தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

11 July 2013

ரமளான் நோன்பு

  
நோன்பின் அவசியம்! ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183). ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை- தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185) நோன்பின் நோக்கம் யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும்
விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்: திர்மிதீ நோன்பின் சிறப்பு ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது.
‘நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.
நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா َﻲِﺿَﺭ
ُﻪْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ நூல்கள்: திர்மிதீ சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது َﻲِﺿَﺭ ُﻪْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.
மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா ُﻪْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ َﻲِﺿَﺭ நூல்கள்: திர்மிதீ காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா நோன்பு நோற்க கடமைபட்டவர்கள், நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185) பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார். பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புறப்படலானார்கள். பிறகு காலை உணவைக் கொண்டு வரச் செய்து ‘அருகில் வாரும்’ என்றார்கள். அபோது நான் நீங்கள் ஊருக்குள்ளே தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்க போகிறீரா என்று திருப்பிக் கேட்டார்கள் என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார்கள். நூல்கள்:அஹமது, அபூதாவூத் மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன் பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் “அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர். (ஜாபிர் ُﻪْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ َﻲِﺿَﺭ முஸ்லிம், திர்மிதீ) “இதன் பிறகு நாங்கள் நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்” என்று அபூஸயீத் அல் குத்ரீُ அறிவிக்கும் ஹதீஸ் நூல்கள்: முஸ்லிம், அஹமது, அபூதாவூத் மக்கா வெற்றிக்கு பின்னர் மேற்கொண்ட பிரயாணத்தில் நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் அல் குத்ரீ َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ குறிப்பிடுவதால் பிரயாணத்தில் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும் பிரயாணத்திற்குரிய சலுகையே இது என்பதையும் அறியலாம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நாங்கள் நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் சலுகையளித்தனர். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹமது, இப்னுமாஜ்ஜா சலுகை என்பது ரமளானில் விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்பதே இதன் பொருள். நோயாளிகள், முதியவர்கள் நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும் நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளர். முதியவர்களும் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளனர். நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ கூறும்போது, இது மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும்
ஒவ்வொரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி நோன்பின் நேரம் சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும். ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187) ஸஹர் உணவு நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயமாக பரகத் உள்ளது என்பது நபிமொழி. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ நாங்கள் நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பிறகு (சுப்ஹு) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ கூறினார்கள். (ஸஹர் முடித்து சுப்ஹு வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: புகாரி, திர்மிதீ (ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.) ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல் மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் மக்களுக்கு இது பற்றி அறிவிப்புச் செய்து விழிக்கச் செய்வது நபி வழியாகும். நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் பிலால் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ , அப்துல்லாஹ் பின் உம்மி மக்தும் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ரு நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கான அழைப்பாகும். பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார்.
நபிமொழி அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத் பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!. ஆயிஷா வழியாகவும், இப்னு உமர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ பாங்கு மூலம் மக்களை விழித்தெழச் செய்யும் இந்த சுன்னத் இன்று நடமுறையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். விடி ஸஹர் விடி ஷஹர் என்ற பெயரில் சிலர் உறங்கிவிட்டு சுப்ஹு நேரம் வந்ததும் விழித்ததும் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள்.
இது நோன்பாகாது. இந்தப் பழக்கம் தவறானதாகும். ஏனெனில் பஜ்ரு நேரம் வந்து விட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் கட்டளை உள்ளது. எனவே தாமதமாக விழிப்பவர்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும். பசி முன்னிற்கும்போது உங்களில் ஒருவர் உணவில் இருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டாலும் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்கு விரையவேண்டாம். என்பது நபிமொழி அறிவிப்பவர்: இப்னு உமர் ُﻪْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ َﻲِﺿَﺭ நூல்: புகாரி மலஜலத்தை அடக்கிய நிலையிலும் உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும்
இல்லை என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத் மறதியாக உண்பதும், பருகுவதும் ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான். நபிமொழி அறிவிப்பவர்: அபூஹுரைரா َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர் வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். ஒரு மனிதர் ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். என்ன அழிந்து விட்டீர்? என்று நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “ரமலானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று அவர் கூறினார். ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா? என்று அவரிடம் நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ கேட்டார்கள். அவர் ‘இயலாது’ என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார். அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கும் இயலாது என்றார். பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்துவிட்டார். அப்போது நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்களிடம் பேரிச்சம் பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் அதை அவரிடம் வழங்கி ‘இதை தர்மம் செய்வீராக’ என்றனர். அதற்கவர் “எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே” என்றார். அதை கேட்ட நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா குளிப்பு கடமையானவர் நோன்பு நோற்பது நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு குளிக்காமலே நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள்; என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன. நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹூ நேரத்தை அடைவார்கள். ரமழானில் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஸா َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ , உம்முஸலமா َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத் நோன்பாளி குளிக்கலாம், பல் துலக்கலாம் நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது. நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அமீர் பின் ரபிஆ ُﻪْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ َﻲِﺿَﺭ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ இரத்தம் குத்தி எடுத்தல் ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதை அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: தாரகுத்னீ நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னாளி நூல்கள்: புகாரி மருத்துவ போன்ற காரனங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். நோன்பு துறத்தல் நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும்வரை மக்கள் நன்மையைச் செய்பவர்களாகிறார்கள் என நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத் உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும்! ஏனெனில் தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும் என நபி ﻰﻠﺻ ﻪﻠﻟﺍ ﻪﻴﻠﻋ ﻢﻠﺳﻭ அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ُﻪْﻨَﻋ நூல்கள்: அபூதாவூத், திமிதீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னத் அஹ்மத்

09 July 2013

இன்று நோன்பு ஆரம்பம்

ஹிஜ்ரி 1434 புனித ரமழான் மாத தலைப்பிறை இன்று மாலை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதால் இன்று நோன்பு ஆரம்பமாவதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தற்பொழுது அறிவித்துள்ளது.

ஐன்ஸ்டீன் வீட்டு சாரதியும் மேதை தான்!

பிரபல விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீனுக்கு ஒரு நல்ல டிரைவர் அமைந்திருந்தான். அவர் தன் 'ரிலேட்டிவிட்டி தியரி' யைப் பற்றி சொற்பொழிவாற்ற எங்கு சென்றாலும், அவன் தான் கார் ஓட்டிச் செல்வான். அங்கு அவர் பேசுவதைத் தவறாமல் கேட்பான். இவ்வண்ணம் அவன் அதைக் கேட்டுக்கேட்டு, அவர் 'தியரி' யை நன்றாகப் புரிந்துகொண்டான். உலகில் இரண்டு மூன்று பேர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது
என்று பெயர் பெற்ற அந்த 'ரிலேட்டிவிட்டி தியரி' அவனுக்கு நல்ல மனப்பாடம் ஆகிவிட்டது. ஒரு நாள், "நீங்கள் போகவில்லை என்றால் நான் கூட உங்களுடைய இந்த தியரியைப் பற்றிப் பிரசங்கம் செய்துவிட்டு வந்துவிடுவேன்" என்று அவரிடமே கூறினான் அந்த டிரைவர். அவனது நம்பிக்கையை அறிந்து ஐன்ஸ்டீன் மிகவும் மெச்சினார். அடுத்த வாரத்திலேயே அவனுக்கு ஒரு சந்தர்ப்பமும் அளித்தார்.
"இந்த ஊரில் என்னை அவ்வளவாகத் தெரியாது. நான் காரிலேயே உட்கார்ந்து கொள்கிறேன். நீ போய் பேசிவிட்டு வா" என்று டிரைவரை அனுப்பினார் ஐன்ஸ்டீன். அது ஒரு மாபெரும் கூட்டம். பெரிய அறிவாளிகளும் கணித மேதைகளும் அங்கு நிரம்பி வழிந்தனர். அதைக்கண்டு டிரைவர் ஒன்றும் அச்சம் கொள்ளவில்லை. தங்கு தடையின்றி 'ரிலேட்டிவிட்டி தியரி' யைப்பற்றி கடகடவென்று இரண்டு மணி நேரம்
பிரசங்கம் செய்தான். ஆழ்ந்த நிசப்தத்தில் கட்டுண்டு அனைவரும் அதனைக் கவனமாகக் கேட்டனர். பிரசங்கம் முடிந்ததும் கரவொலி எழுப்பி தங்கள் உற்சாகத்தைத் தெரிவித்தனர். டிரைவரும் மகிழ்ச்சி கொண்டான். அப்பொழுது இரண்டொருவர் அருகில் வந்து, "மிஸ்டர் ஐன்ஸ்டீன்! உங்கள் தியரியில் ஒரு சின்ன சந்தேகம்" என்று அதை விவரித்து, "விளக்கம் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.
அவனுக்கு என்ன விளக்கம் சொல்லத் தெரியும்? இருந்தும் சிறிதும் அஞ்சினானில்லை. அந்த டிரைவர், "புரபசர்! நீங்கள் கேட்பது மிகவும் சுலபமான சந்தேகம். என் கார் டிரைவர் கூட பதில் சொல்லிவிடுவான்" என்று விடுவிடுவென்று காருக்கு வந்தான். காரிலிருந்த ஐன்ஸ்டீனிடம் விஷயத்தை விளக்கினான். உடனே அவர் புன்சிரிப்புடன் காரிலிருந்து இறங்கி, நேரே மண்டபத்தினுள் சென்றார்.
அனைவரையும் மீண்டும் அமரச்சொல்லி அந்த புரபஸரின் சந்தேகத்திற்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார். அவருடைய அந்த டிரைவருடைய பேச்சுக்கும் (ஐன்ஸ்டீனின்) அமோக வரவேற்பு கிடைத்தது.
நன்றி:தினகரன்

04 July 2013

இலங்கையில் பன்னிரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ள சின்னமுத்து நோய்

சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்தை மேலதிகமாக வழங்கும் தேசிய தினம் நாளை 5ம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. மர்லின் மரிக்கார் உலகிலுள்ள மிகப் பழைமையான நோய்களில் சின்னமுத்து (Mealses) வும் ஒன்றாகும். இது கி.மு. 160 ஆம் ஆண்டில் ரோம் நாட்டில் காணப்பட்டதாகவும் வரலாற்று பதிவுகள் உள்ளன. அன்றைய ரோம் நாட்டு இராணுவத்தினரில் பெரும் பகுதியினர்
இந்நோய்க்கு உள்ளாகியுள் ளனர். அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை இந்நோய் பறித்துள்ளது. இதேபோல் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பிரதேசங்களில் இந்நோய் அவ்வப்போது தலைதூக்கி மனிதர்களின் உயிர்களைக் குடித்து வந்திருக்கின்றது. இந்த நிலைமை 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையும் பெரும்பாலும் தொடர்ந்தது. குறிப்பாக 1929 ஆம் ஆண்டில் கூட கியூபா
நாட்டில் இந் நோய் பெரும்பாலான மக்களைத் தாக் கியது. அதனால் அவர்களிலும் அனேகர் உயிரிழந்தனர். இவ்வாறான நிலையில் இந்த சின்னமுத்து நோயின் அச்சுறுத்தலிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும் பல மட்டங்களில் நீண் டகாலமாக முன்னெடுக்கப்பட்டன. அதாவது இந்நோய்க்கு உள்ளாகின்றவர்க ளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு தேவை யான மருந்து வகைகளைக் கண்டு
பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அந்த வகையில் இந்நோய் குறித்து முதலில் விபரித்தவர் என்ற பெருமை அன்டனி பிளேக் என்பவ ரையே சாரும். மருத்துவ உலகத்தினர் நீண்ட காலம் மேற்கொண்டு வந்த இவ்வாராய்ச்சிகளின் பயனாக 1968ம் ஆண்டில் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மரு ந்து முதன் முதலாகக் கண்டு பிடிக்கப்பட்டது. பிரித்தா னிய மருத்துவ நிபுணர்கள் தான் இம்மருந்தைக்
கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபனத் தின் சிபாரிசின் அடிப்ப டையில் இத்தடுப்பு மருந்தை உலக நாடுகள் பாவிக்கத் தொடங்கின. இதன் பயனாக சின்ன முத்து நோயின் உயிராபத்து அச்சுறுத்தல் பெரிதும் குறைவடைந்தது. மக்களும் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கினர். இது விஞ்ஞான மருத்துவ உலகிற்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.
இருந்த போதிலும் 2011 ஆம் ஆண்டில் சின்னமுத்து நோய் காரணமாக ஒரு இலட்சத்து 58 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும் பகுதியினர் மூன் றாம் மண்டல நாடுகளைச் சேர்ந்த வர்களாவர் என உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் அறிவித்தது. சின்னமுத்து நோய்க்குரிய தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிமுக மாக்கி நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. என்றாலும் இந்நோய்
அண்மைக்காலமாக வெவ்வேறு பிரதேசங்களில் மீளத் தலைதூக்கிப் பெரும் பாலானோரைத் தாக்கி இருக்கின்றது. அதாவது 2008 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டிலும், 2009 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலும் 2011 ஆம் ஆண்டில் வியட் நாமிலும், 2012 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலும் இவ் வாறு இந்நோய் மீளத் தலை தூக்கியது. அந்த வகையில் இவ்வரு டத்தின் (2013) முதல் ஆறு மாதங்களிலும் பாகிஸ்தான், பங்களாதேசம்
உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்நோய் தலை தூக்கியுள்ளது. அவற்றில் இலங்கையும் அடங்கியுள்ளது. ஆனால் இலங்கையில் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்து தேசிய தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் ஊடாக 1984 ஆம் ஆண்டு முதல் சகல குழந்தைகளுக்கும் இலவச மாக வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் அன்று முதல் இந்நோய் இந்நாட்டில் கட்டுப்பாட்டு நிலையில் இருந்து வருகின்றது. ஆயினும் 1999
ஆம், 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்நோய் இங்கு திடீரென தீவிரமடைந்தது. அப்போது 15 ஆயிரம் பேர் இந்நோய்க்கு உள்ளாகினர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட துரித கட்டுப்பாட்டு நடவடிக் கைகளின் பயனாகக் கடந்த 12 வரு டங்களாக இந்நோய் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வாறான நிலையில் இவ்வருடத்தின் (2013) முதல் ஆறு மாத காலப்பகுதியிலும் இந்நோய் மீளத் தலைதூக்க ஆரம்
பித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இது வரைக்கும் 525 பேர் இந் நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இவர் களில் பெரும் பகுதியினர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலைமை தொடர்பாக இந்நாட் டின் மருத்துவத் துறை புத்திஜீவிகளும், தொற்று நோய்த்தடுப்பு பிரிவு மருத்துவ நிபுணர்களும், சிறுவர் நோயியல் நிபுணர்களும் கூடி ஆராய்ந்தனர். அந்தடிப்படையில் தற்போது தேசிய
மருந்தேற்றல் திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதலாம் வயதிலும் மூன்றாம் வயதிலும் வழ ங்கப்படும் ருபெல்லா, கடவை கட்டு, சின்னமுத்து (எம்.எம்.ஆர்) ஆகிய நோய்க்கான தடுப்பு மருந்துக்கு மேலதிகமாக சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்தை விசேடமாக வழங் குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் பன்னிரெண்டு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே இம்மரு ந்தை
வழங்கவும் இவர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இச்சிபாரிசு மற்றும் தீர்மான த்தில் கவனம் செலுத்திய சுகா தார அமைச்சு சின்னமுத்து நோய்க்கு விசேட தடுப்பு மருந்து வழங்கும் தேசிய தின மாக நாளை ஐந்தாம் திகதியை (05.07.2013) அறிவித்துள்ளது. இத்தினத்தில் நாடெங்கிலுமுள்ள சுமார் இரண்டு இலட்சம் குழந்தைகளுக்கு இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சின் நோய்
பர வுதல் தடுப்புப் பிரிவு எதிர் பார்த்துள்ளது. நாட்டிலுள்ள 326 மருத்துவ அதிகாரி அலுவல கப் பிரிவுகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஐயாயிரம் மருத்துவ கிளினிக்குகள் ஊடாகத் தடுப்பு மருந்து வழங்கப்பட விருக்கின்றது. இத்தினத்தில் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்தைத் தம்பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்கத் தவற வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
டொக்டர் பாலித மஹீபால சகல பெற்றோரிடமும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இத்தினத்தில இத்தடுப்பு மருந்தைத் தம்பிள்ளைகளுக்கு பெற்று கொடுக்க எவராவது தவறுவாராயின் அவர் இம் மாதத்தின் 6ம், 13ம், 20ம், 27ம் திகதிகளில் பிரதேசத்தி லுள்ள மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று அதனைப் பெற்றுக் கொடுப்பது மிக அவசியம் எனவும் அவர் வலியுறுத் தினார். சின்னமுத்தானது
ஒரு வைரஸ் நோய். அந்நோய்க்கு உள்ளாகி இருப்பவர் இரு மும் போதும் தும்மும் போதும் வெளியாகின்ற சளித்துகள் ஊடாக நோய்க்கிருமி வெளியாகி சுவாசத் தொகுதி மூலம் சுகதேகிகளுக்குப் பரவுகின்றது. இந்நோய்க்கிருமி சுககேதி ஒருவரின் உடலுக்குள் பிரவேசித்து ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படும். அதுவே இந்நோய்க்கான நோயரும்பு காலமாகும்.
இந்நோய்க்கு உள்ளாகி இருப்பவ ர்களுக்கு கண்கள் சிவக்கும் மூக் செடுப்பதில் சிரமம், வயிற்றோட்டம், இருமல், உடல் வலி, காய்ச்சல், தோலில் அரிப்பு போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும். இந்த அறிகுறிகளில் தோலில் அரி ப்பு ஏற்படுவதற்கு நான்கைந்து நாட் களுக்கு முன்னரும், அரிப்பு ஏற்பட்ட பின்னரான நான்கைந்து நாட்கள் காலப்பகுதியிலுமே இவ்வைரஸ் பெரிதும் பரவும் என்று உலக
சுகாதார ஸ்தாபனத்தின் தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் குறிப்பிடு கின்றார். அதேநேரம் குழந்தைகளுக்குப் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய இந்நோய்க்கு உரிய நேர காலத்தில் சிகிச்சை அளிக்கத் தவறினால் கண் பார்வை பாதிக்கப்படல், நியூமோனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பல பாதிப்புக்களும் கூட ஏற்படும் என்று நோய் பரவுதல் தடுப்பு
பிரிவு பணிப்பாளர் டொக்டர் பபா பலிகவர்தன கூறுகிறார். இது ஒரு வைரஸ் நோய் என்பதால் அதற்கென விசேட சிகிச்சைகளும் கிடையாது. அதனால் இந்நோய்க்குரிய தடுப்பு மருந்தை தம் குழந்தைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவது மிக அவசியம் எனவும் வலியுறுத்தினார். ஆகவே சின்னமுத்து நோய்க்கான மேலதிகத் தடுப்பு மருந்தை குறித்த தினத்தில் தம்
குழந்தைகளுக்குப் பெற்றுக்கொடுப்பது பெற்றோரின் கடமை என்றால் மிகையாகாது.
நன்றி:தினகரன்

உ/த மாணவர்களுக்கு பரீட்சை அட்டை: முஸ்லிம்பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும்
மாணவர்களுக்கான பரீட்சை அட்டைகள் தபால்
மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார
தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக
பரீட்சை அட்டைகளை மாணவர்களுக்கு
பகிர்ந்தளிக்குமாறும் அவர்
உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் மாணவர்களது பெயர் மற்றும்
விபரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தால்
இயலுமானவரை விரைவில் பரீட்சைகள்
திணைக்களத்தை நாடுமாறும் பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் அதிபர்களைக் கேட்டுள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான
பரீட்சை அட்டைகள் பாடசாலை அதிபருக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான
பரீட்சை அட்டைகள் அவர்களது தனிப்பட்ட
விலாசங்களுக்கும் தபால் மூலம்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி க.பொ.த. உயர்தரப்
பரீட்சை ஆரம்பமாகிறது. சுமார் ஒரு மாதம் வரை கால அவகாசம் இருப்பதனால் பல அதிபர்கள்
அவற்றை மாணவர்களிடையே பகிர்ந்தளிக்காது
இறுதி தறுவாய் வரை வைத்திருப்பார்கள்.
இதன் காரணமாக
பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு சில
தினங்களுக்கு முன்பாக மாணவர்களும் பரீட்சைகள் திணைக்களமும் பாரிய
சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய
நிலை ஏற்படுகிறது.
இவற்றை தவிர்க்கும் பொருட்டே இதற்குரிய
வேலைத் திட்டங்களை உடனடியாக
மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2
இலட்சத்து 92 ஆயிரத்து 706 மாணவர்கள்
தோற்றவுள்ளனர். இவர்களுக்காக சுமார் 2050
இற்கும் அதிகமான பரீட்சை நிலையங்கள்
தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் 14 ஆயிரத்துக்கு அதிகமான அதிகாரிகள்
பரீட்சை கடமைகளில்
ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் அவர்
கூறினார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம்
பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை 05ம்
திகதி மூடப்படும் என
கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்படும் முஸ்லிம் பாடசாலைகள்
மூன்றாம் தவணை ஆரம்பத்திற்காக ஆகஸ்ட் 12ம்
திகதி மீண்டும் திறக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
Thanks:derana