதேநேரம் இன்றைய தினம் பிற்பகல் 4 மணி முதல் நாடு
முழுவதுமுள்ள ஆயிரத்து 419 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்காக 5 ஆயிரம் விசேட
அதிரடிப்படையினர் உட்பட 71 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில்
ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இதற்கு மேலதிகமாக உள்நாட்டு வெளிநாட்டைச் சேர்ந்த
சுமார் 25 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நேற்று முதல் நாடுமுழுவதும்
கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 'ஜனாதிபதி தேர்தலை'
நடத்துமாறு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த நவம்பர் 20 ஆம் திகதி
தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் செய்திருந்தார்.இதற்கமைய ஜனாதிபதி
தேர்தல் ஜனவரி 08ஆம் திகதியன்று நடத்தப்படு இமன கடந்த நவம்பர் 22ம்
திகதியன்று தேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர் வமாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 24 முதல் டிசம்பர் 05 வரை கட்டுப்பணம்
செலுத்தப்பட்டது. டிசம்பர் 08 ஆம் திகதியன்று தேர்தலில் போட்டியிடும் 19
வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.தேர்தல் சட்ட
விதிமுறைகளுக்கமைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் ஜனவரி 05ம் திகதி
நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெற்றது.
இதேவேளை, தேர்தலில் வாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு இடும்
இரகசிய சின்னம் பிறர் அறியாத வகையில் பாதுகாக்கப்படுமெனக் கூறிய
தேர்தல்கள் ஆணையாளர் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும்
நிலையங்களிலும் சீ சீ. டி. வி கமராக்களின் உபயோகம் இல்லையெனவும்
உறுதியாகத் தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையத்தில் சீ. சீ. டி. வி. கமராக்கள் பொருத்தப்படுவதால்
அடையாளமிடப்படும் சின்னத்தை பிறர் அறிந்து கொள்ள முடியுமென பரவிவரும்
செய்தி வெறும் வதந்தியெனவும் வாக்காளர்கள் அது குறித்து அச்சம் கொள்ளத்
தேவையில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் முறைகேடுகள்
இடம்பெறாத வகையில் வெற்று வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு
கொண்டு செல்வது முதல் தேர்தல் பெறுபேறுகளை வெளி யிடும் வரையிலான
அனைத்துப் பணிகளும் ஒரே தொடர்ச்சியாக கிரமமானதும் நுட்பமானது மான
முறையில் செயற்கடுத்தப்படுவதனால் மக்கள் பரவலாக பேசுவது போல் வாக்குப்
பெட்டிகளை மாற்றுதல், கள்ள வாக்களித்தல் என்பன இடம் பெறுவதற்கு எவ்வித
சந்தர்ப்பமும் இல்லையெனவும் அவர் உறுதியளித்தார்.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு
செல்வதற்கு தடைகள் அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில்
எமக்கு முறைப்பாடுகள் கிடைக்குமாயின் குறித்த நிலையத்தின் வாக்கெடுப்பு
ரத்துச் செய்யப்பட்டு வேறு ஒரு தினத்தில் வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு
செய்யப்படு மெனவும் அவர் எச்சரித்தார். இதேவேளை எக்காரணம் கொண்டும்
தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் அரசாங்க அதிகாரிகள் எந்தவொரு
வேட்பாளருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ பயந்தோ பக்கச்சார் பாகவோ நடந்து
கொள்ள மாட்டார்களென் பதனை பொறுப்புணர்வுடன் கூறுவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரினதும் ஐந்து பிரதிநிதிகள்
வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட் டுள்ளது.பிற்பகல்
சுமார் 4 மணிக்குப் பின்னரே வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்
பெட்டிகள் எடுத்துவரப்படவுள்ள போதிலும் சுமார் மூன்று மணி முதல்
வேட்பாளருக்கு ஒரு பிரதிநிதி வீதம் வாக்கு எண்ணும் நிலையங்களில்
இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் எண்ணும் வாக்குகளில் காலதாமதம் அல்லது சந்தேகம்
இருப்பின் அவற்றை திரும்ப எண்ணுமாறு வேட்பாளர்களின் பிரதிநிதிகள்
கோரமுடியும். அத்துடன் கணக்கிடப்பட்ட பெறு பேறுகளின் பிரதிகள் அனைத்தும்
பிரதிநிதிகளுக்கும் விநியோகிக் கப்படும். அவர்கள் கையெழுத்திட்ட பிரதிகள்
என்னை வந்தடைந்த பின்னரே இறுதிப் பெறுபேறுகளை நான் வெளியிடுவதால்
கம்யூட்டர் ஜில்மால் ஏற்படுவதற்கு இடமிருக்காதெனவும் அவர் தெரிவித்தார்.

02 January 2015

மெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

மெமரி கார்ட்" இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க
முடியாது. வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை
சேமிக்க, பேசியதை சேமித்து வைக்க… இப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது
மெமரிகார்ட்.முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது
அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக டேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன், ipad, ipod, Digital
Camera போன்ற கையடக்கச் சாதனங்களைச் சொல்லாம். காலத்திற்கு ஏற்ப,
பயன்படுத்துவதற்கு ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு வகையான கொள்ளவு,
திறன், அளவு ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது.
காலத்திற்கேற்ப இதனுடைய தன்மையிலும், வகைகளிலும் மாறுபட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் microSD card என்று சொல்லப்படும் இந்த மெமரி கார்ட்களை
உலகளில் பார்க்கும்போது 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தயாரித்து
வெளியிடுகின்றன.
மெமரி கார்டின் வகைகள்:
எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு
வகைகளாகப் பிரிக்கின்றனர்.
1. SDSC (Standard Capacity)
2. SDXC (The extended Capacity)
3. SDHC (The High Capacity)
4. SDIO
SD CARD என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதிகள் எதுவும்
இல்லை. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில்
பயன்படுத்தபட்டுள்ளன.
SDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது.
மெமரி கார்டின் அளவுகள்:
பொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள்
ஸ்டான்டர்ட் ஆகும் . அவை.
1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)
2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)
3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)
எஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை
வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர்.
எஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து, எடுக்கப்படும் வீடியோவின் தரமும்
அமையும். காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக
கையகப்படுத்துவதால்தான். இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB
தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும். இந்த
வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும்
டேட்டாக்களை நாம் பெற முடியும்.
அனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது.
CPRM என்பதின் விரிவு Content Protection for Rஊcordable Media
என்பதாகும்.
SD கார்டின் சிறப்பு;
இதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை
அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான். ஒவ்வொரு முறையில்
தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை
பதிந்துகொள்ள முடியும். இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD
கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.
பிராண்டட் SDcards ஒருசில…
Sasmung microSD card
Sandisk Ultra microSD card
Transcend microSD card
Sandisk mobile ultra
Toshiba microSD card
Sony microSD card
இதுபோல 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் microSD Card கள் உள்ளன.
மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை
என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான்
நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .
சரிதானே ?
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல
தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது
சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு
ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள்
ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய
அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10
என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப்
பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம்
நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class
என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer
speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு
இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை
பெற்றிருக்கும்
class 6 – 6MB per second
Class 8 – 8MB per second
Class 10 – 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும்
பல வியாபாரிகளுக்கே தெரியாது.
Thanks:அன்பைத்தேடி அன்பு

13 December 2014

இலங்கை வீதிகளைப் படம்பிடிக்கும் கூகிள்

இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும்.
இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கிறது. இது கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்றழைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட இடத்திலிருந்து 360 பாகை கோணத்தில் என்னவெல்லாம் தெரிகிறதோ, அதனை கூகிள் ஸ்ட்ரீட் வியூ வசதியின் மூலம் பார்வையிடக்கூடியதாக இருக்கும். ஒருவர் பயணிக்கக்கூடிய பாதைகள் செல்ல வேண்டிய இடங்கள் போன்றவற்றை மனித கண்ணுக்கு தென்படும் விதத்தில் பார்கக்கூடியதாக இருப்பது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும்.
கூகிள் ஸ்ட்ரீட் வியூ வசதியில் 63 நாடுகள் உள்ளடக்கப்படுகின்றன. இலங்கையில் யாழ்ப்பாணம், மாத்தறை, அருகம்பை முதலான பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் தரவு சேகரிப்பு திட்டம் விரைவில் ஒட்டுமொத்த இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ளதென கூகிள் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஆன் லின் தெரிவித்தார். அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார்.
இந்த வசதி மூலம் இலங்கையின் இயற்கை அழகை முழு உலகமும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.எஸ்.ஜயவீர தெரிவித்தார். உள்ளுர் சுற்றுலா பயணிகளும் இணையத்தின் ஊடாக பல இடங்களை பார்க்கக்கூடியதாக இருக்கும் என அவர் கூறினார்.

04 December 2014

'அல்பகரா’அத்தியாயத்தின் இறுதி இரண்டுவசனங்களின் சிறப்புகள்


ஷைத்தானைவிரட்டும்சூரா.



நபி(ஸல்)அவர்கள்சொன்னார்கள் அல்லாஹ்வானம்பூமியைபடைப்பதற்கு ஆயிரம்வருடத்திற்குமுன்புஒருகிதாபைஎழுதினான்அந்தகிதாபி­ருந்துஇரண்டு ஆயத்தைஇறக்கிசூரத்துல்பகராவைமுடித்திருக்கிறான் எந்தவீட்டில்மூன்று இரவுகள்ஓதப்படுகிறதோஅந்த வீட்டில்ஷைத்தான்நெருங்கமாட்டான்.


திர்மிதி2882தாரமி3253



இரவுவணக்கத்திற்குநிகரானது.

அல்பகரா’அத்தியாயத்தின்இறுதிஇரண்டு(02:286 – 287)வசனங்களைஇரவுநேரத்தில்ஓதுகிறவருக்கு(மனிதன்மற்றும்ஜின்இனத்தாரின்தீங்குகளிலிருந்துபாதுகாக்கப்)போதுமானதாகஅவைஆகிவிடும்எனநபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.

அபூமஸ்ஊத்(ரலி)

புஹாரி: 4008


பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும்.''எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5009.

02 December 2014

'முஹம்மத்' என்ற பெயரே பிரிட்டனில் பிரபலம்

பிரிட்டனில் குழந்தைகளின் பெயர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், இந்த
ஆண்டில் 'முஹம்மத்' என்ற பெயரே ஆண் பிள்ளைகளுக்கான பெயர்களில் மிகவும்
பிரசித்தம் பெற்றுள்ளது.
'மர்யம்' என்ற பெயர் முதல் 100 பெண் குழந்தைகளின் பெயர்களில் இடம்பிடித்துள்ளது
'ஆலிவர்' என்ற பெயர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக, அராபிய பெயர்களில் பெரும் அதிகரிப்பு காணப்படுகின்றது.
முதல் 100 பெண் பிள்ளைகளின் பெயர்களில் குறிப்பாக, 'மர்யம்' என்ற பெயர்
வேகமாக அதிகரித்துவருகின்றது. புதுவருகையான 'நுர்'என்ற பெயரும்
பிரபலமடைந்துவருகின்றது.
ஒமார், அலி, இப்ராஹிம் ஆகிய பெயர்களும் முதற்தடவையாக முதல் 100 ஆண்
குழந்தைகளின் பெயர்களில் இடம்பிடித்துள்ளன.
ஜார்ஜ், வில்லியம், ஹாரி உள்ளிட்ட அரச குடும்ப பெயர்களும் பிரபலம் குன்றியுள்ளன.