ஒன்பது வயதில்
இணையத்தளத்தை வடிவமைத்து உலகில் இரண்டாம்
இடத்தைப் பெற்று சாதனை படைத்த
சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில்நுட்பத் துறையில்
பட்டப்படிப்பை பூர்த்தி செய்து உலகில்
முதலாம் இடத்தைப் பெற்று தாய் மண்ணுக்கு பெருமையைத் தேடிக்
கொடுத்துள்ளார். இந்தச் சிறுமி பொம்மைகளுக்கும் விளையாட்டுப் பொருட்களுக்கும்
பெருவாரியான நேர காலத்தை பொழுது போக்காகக் கழிக்காமல்
கூடுதலான காலத்தை தகவல் தொழில்நுட்பப் பாடத்துறையில்
செலவிட்டு அயராது முயற்சி செய்து சாதனை படைத்துள்ளார். பிரேமானந்த நடராஜ்
மற்றும் லக்ஷி பிரேமானந்த் தம்பதிகளின்
ஒரே ஒரு புதல்வியான வஷினியா கண்டியிலுள்ள
கொழும்பு சர்வதேச பாடசாலையில் 9 ஆம் ஆண்டில்
கல்வி பயிலுகின்றார். வஷினியா 2002 -05-13 ஆம் திகதி பிறந்தவர். தகவல் தொழில்
நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினித்
துறை கற்றை நெறி சங்கத்தின் பட்டதாரியாக (BCS IT
DEGREE ) பூர்த்தி செய்துள்ளார். இவருக்கான
பட்டமளிப்பு விழா இங்கிலாந்து கல்வி நிலையத்தினால்
எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் கொழும்பில்
நடத்தப்படவுள்ளது. இந்தச் சாதனை இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமாகும்.
இந்தப் பட்டடிப்படிப்புத் தொடர்பான பெறுபேறு இணையத்தன் ஊடாக
கடந்த 12-12-2013 வியாழக்கிழமை வெளியாகியது. சிறுமி தன்னுடைய மூன்று
வயதிலேயே மின்னஞ்சல்
முகவரியை திறந்து கொண்டார். சர்வதேச கணினியல்
டிப்ளோமா கற்கை நெறியில் சான்றிதழ் பெற்றுள்ளார். வணிகம்
இணையத்தள பொறியியல் துறைகளில் சர்வதேச தரச்
சான்றிதழ்களை தன்னுடைய ஒன்பது வயதிலேயே பெற்றுள்ளார். அதேபோன்று சிறு
வயதிலேயே இணையத் தளத்தை வடிவமைத்தமைக்கான
பெருமை இந்தச் சிறுமையே சாரும். இதில் இரண்டாம்
இடத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்தக்
கால எல்லைக்குள் கண்டி நகரிலுள்ள கணினி உயர்
கல்வி நிலையங்களில் தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக
பிரித்தானிய கணினி கற்கை நெறி சங்கத்தின் பட்டடிப் படிப்புக்காக
விண்ணப்பித்து 2 ½ வருட காலத்திற்குள்
பட்டப்டிப்பை பூர்த்தி செய்து கொண்ட இவர் தன்னுடைய 11 வயதில்
பட்டம் பெற்று உலகில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். வஷினியா
சிறு வயது முதல் நல்ல குண நலங்களைக் கொண்டவர்.
இந்து சமய வழிபாட்டைப் பின் பற்றிய போதிலும்
எட்டு வயதிலிருந்து கெட்டம்பே அருகிலுள்ள விஹாரைக்குச்
சென்று பௌத்த சமய வழிபாடுகளிலும்
ஈடுபாடு காட்டி வருகின்றார். அதேபோன்று சிறு வயது முதல் ஸ்ரீ
செல்வவிநாயகர் கோவலிலுக்குச்
சென்று வழிபடுவார். இவர் கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர்.
இந்தச் சிறு பிள்ளை ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றார் எனும்
போது எமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
இரு முறை இரட்டை வகுப்பேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார். அது
மாத்திரமல்ல 2010 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்
பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் தோற்றி ´ஏ´ தரத்தில் விசேட
சித்தியடைந்துள்ளார். வஷினியாவின் தந்தை நடராஜ் பிரேமானந்த் குருநாகல்
மல்லவப்பிடியிலுள்ள ஒட்டோ மொபைல் கம்பனி ஒன்றின் பணிப்பாளர்.
தாயின் பெயர் லக்ஷி பிரேமானந்த் சில வருடங்கள் புகழ்மிக்க
கணினி நிறுவனம் ஒன்றில் போதனாசிரியராகக்
கடமையாற்றியுள்ளார். வஷினியாவின் வயதை ஒத்த பிள்ளைகள் பொம்மைகளோடு விளையாடிக்
கொண்டிருக்கும் காலத்தில் வஷினியா, தனது தாயாருடைய
நூல்களுக்குள்ளும் கணினிகளுக்குள்ளும் மூழ்கியிருந்தார். இரண்டு வயதிலேயே
வஷினியா ஆங்கில மொழியின்
அரிச்சுவடிகளை மனப்பாடம் செய்து விட்டார். கணினி விசைப்
பலகை குறியீடுகளெல்லாம் வினியாவுக்கு கை வந்த
கலையாகி விட்டது. இவர் மூன்று வயதில் குருநாகல் சர்வதேசப் பாடசாலை ஒன்றில்
அனுமதிக்கப்பட்டு அங்கு இரு வருடங்கள் கல்வி பயின்றார். இதன்
பின் கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேசப் பாடசாலைக்கு 5 வயதில்
இணைந்து கொண்டார். பெரும்பாலானோருக்கு ஓர் இணையத்தளத்தை வடிவமைப்பதற்கு அதில்
ஒரு கடிமான பகுதி உண்டு. ஆனால் அது அவருக்கு சாதாரண
விடயமாகவுள்ளது. அதை அவர் இணையம் மூலம் தேடி இணைப்பதற்கேற்ப
பதிவிறக்கம் செய்கின்றார். அதற்கு அவர் ஒரு தந்திரோபாயாயமும்
வைத்திருக்கின்றார். அவர் முதலாவது வடிவமைத்த இணையத்தள முகப்பு, தகவல்கள்,
தங்களைப் பற்றி புத்தக ஒன்லைன், கேள்விகள், படத்தொகுப்பு எனப் பல
பிரிவுகள் கொண்டுள்ளது. அத்துடன் குறித்த நிறுவனம் வழங்கும்
சேவைகளும் அவற்றுக்குள் அடங்கியுள்ளன. இது ஒரு இலாபகரமான
தொழில் என்றாலும் அது மிகவும் கடிமானது எனவும் ஒத்துக்
கொள்கிறார். வஷினியாவின் விசேட திறமையைக் கண்டு கண்டி BCAS உயர்
கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே.எம். நிவாஸினால் கணினித்
துறை அறிவை மேலும் மேம்படுவத்துவதற்காக (Artificial
Intelligence And robotics)
கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக
ரோபோ தயாரிப்பதற்கான அறி திறனைப் பெற்று வஷினியா சாதனை படைப்பார்
என்பதில் சந்தேகம் இல்லை. அவர் கல்விப் படிப்புக்கு எந்தவிதமான
இடையூறுகளுமின்றி பாடசாலை செல்கின்றார். விளையாட்டில்
ஈடுபடுகின்றார். பாடசாலை வேலைகள் அனைத்தினையும்
அன்றே செய்து முடிப்பார். விடுறை நாட்களிலேதான் இந்தத் தகவல்
தொழில் நுட்ப பாடங்களைக் கற்றுள்ளார். இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம்,
பிரான்ஸ், மற்றும் ஜேர்மன்
மொழிகளைப் எழுதவும் வாசிக்கவும் கூடியவர். ஓகன், பியானோ,
வாசிப்பதில் சிறந்தவர். பல பரிசில்களையும் பெற்றுள்ளார். இந்தச் சின்னஞ்
சிறிய தாய் நாடு பற்றி உலகமெங்கும் மதிக்க
வேண்டும் என்பதுடன் ஒரு வைத்தியராக
வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்
என்பதே வஷினியா இலக்காகும்.
Source:http://adf.ly/aw3eK
ஊர் செய்திகள்
date
19 December 2013
அணகொண்டாவை விழுங்கியது அணகொண்டா
தெஹிவலை மிருகக்காட்சி சாலையில் இருந்த பெண் அணகொண்டா, அதன்
துணையான ஆண் அணகொண்டாவை நேற்றிரவு விழுங்கியதாக
தெரியவந்துள்ளது. இந்த அணகொண்டா பாம்புகள் கடந்த நான்கு வருடங்களாக ஜோடியாக
வாழ்ந்து வந்துள்ளதாக தேசிய வனவிலங்குகள் திணைக்கள
பணிப்பாளர் அனுர டி சில்வா குறிப்பிட்டார். இந்த அணகொண்டா ஜோடிக்கு
மூன்று தடவைகள் குட்டிகள்
பிறந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அணகொண்டா பாம்புகள், தமது
இனத்தைச் சார்ந்த தம்மைவிட சிறிய
உயிரினங்களை விழுங்கிவிடக்கூடியவை என்றும் வனவிலங்குகள்
திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.
Source:http://adf.ly/avwEx

15 December 2013
தொப்பி, பர்தா அணிந்த புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது மனித உரிமை மீறல்
புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஆள் அடையாள
அட்டையில் தொப்பி மற்றும் பெண்களின் பர்தா போட்ட
புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது இந்த நாட்டில்
அரங்கேறும் மற்றுமொரு மனித உரிமை மீறலாகும் என முஸ்லிம்
மக்கள் கட்சித் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார்.
மேற்படி ஆளடையாள அட்டை சம்பந்தமான ஊடகவியலாளரின் கேள்விக்கு
பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரை அவர்கள் பகிரங்க இடங்களில்
தலை மூடியிருப்பது சமயச் சட்டமாக இருப்பதுடன் அவர்களின்
கலாச்சாரமாகவும் உள்ளது. இந்த நிலையில் பகிரங்கமாக
எடுக்கப்படும் ஆளடையாள அட்டை எந்தவொரு கலாச்சாரத்தையும் பிரதி
பலிக்கக்கூடாது என்பதன் மூலம் முஸ்லிம் பெண்களின்
உரிமை பறிக்கப்படுவதுடன் முஸ்லிம் மக்களை கருவறுக்க வேண்டும்
என்பதற்காகவே இத்தகைய சட்டங்களை கொண்டு வருகிறார்கள்
என்றே நாம் பார்க்கிறோம்.
அதே போல் நமது நாட்டில் உள்ள சகல மத குருமார்களும் தமது மத
கலாச்சார ஆடைகளை அணிந்தே ஆளடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கிறார்கள்.
இந்த வகையில் மௌலவிமார் தொப்பி போட முடியாத
நிலையிலும் அதேபோல் கிறிஸ்தவ பாதிரிமார், மற்றும்
இந்து சாமிகள் தமது சமயத்தை பிரதிபலிக்கும் ஆடை அணிய
முடியாதவாறும் தடுக்கப்படுகிறது.
அதேவேளை பௌத்த குருமார் நிச்சயம் தமது சமய
முறைப்படி புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுவர் என்பதை உறுதியாக எம்மால்
கூற முடியும். ஏனெனில் அவர்கள்
ஆளடையாள அட்டை புகைப்படத்துக்காக என
முடி வளர்க்கவோ அல்லது டோப்பா போடவோ மாட்டார்கள்.
அத்துடன் கோட்டை அணிந்து புகைப்படம்
எடுத்தலை ஆட்பதிவு திணைக்களம் அனுமதிக்குமா என்றும்
கேட்கிறோம். அதனை அனுமதித்தால் ஆங்கில கலாச்சாரத்துக்கு இடமளிக்கும் இந்த
அரசாங்கம், தமது நாட்டின்
பாரம்பரிய கலாச்சாரங்களை மறுக்கின்றது என்றே ஆகிவிடும்.
அதே போல் தலை திறந்து புகைப்படம் எடுப்பது கூட சிங்கள, தமிழ்
கலாச்சாரம் என்பதால் அதனையும் தடை செய்ய வேண்டும்.
இப்படி பார்த்தால் ஆண்களும் பெண்களும்
தலையை மொட்டையடித்துக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுப்பதன் மூலம்தான்
எவரது கலாச்சாரத்தையும் பிரதிபலிக்காத
வகையில் புகைப்படம் அமையும். இதனைத்தான் இந்த அரசாங்கம் எதிர்
பார்க்கிறதா?
ஆக, எந்தவொரு மனிதனும் தனது சமய கலாச்சார
ஆடைகளை அணிவதற்கு மனித உரிமை சாசனம் இடமளித்துள்ளது.
இதற்கிணங்க ஆளடையாள அட்டையிலும் தமது சுய விருப்பத்தினாலான ஆடைகளை அணிய
இடமளிக்க வேண்டும்
என்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
source:http://adf.ly/alvmw

13 December 2013
இந்திரிலிகொட அல்-அதபுஸ் ஸாலிஹ் பாலர் பாடசாலை மாணவர்களின் கல்விச் சுற்றுலா
அண்மையில் (10-12-2013) மக்கொன இந்திரிலிகொட அல்-அதபுஸ் ஸாலிஹ் பாலர்
பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு இரத்மலானை விமானப்படை
அருங்காட்சியகத்துக்குச் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில.
பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு இரத்மலானை விமானப்படை
அருங்காட்சியகத்துக்குச் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில.
12 December 2013
இளைஞர் யுவதிகளே மாரடைப்பு உங்களுக்கும் வரக் கூடுமா?
'எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என
ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக
இருக்கும். 'பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்' எனச் சொல்லித் தட்டிக்
கழித்துவிடுவீர்கள். மாறாக 'அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக்
வந்து விடும்' என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால்
என்ன நடக்கும். 'இவர் சும்மா வெருட்டுகிறார்' எனச்
சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும். ஆனால் உண்மை என்ன? மாரடைப்பு
வருவதற்கான மாற்றங்கள்
இளவயதிலேயே தோன்றுகின்றன என்பதுதான். மாரடைப்பு எவ்வாறு? மாரடைப்பு
வருவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில்
கொழுப்பு படிவதுதான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில்
atherosclerosis என்கிறார்கள். தமிழில் இதைத் தமனித் தடிப்பு
(தமிழ்நாட்டில்), அல்லது நாடித் தடிப்பு (இலங்கையில்) எனலாம். காலக்
கிரமத்தில்
கொழுப்பு படிவது மோசமாகி இருதயத்திற்கு இரத்தத்தைப்
பாச்சும் நாடிகளில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வரும்.
மூளைக்கான இரத்தக் குழாய்களில் அவ்வாறு நடந்தால் பக்கவாதம்
வரும்.
அத்திவாரம் இளவயதிலேயே
இந்தக் கொழுப்புப் படிவது இள
வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது. அண்மையில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்
யுவதிகளிடையே ஒரு ஆய்வு செய்யப்பட்டபோது அவர்களது இரத்தக்
குழாய்களில் கொழுப்புப் படிந்திருப்பது தெளிவாகக்
காணப்பட்டது. முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்கள் நல்ல
ஆரோக்கியமானவர்கள். குருதிக் குழாய்களில் கொழுப்புப்
படிவதற்கான இடர்; காரணிகள் (Risk factors) எதுவும்
இல்லாதவர்கள் ஆவார். அதாவது அவர்களுக்கு கீழ்காணும் ஆபத்தான அடிப்படை இடர்
காரணிகள் எதுவும் கிடையாது என்பதுதான்.
*நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் *புகைத்தல் பழக்கம் இரத்தத்தில்
*கொலஸ்டரோல் அதிகரிப்பு பரம்பரையில் *இளவயதிலேயே மாரமடைப்பு வருவது
நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான இடர் காரணிகள் என
இதுவரை காலமும் நம்பியிருந்தவை எதுவும் இல்லாதபோதும் ஏன்
அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிந்தது?
காரணம் என்ன?
காரணம் இவர்களில் நலக்கேட்டிற்கான வேறு விடயங்கள் காரணிகளாக
இருந்தன. இவைதான் நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான புதிய
காரணிகள்.
அவை என்ன?
அவர்களின் வயிற்றறையின் சுற்றளவு அதிகமாக இருந்தது.
வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகமாகப்
படிந்தமைதான் வயிறு பருத்ததற்குக் காரணமாகும். அதேபோல நெஞ்சறையின்
உள்ளுறுப்புளிலும் கொழுப்புப்
படியலாம்.
இந்த ஆய்வு கனடாவின் Heart and Stroke Foundation னால்
செய்யப்பட்டது. யுத்தத்திலும், விபத்துகளிலும் இறந்த
இளவயதினரிடையே செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 80
சதவிகிதமானோருக்கு நாடித் துடிப்பு இருந்ததை முன்பு ஓர்
ஆய்வு சுட்டிக் காட்டியது. எனவே அவர்கள் வெளிப்படையாக
ஆரோக்கியமானவர்களாக இருந்தபோதும் எதிர்காலத்தில்
மாரடைப்பு வருவதற்கான அத்திவாரம் போடப்பட்டமை உறுதியாகியது.
ஆபத்தைக் கணிப்பது எப்படி?
ஒருவரின் ஆரோக்கியத்தை அறிவதற்காக உயரம் (Height)>
எடை (Weight), உடற்திணிவுக் குறியீடு ஆகியவற்றை மட்டும்
அளந்து பார்ப்பது போதுமானதல்ல என்பதை மீண்டும்
உறுதிப்படுத்துகிறது. வயிற்றறையின்
சுற்றளவை அளப்பது முக்கியமானது. ஆண்களில் இது 102 செ.மி ஆகவும்,
பெண்களில் 88 செ.மி ஆகவும் இருக்க வேண்டும். வயிற்றின் சுற்றளவை விட,
வயிற்று சுற்றளவிற்கும், இடுப்புச்
சுற்றளவிற்கும் இடையோயன சதவிகிதம் முக்கியமானது என
நம்பப்படுகிறது.
இது பெண்களில் 0.8ற்று குறைவானவும், ஆண்களில் 0.9 க்குக் குறைவாகவும்
இருக்க வேண்டும
செய்ய வேண்டியது என்ன?
எனவே இளவயதிருக்கான செய்தி என்ன? 'எங்களுக்கு நல்ல உணவு கிடைக்க்pறது. நன்றாகச்
சாப்பிடுகிறோம். களைப்புக் கிடையாது. உடல் ஆரோக்கியமாக
இருக்கிறது. நாம் அதியுயர் மனிதர்கள்' என்ற மாயையில்
மூழ்கியிருக்காதீர்கள். எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம்,
திடீர் மரணம் போன்றவை வருவதற்கான அடித்தளம்
ஏற்கனவே உங்களுக்கும் போடப்பட்டிருக்கலாம். ஆயினும் காலம்
கடந்துவிடவில்லை. உங்களுக்கு ஆபத்தைக்
கொண்டுவரக் கூடிய இடர் காரணிகளைக் கண்டறிந்து அதைத்
தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பருத்த
வயிறு முக்கியமான பிரச்சனை என்பதை மறக்காதீர்கள். ஆரோக்கியமான உணவு முறை,
தினசரி உடற் பயிற்சி போன்ற
வாழ்க்கை முறை மாற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.
இவற்றைச் செய்ய வேண்டிய வயது எனக்கு ஆகவில்லை என ஒருபோதும்
எண்ண வேண்டாம். இப்பொழுதே ஆரம்பியுங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
Source:hainalama .wordpress.com

Subscribe to:
Posts (Atom)