Rip Current (ரிப் கரன்ட்) என்பது கடலில் ஏற்படும் ஒரு வகையான நீரோட்டமாகும். இது கடலின் கரையிலிருந்து வேகமாகப் பின்புறம் செல்கிறது. இந்த நீரோட்டம் மிகவும் சக்திவாய்ந்தது மற்றும் ஆபத்தானது, ஏனெனில் இது மனிதர்களை கடலினுல் வேகமாக இழுத்துச் செல்லக்கூடியது.பெரும் நீச்சல் வீரர்களால் கூட ரிப் கரண்டை எதிர்த்து நீந்த முடியாது.
Rip Current பற்றிய விவரங்கள்:
இது சுமார் 30 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை இருக்கலாம்.
இதன் வேகம் 0.5 மீட்டர்/வினாடி முதல் 2.5 மீட்டர்/வினாடி வரை இருக்கும்.இது நீர் அதிகமாக திரண்டிருக்கும் பகுதியிலிருந்து ஆழம் குறைந்தபகுதியின் ஊடாக கடலுக்குள் செல்லும்,பொதுவாக ஆழம்குறைந்தபகுதிகளில் உருவாகும்.
பாதுகாப்பு அறிவுரை:
அடையாளம் காண்பது:-
Rip Current அமைந்துள்ள இடங்களை கண்டறிய முயற்சிக்க வேண்டும். பொதுவாக அந்த இடத்தில் நீர் நிறம் மாறுபடும், அலைகள் இடையில் முறிந்து காணப்படும். (படங்களை கவனிக்கவும்)
தப்புதல் வழிமுறைகள்
Rip Current உங்களை இழுத்துக் கொண்டு சென்றால், பதற வேண்டாம் சாந்தமாக இருங்கள்.
கரையை நேர் நோக்கி நீரோட்டத்துக்கு எதிராக நீந்தாதீர்கள்.Rip current இருந்து விடுபடும் வகையில்
பக்கவாட்டில் நீந்தி ரிப் கரண்டில் இருந்து விடுபட்டு பின்பு கரையை நோக்கி நீந்துங்கள்.நீங்கள் கடற்கரையை அடைய முடியாது என்று உணர்ந்தால், உங்களுக்கு கவனம் திருப்பும் வகையில் உங்களுக்கு உதவி தேவை என்று கத்தி உதவிக்காக கைகளை அசைக்கவும்.
மற்றவர்களுக்கு உதவி
யாரேனும் ரிப் கரண்டில் சிக்கியிருப்பதை பார்த்தால், எதாவது மிதக்கும் பொருளை ரிப் கரண்ட் நீரோட்டத்தில் சிக்கியவருக்கு எறியுங்கள்.மிதவைச் சாதனம் ஒன்றுடன் உதவி செய்வது சிறந்தது அல்லது உடனடியாக சத்தம் போட்டவாறு மற்றவர்களையும் அழைத்துச்செல்லுங்கள்.
கடலில் போகும் பொழுது இந்த தகவல்களை மனதில் கொள்ளுதல் மிக முக்கியம்.
Lifeguard பாதுகாக்கும் கடற்கரை அருகே நீந்துவது சிறந்தது. நீரில் இறங்குவதற்கு முன் ஒரு காவலரிடம் நிலைமைகளை பற்றி கேளுங்கள். காவலர்கள் மற்றும் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்புக்களின் அனைத்து ஆணைகளையும் மதியுங்கள். அவை உங்கள் நலனுக்காக உள்ளன. ஒருபோதும் தனியாக நீந்தாதீர்கள்.
No comments:
Post a Comment