சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்தை மேலதிகமாக வழங்கும் தேசிய தினம் நாளை 5ம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. மர்லின் மரிக்கார் உலகிலுள்ள மிகப் பழைமையான நோய்களில் சின்னமுத்து (Mealses) வும் ஒன்றாகும். இது கி.மு. 160 ஆம் ஆண்டில் ரோம் நாட்டில் காணப்பட்டதாகவும் வரலாற்று பதிவுகள் உள்ளன. அன்றைய ரோம் நாட்டு இராணுவத்தினரில் பெரும் பகுதியினர்
இந்நோய்க்கு உள்ளாகியுள் ளனர். அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை இந்நோய் பறித்துள்ளது. இதேபோல் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பிரதேசங்களில் இந்நோய் அவ்வப்போது தலைதூக்கி மனிதர்களின் உயிர்களைக் குடித்து வந்திருக்கின்றது. இந்த நிலைமை 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையும் பெரும்பாலும் தொடர்ந்தது. குறிப்பாக 1929 ஆம் ஆண்டில் கூட கியூபா
நாட்டில் இந் நோய் பெரும்பாலான மக்களைத் தாக் கியது. அதனால் அவர்களிலும் அனேகர் உயிரிழந்தனர். இவ்வாறான நிலையில் இந்த சின்னமுத்து நோயின் அச்சுறுத்தலிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும் பல மட்டங்களில் நீண் டகாலமாக முன்னெடுக்கப்பட்டன. அதாவது இந்நோய்க்கு உள்ளாகின்றவர்க ளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு தேவை யான மருந்து வகைகளைக் கண்டு
பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அந்த வகையில் இந்நோய் குறித்து முதலில் விபரித்தவர் என்ற பெருமை அன்டனி பிளேக் என்பவ ரையே சாரும். மருத்துவ உலகத்தினர் நீண்ட காலம் மேற்கொண்டு வந்த இவ்வாராய்ச்சிகளின் பயனாக 1968ம் ஆண்டில் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மரு ந்து முதன் முதலாகக் கண்டு பிடிக்கப்பட்டது. பிரித்தா னிய மருத்துவ நிபுணர்கள் தான் இம்மருந்தைக்
கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபனத் தின் சிபாரிசின் அடிப்ப டையில் இத்தடுப்பு மருந்தை உலக நாடுகள் பாவிக்கத் தொடங்கின. இதன் பயனாக சின்ன முத்து நோயின் உயிராபத்து அச்சுறுத்தல் பெரிதும் குறைவடைந்தது. மக்களும் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கினர். இது விஞ்ஞான மருத்துவ உலகிற்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.
இருந்த போதிலும் 2011 ஆம் ஆண்டில் சின்னமுத்து நோய் காரணமாக ஒரு இலட்சத்து 58 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும் பகுதியினர் மூன் றாம் மண்டல நாடுகளைச் சேர்ந்த வர்களாவர் என உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் அறிவித்தது. சின்னமுத்து நோய்க்குரிய தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிமுக மாக்கி நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. என்றாலும் இந்நோய்
அண்மைக்காலமாக வெவ்வேறு பிரதேசங்களில் மீளத் தலைதூக்கிப் பெரும் பாலானோரைத் தாக்கி இருக்கின்றது. அதாவது 2008 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டிலும், 2009 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலும் 2011 ஆம் ஆண்டில் வியட் நாமிலும், 2012 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலும் இவ் வாறு இந்நோய் மீளத் தலை தூக்கியது. அந்த வகையில் இவ்வரு டத்தின் (2013) முதல் ஆறு மாதங்களிலும் பாகிஸ்தான், பங்களாதேசம்
உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்நோய் தலை தூக்கியுள்ளது. அவற்றில் இலங்கையும் அடங்கியுள்ளது. ஆனால் இலங்கையில் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்து தேசிய தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் ஊடாக 1984 ஆம் ஆண்டு முதல் சகல குழந்தைகளுக்கும் இலவச மாக வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் அன்று முதல் இந்நோய் இந்நாட்டில் கட்டுப்பாட்டு நிலையில் இருந்து வருகின்றது. ஆயினும் 1999
ஆம், 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்நோய் இங்கு திடீரென தீவிரமடைந்தது. அப்போது 15 ஆயிரம் பேர் இந்நோய்க்கு உள்ளாகினர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட துரித கட்டுப்பாட்டு நடவடிக் கைகளின் பயனாகக் கடந்த 12 வரு டங்களாக இந்நோய் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வாறான நிலையில் இவ்வருடத்தின் (2013) முதல் ஆறு மாத காலப்பகுதியிலும் இந்நோய் மீளத் தலைதூக்க ஆரம்
பித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இது வரைக்கும் 525 பேர் இந் நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இவர் களில் பெரும் பகுதியினர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலைமை தொடர்பாக இந்நாட் டின் மருத்துவத் துறை புத்திஜீவிகளும், தொற்று நோய்த்தடுப்பு பிரிவு மருத்துவ நிபுணர்களும், சிறுவர் நோயியல் நிபுணர்களும் கூடி ஆராய்ந்தனர். அந்தடிப்படையில் தற்போது தேசிய
மருந்தேற்றல் திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதலாம் வயதிலும் மூன்றாம் வயதிலும் வழ ங்கப்படும் ருபெல்லா, கடவை கட்டு, சின்னமுத்து (எம்.எம்.ஆர்) ஆகிய நோய்க்கான தடுப்பு மருந்துக்கு மேலதிகமாக சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்தை விசேடமாக வழங் குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் பன்னிரெண்டு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே இம்மரு ந்தை
வழங்கவும் இவர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இச்சிபாரிசு மற்றும் தீர்மான த்தில் கவனம் செலுத்திய சுகா தார அமைச்சு சின்னமுத்து நோய்க்கு விசேட தடுப்பு மருந்து வழங்கும் தேசிய தின மாக நாளை ஐந்தாம் திகதியை (05.07.2013) அறிவித்துள்ளது. இத்தினத்தில் நாடெங்கிலுமுள்ள சுமார் இரண்டு இலட்சம் குழந்தைகளுக்கு இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சின் நோய்
பர வுதல் தடுப்புப் பிரிவு எதிர் பார்த்துள்ளது. நாட்டிலுள்ள 326 மருத்துவ அதிகாரி அலுவல கப் பிரிவுகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஐயாயிரம் மருத்துவ கிளினிக்குகள் ஊடாகத் தடுப்பு மருந்து வழங்கப்பட விருக்கின்றது. இத்தினத்தில் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்தைத் தம்பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்கத் தவற வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
டொக்டர் பாலித மஹீபால சகல பெற்றோரிடமும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இத்தினத்தில இத்தடுப்பு மருந்தைத் தம்பிள்ளைகளுக்கு பெற்று கொடுக்க எவராவது தவறுவாராயின் அவர் இம் மாதத்தின் 6ம், 13ம், 20ம், 27ம் திகதிகளில் பிரதேசத்தி லுள்ள மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று அதனைப் பெற்றுக் கொடுப்பது மிக அவசியம் எனவும் அவர் வலியுறுத் தினார். சின்னமுத்தானது
ஒரு வைரஸ் நோய். அந்நோய்க்கு உள்ளாகி இருப்பவர் இரு மும் போதும் தும்மும் போதும் வெளியாகின்ற சளித்துகள் ஊடாக நோய்க்கிருமி வெளியாகி சுவாசத் தொகுதி மூலம் சுகதேகிகளுக்குப் பரவுகின்றது. இந்நோய்க்கிருமி சுககேதி ஒருவரின் உடலுக்குள் பிரவேசித்து ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படும். அதுவே இந்நோய்க்கான நோயரும்பு காலமாகும்.
இந்நோய்க்கு உள்ளாகி இருப்பவ ர்களுக்கு கண்கள் சிவக்கும் மூக் செடுப்பதில் சிரமம், வயிற்றோட்டம், இருமல், உடல் வலி, காய்ச்சல், தோலில் அரிப்பு போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும். இந்த அறிகுறிகளில் தோலில் அரி ப்பு ஏற்படுவதற்கு நான்கைந்து நாட் களுக்கு முன்னரும், அரிப்பு ஏற்பட்ட பின்னரான நான்கைந்து நாட்கள் காலப்பகுதியிலுமே இவ்வைரஸ் பெரிதும் பரவும் என்று உலக
சுகாதார ஸ்தாபனத்தின் தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் குறிப்பிடு கின்றார். அதேநேரம் குழந்தைகளுக்குப் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய இந்நோய்க்கு உரிய நேர காலத்தில் சிகிச்சை அளிக்கத் தவறினால் கண் பார்வை பாதிக்கப்படல், நியூமோனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பல பாதிப்புக்களும் கூட ஏற்படும் என்று நோய் பரவுதல் தடுப்பு
பிரிவு பணிப்பாளர் டொக்டர் பபா பலிகவர்தன கூறுகிறார். இது ஒரு வைரஸ் நோய் என்பதால் அதற்கென விசேட சிகிச்சைகளும் கிடையாது. அதனால் இந்நோய்க்குரிய தடுப்பு மருந்தை தம் குழந்தைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவது மிக அவசியம் எனவும் வலியுறுத்தினார். ஆகவே சின்னமுத்து நோய்க்கான மேலதிகத் தடுப்பு மருந்தை குறித்த தினத்தில் தம்
குழந்தைகளுக்குப் பெற்றுக்கொடுப்பது பெற்றோரின் கடமை என்றால் மிகையாகாது.
நன்றி:தினகரன்
No comments:
Post a Comment