தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

09 July 2013

ஐன்ஸ்டீன் வீட்டு சாரதியும் மேதை தான்!

பிரபல விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீனுக்கு ஒரு நல்ல டிரைவர் அமைந்திருந்தான். அவர் தன் 'ரிலேட்டிவிட்டி தியரி' யைப் பற்றி சொற்பொழிவாற்ற எங்கு சென்றாலும், அவன் தான் கார் ஓட்டிச் செல்வான். அங்கு அவர் பேசுவதைத் தவறாமல் கேட்பான். இவ்வண்ணம் அவன் அதைக் கேட்டுக்கேட்டு, அவர் 'தியரி' யை நன்றாகப் புரிந்துகொண்டான். உலகில் இரண்டு மூன்று பேர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது
என்று பெயர் பெற்ற அந்த 'ரிலேட்டிவிட்டி தியரி' அவனுக்கு நல்ல மனப்பாடம் ஆகிவிட்டது. ஒரு நாள், "நீங்கள் போகவில்லை என்றால் நான் கூட உங்களுடைய இந்த தியரியைப் பற்றிப் பிரசங்கம் செய்துவிட்டு வந்துவிடுவேன்" என்று அவரிடமே கூறினான் அந்த டிரைவர். அவனது நம்பிக்கையை அறிந்து ஐன்ஸ்டீன் மிகவும் மெச்சினார். அடுத்த வாரத்திலேயே அவனுக்கு ஒரு சந்தர்ப்பமும் அளித்தார்.
"இந்த ஊரில் என்னை அவ்வளவாகத் தெரியாது. நான் காரிலேயே உட்கார்ந்து கொள்கிறேன். நீ போய் பேசிவிட்டு வா" என்று டிரைவரை அனுப்பினார் ஐன்ஸ்டீன். அது ஒரு மாபெரும் கூட்டம். பெரிய அறிவாளிகளும் கணித மேதைகளும் அங்கு நிரம்பி வழிந்தனர். அதைக்கண்டு டிரைவர் ஒன்றும் அச்சம் கொள்ளவில்லை. தங்கு தடையின்றி 'ரிலேட்டிவிட்டி தியரி' யைப்பற்றி கடகடவென்று இரண்டு மணி நேரம்
பிரசங்கம் செய்தான். ஆழ்ந்த நிசப்தத்தில் கட்டுண்டு அனைவரும் அதனைக் கவனமாகக் கேட்டனர். பிரசங்கம் முடிந்ததும் கரவொலி எழுப்பி தங்கள் உற்சாகத்தைத் தெரிவித்தனர். டிரைவரும் மகிழ்ச்சி கொண்டான். அப்பொழுது இரண்டொருவர் அருகில் வந்து, "மிஸ்டர் ஐன்ஸ்டீன்! உங்கள் தியரியில் ஒரு சின்ன சந்தேகம்" என்று அதை விவரித்து, "விளக்கம் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.
அவனுக்கு என்ன விளக்கம் சொல்லத் தெரியும்? இருந்தும் சிறிதும் அஞ்சினானில்லை. அந்த டிரைவர், "புரபசர்! நீங்கள் கேட்பது மிகவும் சுலபமான சந்தேகம். என் கார் டிரைவர் கூட பதில் சொல்லிவிடுவான்" என்று விடுவிடுவென்று காருக்கு வந்தான். காரிலிருந்த ஐன்ஸ்டீனிடம் விஷயத்தை விளக்கினான். உடனே அவர் புன்சிரிப்புடன் காரிலிருந்து இறங்கி, நேரே மண்டபத்தினுள் சென்றார்.
அனைவரையும் மீண்டும் அமரச்சொல்லி அந்த புரபஸரின் சந்தேகத்திற்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார். அவருடைய அந்த டிரைவருடைய பேச்சுக்கும் (ஐன்ஸ்டீனின்) அமோக வரவேற்பு கிடைத்தது.
நன்றி:தினகரன்

No comments:

Post a Comment