தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

31 July 2024

ஷஹ்மி ஷஹீத்தின் சாதனைப்பயணம்

சாதனை என்பது ஒரு இலட்சியத்தை இலக்காகக் கொண்டு, கடின உழைப்பின் மூலம் அதனை அடைதலைக் குறிக்கும். செய்வதற்கு இலகுவல்ல எனப் பொதுவாக நினைக்கும் ஒரு காரியத்தை அனைவரும் வியக்கும் விதத்தில் செய்து முடிக்கும் போது அது சாதனையாக மாறிவிடுகின்து. சாதனைகளை எல்லோராலும் இலகுவில் செய்துவிட முடியாது. ஒரு சாதனையைப் படைப்பதற்கு மன உறுதி, நீண்டகாலத் திட்டமிடல், இடைவிடாப் பயிற்சி, தியாகம் எனப் பல விடயங்கள் ஒருசேர அமைய வேண்டும். இவ்வாறு சாதனை புரிபவர்கள் எல்லோராலும் பேசப்படுகிறார்கள்.

அந்தவகையில் பேருவளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்நாட்களில் சாதனையை நோக்கிய நடைப் பயணமொன்றை மேற்கொண்டு வருகிறார்.  இருபத்து ஐந்தே வயதான ஷஹ்மி ஷஹீத் இலங்கையின் பெரும்பாலான கரையோரப் பாதைகளை ஊடறுத்து சுமார் 1500 கிலோமீற்றர்கள் வரையிலான தூரத்தை நடை பயணமாகக் கடந்து நாட்டைச் சுற்றிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  கடந்த 13ம் திகதி (ஜூலை) காலை வேளையில் பேருவளையிலிருந்து ஆரம்பித்த அவரது நடைப் பயணத்தில் தெற்குத் திசையில் சென்று காலி, மாத்றை, அம்பாந்தோட்டை வழியாக மொணராகலை, சியம்பலாண்டுவை, பொத்துவில் ஊடே கிழக்கு மாகாணத்தை அடைந்து தற்போது  தனது பயணத்தின் 18ம் நாளில் ஓட்டமாவடியைத் தாண்டி திருகோணமலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். திருகோணமலையிலிருந்து வெளியேறி முல்லைத்தீவு, கிளிநொச்சி வழியாக யாழ்ப்பானத்தை அடைந்து பின்பு அங்கிருந்து மன்னார், அனுராதபுரம், புத்தளம் ஊடாகக் கொழும்புக்கு வந்து பேருவளையில் நிறைவு செய்ய உள்ளார். 

21 July 2024

Rip Current

Rip Current (ரிப் கரன்ட்) என்பது கடலில் ஏற்படும் ஒரு வகையான நீரோட்டமாகும். இது கடலின் கரையிலிருந்து வேகமாகப் பின்புறம் செல்கிறது. இந்த நீரோட்டம் மிகவும் சக்திவாய்ந்தது மற்றும் ஆபத்தானது, ஏனெனில் இது மனிதர்களை கடலினுல் வேகமாக இழுத்துச் செல்லக்கூடியது.பெரும் நீச்சல் வீரர்களால் கூட ரிப் கரண்டை எதிர்த்து நீந்த முடியாது.

 Rip Current பற்றிய விவரங்கள்:

இது சுமார் 30 மீட்டர்  முதல் 100 மீட்டர் வரை இருக்கலாம்.
இதன் வேகம் 0.5 மீட்டர்/வினாடி முதல் 2.5 மீட்டர்/வினாடி வரை இருக்கும்.இது நீர் அதிகமாக திரண்டிருக்கும் பகுதியிலிருந்து ஆழம் குறைந்தபகுதியின் ஊடாக கடலுக்குள் செல்லும்,பொதுவாக ஆழம்குறைந்தபகுதிகளில் உருவாகும். 

15 June 2024

அரஃபாவில் ஒன்றுகூடிய பெருந்திரளான ஹாஜிகள்

ஹிஜ்ரி 1445 துல் ஹிஜ்ஜா பிறை 9  (15/06/2024) இன்றைய
அரஃபா பிரசங்கம், அரஃபாவில் உள்ள மஸ்ஜிதுன் நமிரா பள்ளிவாசலில் இருந்து, Sheikh Dr. Maher bin Hamad Al-Muaiqly அவர்களால் வழங்கப்பட்டது. புனித அரபாத் தினப் பிரசங்கத்தின் நேரடி மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட ஒளிபரப்பு இருபது மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவ்வருடம் சுமா‌ர் 1,833,164 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்துள்ளார்கள்.

புனித அரஃபாவின் சில காட்சிகள்
                                  


















08 June 2024

Maggona Radiant Nursery Kids Fair!

"Step into the world of imagination and creativity at the Maggona Radiant Nursery Kids Fair! Held today, this enchanting event brought together little ones and families for a day filled with laughter, learning, and exciting opportunities for buying and selling. From colorful arts and crafts to browsing through unique items for sale, every moment was a delightful adventure. Check out some heartwarming snapshots capturing the joy and magic of the day below!"

02 June 2024

உலகில் ஆஸ்துமா நோய் அதிகம் காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.




லகில் ஆஸ்துமா நோய் அதிகம் காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.

உலகில் ஆஸ்துமா நோய் பரவல் அதிகம் காணப்படும் நாடுகளினுள் புள்ளிவிபரவியலின் படி இலங்கையும் ஒன்றாக தெரிய வந்துள்ளது. சில மாவட்டங்களில் 15-20% சதவீதமானவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்துமா பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கு ஆஸ்துமா இருக்கிறதா?

மூச்சுத் திணறல், மூச்சு எடுக்கும் போது ஏற்படும் வேறு சத்தம், இருமல் (குறிப்பாக இரவில் அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு), அல்லது மார்பு இறுக்கம் போன்ற நோய் அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி ஏற்படுமாயின் நீங்கள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டடுள்ளீர்கள் என சந்தேகிக்கலாம்.
எனக்கு ஆஸ்துமா அறிகுறிகள் இருந்தால் எனக்கு எப்படி தெரியும்?

பொதுவான அறிகுறிகளில் மூச்சுத்திணறல், தொடர்ந்து இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மார்பு இறுக்கம் ஆகியவை அடங்கும், பெரும்பாலும் ஒவ்வாமை, உடற்பயிற்சியின் போதும் அல்லது இரவிலும் அதிகமாகும்.

07 April 2024

நாளை சூரிய கிரகணம்:இலங்கையில் பார்க்க முடியாது.

சூரிய குடும்பத்தில் முழு சூரிய கிரகணத்தைக் காணக்கூடிய ஒரே கிரகம் பூமி மட்டுமே.

ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும்.

இந்த சூரிய கிரகணம் கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தெரியும்.

முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

01 April 2024

ரமழானின் இறுதிப்பத்து நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

 




اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏

நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?" (என்று கேட்பான்.)
(அல்குர்ஆன் : 23:115)

1) அல்லாஹ் எங்களைப்படைத்த நோக்கம்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.
(அல்குர்ஆன் : 51:56)

2) வாழ்கை மற்றும் மரணம் 
தரப்பட்டுள்ள நோக்கம்.

اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا  وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏
உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கை யையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன்.
(அல்குர்ஆன் : 67:2)

¶ காலத்துக்குக் காலம் அமல்களால் நாம் சிறந்தவர்களாக மாற ரஹ்மான் பல சந்தர்ப்பங்களை எமக்குத் தருகின்றான்.

(இரவு நேரங்கள், ஜும்ஆ நாட்கள் , துல் ஹஜ் முதல் பத்து, அரபா தினம் , ரமழான் லைலதுல் கத்ர் இரவு.)

3) அல்லாஹ் சொல்கிறான்.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ  ‏
நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.
(அல்குர்ஆன் : 97:1)

وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ‏
(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை   நீங்கள் அறிவீர்களா?
(அல்குர்ஆன் : 97:2)

لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ‏
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 97:3)

تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ‏
அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 97:4)

سَلٰمٌ   ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ‏
ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
(அல்குர்ஆன் : 97:5)

31 March 2024

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ர் இரவு

 ஆயிரம் மாதங்களின் நன்மை ஒரே இரவில்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முன் செய்த பாவங்கள் அழிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

03 March 2024

"எரியும் நட்சத்திரம்"


ர்ஹூமா ஷஹ்னா ஸப்வான் எழுதிய கவிதைகளின் தொகுப்பான எரியும் நட்சத்திரம் நூல் வெளியீட்டு விழா 02.03.2024 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.


 

இந் நிகழ்விற்கு பேனாத் துளிகள் சஞ்சிகையின் ஆசிரியர் ஏ. ஆர். றஜா முஹம்மத் தலைமை தாங்கியதுடன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரும்பு இதழ் ஆசிரியர், ஓய்வு பெற்ற இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்  மதிப்பிற்குரிய ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.


04 January 2024

சின்னமுத்து தடுப்பூசியின் மேலதிக டோஸ் பற்றிய அறிவிப்பு

பெற்றோர்களுக்கான விசேட அறிவிப்பு 
--------------------------------------------------
ஏப்ரல் 7, 2023 க்கும் ஜூலை 5, 2023 க்கும் (இரண்டு நாட்களும் உட்பட) இடையே பிறந்த குழந்தைகளின் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கானது.

மூளை பாதிப்பு, நுரையீரல் அழற்சி (நிமோனியா), பார்வை குறைப்பாடு, காது கேளாமை, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய சின்னமுத்து, தற்போது உலகின் பல நாடுகளிலும், இலங்கையிலும் இளம் குழந்தைகளிடையே பரவி வருகிறது.